25.11.20-நீளும் கரங்கள் - தென்குமரிக் கவிதைக்களம்

புதன், 25 நவம்பர், 2020

25.11.20-நீளும் கரங்கள்

 



கவிச்சிகரம் அமுதன், தமிழ்நாடு


நீளும் கரங்கள்(சிறுகதை ?)


பொதுவாக வழக்கமாக மெஸேஞ்சர் தொடர்பில் இருப்போரின் மெஸேஜ் மட்டுமே அவருக்கு ப்பார்ப்பது வழக்கம். நிறைய நட்புகள் தொடர்பில் இருந்தாலும் இன்பாக்ஸில் பேசும் வழக்கம் அவருக்குப்பொதுவாகக்கிடையாது. நெருங்கிய நண்பர்களிடம் மட்டுமே பேசும் வழக்கம் கொண்டவர்.


அதனால் யாராவது புதிதாக மெஸேஜ் நண்பர்களே அனுப்பினாலும் கவனிக்க வியலாது போய்விடும். அதனால் பலருக்கு மனவருத்தம் வருவதும் உண்டு.


அப்படித்தான் நட்பு வட்டத்தில் இருக்கும் ஒருவர் மெஸேஜ் அனுப்பியிருந்தார். தங்களுடன் பேச முடியுமா என்று. அது வந்து கிட்டத்தட்ட இரண்டு மாதமிருக்கும். இன்று தற்செயலாகப்பார்க்க நேர்ந்தது. அடாடா அழைக்காதவர் வந்திருக்கின்றாரே நாம் கவனிக்காது இருந்து விட்டோமே என்று மனதாற வருந்திப்பின் அவருக்கு அலைப்பெசி எண் அனுப்பினார்.


சற்றுநேரத்திலேயே அவரிடம் இருந்து அழைப்பு வர எடுத்துப்பேசினார். அவர் அய்யா மன்னிக்கவும் இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு உதவிக்காகப்போட்ட மெஸேஜ் அது என்றார். உதவி கிடைத்துவிட்டதா என வினவியபோது..சற்று மெளனம் காத்து( அழுதிருக்கக்கூடும்) தொடர்ந்தார்.


அய்யா என் தாயாருக்குக்  உடம்பில் சுகவீணம். மாற்று அறுவைசிகிச்சை செய்யும் நிலமைக்கு வந்து விட்டது. மாற்று அறுவை சிகிச்சை இளம் வயதினருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதால் என் தாயாருக்குத்தள்ளிப்போகிறது. ஆனால் அவர் படும் அவஸ்த்தையை பார்க்க இயலவில்ல,. கண்கள் கசிகின்றன. மாற்று ஏற்பாடாக மருந்துகள் சாப்பிடச்சொன்னார்கள் . அது அரசு மருத்துவமனையில் கிடைக்கவில்லை.


வெளியில் வாங்கும்போது 6000 ரூ மாதத்திற்கு ஆகிறது. என்னுடைய வருமானத்தில் அதுவும் இந்த கரோனா காலத்தில் மூன்றுவேளை சாப்பிடவே சிரமம். அதுவே சில நேரங்களில் முடிவதில்லை. மிகவும் ஏழைகள் தெருவுக்கு வந்துவிடுகின்றனர். ஆனால் என்னைப்போல கீழ் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் வர கெளரவம் தடுப்பதால் வீட்டிற்குள்ளேயே கிடந்து வாடுகின்றனர்.


என்னால் முடிந்த வரை முயற்ச்சி செய்து மருந்துகள் வாங்கிக்கொடுத்தேன். ஆனால் மருந்துக்குச்செலவிடும்போது உணவு சுருங்குகின்றது..ஆதலால் அம்மாவே தவிர்க்கின்றார். அந்த சூழ்நிலை அனுபவித்தவர்க்குத்தான் தெரியும் ரத்தக்கண்ணீர் விடும் நேரம் அது


நண்பர் ஒருவர் தனது உதவியாக ஒருமாதம் மருந்து வாங்கி அனுப்பினார். தங்களால் ஏதாவது உதவ முடியுமா எனக்கேட்க்கத்தான் போன் செய்தேன் எனச்சொல்லும்போது அவர் குரல் கம்மியது


அவரிடம் இவர் எனக்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்க முடியுமா ஏதாவது செய்வோம் என்றார். அவரும் முடிந்தவரை பாருங்கள் தவறாக நினைக்க வேண்டாம் என்றார்.


இவருக்கு உடனே இவரின் நண்பர் நினைவு வந்தது. அவரின் மருமகன் ஒரு மருந்துக்கம்பெனியில் சேல்ஸ் எக்ஸிகூயூட்டிவ். அவருடைய உதவியை நாடுவது என முடிவெடுத்தார்.


அவரைத்தொடர்பு கொண்டு பேசியபோது அந்த நோயாளியிக்கு மருத்துவர் அளித்த பிரிஸ்கிரிப்சனை வாட்சாப்பில் அனுப்பச்சொன்னார். இவரும் பாதிக்கப்பட்டவரிடம் தொடர்பு கொண்டு அனுப்பச்சொன்னார். அந்த மருந்துகளின் விலை 6000 ஆகும் என்று அவர் சொன்னார்


அதை அவர் நண்பரின் வாடாச்சாப்பிற்கு அனுப்பியபோது அவர் தன் மருமகனிடம் பேசி 3800 க்கு நாம் அதையே கொடுக்கலாம் . சப்ளையர் ரேட்டுக்கு உங்களுக்குக்கிடைக்கச்செய்கிறேன் என்றார்.


இவர் உடனே பணத்தை அவர் அக்கவுண்டுக்கு போட்டுவிட்டார் கூடபே மெஸேஜ் மூலம் தன் நண்பர்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார். உடனே ஒருவர் 1000 ரூபாயும் இன்னொருவர் 500 ரூபாயும் அனுப்பிவைத்தனர். இன்னும் சிலர் உதவுவதாகச்சொன்னார்கள்.


பணம்போய் சேர்ந்ததும் நண்பரின் மருமகன் தொடர்பு கொண்டு பணம் வந்துசேர்ந்தது. உடனே மருந்துகள் அனுப்பிவைக்கப்படும் என்று சொல்லிவிட்டு பின் மருந்து யாருக்கு உங்களின் உறவினருக்கா என வினவினார்.அப்போது இவர் சொன்னார் இல்லை. அவர் என் உறவினர் இல்லை. தொடர்பில் இருக்கும் நண்பர் அவரை பார்த்தது சில தடவைகள் மட்டுமே நான் ஒரு உதவியாகத்தான் செய்கிறேன் என்றார்.


அவர் சரிங்க அய்யா நாளை மருந்துகள் அனுப்பப்படுமென்றார். மறுநாள் பாதிக்கப்பட்டவர் இவர்க்குப்போன் செய்தார். அய்யா மருந்துகள் வந்துசேர்ந்தன. இந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவியதற்கு நன்றி என ஒரு வார்த்தையில் சொல்லிவிட இயலாது என்று தழுதழுத்தார். அப்போது இவர் சொன்னார். நண்பர்கள் உதவுவதாகச்சொல்லியிருக்கின்றனர். அது கிடைத்தால் அடுத்தமாதமும் மருந்து அனுப்பிவைக்கப்படும் என்றபோது மறுமுனையில் லேசான விம்மல் கேட்டது....


அன்றே நண்பரின் மருமகன் தொடர்பில் வந்தார். அய்யா நீங்கள் முகம் தெரியாத ஒருவருக்கு உதவுவதாக அறிந்தோம் அந்த உதவியில் எங்களையும் இணைத்துக்கொள்கிறோம். மருந்துகள் விலை மேலும் குறைக்கப்பட்டு 3000 ஆக்கப்பட்டுள்ளது மீதப்பணம் உங்களின் வங்கிக்கணக்கிற்குத்திரும்ப அனுப்பப்பட்டுள்ளது என்றார்


இந்த மகிழ்வான செய்தி இவருக்கு ஊக்கத்தை அளித்தது அடுத்தமாதமும் உதவியை தொடரவேண்டும் என முடிவெடுத்தார் இந்த உலகம் இன்னும் ஈரம் வற்றிப்போய்விடவில்லை . ஈரம் இன்னும் பல நெஞ்வங்களில் இருக்கத்தான் செய்கின்றது என நினக்கும் போது சற்று ஆறுதலாகவே இருந்தது....


அப்போது நினைத்தார்


இன்னும் மனிதாபிமானம் உயிர்த்திருக்கின்றது


என்று


இதுவும் கிடைக்காமல் அவதியுறுவோரை நினைக்கும்போது அவர் விழிகளில் நீர் துளிர்த்தது


துடைத்துக்கொண்டார்....... (உண்மைச்சம்பவம் எனக்கூறவும் வேண்டுமோ)


அ.முத்துவிஜயன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages