அருணா ரகுராமன்
14.02.21
காதலின் இலக்கணம்
...... ....... ....
காதலென்பது என்னவெனத் தெரியாமல் காதல் செய்யாதீர்கள்!
ஆண் உடல் பெண் உடல் ஈர்ப்பில் இழுப்பதெல்லாம் காதல் இல்லை..அது காமம்!
அடிக்கடி பார்க்கிறோம் ஒரே இடத்தில் படிக்க( பணி) செய்கிறோம் அதனால் காதலிக்கிறோம்...அது காதலில்லை...பழக்கம் மட்டுமே!
என் செய்கைகள் பேச்சு ரசிக்கும்படியாக இருக்கு அவனுக்கு
அவன் செய்கைகள் பேச்சு ரசிக்கும்படியாக இருக்கு எனக்கு
அதனால் காதலிக்கிறோம்
இது காதலில்லை..ஒத்த ரசனை மட்டுமே!
நல்ல படிப்பு நல்ல வேலை நல்ல சம்பாத்தியம் ...காதலிக்கிறேன்
காதலில்லை அது! வசதியாக வாழ ஒரு வழி ..அவ்வளவே!
அம்மா அப்பா பார்த்து வைத்த பெண்(மாப்பிள்ளை) திருமணம் செய்து கொண்டு காதலிக்கிறேன்.இதுவும் காதலில்லை....பத்திரிக்கை என்ற ஒப்பந்தச் சீட்டில் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் காமம் ...காமம் மட்டுமே!
என் ஜாதி என் மதம் என் சொந்த அத்தை மகள்(மகன்) காதலிக்கிறேன்
காதலில்லை இது எதிர்ப்பில்லாமல் இணைய ஒரு வழி!
காதல் என்றால் என்ன?!
காதல் என்பது புரிதல்
காதல் என்பது நம்பிக்கை
காதல் என்பது அன்பு
காதல் என்பது பாசம்
காதல் என்பது உதவி
காதல் என்பது விருப்பம்
காதல் என்பது நிறைவாக இருக்க வேண்டும்!
காதல் என்றும் மாறாது நிலைக்க வேண்டும்!
காதலுக்கு அஸ்திவாரமாக நம்பிக்கை வேண்டும்!
நாளும் நாளும் அன்பு செய்து பாதுகாப்பாக வளர வேண்டும்!
உண்மையான காதலுக்கு உறுதியும் தைரியமும் வேண்டும்!
காதலைத் தெரிந்து காதல் செய்வீர்
கவர்வது காதல் இல்லை
உணர்வீர் உணர்வீர் உலகத்தீரே,!



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக