பீனிக்ஸ் பறவை(சிறுகதை)
பார்வதிக்கு கொஞ்சம் சளி காய்ச்சலும்கூடஇருந்துச்சு
ஒருவாரமாப் பாடாப்படுத்துச்சு..டாக்டரப்பாக்கப் போனா
அவளோட வீட்டுக்காரரு ரெண்டுவருசத்துக்கு முன்னாடி
புத்துநோவுல ரொம்பசெரமப்பட்டு போய்சேந்துட்டாரு
அதுக்கப்புறம் அண்ணன் வீட்டுல அவளோட ஒரேஒரு
மகளோட வந்துசேந்துட்டா சேந்துகுடித்தனமா. ஒரு கம்பெனில வேலைபாத்துக்கிட்டு இருந்தா...
அவளோட அம்மாவும் சின்னவயில புருசன பறிகொடுத்தவதான்
அதுநால அதோட கஸ்டம் தெரிஞ்சு சேந்து இருந்தாக. அம்மவையும் மகளையும் சேத்துப்பாத்துக்கிட்டா.....அவளோட அண்ணனும் அவ்ங்கக்கூட இருந்தாரு. அவர் சொந்தமா தொழில் பண்ணிக்கிட்டு இருந்தாரு
ஒரு கம்பெனில வேல சிவகாமிக்கு கொஞ்சவருமானம்
அண்ணனோட சேந்து இருக்குறதுனால பொழுது ஓடிகிட்டிருந்துச்சு
இப்போ டாக்டரப்பாக்க போறப்ப மகளும் வாறேன்னான்
கூடக்கூட்டிட்டுப் போனா சும்மாதான இருக்குறான்னு வீட்டுக்குள்ளயே இருந்தா போஅரடிக்குதுன்னு அவளும் கூடப்போனா.
டாக்டரம்மா அவளைச்செக்குப்ண்ணிட்டுட்டு பொண்ணு துருதுருன்னு இருக்காளே உங்கபொண்ணான்னுகேட்டாக
ஆமா ஏம்பொண்ணுதான் ஒம்போதாவது படிக்கிறா வகுப்புல எல்லாத்துலயும் மொதலாவருவா நல்லாப்படம் வரைவா இவதான் என்னோட எதிர்காலமேன்னா
வாம்மான்னு கூப்புட்டு பக்கத்துல ஒக்காரவைச்சிக்கிட்டாக
நீ என்னாவா வர ஆசைப்படுறன்னு கேட்டதுக்கு அவ சொன்னா
நான் ஒங்களை மாதிரி டாக்டரா வருவேன்
இல்லாதவகளுக்கெல்லாம் காசுவாங்காம வைத்தியம் பாப்பேன்னா
அப்ப்டிச்சொல்லுடா தங்கம் ஒன்னமாதிரி டாக்டர்கள்தான் தேவைன்னாங்க
அவ எந்திரிக்கும்போதுதான் பாத்தாக அவளோட கழுத்துல
லேசாபொடைச்சிக்கிட்டு இருந்ததை இவளுக்கு இது
எத்தனை நாளா இருக்குன்னு பார்வதி கிட்டகேட்டாக
நான் கவனிக்கலையேன்னா . அவ ஏதாவது அடிகிடிபட்டுருக்கும்ன்னா
இல்லம்மா கொஞ்சம் செக் பண்ணனும் நாளைக்கிகாலையில
கூட்டிட்டுவாம்மான்னாங்க டாக்டரம்மா......
நாளைக்கிப்பள்ளிக்கொடமிருக்கேன்னதுக்குப் பரவால்ல
லீவுசொல்லிக்கலாம் நான் மெடிக்கல் சட்டிபிகேட் தாறேன்னாக
பொண்ணு இல்லம்மா நாளைக்கிடெஸ்டு இருக்குன்னா
சரி அடுத்தநாளாவது கூட்டிட்டுவாங்க இது முக்கியம்ன்னாக
அதுமாதிரியே கூட்டிட்டுப்போனா பார்வதி......
டாக்டரு டெஸ்ட் எல்லாம் செஞ்சுபாத்துட்டு பார்வதி யத்தனியாக் கூப்புட்டாக பொண்ணுக்கு ரத்தத்துல கோளாறு இருக்கு. நீ டவுனுக்குக் கூட்டிட்டுப்போய்காமி நான் லெட்டர் தாறேன் அங்கபோய் காமின்னாக
ஏதாவது பெருசா பிரச்சனையான்னு கேட்டதுக்குக்கு
ஒன்னுமில்ல ஒரு சந்தேகம் அவ்வளவுதான் சரியாகிடும்ன்னாக
அவளுக்கு கண்ணெல்லாம் கலங்கிடுச்சு இஸ்டதெய்வத்தவேண்டிகிட்டா
சாமி புருசனை பிரிச்சமாதிரி மகளப் பிரிச்சிடாத என்னோட ஒரே நம்பிக்க அவதான் கைவிட்டுறாதன்னு மறுநாளு டவுனுக்குக்கூட்டிட்டுப்போனா பொண்ணு கேட்டா எனக்கு என்னம்மா பிரச்சனை லீவுமேல லீவுபோட்டா
எப்புடி நான் டாக்டர் ஆகுறது ந்னு அழுதுகிட்டே
கண்ணதொடச்சி விட்டுட்டுச்சொன்னா சரியாகிடும் ப்பான்னு
அவளாள அழுகைய அடக்கமுடியாம அடக்குனா அவ முன்னாடி அழுதுடக்கூடாதுன்னு அந்தப்பக்கமாத்திரும்பி ஆசுபத்திரில போயி சீட்டக்காமிச்சவுடன மூணாவது மாடிக்குப்போகச்சொன்னாக படியேறித்திரும்பும்போது அங்குன போர்டு வைச்சிருந்தாக சிறப்புமருத்துவம்ன்னு அவளுக்குப்புரியல அங்க இருந்த நோயாளிகளைப்பாத்தா அடிவயிறு கலங்குச்சு என்னா வார்டும்மா இதுன்னு கேட்டாஅங்க இருந்த அட்டெண்டர்சொன்னான் புத்துநோய்வார்டுன்னு
சிவகாமிக்குஅடிவயிறுகலங்கிதலைசுத்துச்சுஎதுஇருக்கக்கூடாதுன்னுநெனச்சாளோ அது வந்துடுச்சி அவ அப்பாவுக்கிருந்த அதே ரத்தபுத்துநோய்
அவன அங்குன இருந்த பெஞ்சுல ஒக்காரவைச்சிட்டு....
மூலையில இருந்த கக்கூசுலபோய் தேம்பிதேம்பி அழுதா
என்னோட மகளையுயும் பிரிக்கப்பாக்குறீயே சாமி
இது நாயமா நான் என்னபாவம் செஞ்சேன் என்னப்படுத்துறீயேன்னு
அவகண்ணீரால சேலையெல்லாம் கூட நனைஞ்சிபோச்சு
திரும்ப மேலபோனா பொண்ணு கேட்டா அம்மா அப்பாமாதிரி நான் செத்துடுவேனான்னு கேட்டா..... அவ அழுகைய அடக்கிகிட்டு சொன்னா இல்லம்மாஉனக்குச்சரியாகிடும் நீ உன் விருப்பப்படியே டாக்குட்டராவன்னா
ஆனா அவளால இப்போகண்ணீரை அடக்கமுடியல
ஆனாஒருவருசத்துல கொஞ்சம் கொஞ்சமா நம்பிக்க போச்சு
கடைசில அவளும் அவுங்க அப்பாமாதிரியே அவளைத்தனியா
விட்டுட்டுட்டு போய்சேந்துட்டா ஒருவாரமா அழுதுகிட்டே இருந்தா அவள யாராலயும் தேத்தமுடியல
அன்னிக்கிஅவங்க ஊரில இருந்த கோயிலுக்குப்போனா, அழுகையா வந்துச்சு , சாமிகிட்டகேட்டா இப்ப சந்தோசமா ஒனக்குன்னு அழுதுகிட்டே
இனிமே உன் வாசலக்கூடமிதிக்கமாட்டேன் நீயெல்லாம் இனிமே சாமியே இல்லன்னா அழுதுகிட்டே ,அங்க இருந்தபெரியவர் ஒருத்தர் சொன்னாரு எல்லாம் விதிப்படிதான் நடக்கும் இதுக்குமேல உனக்கு ஒருவாழ்க்கை இருக்குஅது இப்போ புரியாது புரியும்போது திரும்பி இங்க வருவன்னாரு
கொஞ்சநாளாச்சு. அவளுக்கு தான் தன் அண்ணனுக்கு பாரமா இருக்குறமோன்னு தோணிச்சி. அப்ப பிரண்டு ஒருத்தி கேட்டா நீ ஏன் மறுமணம் பண்ணிக்கக்கூடாது உனக்கு வயசு 45தான் ஆகுது.... உன்னைப்போலவே துணைய இழந்தவங்க யாராவது இருப்பாங்க அவங்களை தேடி கலியாணம் பண்னிக்கிட்டா ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா இருக்கலாமுன்னு சொன்னா.....
இவளும் யோசிச்சிப்பாத்தா... சரின்றமாதிரிதான் பட்டது. ஆனா அது மாதிரி கெடைக்கனுமே.....இப்ப அதேகோவிலுக்குபோய் நீ தான் வழிகாமிக்கனுமின்னு வேண்டிக்கிட்டா.....
கொஞ்சநாள்லயே ஒரு நல்லவர் வந்தாரு. அவரோட சம்சாரமும் இதுமாதிரி இறந்துபோயிட்டாங்களாம்... அவருக்கு ஒரே மகள் அவளும் அம்மா இல்லாம கஸ்ட்டப்படுறாளாம்... இவளோட கதைய கேட்டு திருமணம் முடிச்சிக்கலாம்.... ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருப்போம்ன்னு சொன்னாருஇவளுக்கும் நம்பிக்கை வந்தது.
அண்ணன் கிட்டயும் அம்மாகிட்டயும் பேசினா. அவரோட பொண்ணு வந்திருந்தா... அவகூடயும் பேசினப்ப அந்தப்பொண்ணு அம்மாபாசத்துக்காக ஏங்குறது தெரிஞ்சது....
எல்லார் சம்மதத்தோடையும் திருமணம் நடந்தது.....
அப்பவே ரெண்டுபேரும் பேசி பிள்ளை எதுவும் பெத்துக்கிறது இல்ல வாழப்போற வாழ்க்கை அந்தப்பொண்ணுக்காகவும் ஒருத்தருக்கொருத்தர் ஆதரவுக்காகவும்ன்னு முடிவெடுத்தாங்க.......
அவங்க வீட்டுக்கு போனா. அங்க வீட்ட தன்னோட டேஸ்ட்டுக்கு வடிவமைச்சா,,,, காலையில எழுந்து காப்பியோட அந்தப்பொண்ண எழுப்புனா.....அவ தூக்கக்கலக்கத்துல அம்மா இன்னும் கொஞ்சநேரம் தூங்குறேன்னு சொன்னப்ப அவளால அழுகைய அடக்கமுடியல.... ஏன்னா அவளோட மகளும் அப்படித்தான் சொல்வா......
பக்கத்துல ஒக்காந்து தலைய தடவிவிட்டுக்கிட்டே சொன்னா நாந்தான் இனி உன்னோட அம்மா என் செல்லமக நீன்னு சொன்னப்ப அந்தப்பொண்ணு கண்னுல தண்ணி வழிஞ்சிச்சி.....
அததொடச்சிவிட்டுக்கிட்டே சொன்னா இனிமே இது உன் கண்ணுல இருந்து வரக்கூடாது......ன்னு
அப்ப ஆனந்தக்கண்ணீர் வந்துச்சு அவளுக்கு..........
அதப்பாத்த அந்தப்பொண்ணோட அப்பா கண்ணத்தொடச்சிக்கிட்டாரு.....
அப்ப நீங்க.............
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக