15.1120 - தென்குமரிக் கவிதைக்களம்

ஞாயிறு, 15 நவம்பர், 2020

15.1120

 



கவிச்சிகரம் அமுதன், தமிழ்நாடு




 அம்மான்னா அம்மாதான் ( சிறுகதை)


என்னத்தையோ பறிகுடுத்தமாதிரிஒக்காந்திருந்தா புவனா


அவ இப்போதான் பத்தாவதுபடிக்கிறாபள்ளிக்கொடம் போகாம லீவப்போட்டுவீட்டுல ஒக்காந்திருந்தா


ஏண்டின்னு போகலைன்னுகேட்டதுக்கு ஒன்னுமில்லன்னு மழுப்புனா


ஆனா அவகிட்ட ஏதோ பரச்சனை இருக்குறமாதிரி தெரிஞ்சது. என்னத்த பண்ணியும் ஒண்ணுமில்லன்னு மழுப்பிட்டே இருந்தா. ஆனா அவ மூஞ்சி ஒண்ணும் சரியில்ல. ஏதாவது அந்த மூணுநாள் பிரச்சனையோட வலியான்னா அதெல்லாம் ஒண்ணுமில்லன்னா.


அவளோட அம்மா பத்துவீட்டுலபாத்திரம் கழுவி வயத்தகழுவுறவ


பெருசா ஒன்னும் வேலைகிடையாதுஅவளோட அப்பா கோவாலு கூலிவேலைசெய்யிறவரு ,வாய்க்கும் கைக்கும்போதாதகுடும்பம்தான் எப்புடியோபொழப்பு ஓடிட்டு இருந்துச்சு


சரி சாயங்காலம் பாத்துக்கலாம்னுவீட்டுவேலைக்கிகிளம்புனா அம்மா. அவ எப்போவும் மொத வீடா டாக்குட்டரம்மா


வீட்டுக்குத் தான் போவா அப்புறம்தான் மத்தவீடுக


அன்னுக்கிம் அப்புடித்தான் போனா இவஒருமாதிரி இருக்குறதப்பாத்துட்டு  டாக்குட்டரம்மா கேட்டாக ஏன்னு


இவ மகவெவரத்தைச்சொன்னா.


அவங்க கொஞ்சம் யோசிச்சிட்டு எதுனாலும் கவலைப்படாத. கவலைபடுறதுனால ஒண்ணும் ஆகப்போறதில்ல. இன்னிக்கி


சரிசாயங்காலமா கிளினிக்குகூட்டிவாபேசுவோம்னாங்க


சரின்னு பகல்லஎல்லாவீட்டுவேலையையும் முடிச்சிப்புட்டு


புவனாவக்கூப்புட்டா டாக்குட்டரம்மாவப்பாக்க. அவ எனக்கொண்ணுமில்ல நான் ஏன் டாக்டரைப்பாக்கணும்ன்னா.


அப்பறம் ரெண்டுவெரசு வெரசவும் கூடவந்தா


கிளினிக்கில எல்லாரும் போனவன்ன உள்ளகூப்புட்டாக நீ வெளியைரும்மாபுவனாவ நான் செக்பண்ணனும்ன்னாங்க


அம்மா வெளிய காத்துருந்தா. அப்புறமா  புவனா அழுதுதொடச்சமூஞ்சியோட வெளியவந்தா


அவளை டாக்குட்டரம்மா உள்ளாற  கூப்புட்டாக டாக்குட்டரம்மா கேட்டாக உம்மக வெளிய ஒக்காந்து எவ்வளவுநாளாச்சின்னு


கவனிக்கலம்மான்னா அம்மாகாரி. சொல்றத அமைதியாக்கேக்கனும் சத்தம் போடப்புடாது உம்மக கர்ப்பமா இருக்கா


ஏதோ தப்புநடந்திருக்குஅவ மழுப்புறா நீ நாளைக்கிக்காலையில


கூட்டியாந்து அட்மிட் பண்ணிடு  என்னோட தொழிலுக்கு விரோதமா


ஆனா அந்தப்புள்ள எதிர்காலத்துக்காகசெய்யனும்


கலைச்சிடலாம்  நல்லவேளை  ரொம்பநாளாகலன்னாங்க


அம்மாவும் வாயப்பொத்தி  அழுதுகிட்டுசரின்னா


மைக்காநாளு அதுமாதிரியே கூட்டியாந்து  அட்மிட் பண்ணா.. பொண்ண ஆப்பரேசன் தேட்டருக்கு உள்ளாற கூட்டிட்டு போயிட்டாங்க டாக்டரம்மா.  மூணு மணிநேரம் ஆச்சு. அப்புறம் டாக்டரம்மா வெளிய வந்து சொன்னாங்க எல்லாம் நல்லபடியா முடிஞ்சது..... அவ மயக்கத்துல இருக்குறா. இன்னும் கொஞ்சநேரத்துல முளிச்சிடுவா. ஒடம்பு வீக்கா இருக்குது,


ரெண்டுநாளு அங்குனக்குள்ளயே ரெஸ்டு எடுக்கட்டும்ன்னு சொன்னாங்க. சரின்னு உள்ளாறபோய் பாத்தா. அவ மயக்கத்துல இருந்தா. பாக்க பாவமா இருந்தது . அழுக வந்துச்சு. முந்தானையில வாயப்பொத்தி சத்தம் வராம அழுதா.....இந்த வயசில இப்புடி ஆகிப்போச்சே... இன்னும் வயசிருக்கு கலியாணம் காச்சி நடக்கனும். இதுயாருக்கும் தெரியாமப்பாத்துக்கனும். பெத்தவயிறு கலங்குச்சு.


ரெண்டு நாள் கழிச்சி வீட்டுக்கு கூட்டியாந்தா அம்மாகாரி


அவபுருசன்கிட்ட விசயத்தசொல்லாமசமாளிச்சா டூரு அவ போயிருந்ததா சொல்லி . உண்மை தெரிஞ்சா கொண்ணேபோட்டுவாருன்னு


இப்போ மககிட்டகேட்டா  எப்புடியாச்சுன்னு


அதுக்கு அவ அழுதுகிட்டே சொன்னா


”போனமாசம் கூடப்படிக்கிறபுள்ள பெர்த்துடேக்கிவீட்டுக்கு வரச்சொன்னா. அங்க நெறயாப்பேரு வந்துருந்தாக


எனக்கு கூல்டிரிங்க்ஸ்  குடுத்தாரு ஒருத்தரு. ஏதோ தலசுத்துறமாதிரி இருந்துச்சு மயங்கிட்டேன்.


அப்புறம் என்னா நடந்துச்சுன்னு தெரியல முழிச்சிப்பாத்தா பிரண்டு அளுகுறா  மன்னிச்சிடுன்னு நான் காறித்துப்பிட்டு வந்துட்டேன்.


கூடப்படிக்கிற பிள்ளைகதானேன்னு போனேன். ஆனா அங்க அவளுக்கும் தெரியாம இது நடந்துருக்கு.


உன்கிட்ட சொன்னா உன் மனசு என்னபாடுபடுமுன்னு தெரியும், அதான் சொல்லாம மறைச்சேன்.


ஆனா உனக்குத்தெரியாமப்போயிடுமா.


என்னை மன்னிச்சிடும்மா அம்மா நான் தப்பேதும் பண்ணலன்னு  மடில விழுந்து அழுதா. பாக்க பாவமா இருந்துச்சு, நாடு கெடக்குற கெடப்புல இதுமாதிரி விசயங்கள் குடும்பத்துக்குள்ளயும் அங்கங்க நடக்கத்தான் செய்யிது. வீட்டுக்குள்ளயே வில்லன்கள் இருக்குறத வெளிய சொல்லமுடியாம எத்தனை பெண்கள் வாழ்க்கை நரகமாயிருக்குன்னு அவளுக்கும் தெரியும்...


விசயத்த மெல்லவும் முடியாமா முழுங்கவும் முடியாம அந்தப்புள்ளைகளும் அவங்க அம்மா மாருகளும் படுற பாட்ட நெனச்சா கண்ணுல ரத்தம் வரும். அது இப்ப அவளுக்கு வந்துச்சு


அம்மா சொன்னா  எனக்கு நம்பிக்கையிருக்கு நீ என்னோட மக


தப்புப்பண்ண  மாட்ட . உன்ன பயன் படுத்திருக்காங்க. மனசறிஞ்சு நீ எந்த தப்பும் பண்ணல.


இதை ஒரு கெட்டகனவா மறந்துடுன்னு . இனிமே சாக்கிறதையா இருந்துக்க. பிரச்சனைன்னா நீ மொதல்ல சொல்றது அம்மாகிட்டயாத்தான் இருக்கனும். ஏன்னா அம்மாவுக்கு எல்லாமே நீதாண்டி..... என்னோட உசிறு நீதான். என் கஸ்ட்டம் கூடப்பெருசா எடுத்துக்கமாட்டேன் ஆனா உனக்கு ஒண்ணுன்னா என்னால தாங்க முடியாதுன்னு சொல்லிட்டுகட்டிப்புடிச்சி அழுதா


அம்மாவோட  கண்ணீருலதெரிஞ்சது  அம்மான்னா  யாருன்னு


அவளோட எடத்த யாராலும் நெறப்ப முடியாதுன்னு.....


அம்மா அம்மான்னு அம்மா மடில விழ்ந்து அழுது தன்னோட மனபார்த்தை எல்லாம் கரைச்சிக்கிட்டு இருந்தா அவ அதுல அவ மடியெல்லாம் கண்ணீரால நனைஞ்சிக்கிட்டு இருந்துச்சு........


தன்னோட கண்ணுல இருந்து ஊத்துன கண்ணீரதொடக்கத்தோணாம மகளைத்தேத்திக்கிட்டு இருந்தா ” அம்மா “


அம்மா அம்மாதான்..............


(பின் குறிப்பு இது கற்பனைக்கதை அல்ல)


அ.முத்துவிஜயன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages