நீரை.பாத்திமா
மாமழையே மாமழையே
ஓய்வெடுத்து வந்தால் என்ன?
கனமழையே கனமழையே
கண நேரம் நின்றால் என்ன?
காக்கைகளும் குருவிகளும் குளிரெடுத்து நடுங்குகிறதே!
அணில்களும் ஓணானும்
உணவின்றி நனைகிறதே!
கூடடைந்த குஞ்சுகளும் என்ன செய்யும் பாவம் தானே!
பெரும் மழையே பெரும் மழையே
பாவம் பார்க்க மாட்டாயோ 😔😔
நீரை.பாத்திமா



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக