மலைச்சாமி
ஜானகி இராமச்சந்திரன் (நவம்பர் 30, 1923 – மே 19, 1996) (Janaki Ramachandran) அல்லது வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி முன்னாள் திரைப்பட நடிகை , முன்னாள் தமிழக முதல்வர் பிரபல நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமாகிய எம். ஜி. இராமச்சந்திரனுக்கு மூன்றாவது மனைவி ஆவார்.
வி.என். ஜானகி அம்மா அவர்கள் சொந்த ஊர் கேரளா பாலக்காட்டுக்கு அடுத்து உள்ள வைக்கம். இவர் பிரபல கர்நாடக பாடல் அசிரியர் பாபநாசம் அவருடைய தம்பி ராஜகோபால் ஐயருடைய மகள் தான் வி.என். ஜானகி அம்மா அவர்கள்.
ஓர் #முன்னாள் முதல்வர், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மனைவியின் நிலைமை…..
இது தான் உலகம். இவரால் பயன் பெற்றவர்கள் இன்று உச்சத்தில் உள்ளனர்.
வைக்கத்தில் பிறந்தவராக இருந்தாலும் படித்தது, நடனம் கற்றக்கொண்டது எல்லாம் சென்னைதான். இவருடன் பிறந்தது ஒரு ஆண் அவர் பெயர் நாராயணன். இவர்கள் சென்னை மைலாப்பூர் கேசவப் பெருமாள் கோயிலுக்கு அருகில் வசித்தார்கள்
வி.என். ஜானகி அவர்கள், பிரபல டைரக்டர் கே.சுப்பிரமணி, நடிகை எஸ்.டி. சுப்புலட்சுமி அவர்கள் நடத்தி வந்த நாடக குழுவில் நடித்து வந்தார். பிறகு டைரக்டர் கே. சுப்பிரமணி வழியாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இவர் நடித்த முதல் படம் “ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி” இந்த படத்தில் கதாநாயகியாக ரொம்ப பிரமாதமாக நடித்துள்ளார். அந்த படத்தில் இவர் ஆயிரம் தலைகளை வெட்டி குவிக்கும் காட்சி மெய் சிலிர்க்க வைக்கும் அந்த படம்.
எம்.ஜி.ஆர். அவர்களுடன் கதாநாயகியாக நடிக்க சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் மோகினி 1948ல் வெளிவந்தது. அதை அடுத்து மருதநாட்டு இளவரசி, நாம் போன்ற படங்கள் இவர்கள் நடித்த படங்கள்.
இந்தக் கால கட்டத்தில் இல்லற வாழ்க்கையே நமக்கு இனிமேல் இல்லை; தான் உண்டு தன் தொழில் உண்டு! உழைப்பே உயர்வு என்ற ஏணியில் ஏறிக்கொண்டு இருக்கும் போது, எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கல்யாணம் நடக்க இயற்கை அழைக்கிறது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடன் மூன்று படங்களில் ஜானகி அம்மாள் நடித்து உள்ளார்கள். 1957ல் எம்.ஜி.ஆர் அவர்களும், வி.என். ஜானகி அம்மா அவர்களும் பதிவு திருமணம் செய்து கொண்டார்கள்.
எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோதும், மருத்துவமனையில் இருந்தபோதும் அவரை கவனித்துக் கொண்டவர் அவரது மனைவி ஜானகி எம்ஜிஆர். ஆனால் எம்ஜிஆர் மரணமடைந்த பிறகு கடும் பிரச்சனைகளுக்கு மத்தியில் ஜானகி முதலமைச்சரானார்.
ஆனால் ஜெயலலிதா – ஜானகி இடையே ஏற்பட்ட மோதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இறுதியில் ஜானகி விட்டுக் கொடுத்தார். அதன் பின்னர் ஜெயலலிதா தமிழக முதலமைச்சரானர்.
ராஜகுமாரிக்கு அடுத்து அவர் கதாநாயகனாக நடித்த படம் மோகினி. இதில் வி.என்.ஜானகி இவருக்கு ஜோடியாக நடித்தார். டி.எஸ்.பாலையா வில்லனாக நடித்தார். படம் திட்டமிடப்பட்ட போது எம்.ஜி.ஆர் வில்லனாகவும் பாலையா கதாநாயகனாகவும் நடிப்பதாக இருந்தது. ஆனால், எம்.ஜி.ஆர் தயாரிப்பாளர் மனதை மாற்றி ஜானகியை ஜோடியாக ஏற்றார். அப்போதே அவருக்கு ஜானகியை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவருடன் பேச முடியாதபடி அவருக்குக் காவல் பலமாக இருந்தது. அவருடைய தாய்மாமா ஜானகியைக் கைதி போல நடத்தினார். ஜானகிக்கு ஓர் ஆண் குழந்தையும் இருந்தது.
மருத நாட்டு இளவரசி (1950)
காண்டிபன் என்ற சாதாரணக் குடியானவனாக எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். மாறுவேடத்தில் காட்டுக்கு வந்து அவரைக் காதலிக்கும் இளவரசியாக ஜானகி நடித்திருந்தார். கலைஞர் கருணாநிதியை திருவாரூரிலிருந்து வரவழைத்த எம்.ஜி.ஆர் இயக்குநர் காசிலிங்கத்திடம் அறிமுகப்படுத்தி அவரையே கதை,வசனம் எழுத வைத்தார். இந்தப் படம் ஏறத்தாழ அடிமைப் பெண்ணுக்கு முன்னோடி எனலாம். இதில் ஜானகி எம்.ஜி.ஆருக்கு சண்டைப் பயிற்சி அளித்து அவரை ஒரு வீரராக மாற்றுவார். இந்தப் படத்தின் படப்படிப்பின் போது எம்.ஜி.ஆர் ஜானகி காதல் வளர்த்தார். அவரையும் அவர் மகன் சுரேந்திரனையும் கடைசிவரை கண்கலங்காமல் காப்பாற்றுவதாக வாக்குறுதி அளித்தார். ஜானகியின் கொடுமைக்கார மாமாவிடமிருந்து வெளியே கொண்டுவர முனைந்தார். பல பிரச்னைகளை, தடைகளைச் சந்தித்தார்.
தேவகி படப்பிடிப்பில் ஜானகி
ஜானகியும் எம்.ஜி.ஆரும் நேரில் சந்தித்துக் காதலை வளர்க்க முடியாமல் சிரமப்பட்டனர். ஜானகி தேவகி படத்தில் நடிக்க மைசூர் புறப்பட்டபோது அவரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை இயக்குநர் ஜரூபிடர்சோமுவிடம் ஒப்படைத்தார். சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்த நாள்களில் அவர் கவனித்துக்கொண்டார். மைசூருக்கு அவுட்டோர் படப்பிடிப்புக்கு ஜானகியுடன் அவரால் போகஇயலவில்லை. மைசூரிலிருந்து ஜானகி எம்.ஜி.ஆருக்கு தினமும் கடிதம் எழுதினார். திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்னாடி படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் குழுவினருடன் சேர்ந்து மறுநாள் சென்னைக்கு வர விரும்பாமல் அன்றே எம்.ஜி.ஆரைப் பார்க்க கிளம்பி வந்து விட்டார்.
திருமணப் பேச்சுவார்த்தை
எம்.ஜி.ஆர் ஜானகியைத் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருப்பதை அறிந்த அவர் மாமா சில நிபந்தனைகளை விதித்தார். ஜானகி அதிக சம்பளம் பெறும் டாப் ஸ்டார் என்பதால் அவரது வருமானம் முழுக்க எம்.ஜி.ஆர் தனக்கும் தன் அண்ணனின் பெரிய குடும்பத்துக்கும் (சக்கரபாணிக்கு 9 பிள்ளைகள்) செலவழித்து விடுவாரோ என்று பயந்த ஜானகியின் மாமா எம்.ஜி.ஆரோடு ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வந்தார். தனது பயம் நியாயமானது என்பதையும் எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார். அந்த ஒப்பந்தத்தில் ஜானகி தொடர்ந்து திருமணத்துக்குப் பிறகு நடிக்கலாம். பத்து வருடங்கள் வரை மாமா சொல்லும் படங்களில் ஜானகி நடித்துவர வேண்டும். வருமானத்தையும் அவரிடம் கொடுத்துவிட வேண்டும் என்ற நிபந்தனைகளைக் கேட்டதும் எம்.ஜி.ஆர் கொதித்தெழுந்தார். ஜானகி படத்தில் நடிப்பதை அவரோ விரும்பவில்லை. திருமணத்துக்குப் பிறகு அவள் படத்தில் நடிக்கமாட்டாள் என்று எம்.ஜி.ஆர் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.
படப்பிடிப்பில் பேசாத ஜானகி
எம்.ஜி.ஆர் ஜானகியின் மாமாவிடம் கோபித்துக்கொண்டு வந்தபிறகும் இருவரும் இணைந்து நடிக்கும்போதும் ஜானகி எம்.ஜி.ஆரிடம் எதுவும் பேசுவதில்லை. எம்.ஜி.ஆரிடம் பேசுவதில்லை என்று தன் மாமாவிடம் சத்தியம் செய்து கொடுத்திருந்தார். ஆனால், வேலைக்காரப் பையனிடம் “அவர் சாப்பிட்டு விட்டாரா" என்று கேட்டபிறகே, தான் சாப்பிடுவார். புதன், சனிக்கிழமைகளில் “எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொல்" என்று சொல்லி அனுப்புவார். ஜானகியின் மாமா கால தாமதம் செய்து வருவதற்கான காரணம் எம்.ஜி.ஆருக்குப் புரிந்துவிட்டது. இன்னும் சில மாதங்களில் பலதாரமணத் தடை சட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்நிலையில் எம்.ஜி.ஆர் ஜானகியைத் திருமணம் செய்வது நடக்காத காரியம். எனவே எம்.ஜி.ஆர் தன்னிடம் பேசாத ஜானகிக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டார். இதற்கிடையே ஜானகியின் மாமா ஜானகியின் வங்கியிருப்பு போன்றவற்றை தன் பெயருக்கு மாற்றிவிட்டார். எம்.ஜி.ஆர் வக்கீலிடம் ஆலோசித்து எந்தப் பத்திரத்திலும் கையெழுத்து போடாதே என்று எச்சரிப்பதற்கு முன்பே மாமா பல பத்திரங்களில் ஜானகியிடம் கையெழுத்து வாங்கிவிட்டார். சொத்தும் பணமும் கைமாறிவிட்டது. பலதாரமண தடைச் சட்டமும் அமலாகிவிட்டது. அதன்பின்பு படப்பிடிப்பின்போது ஜானகியோடு அவரது தந்தை வி. இராசகோபலய்யர் வந்திருக்கிறார். ஜானகியிடம் கால்ஷீட் பெறுவதில் கூட பல பிரச்னைகள் தோன்றின.
ஜானகியைக் காதலித்தது ஏன்?
எம்.ஜி.ஆர் ஜானகி காதலுக்கு அவரது வீட்டுச் சூழ்நிலையும் முக்கியக் காரணமாக இருந்தது. ஜானகிக்கு அவரது மாமாவால் நிம்மதி இல்லை. எம்.ஜி.ஆருக்கு வேறு சிக்கல். அவரது மனைவி சதானந்தவதிக்கு கருக்குழாயில் கருத்தங்கி வளர்வதால் கருச்சிதைவு செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்தாகும் நிலை. இதைத் தொடர்ந்து அவருக்குக் காச நோயும் வந்துவிட்டது. அன்பும் அழகும் பொறுமையும் கொண்ட சதானந்தவதிக்கு எம்.ஜி.ஆரால் உடனிருந்து பணிவிடை செய்ய முடியாத சூழல். அந்தச் சமயத்தில் அவருடன் படங்களில் நடித்த ஜானகி போகக்போக அவருடன் நட்பாகிறார். அப்போது சதானந்தவதியை ஜானகி உடனிருந்து கவனிக்கத் தொடங்கினார். ஜானகிமீது அவர் காதல் கொண்டதற்கு இதுவும் ஓர் அடிப்படைக் காரணம்.
எம்.ஜி.ஆர் வீட்டில் ஜானகி
எம்.ஜி. சக்கரபாணிக்குத் தன் தம்பி ஜானகியை விரும்புவதும் திருமணம் முடிக்கத் துடிப்பதும் விருப்பமில்லை என்றாலும் தம்பியின் காதலுக்கு அவர் தடை விதிக்கவில்லை. எம்.ஜி.ஆரும் ஜானகியும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசிப்பதால் தன் வீட்டுக்கு எதிரே ஒரு வீட்டில் ஜானகியைக் குடியமர்த்தியதை ஏற்றுக்கொண்டார். 1958ல் நாடகமேடையில் எம்.ஜி.ஆர் காலில் அடிப்பட்டதும் எம்.ஜி.ஆர் படுத்த படுக்கையானார். அப்போது அவர்களைப் புரிந்து கொண்ட சக்கரபாணி, எம்.ஜி.ஆர் ஜானகியை வீட்டுக்கு அழைத்து வருவதற்கு சம்மதித்தார். ஜானகியும் சதானந்தவதியும் எம்.ஜி.ஆரின் அண்ணன் அண்ணி பிள்ளைகளும் பல வருடங்கள் ஒன்றாகவே வாழ்ந்தனர்.
எம்.ஜி.ஆர் மனைவி மரணம்
சதானந்தவதி காசநோயால் மிகவும் அவதிப்பட்டபோது எம்.ஜி.ஆரின் குடும்ப வைத்தியர் பி.ஆர்.சுப்பிரமணியம் ஒரு முரட்டு வைத்தியம் செய்தார். காசநோய் நிபுணர்கள் கைவிட்ட நிலையில் பி.ஆர்.எஸ் போட்ட ஊசிகள் சதானந்தவதியின் ஆயுளைப் பல வருடங்கள் நீடித்தன. கேமராமேன் நாகராஜராவும் எம்.ஜி.ஆரும் தங்கள் மனைவிமாருக்கு ஒரே டாக்டரிடம் காட்டி சிகிச்சையளித்தனர். பிழைத்துக் கொள்வார் என்று சொல்லப்பட்ட நாகராஜராவின் மனைவி மரணம் அடைந்தார். இறந்துவிடுவார் என்று கணிக்கப்பட்ட கதானந்தவதி பிழைத்துக் கொண்டார். 1962ல் எம்.ஜி.ஆர் கலைஞருக்காக தஞ்சையில் பிரசாரம் (பரிசுத்த நாடாரை எதிர்த்து) செய்தபோது சதானந்தவதி இறந்த செய்தி அவருக்குக் கிடைத்தது. அவர் காருக்குப் பின்னால் ஒரு காரில் விரட்டி வந்து நள்ளிரவில் இந்தச் செய்தியைத் தெரிவித்தார்கள். கலங்கிய எம்.ஜி.ஆர் கலைஞரின் பிரசாரக் கூட்டத்தில் பேசி நண்பருக்குரிய கடமையை முடித்துவிட்டு மனைவிக்குரிய இறுதிக்கடனை நிறைவேற்ற சென்னைக்குப் புறப்பட்டார்.
12 வருடம் காத்திருந்த காதலர்கள்
1950ல் காதலிக்கத் தொடங்கி 1962ல் சதானந்தவதி மறைந்த பிறகு இயக்குநர் கே.சுப்ரமணியம் (பத்மா சுப்ரமணியத்தின் தந்தை) தலைமையில் எம்.ஜி.ஆரும் ஜானகியும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு இருவரும் ராமாவரம் தோட்டத்துக்குத் தனிக் குடித்தனம் நடத்தக் கிளம்பினர். 1967க்குப் பிறகு ஜெயலலிதா சிலகாலம் வந்து ராமாவரத்தில் தங்கியிருந்தபோது ஜானகி சக்கரபாணி குடும்பத்துடன் தங்கும்படி அனுப்பி வைக்கப்பட்டார். இப்போதும் சக்கரபாணியால் தன் தம்பியைக் கண்டிக்க முடியவில்லை. ஜெயலலிதா ராமாவரத்தை விட்டு வெளியேறியதும் ஜானகி தான் இனி, தனியாளாக இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து தன் அண்ணன் பிள்ளைகளைத் தன்னுடன் வீட்டில் வைத்து வளத்தார்.
ராமாவரம் தோட்டத்தில்
ஜானகியின் சகோதரருக்கு லதா, சுதா, கீதா, பானு, ஜானகி என ஐந்து பெண் குழந்தைகள். இவர்களுக்குத்தான் எம்.ஜி.ஆர் தன் ராமாவரம் வீட்டை உயில் எழுதி வைத்தார். இவர்களுக்கென்று தனித்தனி பள்ளிக்கூடங்கள் கட்டிக்கொடுத்து அவற்றை அன்னை சத்யா அறக்கட்டளையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தார். இவர்களில் சுதாவின் கணவர் விஜயனை பானு ஓர் அடியாள் மூலம் கொலை செய்துவிட்டு இப்போது சிறையில் இருக்கிறார்.
இந்தப் பெண்களுடன் பிறந்த தீபன் (முதல் மரியாதை படத்தில் நடித்தவர்) ஜெயலலிதா (ராணுவ ரேக்கில்) எம்.ஜி.ஆர் உடல் வைக்கப்பட்ட இடத்திற்கு ஏறிய போது கையைப் பிடித்து கீழே இழுத்துவிட்டார். எம்.ஜி.ஆர் உயிலில் சொல்லியிருந்தபடி இப்போது ராமாவரம் தோட்டத்தில் காதுகேளாதோர் வாய்பேச இயலாதோர் பள்ளியை ஜானகியின் அண்ணன் மகள் சுதா ராஜேந்திரன் நடத்தி வருகிறார்.
பெண் முதலமைச்சர் ஜானகி
இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சராக ஜானகி அம்மையார் தமிழகத்தை 28 நாள்கள் ஆட்சி செய்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்பு முதலமைச்சரான ஜானகிக்கு ராஜீவ்காந்தியும் காங்கிரஸும் சட்டசபையில் ஆதரவு தராததால் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்று அவர் பதவியிழந்தார். தன் பேரில் இருந்த (கட்சி அலுவலகமாக) கட்டடத்தை அதிமுக கட்சி பெயருக்கு மாற்றிக் கொடுத்தார். ஜெயலலிதா அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் சம்மதித்தார். அவர் இறந்ததும் அவர் உடல் ராமாவரம் தோட்டத்தில் புதைக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர் ஜானகிக்கு ஜோடி சிலை
ஜானகியின் சகோதரர் ஜானகி பிறந்த ஊரான வைக்கத்தில் எம்.ஜி.ஆர் - ஜானகி ஜோடியாக நிற்பது போல சிலையமைத்துள்ளார். இதுபோன்ற நடிகர்கள் மற்றும் முதல்வர்கள் சிலை உலகத்திலேயே இது ஒன்று மட்டுமே. “ ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா - தர்மம் வெல்லும் என்று சொன்னவனே ராமச்சந்திரா" என்ற திரைப்பாடல் இப்போது நம் காதுகளில் ஒலிக்கிறது.
ஜானகியின் மகன் சுரேந்திரன்
ஜானகியைத் திருமணம் செய்து எம்.ஜி.ஆர் அழைத்து வந்த போது அவர் மகன் சுரேந்திரனையும் சேர்த்து அழைத்து வந்தார். தன் அண்ணன் சக்கரபாணியின் குழந்தைகளுடன் சுரேந்திரனும் சேர்ந்து படித்து வளர்ந்தார். அவருக்கு ஒளிப்படத்துறையில் அபார அறிவு இருந்தது. ஆயிரத்தில் ஒருவன் படம் பிடிக்கும்போது கப்பல் அசைவதைக் காட்டுவதற்கான கேமரா உத்தி ஒன்றை சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
சுரேந்திரன் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். அவருடைய குழந்தைகளுக்கு செங்குட்டுவன், இளங்கோ, கவிதா என்று எம்.ஜி.ஆர் தமிழ்ப் பெயர்களைச் சூட்டினார். அவர்களில் ஒருவர் மட்டும் வெளிநாட்டுப் பெண்ணை மணந்துள்ளார். எம்.ஜி.ஆரை நம்பி வந்த ஜானகியின் மகனும் அவரது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் நல்லநிலையில் உள்ளனர். எம்.ஜி.ஆரின் ஆதரவில் சிறப்பான வாழ்வைப் பெற்றனர். அவரை நம்பிக் கெட்டவர் எவரும் இல்லை என்ற தொடர் இப்போது நமக்கு நினைவுக்கு வருகிறது. எம்.ஜி.ஆரின் சுயசரிதமான நான் ஏன் பிறந்தேன் நூலின் பதிப்புரிமை எம்.ஜி.ஆருக்குப் பிறகு அவரது மனைவி ஜானகிக்கும் அதன் பின்பு ஜானகியின் மகனான சுரேந்திரனுக்கும் சட்டப்படி மாறியுள்ளது. அந்நூலில் சுரேந்திரனின் குடும்பத்தார் படங்களும் இடம் பெற்றுள்ளன.
ஆனால் தங்கள் கட்சியின் நிறுவனர் எம்ஜிஆரின் மனைவியை எந்த ஒரு அதிமுகவினரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
காலம் எல்லோரையும் மறக்கச் செய்யும் என்பது உண்மை என்றாலும் கூட, அரசியலில் இன்று அவரால் பிரமாண்டமாக வளர்ச்சி அடைந்திருக்கும் எந்த அதிமுகவினரும் ஜானகி எம்ஜிஆரை கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை.
வாணி ஜெயராம் பிறந்த தினம்: ஏழு ஸ்வரங்களுக்குள் ஒரு வாணி
புகழ்பெற்ற பழைய திரைப்படங்களை மீண்டும் வெளியிடும்போது, அந்தப் படத்தில் ‘ஹிட்டடித்த’ பாடல்களின் பட்டியலை அச்சிட்டு.. ‘இனிய பாடல்கள் நிறைந்த படம்’ என்று விளம்பரப்படுத்துவார்கள்.
பாடகி வாணி ஜெயராம் அவர்களின் பிறந்தநாள் இன்று. தன் குரலினால் மக்களின் மனதை மயக்க வைத்தவர் இவர். இதுவரை 10,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். வேலூரில் பிறந்து வளர்ந்த இவர், வேலை பார்த்தது வங்கி ஊழியராக... வேலை மாற்றம் காரணமாக மும்பை சென்ற இவரது திறமையை அடையாளம் கண்டு கொண்டது ஹிந்தி திரையுலகம். பின்பு, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி,மராத்தி, ஒடியா என பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல், பாடிய பல மொழிகளில் அம்மாநிலத்தின் உயரிய விருதுகளை பெற்றிருக்கிறார்.
கிராமிய பாடலாக இருந்தாலும் சரி, கர்நாடக பாடலாக இருந்தாலும் சரி, பாடலின் நயங்களால் மக்களை அந்த இடத்திலிருந்தே உணர வைப்பதில் வல்லவர். தமிழக இசை வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவர். காதல் பாடலாக இருந்தாலும், பெண்களின் மனதை வெளிப்படுத்தும் பாடலாக இருந்தாலும் , டூயட் பாடலாக இருந்தாலும், அந்த காதாபாத்திரமாகவே மாறி பாடக்கூடியவர்.
ஆச்சரியகரமாக.. 1974-ம் வருடம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆன ‘தீர்க்க சுமங்கலி’ படத்தின் சுவரொட்டியில், படம் வெளிவரும் முன்பே பிரபலமாகியிருந்த ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ’ என்ற பாடலின் முதல் வரியைக் குறிப்பிட்டு விளம்பரம் செய்திருந்தார்கள். அப்படி விளம்பரம் செய்யத் தூண்டிய குரல், அன்று துளிர்விட்டிருந்த புதிய பாடகியான வாணி ஜெயராமினுடையது.
இந்தப் படத்துக்கு முன்பே 1973-ம் வருடம் வெளிவந்த ‘வீட்டுக்கு வந்த மருமகள்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ ஆகிய இரு படங்களில் வாணி ஜெயராம் பாடி இருந்தாலும் அவரது குரலை இல்லம் தோறும் கொண்டு சேர்த்த பெருமை ‘தீர்க்க சுமங்கலி’க்குக் கிடைத்தது.
1945 - நவம்பர் 30-ம் தேதி வேலூரில் ‘கலைவாணி’ என்கிற வாணி ஜெயராம் பிறந்தார். இசைப் பரிச்சயமும் பக்தியும் மிக்க தமிழ்க் குடும்பம் அவருடையது. கடலூர் ஸ்ரீனிவாச அய்யங்கார், டி.ஆர். பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்னாடக இசையைப் பயின்றுவந்த சிறுமி வாணிக்கு சிலோன் வானொலியில் ஒலிபரப்பான லதா மங்கேஷ்கர், முகம்மது ரபி, மன்னா டே ஆகியோரது பாடல்களைக் கேட்கக் கேட்கத் தானும் திரைப்படங்களில் பாடவேண்டும் என்ற ஆசை துளிர்விட்டது.
பாலிவுட்டில் அறிமுகம்
சென்னை வந்து ராணி மேரிக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார். பாரத ஸ்டேட் வங்கியில் வேலை கிடைத்தது. திருமணத்துக்குப் பிறகு பணி மாறுதல் வாங்கிக்கொண்டு மும்பையில் வசித்தார். வாணியின் இசை ஆர்வத்தை ஊக்குவிக்கும் கணவராக ஜெயராம் அமைந்ததால் உஸ்தாத் அஹ்மத் கானிடம் முறையாக ஹிந்துஸ்தானி இசை கற்றுக்கொண்டார். இசை அவருக்கு வானளாவிய தன்னம்பிக்கையைத் தந்தது. வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுமூச்சாக இசையில் இறங்கினார்.
திரையிசையில் இயங்கியவர்கள் அவரது குரலையும் பாடும் திறனையும் கேட்டு ‘இன்று போய் நாளை வா’ என்று சொல்ல முடியாமல் தவித்தார்கள். வசந்த் தேசாய் முந்திக்கொண்டார்.
1971-ம் வருடப் புத்தாண்டு தினத்தில் வெளிவந்த ‘குட்டி’ (GUDDI) என்ற இந்திப் படத்தில், வசந்த் தேசாயின் இசை அமைப்பில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற ‘மியான் மல்ஹார்’ ராகப் பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். வாணி ஜெயராமின் குரல் அறிமுகமும் அந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமான ஜெயா பாதூரியின் (பின்னாளில் அமிதாப் பச்சனின் மனைவி ஆனார்) குடும்பப் பாங்கான தோற்றமும் இணைந்து பெரும் மாயத்தை செய்ய ரசிகர்கள் கிறங்கிப் போனார்கள்.
அறிமுகப் பாடலே அபார வரவேற்பைப் பெற்றது. அந்த ஒரு பாடலே வாணி ஜெயராமை முன்னணிப் பாடகியரின் வரிசையில் இடம்பெறச் செய்தது. அதன்பின் ஒரு தமிழ்க் குரல் இந்தியில் கொண்டாடப்படும்போது தமிழில் தவறவிடுவார்களா? அதுவும் திரைப் பாடல்கள் அனைத்தும் கவிதைகளுக்கு இணையான இடத்தில் உயர்ந்து நின்ற இசைப் பொற்காலத்தில், அவை வாணி ஜெயராமின் குரலில், இனிமை கூடி ஒலிக்கும்போது கொண்டாடாமல் இருப்பார்களா?
இன்று ரசிகர்களால் ‘வாணி அம்மா’ என்று அழைக்கப்படும் அவரது திரையிசைப் பயணம் எழுதி முடிக்க முடியாத சாதனைகளை உள்ளடக்கியது. ஏனெனில் அவர் பாடாத இந்திய மொழியே இல்லை எனும் அளவுக்குச் சாதனைகள் படைத்திருக்கிறார். மதங்களைக் கடந்து பக்திப் பாடல்களையும் தனி ஆல்பங்களிலும் பாடியிருக்கிறார்.
தெய்விகத் தன்மையும் சங்கதிகளும்
‘ஏழு ஸ்வரங்களுக்குள்’, ‘மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க’, ‘முத்தமிழில் பாடவந்தேன்’ என அவர் பாடிய எந்தப் பாடலை எடுத்துக்கொண்டாலும் அதில் நயமும் இனிமையும் கைகோத்துக்கொண்டிருக்கும். இவற்றுக்கெல்லாம் அடிநாதமாக ஒரு தெய்விகத் தன்மை குரலில் இழைந்தோடும். வாணி பாடும் சிறப்பம்சமே பாடல்களின் இடையில் அவர் வெளிப்படுத்தும் சங்கதிகள் தான். "இந்த இடத்தில் இந்த சங்கதி போடவேண்டும்" என்று தீர்மானித்துக்கொண்டு அவர் பாடமாட்டார். அவர் பாடிக்கொண்டே போவார். சங்கதிகள் தாமாகவே வந்து விழுந்துகொண்டே இருக்கும்.
‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ ‘சங்கராபரணம்’ படத்தில் இடம்பெற்ற ‘மானஸ ஸஞ்சரரே’, ‘ஸ்ருதிலயாலு’ தெலுங்குப் படத்தில் இடம்பெற்ற ‘ஆலோகயே ஸ்ரீ பாலகிருஷ்ணம்’ ஆகிய பாடல்களுக்காக மூன்று முறை அகில இந்திய சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றவர்.
‘புனித அந்தோனியார்’ படத்தில் ‘மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்’, பி. சுசீலாவுடன் இணைந்து ‘பாத பூஜை’ படத்தில் ‘கண்ணாடி அம்மா உன் இதயம்’, ‘அந்தமான் காதலி’யில் ‘நினைவாலே சிலை செய்து’, ‘சினிமாப் பைத்தியம்’ படத்தில் ‘என் உள்ளம் அழகான வெள்ளித்திரை’, ‘தங்கப்பதக்க’த்தில் ‘தத்திச் செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு, ‘பாலாபிஷேக’த்தில் ‘ஆலமரத்துக் கிளி’ எனக் கேட்டதுமே இதயத்துள் ஈரம் படச் செய்யும் குரலினிமையுடன் அவர் பாடிய பாடல்களின் பட்டியல் மிகப் பெரிது.
உணர்வு நிலைகளின் ஊர்வலம்
குரலினிமைக்கு மட்டுமல்ல; கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளைத் தனது குரலை மாற்றாமலேயே கொண்டுவந்துவிடும் திறமை கைவரப் பெற்றிருந்தார். ஒரு பெண்ணின் விரக தாபத்தை வெளிப்படுத்தும் பாடல்களாக ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் ‘என்னுள்ளே ஏதோ’, ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்தில் இடம்பெற்ற ‘நானே நானா’, ‘சிறை’ படத்தில் ‘நான் பாடிக்கொண்டே இருப்பேன்’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அதேபோல் காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்ணின் ஆற்றாமையைக்
குரலில் சித்தரிக்கும் ‘சவால்’ படத்தின் ‘நாடினேன்.. நம்பினேன்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் ‘கட்டிக் கரும்பே கண்ணா’, ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தில் ‘ஒருபுறம் வேடன். மறுபுறம் நாகம்’, ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் ‘மணமகளே உன் மணவறைக் கோலம்’ ஆகிய பாடல்களை எடுத்துக்காட்டலாம்.
தாய்மை அடைந்த பெண்ணின் பல்வேறு உணர்வு நிலைகளை வெளிப்படுத்தியதில் ‘திக்கற்ற பார்வதி’யின் ‘ஆகாயம் மழை பொழிஞ்சா’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தின் ‘மலர்போல் சிரிப்பது பதினாறு’ ‘சாவித்திரி’ படத்தில் ‘வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்’ ஆகிய பாடல்கள் சிறந்த உதாரணங்கள்.
மாற்று இல்லாத பாடகர்!
கடலில் அசைந்தாடும் படகைப் போல உள்ளத்தை அசைக்கும் வாணி ஜெயராமின் பல பாடல்கள் ஒன்று ‘மீனவ நண்பன்’ படத்தில் இடம்பெற்ற ‘பொங்கும் கடலோசை’. ‘அவன்தான் மனிதன்’ படத்தில் இடம்பெற்ற ‘எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது’ சரணங்களில் ஏற்ற இறக்கங்களுடன் ஜாலம் புரியும் பாடல். காதலர்களின் தேசிய கீதமாக நீண்ட காலம் ஒலித்த ‘ஒரே நாள் உனை நான்’ என்ற ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படப் பாடலில் காதல் வழிந்தோடுவதைக் கேட்கமுடியும். இவருக்கு மாற்று யாருமில்லை என்று எண்ணத்தக்க வகையில் எல்லாப் பாடல்களிலும் அவர் வெளிப்படுத்தும் சஞ்சாரங்கள் பிரமிக்க வைப்பவை.
கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பாடியிருக்கிறார் வாணி ஜெயராம். எந்த மொழியில் பாடினாலும் அவரது உச்சரிப்பு துல்லியமாக இருக்கும். "எல்லா பாஷைகளிலும் அவற்றினுடைய த்வனி தவறாமல் உச்சரிக்கும் வல்லமை பெற்ற வாணி ஒரு ஆயுட்கால பாடகியே" - என்று கவியரசு கண்ணதாசனால் பாராட்டப்பட்டவர். 30.11.2020 அன்று தனது 76-ம் வயதில் அடியெடுத்து வைக்கும் வாணி ஜெயராம், பெற்றோர் சூட்டிய பெயருக்கு அர்த்தம் சேர்த்துவிட்ட அபூர்வத் திறமையாளர்.
70வதுகளில் பி.சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி,எஸ்.ஜானகி என்று கேட்ட குரல்களையே கேட்டு புளித்துப் போய் இருந்த காலக் கட்டத்தில் வந்தவர் வாணி ஜெயராம்.இவர்களிடமிருந்து மாறுபட்ட வித்தியாசமான குரல்."என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்” பாட்டைக் கேளுங்கள் தெரியும்.
ஒரு மாதிரி ஜலதோஷம் பிடித்த ”தமிழ்ந்துஸ்தானி” கலவைக்குரல். மனதைக் கொள்ளை கொள்ளும் ஹோம்லி குரல்.ஜானகியிடம் இருக்கும் வசீகரம் இவரிடம் இருந்ததா? ஆனால் இவரிடம் வேறு விதமாக இருந்தது.(தங்கத்தில் முகம் எடுத்து)
அப்போது குடும்பப் பாட்டு = சுசிலா, குடும்பம +செமிகுடும்பம் =ஜானகி,கிளப் டான்ஸ் பாட்டு =ஈஸ்வரி, என்ற பார்முலா இருந்தது. இவர் குடும்பப் பாட்டுக்கு முதலில் செட்டாகி பின்னால் பார்முலாவை மீறி சில பாடல்கள் பாடினார்.
எல்லா வித இசையும் கைப்பிடியில் வைத்திருந்ததால் எல்லா வித பாடல்களையும் சிரமமின்றிப் பாடினார்.ரூபாய் நோட்டில் உள்ள எல்லா மொழிகள் ப்ளஸ் வேறு மொழிகளிலும் பாடி நிறைய அவார்டுகள் வாங்கினார்.இவர் குரல் எல்லா மொழிக்கும் ஓரளவு பொருந்தி வந்ததுதான் காரணம்.
எல்லா மொழிப் பாடல்களைப் பாடினாலும் இவர் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அச்சு அசல் தமிழ்அய்யங்கார் பெண் என்பதால உச்சரிப்பில் எந்த வித வட இந்திய சாயல் இல்லை.தமிழ் உச்சரிப்பும் அருமை.
தமிழுக்கு வருவதற்கு முன் 1971ல் Guddi என்ற இந்தி படத்தில் இவர் பாடிய “போல் ரே பப்பிஹரா” மெகா ஹிட் பாடல். ஒரு பக்கத்து வீட்டு ஹைஸ் ஸ்கூல் பெண் ஹோம்லிகுரலில்இந்தியாவையே கிறங்கடித்தவர் வாணி ஜெயராம்.அப்போது இந்தி சினிமா மோகத்தில் இருந்த தமிழ்நாடும் பாட்டைக் கேட்டு சொக்கியது.ஆனால் தமிழிற்கு பின்னால்தான் வந்தார்.(1975ல் “ போல் ரே பப்பிஹரா” பாட்டு “என் உள்ளம் அழகான வெள்ளித்திரை” என்று தமிழில் சினிமா பைத்தியம் படத்தில் டவுன்லோட் ஆகி ”ஹிட்” ஆகியது.)
1973ல் வாணிஜெயராம் வந்தாலும் 1974ல்தான், “மல்லிகை என் மன்னன்” என்னும் தீர்க்க சுமங்கலி பட பாடல் குறிப்பாக தமிழ்நாட்டின் எல்லா ஹோம் மேக்கர்/ஹவுஸ் வைஃப்களுக்கு மிகவும் பிடித்துப்போய் சூப்பர் ஹிட் ஆகியது.ஹோம் மேக்காதவர்களும் ரசிக்கத்தான் செய்தார்கள்.
இந்தப் பாட்டு(இசை- எம்எஸ்வி) வழக்கமான பி.சுசிலாவின் குடும்ப டைப்தான்.ஆனால் வாணி பாடியதும் வித்தியாசமாக இருந்து ரசிகர்கள் கிறங்கிப்போனார்கள்.அதற்கு பிறகு சுசிலா டைப் பாடல்கள் இவருக்குத் தாவின.வேறு டைப் பாடல்களும் பாடினார்.அடுத்து அப்போது வந்த நிறைய புது கதாநாயகிகளுக்கும் இவர் குரல் பொருந்தி வந்தது.
அப்போது தொடங்கி இவரின் கிராஃப் மேல் நோக்கிப் போக ஆரம்பித்தது.சுசிலாவும் ஜானகியும் சற்று பின் தங்கினார்கள்.
ஆனால் முதல் கட்டமாக என்னை இவரிடம் ஈர்த்தப் பாடல்கள்:
”மண்ணுலகில் இருந்து தேவன்”(புனித அந்தோனியார் - எம் எஸ் வி)
(கேட்ட இடம்,நேரம்,தேதி இன்னும் கூட இன்னும் ஞாபகம் இருக்கிறது)
”அன்பு மேகமே” (எங்கம்மா சபதம்-விஜய பாஸ்கர்)
”ஏழு சுவரங்களில்”(அபூர்வ ராகங்கள்- எம் எஸ் வி)
(மெகா ஹிட் பாடல். புல்லரிக்கும் ஆரம்ப ஆலாபனை)
“ஆடி வெள்ளி” “வசந்த கால நதி”(மூன்று முடிச்சு -எம் எஸ் வி)
“கங்கை நதி ஓரம்”(வரப்பிரசாதம்- வி.குமார்)
“ வேறு இடம் தேடிப் போவாளோ” (சில நேரங்களில் சில மனிதர்கள்) haunting melody.கிளாசிகல் டச்சோடு வாணி அருமையாகப் பாடி இருக்கிறார். எம் எஸ் வி
தன் இசைக்கோர்வையில்(orchestration) இன்னும் கூட சோக உணர்ச்சிகளைக் கொண்டு வந்திருக்கலாம்.தன்னுடைய புளித்துப்போன ஸ்டீரியோடைப் இசையே இதிலும் வருகிறது.
இதே காலக்கட்டத்தில் இவர் பாடிய ஹிட ஆகாத நிறைய டப்பா பாடல்களும் இருக்கிறது.எல்லாம் வீண்.
அடுத்த மெகா ஹிட் ”மேகமே..மேகமே..”(பாலைவனச்சோலை).
அடுத்தக் கட்டமாக இளையராஜா இவரை மெருகேற்றி/மேம்படுத்தி நிறைய ஹிட் பாடல்கள் கொடுத்தார்.அதே சமயத்தில் பல இசை அமைப்பாளரின் இசைகளிலும் பாடிக்கொண்டிருந்தார்.
வீணை சிட்டிபாபு இசையமைத்த ராஜாஜியின் “திக்கற்ற பார்வதி” படத்திலும் பாடியுள்ளார்.
ஹிட் ஆன பாடல்கள்:
1.யாரது சொல்லாமல் நெஞ்சு/இலக்கணம் மாறுதோ
2.ஒரே நாள் உனை /பாரதி கண்ணம்மா/அந்தமானைப் பாருங்கள்
3.என் உள்ளில் எங்கோ/தங்கத்தில் முகம் எடுத்து/பொங்கும் கடலோசை
4.மேடையில் ஆடிடும்/எத்தனை மலர்கள்/அமுத தமிழில் எழுதும்
5.கங்கை யமுனை/நானா பாடுவது நானா/அம்மாணை அழகு
"மண்ணுலகில் இருந்து” -புனித அந்தோனியார்-1977
"அன்பு மேகமே” - எங்கம்மா சபதம் -1974
வித்தியாசமான மெட்டு. வாணி/பாலு இருவரும் அருமை.
”அம்மாணை அழகுமிகு கண்”-அவன் ஒரு சரித்திரம்-1977
(இந்தப் பாட்டின்(எம் எஸ் வி) தாக்கத்தில்தான் “பொன்மானே சங்கீதம் பாடவா”
பாட்டை ராஜா போட்டிருப்பார் என்பது என் யூகம்.)
என்னால் என்றும் மறக்க முடியாத மற்றொரு பாடல்:
"என் கல்யாண ” -அழகே உன்னை ஆராதிக்கிறேன்-1978
வாணியின் குரலைக் கேளுங்கள்.மிகவும் வித்தியாசமாக தெரியும் அருமை.ராஜாவின் இசைக்கோர்ப்பைக் கேளுங்கள்.மகழ்ச்சிக் கொப்பளிக்கும் இளம் பெண்ணின் காதல் மனத்தை பிரதிபலிக்கும் வண்ணமயமான துள்ளிக்குதிக்கும் இசை. மத்யமாவதி ராகத்தில் போடப்பட்டுள்ளது.
தமிழ்ப் பின்னணிப் பாடகிகளில் கர்னாடக இசையும் ஹிந்துஸ்தானியும் கஜலும் அறிந்தவர் இவர் ஒருவர்தான். 19 மொழிகளில் பாடியிருப்பவர். பெரும்பாலும் அங்காடிக் கூச்சல்களாகவும், வாகன ஹாரன் ஒலிகளாகவும் திரையிசை மாறிவிட்ட சூழலில், சந்தோஷங்களின் குரலாக இருக்கும்
எப்படி வந்தது பெயர்?
எழுத்தாளர் சிவசங்கரியும் வாணி ஜெயராமும் சகோதரிகளைப்போல தோற்றமளிப்பார்கள். சிவசங்கரியின் எழுத்துக்கு வாணி ஜெயராம் ரசிகையாகவும் வாணி ஜெயராமின் குரலுக்கு சிவசங்கரி ரசிகையாகவும் இருக்க, பொது விழா ஒன்றில் சந்தித்துக்கொண்டபோது அறிமுகமாகிக்கொண்ட இருவரும் இன்றுவரை இணை பிரியா தோழிகள். வாணி ஜெயராம் பற்றி நெகிழ்ந்து எழுதியிருக்கும் சிவசங்கரி, கலைவாணி என்ற பெயர் அவருக்கு எப்படி வந்தது என்பதைப் பகிர்ந்திருக்கிறார்.
"வாணி அவர் வீட்டில், நிசப்தமான சூழ்நிலையில் ஆர்மோனியம் பின்னணியில் ஒலிக்க பஜன்களும், தும்ரியும் பாடுவதைக் கேட்பது ஓர் அலாதி அனுபவம்.
வாணியிடம் எனக்கு ரொம்பப் பிடித்த சமாசாரம் அவருடைய எளிமையான குணம். ஒரு ஆடம்பரம், ஒரு திமிர் பேச்சு, ஒரு பெருமைப் பீத்தல்? ம்ஹும்..! ஒன்றும் கிடையாது. யாராவது பாடச் சொன்னால் கொஞ்சம்கூட தயங்காமல் உடனேயே வாணி பாடிக் காட்டி நான் பலமுறை பார்த்துவிட்டேன்.
ஒருநாள் பேச்சுவாக்கில் 'கலைவாணி என்று உனக்கு எப்படி இத்தனை பொருத்தமாய் பேர் வைத்தார்கள்?' என்றேன். வாணி ஒரு நிமிஷம் பேசாமல் இருந்தார். அப்புறம் சொன்னார்,
"இது வரைக்கும் நான் யார் கிட்டவும் இதைச் சொன்னதில்லை; ஏன்னா விளம்பரத்துக்காக இல்லாததையும் பொல்லாததையும் சொல்ற மாதிரி சிலருக்குத் தோணலாம். ஆனா நா சொல்லப் போறது ஒரு சத்தியமான சம்பவம். நா எங்கப்பா அம்மாவுக்கு எட்டாவது பெண். நான் பிறந்ததுலே அவர்களுக்குக் கொஞ்சம் வருத்தம்தான். அதனால் பதினைஞ்சு நாள் வரைக்கும் புண்ணியாகவசனம் செய்யாமல், பேர்கூட வைக்காம இருந்தாளாம்.
அப்போ வீட்டுக்கு வந்த ஜோஸியர் ஒருத்தர் என் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணிச்சுட்டு ‘பூர்வ ஜென்மத்திலே தேனும் பாலுமா பகவானுக்கு அபிஷேகம் பண்ண பலனோட உங்கப் பெண் பிறந்திருக்கா, இவ சரஸ்வதி அம்சம், இவளோட பெருமை உங்களுக்குப் பிற்காலத்துலே புரியும்’னு சொன்னாராம். அதுக்கப்புறம் தான் அம்மா எனக்கு ‘கலைவாணி’னு பேர் வைச்சா’என்றாள். இன்றைக்கும் வாணியின் ஜாதகத்தில் அன்று ஜோஸியர் எழுதின குறிப்புகள் அப்படியே உள்ளன. அதை என் இரண்டு கண்களால் பார்த்தவள் நான்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ் ரசிகர்களால் மறக்கவே முடியாத பாடல் இது. பாடல் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை அப்படியே ஒரு கிராமத்து பெண் பாடுவது போலவே பாடி முடித்திருப்பார். இந்தப்பாடலை கேட்டு முடித்த பிறகும் அதிலிருந்து மீண்டு வர சில நேரம் ஆகும். அப்படியான இசையும், குரலும், வரிகளும் பின்னிப் பிணைந்து இருக்கும்.
"பச்சரிசி சோறு.. உப்பு கருவாடு...
சின்னமனூரு வாய்க்கா செலு கொண்ட மீனு
குருத்தான மொல கீற வாடாத சிறு கீற
நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது
அள்ளி தின்ன ஆச வந்து என்னை மீறுது"
என இளையராஜாவின் இசையில், கங்கை அமரனின் வரிகளில் மனதை மயக்கும் பாடல் .
தனிப்பாடல்கள் தவிர டூயட் பாடல்களை முன்னணி பாடகர்களோடு பாடியிருக்கிறார். "ஒரே நாள் உன்னை நான் நிலாவில் காண்கிறேன்", "பாரதி கண்ணம்மா", "பூந்தென்றலே...", "நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்" என இவர் பாடிய ஒவ்வொன்றும் முத்து முத்தனாவை. இவ்வளவு சிறந்த பாடல்கள் பலவற்றை கொடுத்த வாணி ஜெயராம் அவர்களுக்கு
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக