4.12.20 - கவிதை : ஆடி பிம்பம் போதா அருகில் வா மன்னவனே - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 4 டிசம்பர், 2020

4.12.20 - கவிதை : ஆடி பிம்பம் போதா அருகில் வா மன்னவனே

 அருணா ரகுராமன்



ஆடி பிம்பம் போதா அருகில் வா மன்னவனே 

******************

ஆடி வரும் பூங்கொடியாய் அன்பே /

ஆரணங்கு நான் இருக்க என்னைத் /

தேடி வருவாயென ஆவலுடன் காத்திருக்க /

 ஒப்பனைகள் செய்து உன்னை நினைக்கையிலே     /கற்பனையில் உன் முகம் ஏனோ 

கண்ணாடியில்  எதிரே தான் தெரிய /

உண்மையில் நீ வந்தாய் என்றே /

ஒரு கணத்தில் நினைத்துவிட்டேன்/

நானே நீயாக மாறிடும்

தருணந்தனில்


 ஈருடல் ஓருயிராய் இங்கு தவித்தாலும்/

இனந் தெரியா பசலை என்னுள்ளே படர்ந்தாலும் / 

தொட்டவுடன்  பிம்பம் தான் மறைய  /

கை பட்டவுடன் நான் தெளிய  /

 ஆடி பிம்பம் போதா 

அருகில்வா மன்னவனே    

/

கட்டழகு காத்திருக்கு காதல் நிலாப் பூத்திருக்கு /

வட்டக் கருவிழி வாட்டம் காணு முன்னே/

எட்ட நின்று ஏய்க்காமல் சற்று/ 

கட்டியணைக்க அருகில்தான் வந்துவிடு/ 

அருணா ரகுராமன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages