03.12.20-கதையின் பெயர் : கண் கெட்ட பிறகு .... - தென்குமரிக் கவிதைக்களம்

வியாழன், 3 டிசம்பர், 2020

03.12.20-கதையின் பெயர் : கண் கெட்ட பிறகு ....

 






சுந்தரம்



கண் கெட்ட பிறகு ....


அண்ணி கமலி பிறந்ததை ரொம்ப ரொம்ப சந்தோஷமாக கொண்டாடினார் அவள் அப்பா சுந்தரம் என்று அண்ணி சொல்ல கேட்டு இருக்கிறான் சேகர்.


 நமக்கு சுதந்திரம் கிடைத்த நாள் அன்றுதான் பிறந்தாராம். அவர் பிறந்த பிறகு அவருக்கு வியாபாரம் நன்கு பெருகியதாக சொல்வாராம் 


மூணு பெண் ,  நான்கு பிள்ளைகள் என்றாலும் கமலி இரண்டாவது பெண்.

அந்த வீட்டின் ராணியாக இருந்தாள் என்றாலும் பொறுமை சகிப்புத்தன்மை விட்டுக் கொடுத்தல் என்று சிறு வயது முதலே கூட பிறந்த சுபாவமாக இருந்ததால்அவர்கள் குடும்பத்திலும், கணவன் குடும்பத்திலும் கமலி என்றால் அனைவரும் உருகினாலும் கணவன் சந்திரனுக்கு மட்டும் அவள் எது செய்தாலும் திட்டுவதும் பிறகு கொஞ்ச நேரத்தில் கமலி கமலி என்று கூப்பிடுவதுமாக இருப்பான்.


 சந்திரன் கல்யாணமாகி வந்தபோது சேகர் பத்தாவது  படித்துக் கொண்டிருந்தான்.

ஒருநாள் வீட்டில் சந்திரன் கத்திக் கொண்டிருந்தான்.


என்ன என்று விசாரித்தால் கமலி கையில் மருதாணி வைத்துக் கொண்டிருந்தாள் .


சந்திரன் “ இதை வைக்காதே எனக்குப் பிடிக்காது “ என்று சொன்னதும் உடனே போய் கைகழுவி வந்தாள். உடனே அழித்தாலும் அவரது கையில் ஆரஞ்சு கலரில் மருதாணி ஜொலித்தது.


எதுவுமே நடக்காதது போல அண்ணி நடந்துகொண்டது சேகருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.


சேகருக்கு அம்மா இல்லாத குறையை கமலி போக்கினாள்.

அடுத்தநாள் கோயிலுக்கு அவர் கூட போனபோது மருதாணி பற்றிக் கேட்டான்.


 சொல்லும்போதே கமலின் முகம் பிரகாசமாக மாறியது.


 அவரது வீட்டில் இலையை உருவி எடுத்தாலே விரல்கள் சிவந்துவிடும் என்றும்  நல்ல ரகம் வைத்து ஒரு மணிநேரத்தில் ரத்த சிவப்பாகி விடும். என்றும் சொன்னவர்,

“ எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா உன்னோட அண்ணாக்கு அது ரத்தம் மாதிரி தெரிவதால் பிடிக்கலைனு சொல்லிட்டார்”


“ உங்களுக்கு கோவமே வரலையே! உங்களுக்கு பிடிச்சதை தானே பண்ணிகிட்டேங்க”


“சேகர்  இதுல என்ன இருக்கு? அவருக்கு பிடிக்கலைன்னா சரினு போறது தப்பா எனக்கு தெரியலை”


ஒரு பொண்ணு.. ஒரு பையன் அண்ணாவுக்கு.. பையனும் பெண்ணும் வெளிநாட்டில் குடும்பத்துடன்.. சென்னையில் சேகர். சேகருக்கு ஒரே ஒரு மகன்.  அவனது பூணுலுக்கு அனைவரும் வந்திருந்தனர்..


 அண்ணாவின் மகள் உஷா, சித்தப்பா மகனுக்கு மருதாணி வைத்து விட்டு அவளும் வைத்துக் கொண்ட போது சந்திரனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை..


ஓடி ஓடி கமலி எல்லோரையும் கவனித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தாள்.


கமலி அண்ணி அடிக்கடி அண்ணாவிடம் தேவை இல்லாமல் திட்டு வாங்குவதைப் பார்த்து சேகருக்கு மனம் கொந்தளிக்கும்


. “காபி கொடு”  என்று அண்ணா கேட்டு இருப்பார்.  வேலை மும்மரத்தில் மறந்தால் திட்டுவார் . அவரே ஏதுவாவது சொல்லிக்கொண்டு வரும்போது நடுவில் கமலி எதாவது கருத்து தெரிவித்தால் அதற்கும் நன்கு வாங்கி கட்டிக் கொள்வாள் .


தான் நினைப்பதை பகிர்ந்து கொள்ள கூட  யாரும் இல்லாமல் வீடு வேலை ஸ்வாமி கோயில் என்று தன் எல்லைகளைச் சுருக்கிக் கொண்டாள்.


அந்த வீட்டின் தேவதை இறந்து விட்டாள் என்ற செய்தி கேட்டு சேகர் குடும்பத்துடன் ஓடி வந்தான்.


 பிள்ளைகளுக்கு செய்தி பரவியது . 


அக்கம் பக்கம் சொந்தம் என்று வீடு நிரம்பி இருந்தது.


 அண்ணா சந்திரன் அண்ணியின் சடலம் வைக்கப் பட்டிருந்த பிரீசர் அருகே அமர்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தார் .  


அழவே இல்லை .  அப்படியே மலங்க ,மலங்க விழித்துக் கொண்டு இருந்தார்.  கட்டாயப் படுத்தி அவருக்கு எதாவது குடிக்கக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.


பிள்ளைகள் வந்து விட்டனர்.


 ஐயர் வந்து விடுவார் என்பதால் பிரேஸிரில் இருந்து அவரது உடலை வெளியில் எடுத்து வைத்தனர். தண்ணீர் விட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது சந்திரனைக் காணவில்லை


தேடிப்போனால் பக்கத்துக்கு வீட்டு செடியிலிருந்து அவரது வீட்டுப்பக்கம் நீட்டியிருந்த மருதாணி இலைகளைப் பறித்து மிக்ஸில் அரைத்து கமலிக்கு இடுவதற்காக அரைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages