07.02.21
அம்மா(சிறுகதை) ......................
அன்னிக்கி அம்மாவுக்குத் திவசம் காலையில எந்திரிச்சிக்குளிச்சிட்டு காயகறியெல்லாம் வாங்கித்தடபுடலாக சமையல் அப்பளம் பாயாசம் வடைன்னு சமைச்சு முடிச்சாச்சு
பூசையறையில் அம்மாவின் படத்துக்கு மாலை சந்தனம் குங்குமம் வைச்சாச்சு. அடுத்ததுபத்திசூடன் எல்லாம் பொருத்தி கும்புட்டுட்டு
எலையில காக்காவுக்கு சாப்பாடு வடை பாயாசம் அப்பளம் எல்லாம் வைச்சிப்படைச்சாச்சு வெளியே தோட்டத்தில் வைச்சி கா கா ந்னுகத்துனான்
சோதனைக்கிநாலும் ஒரு காக்கா கூடவரல
குறுக்கையும் நெடுக்கையுமாபறக்குதே ஒழிய .ஒரு காக்கா கூட வரமாட்டீங்குது.அம்மாவுக்கு என்ன கோவமோதெரியலன்னு
கண்ணு கலங்குச்சு மகனுக்குதிரும்ப ஒருதடவ பூசை அறையில போயி விழுந்து கும்புட்டான் அம்மா சோதனை பண்ணாதீக வந்து சாப்புட்டுட்டு புள்ளைகளை ஆசீர்வாதம் பண்ணுங்கன்னு
வெளியவந்து பாத்தா அதே நெலவரம் தான் கண்ணு கலங்கிடுச்சு
வழக்கமா காலையில மீந்துபோனபழையதைவைக்கிம்போதெல்லாம் அடிச்சிப்பிடிச்சி சாப்புடுற காக்கா விருந்த திரும்பிக்கூடபாக்கல
என்ன செய்யிறதுன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தப்ப ஒரு காக்கா வந்து ஒக்காந்துச்சு
கா கா ந்னு கத்துச்சு. இலையப்பாக்குது .ஆனா பக்கத்துல வரமாட்டீங்குது அம்மா சாப்புடும்மா சாப்புடும்மா நு மனசுக்குள்ள கெஞ்சுரான் அவன்
திடீருண்னு நாலஞ்சி காக்காக்கள்ஒண்ணா வந்து ஒக்காந்துச்சு
சந்தோசம் கொஞ்சம் வந்துச்சுஎல்லாக்காக்காயும் ஒரேநேரத்துல ஒக்காந்து
சாப்பிட ஆரம்பிச்சிச்சு
ஒரேசந்தேகம் மொதல்ல வந்த காக்கா இதெ ஒக்காந்து வேடிக்கபாத்துட்டு இருந்துச்சுகாக்காயெல்லாம் மொத்தமா காலிபண்னிடுச்சு சந்தோசமா புள்ளைகளை கூப்புட்டு சாப்புடுங்கன்னு சொல்லிட்டு வெளியவந்து பாத்தப்ப அந்த ஒத்தக்காக்கா
காலையில விரதம் விடுறதுக்காக பாத்திரத்துல மீந்த பழையசோத்த சாப்புட்டுக்கிட்டு இருந்துச்சுஅப்பத்தான் அவனுக்கு ஒறைச்சுது அம்மா எப்பவுமே வீட்டுல மீந்ததத மட்டுமே சாப்புடும்
சமச்சவன்ன புள்ளைகளுக்கு முன்னாடி ஒருநா கூட சாப்புட்டதில்லன்றது
அப்படிப்பட்ட அம்மாவை நெனச்ச வுடனே அழுக பொத்துக்கிச்சு. பிள்ளைகளுக்குத்தெரியாம கண்ண்த்தொடச்சிக்கிட்டார் அந்தவயசுலயும் அவரு......
நானும் தான்ன்னு நீங்க சொல்றது எனக்குக்கேட்குது....
....உங்க அம்மாவும் எங்க அம்மாவும்......... எல்லா அம்மாக்களும் ஒரே மாதிரிதான்
அ.முத்துவிஜயன்.21

அ.முத்துவிஜயன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக