30.11.20-சிறுகதையின் பெயர் : தீக்குள்விரலை வைத்தால் - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 30 நவம்பர், 2020

30.11.20-சிறுகதையின் பெயர் : தீக்குள்விரலை வைத்தால்

 



கவிச்சிகரம் அமுதன், தமிழ்நாடு


தீக்குள்விரலை வைத்தால்(சிறுகதை)


காலையிலே கிளம்பிட்டரு சின்னான் ”ஏண்டா இன்னும் எந்திரிக்கலை” வெரசாப்போனாத்தான பாக்கமுடியும் உள்ளாற போய்ட்டாப்பாக்கமுடியாதுல எந்த்திரிடா ” என்று சுடலையப்பாடாப்படுத்திக்க்கிட்டுருந்தாரு


சுடலை அசையமாட்டீங்கிறான் .


எந்திரிக்காமயே சொன்னான் போதாத்தா ஒனக்கு என்னையப்புடிக்கல மகபிள்ளை பேத்திதான் உசுறு கூடயே இருந்தாலும் என்ன கேவலமாத்தான் திட்டுவன்னு சலிச்சிக்கிட்டான் .


ஏண்டா நீயும் அவளும் ஒண்ணாடா, நீ மாடுமேய்க்கிறபய ,அந்தப்புள்ள


அப்படியா ன்னார்..போ தாத்தா நானா மாடுமேய்க்கவா ஆசப்பட்டேன்


எங்கப்பு சீக்கிரமே மண்டயப்போட்டுடுச்சு படிக்கவைக்க ஆளில்ல நீ கஞ்சிஊத்துறதே அதிகம் .அப்பறம் எப்புடி படிக்கவைக்குறது அதான் நானாவே ஒரு சோலியத்தேடிக்கிட்டேன் அதுதான் மாடுமேய்க்கிறது அது உனக்குக்கேவலமா இருக்கு என்று கண்ணுகலங்கச் சொன்னான்


சின்னான் அவனை அணைச்சிக்கிட்டாரு. நீ பக்கத்துலயே இருக்குறீயே ராசா நெதம் உன்னப்பாத்துட்டுத்தான இருக்கேன் நீதான சொன்ன தாத்தா உன் மகபுள்ளபேத்தி இங்கிலீஸ் பள்ளிக்கொடத்துல படிக்குது நான் பாத்தேன் நு அதான் ஒரு ஆசை போய் பார்த்துட்டு வரலாம் நு


கூட்டிட்டுப்போடான்னா ரொம்பத்தான் பேசுற நீ ந்னாரு.


சரி வெரசாக் கிளம்புதாத்தா நான் மூஞ்சைக்கழுவிட்டு வாறேன் என்று குடிசைக்கு வெளியே போனவன் ஈர டவுசரோட திரும்பிவந்தான்


என்னடா குளிச்சியான்னார்சின்னான் .ஆமா தாத்தா பள்ளிக்கொடம் போறம்ல குளிச்சிட்டுப்போகலாம் ன்னுதா ன்ன்னு சொல்லிக்கிட்டு உள்ளாற போனவன் போன பொங்கலுக்கு வாங்குன டவுசர் சட்டைபோட்டு வந்தான்


தாத்தா எப்படி இருக்கு நல்லா இருக்கான்னு சிரிச்சான் .ஒனக்கென்ன ராசாடா நீ இரு வாறேன்ன்னு உள்ளாறபோயி அவர்கிட்டைருந்த


ஒரே ஒரு சட்டையை போட்டுகிட்டு வந்தாரு, வாடா போகலாம் சொன்னவருகிட்ட கையிலருந்த மஞ்சப்பை சுடலைய யோசிக்கவைச்சிச்சி.


என்ன தாத்தா பேத்திக்கா வாங்குனதை எங்கிட்டச்சொல்லவே இல்லை ஒளிச்சுவைச்சிருந்தயா நான் எடுத்து தின்னுபுடுவேன்னு என்று சொல்லிட்டுச் சிரிச்சான்.


இனிப்பாச்சே எலி திண்ணுடப்போகுதுண்ணு பானைக்குள்ள வைச்சிருந்தேன் உனக்கும் வைச்சிருக்கேன் போய்ட்டுவந்து தாறேன்னாரு. சரிவா தாத்தா டவுன் பஸ் வர்ற நேரமாச்சு னான்


ரெண்டுபேரும்பஸ்டாண்டுக்குள்ள போகவும் பஸ் வரவும் சரியாக இருந்துச்சு. பஸ்சில ரெண்டுபேரும் ஏறிக்கிட்டாக..பஸ்கிளம்புச்சு.


தாத்தா தன் முடிச்சிலிருந்து காசு எடுத்துக்கொடுத்தாரு எங்கே போகனும் ன்னார். கண்டக்டர் , சுடலை சொன்னான் பெரியபஸ்டாண்டுக்கு என்று அதுக்குக் காசு கம்மியா இருக்கே ன்னாரு கண்டக்ட்டரு.


அதுல இருக்கதுக்கு டிக்கெட்குடுங்கய்யா எங்க எறங்கனும் நு சொல்லுங்க எறங்கிக்கிறேன்ன்னாருசரி சொல்றேன் என்று சொல்லி டிக்கெட் இரண்டு குடுத்தாருகண்டக்டர்தாத்தா கண்டக்டரையே பார்த்துக்கிட்டுருந்தாரு. எப்ப இறங்கச்சொல்லுவாருன்னு


கண்டக்டர் அவர் வேலையில


மும்மரமாஇருந்தாரு பஸ்ஸில் பள்ளிக்கொடம்போற பிள்ளைகள் கொஞ்சம் ஏறிச்சி, ஆசையாகப்பார்த்தாரு தாத்தா. பேத்தியும் இப்படித்தான் இருக்கும் என்று சிரிச்சிக்கிட்டாரு. சுடலை வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுருந்தான் அதக்குள்ள பெரியபஸ்டாண்டு வந்திருச்சு தாத்தா கண்டக்டரைப்பார்த்து எறங்குற எடம் சொல்லவே இல்லையேன்னாரு கண்டக்ட்டர் அதான் வந்திரிச்சில்ல பஸ்டாண்ட் இறங்குங்க என்றார் சிரிச்சிக்கிட்டு.


அப்பைதுக்குக்காசுன்னாரு தாத்தா நான் பாத்துக்கிறேன் நீங்க போயிட்டுவாங்கன்னாரு கண்டக்ட்டரு அவரகும்புட்டுட்டு கீழே இறங்குனாகரெண்டுபேரும்.


தாத்தா உனக்கு பள்ளிக்கொடத்துக்கு வழிதெரியுமாடான்னாரு. வாங்கஇங்குனதான் போகலாம் ன்னுதாத்தாவோட கையைப்புடிச்சான் சுடலை தாத்தா கைய விடுடா நான் வந்துருவேன் என்று உதறினாரு. பள்ளிகொடத்துக்குப்பக்கமாபோயிட்டாக


,,இந்தமரத்தடியிலே இருப்போம் பிள்ளைகளெல்லாம் வர ஆரம்பிச்சிருச்சி அந்தபிள்ளையும் அவுக அம்மாவும் இப்போ வந்துடுவாக உள்ளநம்மல விடமாட்டாக னான் சுடலை


கொஞ்சநேரத்துல பள்ளிக்கொடவாசல்ல கார் ஒன்னு வந்து நின்னுச்சி


அதுல இருந்து ஒருபொண்ணு இறங்க சுடலை இந்தா வந்துட்டாக என்று சந்தோசத்துல சத்தமாகச்சொன்னான். யாருடா எங்கேன்னாரு தாத்தா .தாத்தா கையப்புடிச்சு சுடலை அந்தப்பெண்ணுகிட்ட கூட்டிட்டுப்போனான்


அதுக்குள்ள அந்தகுழந்தையின் அம்மாகாரி காரில் இருந்து எறங்கி அந்தக்குழந்தையைப் பார்த்து ஸ்டெல்லா சீக்கிரம்போ டைம் ஆயிடுச்சுன்னா. .அதுக்குள்ள தாத்தா குழந்தைகைபிடிச்சிருந்தாரு ...மஞ்சப்பையை குழந்தைகையில்திணிச்சு உனக்காத்தான் வாங்கிட்டுவந்தேன் என் பேத்தி என்பேத்தி என்று அணைச்சிக்கிட்டாரு


..அந்தக்குழந்தையின் அம்மா வேகமாவந்து பலவந்தமாக குழந்தையை இழுத்து பையை புடுங்கி எரிஞ்சிட்டு ஸ்டெல்லா நீ வேகமா ஸ்கூல்க்கு போன்னுச்சு...


கொழந்தைக்கு ஒண்ணும் புரியவில்லை அது திருதிருன்னு ஒண்ணும் புரியாம இந்ததாத்தா யாருன்னுச்சி அதுக்கு அவள் அது யாரோ ஆள்தெரியாம வந்துட்டாரும்மா நீ போன்னு சொல்லிச்சி அந்தம்மா, குழந்தை யோசிச்சிட்டே உள்ளே போச்சு .


இப்ப அந்தம்மா தாத்தாவைப்பார்த்து இங்கே யாரு உங்கள வரச்சொன்னது யாராவது பார்த்தா என் ஸ்ட்டேட்டஸ் என்னாகுறது எங்களைப்பத்தி என்ன நினைப்பாக ஒங்கசாகவாசமே வேணாம்தான இருக்கோம் இங்கேவந்து ஏன் எங்களைக்கேவலப்படுத்துறீங்க என்று கத்தினா


அங்கே எல்லாரும் அவுகளைத்திரும்பிப்பாக்கவும் அவ கைப்பயில் இருந்து 50ரூவா எடுத்து தாத்தாகையில் எறிஞ்சிட்டு ஒழுங்கா ஊர்போய் சேருங்க ன்னு சொல்லிட்டு கார்கதவை டமால் என்று சாத்திட்டு கிளம்பினா


தாத்தா கண்ணுல நீர் வழிஞ்சிச்சி......சுடலை என்ன தாத்தா இப்புடி இருக்கு உன் மறுமகன்னான் .அதுக்குதாத்தா டேய் இப்போதான் மனசு சந்தோசமா இருக்கு...பேத்தி என்னமா பெரியசாதிக்காரப்புள்ளமாதிரி போகுதுன்னார் ,,


சுடலை உன்னத்தொடவிடலயே ஓம்மறுமகன்னான், அதுக்கு தாத்தா என் பேத்தி படிச்சு பெரியாஆளா வந்துருவா அப்புறம் என்பேத்திய யாரும் என்ன சொன்னமாதிரி சொல்லமாட்டாகல்ல தொடாதேன்னு அதுபோதும் அவுகளாவது இந்த கேவலத்துல இருந்து தப்பிச்சி நல்லாஇருக்கட்டும் நா


தூரத்துலைருந்துபாத்துசந்தோசப்படுறேன......அதுபோதும் எனக்கு நீ வாடா போகலாம் என்று நடக்கஆரம்பிச்சிருந்தாரு. கீழேவிழுந்த மஞ்சள்பையை சுடலை எடுதுக்க்கிட்டு தாத்தாபின்னால் நடந்தான் 50ரூபாய்காத்துலபறந்துச்சு.....அதுபாட்டுக்கு..........


.கண்ணத்தொடச்சிக்கிட்டுமுன்னாடிபோனதாத்தாவோட


கையப்புடிச்சான் சுடல அப்பதாத்தா கை நடுங்கிட்டு இருந்துச்சு....


அவருகைல பேத்தியோட கர்ச்சிப்புஇருந்துச்சு அதுக்கு அழுதுக்கிட்டே முத்தம்குடுத்தாரு தாத்தா அதப்பாத்த அவனாலயும் கண்ணீர அடக்கமுடியல


அ.முத்துவிஜயன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages