Sl | எண் | புகைப்படம் | கவிதை |
1 | 517 | கரைகாணாக் காதலுற்ற இருமனம் இணைகையில்/ மங்கையவள் மடிசாய்ந்து மன்னவனும் மயங்குகிறான்/ விழிகளிலே புதுவிடியல் காணுகிறான்/ -ஆனந்த் சுந்தரராமன் | |
2 | 698 | மல்லுப்போரில் வீரனடி மாயவனின் மேனியடி// ஓயாத அலைகளிலே ஒய்யார நடைப்போட்டு// உள்ளம் பறிகொடுத்தேன் உன்னிடத்திலே// தேனி ஆ.சுந்தர் | |
3 | 244 | மெய்யான காதலும் காமத்தினைத் தேடாது // களங்கமில்லா அன்புடன் வரவேற்கும் விழிப்புணர்வில் // மல்லிகை மயக்கமும் புனிதமாகும் // கவிஞர் கோவை செல்லப்பன் | |
4 | 247 | மயக்கும் மங்கையவள் மல்லிகைப்பூப் சூடினாளோ / மன்னவனோ கிறக்கத்தில் கிடக்கின்றான்/ மங்கையவள் இதழோடு இதழ்சேர துடிக்கின்றாள்/ த.காமராசு, தாராசுரம் கும்பகோணம் | |
5 | 212 | மணக்கும் மல்லிகை மனதை மயக்கும்// மன்னவன் காதலோ நெஞ்சம் நிறையும் // நேசம் வளர்த்திடவே நித்தம்// ஜெய வெங்கட் | |
6 | 715 | மல்லிகைக்கும் ஓர் மயக்கம் உண்டு மன்னவன் அணைப்பில் வாசமுண்டு கருவில் இரண்டாவது முறை பூப்பதுண்டு. அ.உமர்பாருக். | |
7 | 428 | அன்றலர்ந்த அல்லி தோற்கும் அவள் அழகில் // மல்லிகை சூடிய மங்கையவள்// முத்தத்தில் மன்னவன் மயங்கினானே..// சுப்பிரமணியன் அன்புமலர். | |
8 | 450 | மல்லிகை மயக்கத்தில் மன்னவன் காதலலை சொல்வதில்,தயக்கத்தில் நின்றவன்/ சொன்னதனால் என்னவனாக மணமாலையை வென்றவன்/ முதலிரவில் மல்லிகையின் மயக்கத்திலே கிறங்குகிறான்/ ரேணுகா சுந்தரம் | |
9 | 344 | அகம் மகிழ்ந்தால் முகம் மலருமாமே கண்ணா.. நம் முகங்கள் சிரிக்கின்றனவே... மல்லிகையிவள் மகிழ்வித்தாளோ உனை? #எமா# | |
10 | 409 | துள்ளித் திரிந்தவளை அள்ளி அணைத்தே// மல்லிகை மயக்கத்தில் மன்னவன்// பள்ளி கொள்ளும் பாவனையில் இருக்கின்றானோ// ********** க.சுதர்சனக்குரு. | |
11 | 462 | மல்லிகை மயக்கத்தில மன்னவன் ஆளுமையால் என்னை வென்றவன்/ நாணமே அறியாமல் இருந்தவன்/ முதன்முதலாய் வெட்கித் தலைகுனியும் தருணம் இதுவன்றோ தயா | |
12 | 652 | மதி மயங்கி மடியில் விழுந்திட்டான். மங்கையவள் முத்தமிட்டுத்தான் எழுப்ப வேண்டும். மலையையே சாய்த்திட்டாளே மங்கை. கூ.மு.ஷேக் அப்துல் காதர் | |
13 | 241 | மல்லிகையைச் சூடி வந்த மங்கையிடம் மனதைப் பறிகொடுத்த கண்ணாளன் வார்த்தையின்றி தோய்ந்து விழுகின்றான் மடியில். அனுராதா நாகப்பன். | |
14 | 220 | மணநாள் இன்பம் மல்லிகை மலரோடு.. மங்கையிவள் மடியில் மன்னவன் கிறக்கத்தில்.. தூபமிட்டாள் முத்திதழ் முத்தமிட்டு.. வளருங்கவி அமுதன் | |
15 | 614 | மழை பொய்த்து வாடும் பயிர்கள்/ வாழ வழியின்றி தவிக்கும் மக்கள்/ கவலையற்று உல்லாசமாய் மன்னன்/ விஜயலட்சுமி | |
16 | 273 | புதுமண மயக்கம் தந்தது நெருக்கம்/ மல்லிகை மலரும் தருவது கிரக்கம்/ கிடைப்பது துறக்க இன்பமே! (பி.கு:துறக்கம்-சொர்க்கம்) கோவிந்தம்மாள் ரெத்தினம் | |
17 | 482 | மயக்கும் மல்லிகை வாசம் வீசிடுமே/ மனைவித் தரும் அன்பு முத்தத்தில்/ மன்னவன் நெஞ்சம் மகிழ்ந்திடுமே . தஞ்சை கோ பாலசுப்ரமணியன் | |
18 | 483 | மெல்லியளால் மேனியை மெல்ல வருடிவிட / 1 மல்லிகை சூடிய மலர்க்கூந்தல் மணம்பரப்ப /2 மல்லிகை மயக்கத்தில் மன்னவன் /3 ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை | |
19 | 668 | வெண் முல்லையின் நறுமணம் நாசியிலேற/ பெண் மல்லிகையின் மயக்கத்தில் மன்னவன்/ தன்னை மறந்து தூங்குகிறான்/ ஏஞ்சல்சோபிதா | |
20 | 258 | மல்லிகை சூடிய மணமகள்- மயக்கத்தில்/ மாப்பிள்ளை கோலத்தில் மணமகன்/ இனிமை சுகமே, இல்லற வாழ்வினிலே! தங்க. சரவணன் வடபழநி, சென்னை-26. | |
21 | 692 | கண்டிட்ட சொர்க்கம் மல்லிகையின் வாசம் மணமகளின் சுவாசம் நெடுநாளாய் ஏக்கம் மடியிலே மயக்கத்தின் துவக்கம்! முனைவர். சு.சித்ரா கரூர் தமிழ்நாடு | |
22 | 234 | மனமும் மயக்கும் மல்லிகை வாசம்..! முத்துப்பல் சிரிப்பில் மன்னவனும் ..!! மங்கையின் மடியில் சாய்ந்தான் கிறக்கத்தோடு..!! அமுதா.ரா | |
23 | 266 | மடியே தலையணை மயக்கத்தில் மன்னவன்... மௌனமாய் மல்லிகையும் துணை... இனியவை கூடல் இனிதொரு நிகழ்வில்... ...பூமகன்... | |
24 | 228 | மல்லிகை மயக்கத்தில் மன்னவன் மஞ்சத்தில்/ மெல்லிடையாள் முகத்துடன் கைவைத்தாள் நெஞ்சத்தில்/ அல்லிமலராய் மலர்ந்தாள் நங்கையவள்! / கவியன்புடன் கவிஞர் கோவி.இராசேந்திரன். | |
25 | 708 | மதி மயக்கும் மல்லிகை வாசம்/ மங்கை மனதோடு கலந்தே/ மன்னவன் மகிழ்ந்தான் மடியினிற் றிழைத்தே...// திருமதி பிரிந்தா புஷ்பாகரன் | |
26 | 373 | காதலி கொடுத்த நெற்றிப்பொட்டு முத்தத்திலும்/ மல்லிகையின் நறுமணத்திலும் மன்னவன் மயங்கினான்/ மங்கையவள் முகமோ நாணிக்கொண்டது!! ஜயந்தினி வாகீசன் | |
27 | 345 | மல்லிகை மயக்கத்தில் மன்னவன் கண்ணுரக்கம் நிலவிற்கு மலர்ச்சூடி நிசத்தில் அனுப்பிவைத்து முத்தத்தில் மூழ்கிடச்செய்த பிரம்மனுக்கு நன்றி. வைர. நாகராசன். | |
28 | 618 | மல்லிகை வாசத்தில் மங்கையின் நேசம்/ மண்ணில் காணும் மலர்கள் எல்லாம்/ மன்னன் மயங்கும் நினைவுகளே/ ஔவை. | |
29 | 710 | கொண்டவள் குறைகளும் கண்களை மறைக்கும்// காவியக் காதலென கவிரசம் சொட்டும்// மன்னவனும் மயங்கிடுவான் மல்லிகையில். அம்பிகா ஸ்ரீகுமார். | |
30 | 238 | மாலையாகத் தோளிலே மங்கையவள் சாய்ந்திட../ போதையாகிப் பெண்ணிடம் இதழமுதம் பெற்றானே../ மடிமீது தலைசாய்ந்த மந்திரமே../// இளந்தை சேது | |
31 | 470 | அரிவைக்கூந்தல் மல்லிகையோ அதரப்பூவின் புன்னகையோ மல்லியின் மயக்கமோ அல்லியின் கிறக்கமோ பள்ளியறையில் பாசாங்கும் இன்பமே. நா.சுகுமாறன் | |
32 | 510 | எந்தன் உள்ளத்தில் நிறைந்த என்னவன்/ மல்லிகை மயக்கத்தில் மயங்கிய மன்னவன்/ இதயம் கவர்ந்த காதலன்/ ராதாமணி | |
33 | 256 | விழியின் கவிதைக்கு சுதி சேர்த்தாய்/ இதயம் மீட்டிய நாதத்தில் மயங்கினேன்/ மடியிலிருந்து ரசிக்கட்டுமா மல்லிகையே/ .......நட்புடன் ஜெயபால் வி.பி. | |
34 | 669 | சுற்றிவாரும் மல்லிகையின் வாசனையோ தூக்குதடி/ சுவாசமே நீயாக மடியினிலே சாய்ந்திடவே/ நித்தமுமே நிழலானேன் மயக்கத்திலே வீழ்ந்தேனே/ நஸீரா வசூக் | |
35 | 518 | உன்னிடம் கொஞ்சி உறவாடிட வேண்டி/ சென்மம் மீண்டும் எடுத்து வந்தேன்டி / வாழ்கின்றேனுன் வாசத்தை ஏந்தி.../ வி.கல்பனாதர்மேந்திரா... | |
36 | 605 | இதழமுதம் தான்பருக ஏந்திழையும் காத்திருக்க / மல்லிகையின் மணம் மயக்கப் / பதமாகத் தந்தானே பைங்கிளியின் அதரத்தில் . மஞ்சுளா ரமேஷ் | |
37 | 207 | மனங்கள் ஒன்றிணைந்தால் மகிழ்ச்சிப் பிறக்கும்/ மணங்கள் ஒன்றிணைந்தால் மனதைத் திறக்கும்/ மல்லிகை மயக்கத்தில் மன்னவன்/ -முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி. | |
38 | 706 | கொள்ளை கொண்டவன்/ மல்லிகை மயக்கத்தில் மயங்கிய மன்னவன்/ மனங்களின் இணைப்பு வசந்தவாசல் திறப்பு/ மாயாதேவி, சென்னை. | |
39 | 613 | மல்லிகை வாசம் மன்னவனை ஈர்க்க// மங்கையவள் இணைந்து கவிப்பாடிட/ மல்லிகைப் பூவாய் மலர்ந்தது கனவே ஜெயா சந்திரமோகன் | |
40 | 261 | அல்வாவும் மல்லிகையும் மன்னவன் தந்தான் அன்பும் அரவணப்பும் அவள் தந்தாள் மயக்கத்தில் அவனோடு அவளும்தான் ! வள்ளல் இராமமூர்த்தி | |
41 | 348 | அடம்பில் படர்ந்த மல்லிகை மங்கையின் // கூந்தலில் மணக்க மயக்கத்தில் மன்னவன் // மடல் வரைந்தானே கண்களில் // அடம்பு = அடர்ந்த படர்ந்த கொடி வகை உடுமலை ராமர் | |
42 | 615 | மல்லிகை மணத்தால் வீழ்த்தினேன் உன்னை,/ என்னவனே உன்மேல் சாய்த்தேன் என்னை,/ கொஞ்சம் மறந்தோம் நம்மை../ செ.தமிழ்ச்செல்வன். | |
43 | 592 | கொல்லும் காமத்தீயின் இடையே வெல்லும் தென்றலாய் பொல்லாத கன்னியிவள் அவனருகில் மல்லிகை மயக்கத்தில் மன்னவனவன். கவிஞர் ராம்க்ருஷ் | |
44 | 616 | மடி சாய்ந்த என் வரமே💞 உன் மூச்சில் நான் சுவாசிக்கிறேன்💞 நீ நான் ஒருவரானோமே💞 கா.கேமலாரூபினி | |
45 | 490 | காதலி மடியினில் காதலன் உறங்க/ அவன் நெற்றியில் செல்லமாய் முத்தமிட/ மல்லிகை மயக்கத்தில் மன்னவனே/ செ.புவிதா | |
46 | 572 | மல்லிகையின் வாசனையை நீ உணர்ந்துண்டோ மன்னவா அதன் வாசனை உன்னை தீண்டினால் உலகையே மறந்துவிடுவாய் ஶ்ரீதரன் பிரியா | |
47 | 463 | மங்கையின் கூந்தலில் அமர்ந்து வாசம் பரப்பி வசியம் செய்தாய்.. அழகினில் மயங்கும் மன்னவனுக்கு அவசியம் / அரவிந்தன் தஞ்சை | |
48 | 434 | இருவீட்டார் ஒருசேர ஊரெல்லாம் புடைசூழ/ மணவாளன் பக்கத்தில் மங்கை அமர்ந்திட/ மல்லிகை மயக்கியது மன்னவனை// மீனாட்சி சுந்தரம் | |
49 | 242 | தன்னவளின் வருகை நோக்கியே தவமிருந்த மன்னவனும் மயங்கிக் கிடந்தானே மஞ்சத்தில் பெண்ணவளின் மல்லிகை மணமாய்……. கவி செங்குட்டுவன் | |
50 | 287 | மல்லிகைப் பூவிலேயே மயங்கி விழுந்திட்டால் மங்கை என்னை தழுவுதல் எப்போது கன்னியாய்க் கழிக்க வேண்டுமோ தண்டபாணி | |
51 | 267 | வேண்டலின் வரத்தில் விடிந்த பொழுது! / தீண்டலின் இனிமையில் தேகச் சிலிர்ப்பு ! / கூந்தலின் மணத்தில் குதூகலம்! / ...தமிழம்மா | |
52 | 541 | மல்லிகையும் மன்னவனும் தோள் சேர மங்கையிவள் நாணத்தில் முகமலர மன்னனவன் மயங்கினானோ கன்னியிவள் அன்பினிலே....... முல்லை நீதன்...... | |
53 | 649 | சாய்ந்த மடியில் ரசனை சொட்ட நெகிழ்ந்திருப்பான்.../// மல்லிகை மயக்கத்தில் மன்னவன்.../// அவனே என்னை மகிழ்விப்பான்.../// சம்சுதீன்_நெல்லை | |
54 | 721 | மங்கையின் மடி மலர்ந்த மாதவனின் புன்னகை போல்/ பொங்கிடும் புதுவாழ்வு / இனி மல்லிகையாய் மணக்கட்டும்… .....பாலு தியாகராசன்.... | |
55 | 716 | மூச்சு காற்று பரிமாற்றம் // 1 மூக்கிலே ஏறுது பூ வாசம் // 2 சூடு பிடிக்குது காதல் சகவாசம் // 3. - நாகை. ஹாஜா | |
56 | 262 | மங்கையின் குழலிடை மல்லிகை ஆடிட/ மன்னவன் மனதிடை மான்றலும் உலவிட/ எண்ணங்கள் எங்கிலும் வண்ணங்களானதே/ சதா.முருகன் | |
57 | 688 | பூக்கள் என்றாலே மயக்கிவிடும் ஆளை/ மல்லிகைப் பூக்கள் வசப்படுத்திடும் மச்சானை/ இனியென்ன கொண்டாட்டமே இவ்வேளை/ கீத்தா ராமன் | |
58 | 206 | ○மல்லிகை மொட்டின் மெல்லிய இதழ்கள்/ ○மெல்லவிரிந்து புன்னகை பூக்க கள்ளினும்/ ○போதையில் மன்னவன் மடியிலே/ சோலைகண்ணன் | |
59 | 204 | போதையை ஊட்டுதே பேதையிவள் வாசம்// மல்லிகை சூடியிருக்கும் மங்கையின் கேசம்// மயங்கித்தான் போனானே மன்னவன்// ஆஸாத் கமால் | |
60 | 240 | காத்திருந்த நொடிகள் எல்லாம் காற்றாக,🍁 கரைந்து விட்டது அருகில் சுவாசமாய் 🍁 மொட்டு மலர்ந்தது மடியில்🍁 உமா பாலகிருஷ்ணன் பெங்களூர் 🏵️ | |
61 | 697 | புன்னகை பொழியும் தேவதை அன்பில் / மன்மதன் அம்பு தைத்திடும் முல்லையாய் / மன்னவன் காட்டிடும் சுவர்க்கத்தில்...! முனைவர் பெ.வெற்றிநிலவன்,,குடந்தை... | |
62 | 259 | காத்திருந்த கனவு கல்யாணத்தில் கைகூட.../ பூத்திருந்த பூக்கள் மாலைகளாக.../ நேசத்தின் நெருக்கம் மஞ்சத்தில் மயங்குகின்றது.../ ஜெயலெட்சுமி | |
63 | 699 | மல்லிகை மயக்கத்தில் மாதவன் மயிற்கோத/ மங்கையோ மன்னவன் தோள் சாய/ மதிமயங்கி காமத்தில் கட்டிருக்க என்னழகே/ முனைவர் அக. வீரவன்சாரா | |
64 | 347 | காதலின் மயக்கத்தில் கலக்குது மனங்கள்/ இடமெதும் பாராமல் ஈர்க்குது இதயங்கள் ஒரேசாதி மல்லியோ மணக்கிறதே/ வேங்கடலட்சுமி ராமர் | |
65 | 228 | மல்லிகை மயக்கத்தில் மன்னவன் மஞ்சத்தில்/ மெல்லிடையாள் முகத்துடன் முகர்ந்தாள் நெஞ்சத்தில்/ துல்லியமாய் அன்போடு அரவணைத்தாள்! / கவியன்புடன் கவிஞர் கோவி.இராசேந்திரன். | |
66 | 569 | மங்கை முகம் பார்த்து // மன்னவன் இவன் வாழ்வில் // மங்கிய இருள் அகன்று ஒளி வீசுதே // செல்வி. ஆர்த்திகா சுவேந்திரன் | |
67 | 674 | மங்கையவளின் கழுத்தினிலே மாங்கல்யமும் தவழ்ந்திடவே// மல்லிகையின் மயக்கத்திலே மன்னவனும் மடி சாய்ந்தானடி// விளக்கணைந்த வேளையிலே// இரா.தேவி | |
68 | 263 | | இமைகள் மூடி இனியவள் உறவினில் ஈடில்லா இன்பம் இருவரும் கண்டிட அமைந்த நல் இல்வாழ்க்கை அன்பரசு சுமதி |
69 | 401 | காதலெனும் களத்தில் காதலன் காதலியை கவருமொரு ஆயுதம் காதலிக்கோ காதலனை கதிகலங்கச் செய்யுமொரு துருப்புச்சீட்டு. செல்வம் பழனியப்பன். | |
70 | 425 | காதலியின் மடியா..? பஞ்சணை மெத்தையா.. ? மல்லிகையின் நறுமணமும் தென்றலில் வீசுவதால் இருவரின் இதயங்களும் இணையட்டும்... கலாகண்ணன் | |
71 | 312 | மல்லிகை என் மன்னவனை மயக்க நானோ அவன் தந்த மல்லிகையில் மகிழும் இல்லறச் சிறப்படனே பொ.சுப்புலட்சுமி | |
72 | 317 | கன்னங்கள் ஒட்டி உறவாடிய நேரம் கண்களில் பேசி மகிழ்வது தினமும் மணமக்கள் இருவருக்கும் மயக்கம்... .சக. சந்திரசேகரன் சங்கரலிங்கம் அவினாசி | |
73 | 399 | 🍁/ அந்தி குவியுது ஆசை பிறக்குது!.../ 🍁/ முந்தி விரிக்குது பந்தி தொடருது!.../ 🍁/ மஞ்சத்தில் மல்லிகை உதிருது!.../ --சாக்கை.பொன்னழகு. | |
74 | 289 | மல்லிகை மயக்கத்தில் மன்னவன் இருக்க / சொல்லிய சேதியில் சொர்க்கம் தெரிய / அல்லி விழிகளில் ஆனந்தமே / . சியாமளாரகுநாதன் | |
75 | 233 | காமக் கிறக்கத்தில் கவர்ந்திடும் வல்லவன்/ நேசம் சுரந்திடும் நல்லவன்/ மல்லிகை மயக்கத்தில் மயங்கிடும் மன்னவன்/ முபீன் றிஸான் | |
76 | 565 | மல்லிகை மலரோடு மதுவுண்டுக் களிக்கும் / இல்லிதழ் வண்டாய் இளைபாறிக் கிடக்கிறான்!.. சொல்லிடும் காதலோடு மன்னவன்!! முனைவர்.பாரதி.சிவசங்கரி | |
77 | 562 | பூச்சூடிய மங்கையவள் அருகில்/ மன்னவன் அவளழகைக் காதலில் வர்ணிக்க/ மங்கையோ சிரித்திட்டாள் மல்லிகையாய் பல்வரிசை/ பா.பத்மநாபன் | |
78 | 574 | மல்லிகையோ மலரவளோ மயக்கியது மன்னவனை/ மனதில் காதல் மணத்தில் மோகம் / இரவெலாம் இன்பக் கனா . துரைராசா காண்டீபன்,திருக்கோவில் . | |
79 | 707 | மன்னவன் தனியே காத்துக் கிடக்கிறான்/ மல்லிகை அவளின் வரவிற்காக/ மஞ்சத்தில் பூவாய்ப் பூத்துக் கிடக்கிறான்/ ✍️பா.ச.கண்ணன் | |
80 | 564 | மன்னவன் மயக்கத்தில் மல்லிகைப் பூவவள் கன்னம் வைத்துக் காணும் அழகில் தன்னை மறந்த கனவில். இராசையா கௌரிபாலா. | |
81 | 723 | மல்லிகை மென்மையாய் மொட்டு அவிழ்க்க கன்னிகை மன்மதனை மடியில் கவிழ்க்க மல்லி கைமயக்கத்தில் மன்னன் - நெல்லை ஆடலரசன், துபாய் | |
82 | 201 | மல்லிகை மயக்கத்தில் மன்னவன் மயங்கிட / மணமாலை சூடிய மணப் பெண்ணாய் / தன்னிலை மறந்த தருணமிதுவோ// புவனா சற்குணம் கனடா | |
83 | 568 | நாண் ஏறிய நிலையில் நங்கை// நாணம் மறந்து தழுவ// மல்லிகை மணத்தில் மெய்மறந்தானோ மன்னவன்!! கு.ஜெயக்குமாரி/ஜெய் | |
84 | 250 | சூடினாள் மங்கையும் மல்லிகையைக் கூந்தலில் மயங்கினான் மன்னவனும் தடுமாறினான் நிலையில் இயக்கம் கொண்டது காமமும் செல்வலஷ்மி | |
85 | 634 | மன்னவன் மயங்கினான் மேகக்கூந்தலின் மயக்கத்தில்// வானவில்லாய் வளைத்திடும் வளைகரங்கள்...// பருவகாற்றில் சிந்திடும் காதலின் தேன்துளிகள்...// நெம்மேலி சுரேஷ்குமார் | |
86 | 578 | மன்னவள் மல்லிகையில் மன்னவன் மயங்கிட// மடிசாய்ந்து மணநாள் களிப்பினிலே// செவ்விதழ் மொழியாலே மொழிந்தாளே காதலினை// ...கவியாசகன்...!!! | |
87 | 709 | மல்லிகை வாசத்தில் மயக்கத்தை ஊட்டினேன்// உணர்வுகள் உந்துகோலாக முகமோடு முகமானேன்// மயங்கியே மன்னவன் மடியினிலே// தாழை. இரா. உதயநேசன் | |
88 | 215 | தேன்மொழியால பேசாது மீன்விழியை உருட்டிட மயங்கியவனை மடிதாங்கினாள் மல்லிகையாள் புலி பதுங்குகிறது புடவைக்குள் புதையலெடுக்க கிருஷ்ணநாதன் | |
89 | 515 | மணமாலை சூட்டிய மணமகள் கூந்தல் மல்லிகையின் நறுமணம் மணமகன் இதயத்தில் மகரந்தக் காதலாகக் கருக்கொண்டது லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன் | |
90 | 700 | மல்லிகை வாசம் மன்மத பாணமாய் மெல்ல நாசி வருடும் நடுநிசி மயக்கம் கொண்ட மன்னவன் விழிகள் சொப்பன உலகில் சொக்கின…! +++++++++++ மைக்கேல்ராஜ் | |
91 | 597 | நெஞ்சுக்குள் கோயிலாக வாழ்ந்த உன்னை// இருமனமும் ஒருமனமாய் இணையும் நாளில்/ மல்லிகை(யே)யின் வாசமென்னை மயக்குதடி// லக்க்ஷிகண்ணா | |
92 | 675 | மல்லிகையே உன்னை மணமகளாய் பார்க்கையிலே/ நாற்குணத்தோடு கூனிக் குறுகி நிற்பதேனோ?/ மாமனிவன் மல்லிகைப்பூவால் மயங்கியவன்தானே/ அருண் | |
93 | 269 | மல்லிகை வாசத்தில் என்னிதயம் துடிதுடிக்க// உன் செவ்விதழ் முத்தத்தில் கதகதக்க// அவள் கண்ணிமைகள் படபடக்க// ஆலங்குளம்,சொ.செ.சுப்பிரமணியன் | |
94 | 691 | வாலிப வயதில் வைபவம் கண்டு/ பேரின்ப நிலை கொண்டாள்/ நாணத்தில் மங்கை நாயகனை சேரவே!/ சோலை ராஜகுமாரன் | |
95 | 654 | மணமாலை தந்தவனின் தோள்சேரத் துடிக்கின்றாள்! மடிதந்த மனையாளின் மல்லிகை வாசத்தில் மயங்கியே கிடந்தான் மன்னனிவன்! பொன்.சுந்தர பாண்டியன் சோழவந்தான் | |
96 | 720 | சொல்லில் வடிக்க திணறும் நங்கை/ மெல்ல திறந்தது பள்ளிக் கதவு/ உள்ளமிணைந்து உறவு பூத்தது. நிர்மலா பத்மநாபன் | |
97 | 445 | தேகமே மல்லிகையோ சந்தேகம்தானடி எனக்கு// இப்படியே உன் கிறக்கத்தில்// வதையின்றி இறந்தாலும் பதைப்பில்லை தேவதையே// மு.பிரபு , நெருஞ்சனக்குடி |
திங்கள், 3 ஆகஸ்ட், 2020
01.08.20-மல்லிகை மயக்கத்தில் மன்னவன்
Tags
# கவிதை போட்டிகள்
# முடிவுகள் நிலுவை
# மூவெழில் மூன்று
Share This
About பாலா திரு
மூவெழில் மூன்று
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக