புன்னகை
புண்படு மனத்தை புலர வைத்து
மனத்தை மலராய் மலர விட்டு
பொன்னகை அணியாப்
பெண்ணினைக் கூட
புன்னகை அணியால்
ஈர்த்து எடுத்து
மணம் வரை மலர்ந்த
இருமன வாழ்வு
திருமண வாழ்வாய்
இணைந்து மகிழ்ந்து
முகத்தில் ஒளியை
ஏற்றி நின்று
மனித மனங்களை
மகிழ்வாய் மாற்றும்
இணைவுப் பாலம் புன்னகை.
ஜமுனாமலர் இந்திரகுமார் சுவிற்சர்லாந்து




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக