18.11.20 - தென்குமரிக் கவிதைக்களம்

புதன், 18 நவம்பர், 2020

18.11.20







எங்கிருந்தோ வந்தான்


“என்னங்க,என்ன யோசனை பண்ணிட்டு இருக்கீங்க?”


“ ஒண்ணுமில்லை!”


“ இல்லே, ஏதோ இருக்கு. ராத்திரிகூட பார்த்தேன். தூங்காம முழிச்சிட்டு

இருந்தீங்க. ஆஃபிஸில் எதாவது பிரச்சனையா?”


“ குழந்தை ஓண்ணு தந்து எடுக்கணும்னு சொன்னியே! அதைத்தான் யோசித்துகிட்டு

இருந்தேன்”


“ஏங்க தத்து எடுக்கறதுல உங்களுக்கு விருப்பம்யில்லயா?”


“ ஏன் நிஷா! நமக்கு குழந்தை பிறக்காதுனு முடிவுக்குவந்திட்டயா? நமக்கு எந்த

குறையுமில்லைனு டாக்டர் சொன்னதை மறந்திட்டயா?”


“நீங்களே சொல்லுங்க! நமக்கு கல்யாணமாகி எழு வருஷம் ஆயிடிச்சு. முதல்

ரெண்டுவருஷம் அப்படியொண்ணும் பெரிசா தெரியலே! ஆனா அதுக்குப்பிறகு எந்த

விழாவுக்கு போனாலும் பதில் சொல்லி அலுத்து போயிடறேன். சிலர் என்னை

தவிர்க்கும்போது துடிச்சுபோயிடறேன். நமக்கு குழந்தை பிறக்கும் போது

பிறக்கட்டும். ஆனா அதுக்குமுன் எனக்கு குழந்தை வேண்டும்.”


சொல்வதற்குள் கண்ணீர் வந்துவிட்டது. ராஜேந்திரன் அதற்குமேல் நிஷாவை அழ

விடவில்லை.


“சாரி நிஷா! நீ இந்தளவுக்கு உறுதியா இருப்பாய்னு நினைக்கலே,

சரி வா! குளிச்சிட்டு கிளம்பலாம்”


அனாதை இல்ல நிர்வாகி, கனிவாக வரவேற்று பேசினார். விபரங்களை கேட்டறிந்தார்.

“ரொம்ப சந்தோசம், இந்த ஏழுவருஷம் குழந்தை இல்லையென்பதால் எங்க குழந்தையை நன்றாக பார்த்துக்கொள்வீங்கனு தெரியுது. எங்க குழந்தை உங்க வீட்டில வளரும்போது உங்க நல்ல மனசுக்கு ஆண்டவன் கருணை செய்வான். தத்து

....2.........

எடுக்கறதுல சில சட்டபூர்வமான நடவடிக்கைகள் இருக்கு. அதை செய்தபின்னாடி நீங்க தத்து எடுக்கலாம். “


சிலமாதங்கள் சென்ற பின்னர் தத்து எடுக்க சென்றனர். நிஷாவுக்கு ஊட்டி மலர்

கண்காட்சிக்கு வந்தது போல இருந்தது. எல்லா குழந்தைகளும் பளீர்ன்னு சிரித்தன.


மிக சிறிய வயது குழந்தைகள் அழுதுகொண்டுருந்தன. வளர்ந்த குழந்தைகள்

பழக்க படுத்தியிருந்த காரணத்தால் எழுந்து நின்று, வணக்கம் சொன்னார்கள்.


குழந்தைக்காக நாம் இங்கே தவம் இருக்க, குழந்தைகளை பெற்று அவைகளை

அனாதைகளாக தவிக்க வைத்த பெற்றோர் மேல் கோபம் வந்தது.அவளுக்கு..எல்லா குழந்தைகளையும் பிடித்திருந்தது. 


ஐந்து அல்லது ஆறு குழந்தைகளுக்கு ஒரு ஆயா

பார்த்துக்கொள்ள இருந்தனர். குழந்தைகள் அவர்களை அம்மா என்று அழைத்து கொண்டு இருந்தன. அங்கு இருந்த இரண்டு வயது சங்கரை நிஷாவுக்கு ரொம்ப .பிடித்து விட்டது. அதுவும் அவன் சிரிக்கும்போது, கன்னத்தில் விழுந்த குழி ரொம்ப அழகு. சட்டப்படி சங்கரை தத்து எடுத்துக்கொண்டனர். 


வீட்டுக்கு வந்த பின்னரும் சங்கர் ஆயா நினைவாக, “அம்மாகிட்ட போகணும்”னு அழுதுகொண்டு இருந்தான். நிஷா அவளது அன்பால் ஒருசில நாட்களில் “அம்மா” என்று சொல்ல வைத்தாள்.


 ராஜேந்திரன் நிஷாவுக்காக சங்கரிடம் அன்பாக இருந்தான். அவனால் அச்சிறுவனை முழுவதும் ஏற்க முடியவில்லை. புழுங்கித் தவித்தான்


. மூன்று வயதான போது சங்கரை அருகிலிருந்த பள்ளியில் சேர்த்தார்கள். தினமும் ராஜேந்திரன் ஆபீஸ் போகும் முன் கொண்டுவிடுவான்.


 மாலையில் நிஷா அழைத்து வந்துவிடுவாள். அவன் பள்ளி வாசலில் நிற்கும் நிஷாவை பார்த்தவுடன் அம்மானு வந்து கட்டிக்கொள்வான். ஆரம்பத்தில் விழாக்களில் நிஷாவை ஒதுக்கியவர்கள், இப்போது ஒட்டிக்கொண்டார்கள். அனாதை இல்ல நிர்வாகி சொன்னது போல, சங்கர் வந்துசேர்ந்த சில வருடங்களில் நிஷா தாய்மை அடைந்தாள். 


ராஜேந்திரனுக்கு போன் பண்ணிணாள்..


“என்னங்க! நான் தாங்க பேசறேன்.” 

அழுகை வந்துவிட்டது.


அவன் பதறினான்,”


 என்னாச்சு நிஷா?”


“ என்னங்க! நான் மறுபடியும் அம்மாவாகப்போறேன்.”


“ என்ன... என்ன சொல்றே நிஷா?


“ ஆமாங்க! காலையில் எனக்கு மயக்கம் வந்திச்சு, பக்கத்துவீட்டு அக்கா டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனாங்க. அவங்க டெஸ்டெடுத்து பார்த்து உறுதிபடுத்திட்டாங்க.”


....3........

“நான் லீவு போட்டு வரவா?”

“ எதுக்குங்க? வரும்போது ஸ்வீட் வாங்கி வாங்க. லட்டு சங்கருக்கு ரொம்ப பிடிக்கும். “


மாலையில் பள்ளியிலிருந்து வந்த சங்கரை இறுக்கி அணைத்து,


“ கண்ணா உன் கூட விளையாட ஒரு குட்டிப்பாப்பா அம்மா வயித்துல வரப்போகுது”

“என்னம்மா சொல்றே?


 நிஜம்மா?


“ ம்ம்... நிஜம் கண்ணா! குட்டி பாப்பா வயத்துல தூங்கிகிட்டு இருக்குடா.”


“ அம்மா தூங்கி எழுந்ததும் விளையாட வருமா?”


“ம்ம்... வந்து சங்கர் அண்ணா எங்கேனு தேடும். உன்னை பார்த்ததும் சிரிக்கும்.”


சங்கர் ரொம்ப சந்தோஷப்பட்டான். தினமும் விளையாட ஓடுபவன் அன்று விளையாட போகாமல் நிஷாவின் வயிற்றை தொட்டு பார்த்துகொண்டு இருந்தான்...


ராஜேந்திரன் வண்டி சப்தம் கேட்டது.


“ அம்மா! அப்பா வராரு!”

ஓடிப்போய் அவன் முன் கண்களில் ஆர்வம் மின்ன நின்றான். .


“அப்பா நம்ம வீட்டுக்கு ஒரு குட்டி பாப்பா வரப்போகுதாம்.”


ராஜேந்திரன் அவனை லட்சியம் செய்யாமல் உள்ளே சென்றான்.


“ஏங்க கடவுள் கண் திறந்திட்டாருங்க.”


ராஜேந்திரன் அவளது தலையை வருடினான். உள்ளே வந்த சங்கர்

ராஜேந்திரன் மடியில் அமர்ந்து,


“அப்பா! பாப்பா என்கூட விளையாடும்னு அம்மா சொன்னாங்க, அதுக்கு

கிரிக்கெட் விளையாட தெரியுமப்பா”?


ராஜேந்திரன் பதில் சொல்லவில்லை. அவனை மடியில் இருந்து இறக்கிவிட்டான். 


நாட்கள் செல்ல,செல்ல நிஷாவின் வயிறு பெரிதாக பெரிதாக சங்கர் பயந்தான்.


“ அம்மா உன் வயிறு பெரிசா இருக்குதே? பலூன் போல வெடிச்சிடுமா?”


.........4.........


“ போடா! அப்படி இல்லை. உள்ளே பாப்பா வளருது இல்லையா? அதுதான் பயப்படாதேடா!


“எப்பம்மா வெளில வரும்?”


“ இன்னும் ரெண்டு மாசத்தில் வந்துடும் கண்ணா! “


அந்த நாளும் வந்தது. மிக அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ராஜேந்திரன் ரொம்ப சந்தோசம் அடைந்தான்.


 உதவிக்கு நிஷாவின் அம்மா வந்து வீட்டுடன் தங்கி கொண்டாள். சாதாரணமாக சங்கரை பள்ளிக்கு கொண்டுவிடும் ராஜேந்திரன் நேரமே ஆபீஸ் போக கிளம்பினான்.


“என்னங்க! அப்ப சங்கரை யாரு பள்ளிக்கு கூட்டிட்டுபோய் விடறது?”


“ என்னைக்கேட்டா? ஆஃபிஸில் நிறைய வேலை இருக்கு.”


“ சரி இன்னிக்கு மட்டும் கூட்டிட்டுபோய் விடுங்க! நாளையிலிருந்து

ஆட்டோ ஏற்பாடு பண்ணிக்கலாம்”


பதில் சொல்லவில்லை. ஆனால் சங்கரை கூட்டிகொண்டு சென்றான்.


சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் எரிந்து விழுந்தான். குழந்தை சங்கரை

அடிக்க ஆரம்பித்தான்

. ஒருநாள் சங்கர் நிஷாவிடம் வந்தான்.


“ அம்மா அப்பாவுக்கு என்னைப் பிடிக்கவில்லையம்மா?


நிஷா துடித்துபோய்விட்டாள்.


“ கண்ணா ஏண்டா இப்படி கேக்கறே?”


“ இல்லேம்மா! அவரு பாப்பா வருவதற்கு முன் என்னை கொஞ்சினார்.

இப்போ என்னை அடிக்கிறாரு. தம்பிப் பாப்பாவை மட்டும் கொஞ்சறாரு.”


“அப்படியில்லை கண்ணா! அப்பாக்கு ஆஃபிஸில் ரொம்ப வேலை, அதுதான்! கோபப்படறாரு! தம்பிப் பாப்பா குட்டி குழந்தை அதுதான் கொஞ்சறாரு.

அவன் பெரியவன் ஆனா அவனையும் அடிப்பாரு!’


அவனை சமாதானப்படுத்தினாள். அவளும் ராஜேந்திரன் நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள். குழந்தை தினேஷின் முதலாம் பிறந்தநாள்

....5......

விழாவை ரொம்ப சிறப்பாக கொண்டாடினார்கள்.


 வந்திருந்தவர்களில் யாரேனும் சொன்னார்களா? அல்லது ராஜேந்திரன் மனம் மாறிவிட்டான்னா தெரியவில்லை.


அடுத்தநாள், “ நானே சங்கரை பள்ளிக்கூடம் கொண்டுபோய் விடுகிறேன்”னு சொன்னான்.


 நிஷாவுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. மாலையில் ஆட்டோவில் சங்கர் வரவில்லை.


 ராஜேந்திரன் காலையில் அழைத்து சென்றதால் மாலையில் அவர்களே அழைத்து வருவார்கள் என்று ஆட்டோக்காரன் தப்பாக நினைத்துக்கொண்டு குழந்தையை அழைத்து வரவில்லையா என்று பதறிய நிஷா, ஆட்டோக்காரன்னுக்கு போன் பண்ணி கேட்டாள்.


 அம்மா சங்கரை அவங்கப்பா கூட்டிட்டுபோயிட்டார்னு சொன்னாங்க.”


“இன்னிக்கு சங்கர் வரவில்லையே”


வகுப்பு ஆசிரியர் அதிர்ச்சி தந்தார். ராஜேந்திரன் போன் எடுக்கவில்லை. தலைமை ஆசிரியரை போய் பார்த்தாள்.


“ உங்களுக்கு தெரியாதா? அவங்கப்பா அவனை காலையிலேயே கூட்டிட்டு போயிட்டார்.”


நிஷா அதிர்ந்தாள். குழந்தைக்கு

 பசிக்குமே! எங்கு கூட்டிட்டு போய் இருக்காரு?

பலவாறு குழம்பினாள். இரவு ரொம்ப தாமதமாக வந்தான் ராஜேந்திரன்.

என்றுமில்லாத அதிசயமாய் குடிச்சிருந்தான்.


“ என்னங்க சங்கர் எங்கே? குடிச்சிட்டு வந்திருக்கீங்க.”


“இனி சங்கரை பத்தி எதுவும் கேட்கவேண்டாம். நமக்கு ஒரு குழந்தை.

அது நம்ம தினேஷ் மட்டும்தான்.”


“சங்கரை என்ன செஞ்சீங்க?

“அவனை ஒண்ணும் செய்யலை. அவன் வந்த இடத்தில் தான் இப்ப இருக்கான். விருப்பம் இல்லாமதான் தத்து எடுக்க ஒத்துக்கிட்டேன். இப்ப நமக்கு தினேஷ் இருக்கான். இனி, அவன் எதுக்கு? யாரோ பெத்துக்கு நான் ஏன் அப்பாவாகணும்?”


அவனுடன் சண்டை போட்ட நிஷாவுக்கு அடியும், உதையும் கிடைத்தது. ஆழுது அழுது கண்கள் வீங்கி தலைவலி வந்துவிட்டது. 


அடுத்தநாள் வீடு வந்தான் ராஜேந்திரன்.


வீடு பூட்டியிருந்தது


.. பக்கத்து வீட்டில் சாவி இருந்தது. திறந்தான்


. மேஜை மீது நிஷா கடிதம் இருக்க, எடுத்து படித்தான்.


நானும் எனது இரு பிள்ளைகளும் உங்களை விட்டு பிரிந்து போகிறோம் நிரந்தரமாக.... தேட வேண்டாம்...... தேடி வந்தாலும் வரமாட்டோம்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages