03.08.20- இல்லம் சங்கீதம் - தென்குமரிக் கவிதைக்களம்

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

03.08.20- இல்லம் சங்கீதம்











Sl.

எண் 

புகைப்படம்

கவிதை

1

344



கல்லும் மண்ணும் சாந்தும் கலந்து

கட்டினால் அதை வீடு என்போம்


உயிரும் உணர்வும் உயிர்ப்பும் கூட்டி

உவகையுடன் வாழ்ந்தால் இல்லம் என்போம்


செல்லச் சண்டைகள் செலவில்லாமல் செய்து

செல்லமாய்ச் செல்லம் கொஞ்சிடவும் வேணும்


கோழிச் சண்டைகள் தினம் பிடித்து

சமாதானம் ஆகிடவும் இல்லம் வேணும்


உறவுகள் கூடி உல்லாசம் காணவும்

உள்ளும் புறமும் பாசத்தில் பிணையவும்


ஊடலும் கூடலும் கலந்தே செய்யவும்

உனக்கும் எனக்குமான இடமே அன்பில்லம்!



#எமா#


2

238



இல்லறத்தின் நல்லறம் அழகு  இல்லமே./

இடரின்றி செயல்களோ இனிய முகத்தோடு../


தொடர்கின்ற பாரம்பரிய செயல்கள் யாவுமே.../

மலராக மணம் வீசுதே சூடிடவே../


குழலாகத் துளையில் காற்றின் இசையாகவே../

குறைவின்றி மனதினில் கோபுரத்தின் உயர்வாகவே./


வாரிசுகள் நிறைவுடன் வாழ்விலே புகழுடனே../

மனையாளின் மனமிங்கு மகிழ்வான நலமாகும்../


திட்டங்கள் யாவுமே பிறழாமல் இனிதாகும்../

ஊட்டங்கள் உள்ளமதில் உறுதியான உறவாகும்../


பல்கலையின் பாரம்பரிய கற்பித்தல் கலையாக../

நற்கலையாய் நம்மில்லமோ  நலமான நவரசமாகும்.../



இளந்தை சேது


3

462



இல்லம் இன்பமாய் மாற வேண்டும்/

இனிமையான மனைவி அமைய வேண்டும்/


அன்பினால் என்னை அணைக்க வேண்டும்/

அனைவரும் சேர்ந்தே செயற்பட வேண்டும்/


காதலினால் கவலையை மறக்க வேண்டும்/

பல கலைகள் நாம் அறிய/


நம் பிள்ளைகள் கல்வியில் சிறக்க/

காற்றினிலே நம் பெயர் விளங்க/


ஊர்எல்லாம் போற்ற வாழ/

நாம் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்/


நமக்குள் கவலை என்ன வரும்/

நம்வாழ்க்கை வரம் ஆகுமே/


தயா




4

614



எலி வளையானலும் தனி வளை/

என்று சொல்பவர் பலர் உண்டு/


நமக்கென்று நம் சேமிப்பில் கட்டிய/

ஓர் இல்லம் நம்மிடம் இருந்தால்/


முதல் முறையாக அடி எடுத்து/

வைக்கும் மகிழ்ச்சியான தருணம் யாவும்/


விவரிக்க முடியா அழகிய தருணம்/

சொல்ல வார்த்தைகள் எண்ணில் அடங்காது/


வாடகை என்ற பெயரில் கப்பம்/

கட்ட வேண்டிய அவசியம் இல்லை/


ஓய்வில்லாது சொல்லியும் தீராத இன்பம்/

நம் இல்லம் என்னும் பெருமிதம்/


விஜயலட்சுமி





5

710



1. மெட்டி ஒலியும் வளையல் ஓசையும்/

2. இல்லறமாம் நல்லறத்தில் இல்லாளின் சங்கீதம்/


3. குடும்பத்தில் தலைவனது அதிகாரம் சங்கீதம்/

4. அடுக்களையில் சமையல் பாத்திரங்கள் சங்கீதம்/


5. கணவன் மனைவிக்குள் சண்டைகளும் சங்கீதம்/

6. ஊடலின் பின்னாடி கூடலொரு சங்கீதம்/


7. ஈருடலும் ஓருயிராய் இணைவதொரு சங்கீதம்/

8. மகிழ்வான தாம்பத்தியத்தில் நன்மக்கள் சங்கீதம்/


9. மழலைகளின் மொழிகளினால் இல்லத்தில் சங்கீதம்/

10. குழந்தைகளின் குறும்புகளில் சரணடையும் சங்கீதம்/


11. சனனத்தில் தாலாட்டும் மரணத்தில் ஒப்பாரியும்/

12. வாழ்வின் எல்லைவரை இல்லமே சங்கீதம்/


அம்பிகா ஸ்ரீகுமார்.




6




கண்மணி உன்னைக் கண்டு மையலாகி/

அன்பின் அழகில் மயங்கிக் காதலுற்று/


'காதல் சிறகினிலே' வட்டமடித்துப் பறந்து/

மங்கை உன்பாசத்தில் உருகி/


மனங்கள் சங்கமித்துத்  திருமணம் செய்து/

ஈருடல் ஓருடலாகி இன்பம் பகிர்ந்து/


குழந்தை பெற்று பெற்றோர் ஆகி/

வாழ்வில் உயர்ந்த செல்வம் பெற்று/


நட்பும் உறவும்  நம்மைப் பாராட்ட/ 

மகிழ்ச்சி பொங்கி கீதம் பாட/


நமது "இல்லம் சங்கீதம்" போற்றுமே/

நாம் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திடலாமே..💐


கவிஞர். மரு.கி.ம.எழிலன்



7

201



இல்லறம் என்பது இனிமையான சங்கீதமே /

அன்பினால் இல்லம் நிறைந்திட வேண்டும் /


மலர்கின்ற மலராக மணம்வீச எங்கும் /

மகிழ்ச்சி குடிகொண்ட வாழ்வு சிறப்பாகும் /4


மெட்டியொலி ஓசை வளையல் கலகலப்பு /

இல்லத்தில் குதூகலம் சுகராகம்  இசைத்திடுமே  /6


உறவுகள் அனைவரும் ஒன்றாகக் கூடியே /

உவகையோடு வாழ்வதே அழகிய வாழ்வென்போம்/8


செல்லச் சண்டைகள் தினமும் நடந்தாலும் /

அபசுரம் இல்லாமல் வாழ்தலே வாழ்க்கை   /10


உயிரோடு கலந்து உறவாடி மகிழ்ந்து /

பெருமையாய் வாழ்வோம் அன்பாக வாழ்வோம்//



புவனா சற்குணம்   கனடா




8

428



வீட்டிற்கு பத்தென்று பத்தாது பதினொன்று

பட்டாளமாய் வீட்டில் கும்மாளமாய் இருந்ததென்ன


அத்தனையும் கனவாகி அம்புலியாய் ஆனதம்மா

ஓற்றைக் குழந்தைக்கு பாலூட்டி சீராட்டி


ராணியாய் ராஜாவாய் கட்டாக வளர்ப்போமே

விட்டிலாய் சுற்றிய பிள்ளைகள் ஒருகாலம்


லட்டுபோல் ஒன்றினைத் தாங்குவது இக்காலம்

இருக்கின்ற உறவுகளை இனிதாய் அரவணைத்து


நல்லவை அல்லவை இரண்டிலும் பங்கெடுத்து

ஆயிரம் சண்டைகள் உறவிற்குள் வந்தாலும்


அத்தனையும் சமாளித்து அவர்களுடன் சுமுகமாகி

உறவோடு ஒன்றானால் இல்லமே சங்கீதம்.


சுப்பிரமணியன் அன்புமலர்.




9

671



அம்மாவின் அரவணைப்பு அப்பாவின் ஆதரவு

தாத்தாவின் அறிவுரை பாட்டியின் கைப்பக்குவம்


இப்படியாய் இருந்தது இனிதான இல்லம்

கலகலப்பான அக்கா கலவரப்படுத்தும் தம்பி


கைநிறைய தின்பண்டங்கள் கொண்டுவரும் மாமன்

கொஞ்சிப்பேசும் சித்தப்பா கூடிக்களிக்கும் சித்தி


இப்போதும் இன்பமாய் இதயம் நிறைக்கிறது...

பண்டிகை வந்தாலோ பஞ்சமில்லை மகிழ்ச்சிக்கு


சங்கீதமாய் காதெல்லாம் நிறைந்து வழியுமே...

காலமின்று கூட்டுக் குடும்பத்தில் குண்டுவைத்ததே...


தனிக்குடித்தனம் தனித்தனியாய் உறவுகளை உடைத்தெறிந்ததே...

உறவுகளை இணைத்திடுவோம் இல்லம்சங்கீதமாய் இசைக்கட்டும்.




கி.அருள்குமரன். தலைஞாயிறு.


10

726




அன்னையின் அன்பிலே செய்த வீணை/

தந்தையோ யாழ் மீட்டி பாட/


மழலைகள் தாலாட்டு சங்கீதம் கேட்க/

தாத்தாவின் தாயன்பில் மகிழ்ச்சி பிறக்க/


பாட்டியோ பலவித கதைகள் கூற/

அண்ணன் ஆசையாய் அகம் மகிழ/


சகோதரி இன்னொரு தாயாக மாற/

நீண்ட பகலோடும் குறுகிய இரவோடும்/


ஒருவருக்கு ஒருவர் பேரன்பு கொண்டு/

காரிருளில் ஒளிரும் மாய நட்சத்திரங்களாக/


கள்ளம் கபடமில்லா இனிய மனதோடு/

ஆனந்த கானத்தை மீட்டிடுவோமே இல்லத்தில்/



🙏காளிராஜ்பாலகணேஷ்🙏


11

502



விண்மீன் கூட்டத்தில் உலாவரும் நிலவாக/

மேகத்தில் தவழ்ந்துவரும் அழகிய நிலவாக/


உறவுகளுடன் சேர்ந்து நாமும் வாழ்ந்தால்/

நந்தவனத்தில் பூக்களாக மகிழ்ச்சி மலர்ந்திடும்/


வண்ணத்துப்பூச்சியாக இன்பங்கள் சிறகடித்துப் பறந்திடு/

தென்றல் வந்து  தாலாட்டுப் பாடிடும்/


தேன் துளியாய் உறவுகள் இனித்திடும்/

தேவதையாய் பிள்ளைகள் சிறகின் பறந்திடும்/


நாளொரு கதைபேசி நாட்களும் நகர்ந்திடும்/

நட்புகள் ஒன்றிணைந்து நலமுடன் வாழ்ந்திடும்/


உறவுகளோடு சேர்ந்து அனைவரும் வாழ்ந்தால்/

பூமியில் வாழ்க்கை சொர்க்கமாக இருந்திடும்/

....................................


கார்த்திக்.கோ.



12

707



இல்லாளென ஒருத்தி இசையாய் இங்கிருக்க

இல்லத்தில் சங்கீதம் இனிமையாய்த் தங்கியிருக்கும்


கண்ணாடி வளவியொலி காதோரம் கேட்டிடவே

காணமாய்த் தோணுதே காதலும் மலருதே


யாருமில்லா நேரத்தில் அவளறியா தூரத்தில்

பின்னிருந்து அணைக்கவே சிலிர்த்திடும் சங்கீதம்


குழவிகள் கூடியே கொண்டாட்டம் போடுதே

கைத்தட்டும் சத்தமும் காதுகளைக் கிழிக்குதே


குழந்தையின் சிணுங்கலும் கும்மிருட்டு முனங்கலும்

குவலயத்தில் கிடைத்திடா கும்மாள சங்கீதம்


கொலுசொலி ஒன்றிலே கொன்றே செல்கிறாள்

கொழுந்தாய் எந்தன்மகள் குலத்திற்காய் வந்தமகள்



✍️பா.ச.கண்ணன்



13

450




கண்ணாடி வளையல்கள் கலகலக்க 

நடக்கையிலே பாதசரங்கள் கவிபாட/


காதில் குழையணிகள் காற்றோடு ஒலியிசைக்க/

இல்லாளும் இல்லத்து வாயிலிலே கோலமிட/


கண்விழித்தக்ழகண்மணியும்ழபசியாற

குரலெழுப்பி பலகுரலில் இசையமைக்க


தண்டையும் கொலுசும் தாளமிட ஓடிவந்து

முத்தமிட்டு அமுதூட்டி பசியாற்றி ஆராரோ


பாடியே மீண்டும் உறங்க வைக்க

பார்த்துப் பார்த்து ரசித்த என்னிதயத்தில்


பூபாளமும் ஆனந்தபைரவியும் மாறிமாறி ஒலித்ததில்

இரவுமானதே! உறவில் மயங்கி ஒன்றாய்

உறங்குகையில் நீலாம்பரியாய் பொழுதும்

நிறைந்ததே



ரேணுகா சுந்தரம்


14

204



கொத்தாய் மலர்கள் பூத்திடல் வனப்பு//

கூடிய உறவுகளுடன் வாழ்ந்திடல் சிறப்பு//


வீழ்ந்தாலும் விழுதாய் தாங்கிடும் பெருமை//

விழிகளையும் பாசத்தால் துடைத்திடல் அருமை//


தனிமையாய் இருப்பது மரத்திற்கு சிறப்பல்ல//

தோப்பாகி நிறைந்தால்தான் என்றுமே உயர்வாம்//


ஏணியாய் ஏற்றியே வாழ்த்திடும் உறவுகள்//

பறந்தாலும் விரிந்தாலும் கொடுத்திடும் சிறகுகள்//


பண்டிகையில் சொந்தமாய் சுற்றமாய் குழுமியே//

பண்பாட்டைப் போற்றிடும் உறவுகள் விழுமியம்//


சொர்க்கத்தை வைத்தாலும் உறவின்றி இனிக்குமா//

சொந்தங்கள் வந்தாலே சொர்க்கமும் தேவையா//



ஏரூர்

ஆஸாத் கமால்


15

618



சூரியனைச் சுற்றும் ஞாயிற்றுத் தொகுதியாய்/

ஈர்ப்பு விசையில் ஒன்றை ஒன்று/


விலகிச் செல்லாத அன்புப் பிணைப்பு/

அழகிய குடும்பத்தின் அடிப்படைப் பண்பே/


இரவு பகல் வருவது போல்/

இன்ப துன்பம் வருவது இயல்பே/


கிரண நேரமாய் சில நேரங்கள்/

இருள் சூழ்ந்து விலகுவதும் உண்மையே/


விண் மீன்களாய்ச் சொந்த பந்தங்கள்/

பருவ மாற்றங்களாய் பண்டிகைக் காலங்கள்/


பண்பாடு மாறாது கட்டமைப்புக் குலையாது/

அனைத்தையும் தாங்கும் இல்லம் சங்கீதமே/



ஔவை.




16

482



இல்லமே சங்கீதமானது அன்று உள்ளத்தால் /

பாசம் வைத்தே மகிழ்ந்தனர் துள்ளலுடன்/


நாளும் பொழுதும் இனிதாய் போனதே /

ஒற்றுமை குடும்பத்தில் மகிழ்ச்சியைக் கண்டேன் /


பாட்டியின் சமையலில் மயங்கி கிடந்தேன்/

தாத்தாவின் உழைப்பைக் கண்டு வியந்தேன் /


அப்பாவின் கண்டிப்புக்கு பயந்து நடந்தேன்/

அம்மாவின் பாசத்திற்கு கட்டுப் பட்டேன் /


சகோதரின் உறவில் அன்பால் மலர்ந்தேன்/

அந்தக் காலம் மீண்டும் வருமா ?


துன்பங்கள் உடைந்து தூளாய் போனதே /

இன்பங்கள் உறவுகளாய் இல்லம் சங்கீதமானதே .



தஞ்சை கோ பாலசுப்ரமணியன்



17

721



இல்லாள் அகத்திருக்க இல்லாமை ஏதுமில்லை./

நல்லாள் நலம்தானே நம்மைச் சுகமாக்கும்./


மழலைப் பூத்திட்ட மனையே பூந்தோட்டம்./

மனதில் அன்றாடம் மகிழ்ச்சித் தேரோட்டம்./


அன்பே முதலீடு ஆனந்தக் காப்பீடு./

காதல் கேள்விக்கு கண்ணால் விடைகூறும்/


இல்லறத் தேர்விலே எல்லோரும் வெற்றிதானே./

பெற்றோர் உடனிருக்க பெருந்தவறு நடக்காது./


கூட்டுக் குடும்பம் கொண்டாடும் கதம்பம்/

மலரும் இலையும் மணக்கும் சமமாய்./


மருமகள் மகளாய் மலரும் உள்ளமே.../

மறைந்து தொலையுமே முதியோர் இல்லமே.../


.....பாலு தியாகராசன்......



18

483



மனையாளாய்த் தெய்வமே மனையில் குடியிருக்க /1

நினைப்பதை மனம்போல் நிறைவேற்றும் மணவாளன்/


அணையுடைத்த மஞ்சத்தின் அடையாளம் குழந்தைகள் /3

மனம்போலத் தலைமுறை மல்லிகையாய் மணந்திருக்க /4


அன்பிருக்கும் அறமிருக்கும் அன்றாடம் சுகமிருக்கும்/

பண்புமிகு இல்லறத்தில் பாசமழை பொழிந்திருக்க /6


சொந்தமாய் வீடொன்று சொர்க்கமாய் அமைய/7

என்றுமே இல்லறம் இனிதாய்த் தொடர/8


அன்புள்ள வள்ளுவனார் அறவழி தொடர்ந்தால்/9

நல்லறத்தை உலகின் நாலுதிசை போற்றும்/10


செல்வம் பெருகுமே சிந்தை இனிக்குமே//11

இல்லம் சங்கீதம் ஏழிசை மோகனமே / 12



ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை



19

716




அடுக்களையில் நித்தம் பரபரப்பாய் சத்தம்//1 உப்புமாவுக்கு கோபம் சப்பாத்திக்கு போகும் // 2


பிடியைவிட்ட பந்துபோல் சாமான்களும் நழுவும் // 3

சமயத்திலே மேலெழுந்து தலையிலேயும் விழும் // 4


சாப்பாடுபெட்டி எங்கே கொண்டுவாங்க இங்கே // 5

கழுவவில்லையா இன்னும் முழிக்கிறதே இருகண்ணும் // 6


குளிக்கும்போது நினைக்கும சவர்க்காரம் மறக்கும்/7 நேரமின்றியே பறந்தோட துடிக்கும் // 8


தேனீரிலே இனிப்பில்லை துப்பினாலும் பரவாயில்லை // 9

விதியேயென்று கிளம்பிட்டேன் அலுவலகமே புறப்பட்டேன் // 10


இதுவே எங்கள் இல்லச் சங்கீதம் //11

என்றும் கேட்கும் இனிய ரீங்காரம் //12


- நாகை. ஹாஜா


20

652



இல்லம் என்றுமே அழகிய சங்கீதம்/ 

மகிழ்வுகள் ஒன்றாய் கூடும் இடம்/


செலவுகள் இருந்தும் வரவுகளாய் இன்பங்கள்/

குழந்தைகளின்றி பெரிய செல்வம் உண்டோ?/


மழலைப் பேச்சுக்கள் மலரும் பூக்கள்/

மழலையின் பிடிவாதம் அழகான அழுகை/


சண்டைகள் அவ்வப்பொழுது தோன்றி மறையும்/

தந்தையின் கோபத்தில் தாயிடம் குழந்தைகள்/


தாயின் புடவையில் குழந்தையின் அறை/

இல்லம் அழகாக இருந்தால் போதுமா?/


இல்லத்தில் இருப்பவர்களின் இதயமும் அழகாகனும்/ குடும்பங்களில் ஒழுக்கமே இல்லத்தில் இனிமை/



கூ.மு.ஷேக் அப்துல் காதர்



21

252




இல்லம் சங்கீதமே இதயராகங்களின் சங்கமத்திலே/

மெல்ல முகிழும் மகிழ்வில் கீதங்களே/


சொல்ல முடியாத சுகங்களின் சொர்க்கமே/

நல்லதொரு குடும்பம் நடனமாடும் தாளத்திலே/


சாதகங்கள் அன்பினிலே சாதனைகள் உறவுகளிலே/

பாதகங்கள் தவிர்க்கப் பாசத்தில் வலைபின்னி/


ஆதங்கமில்லா அரவணைப்பில் ஆசைகள் கட்டுக்குள்/

வேதங்கள் விட்டுக்கொடுப்பதில் வினைகள் சுயநலத்திலே/


சுரங்கள் சொந்தங்களாக சுகங்கள் குழந்தைகளாகும்/

வரங்கள் வசதியாக வாழ்வின் வசந்தமாகும்/


உரங்கள் உணர்விலே உன்னதம் ஒற்றுமையிலே/

கரங்கள் கருணையிலே கட்டியிழுக்கும் தருமத்திலே


உஷாதேவி பார்த்தசாரதி



22

243




விழிகள் பரிமாற  காதல் கசிய //

காதல் வானில் சிறகடித்து பறந்தோம் //


காதலுக்கு எதிராய்  நின்ற பெற்றோரால் //

கண்ணீரோடு  சில கால போராட்டம் //


துயரத்திலும் காதல் சொர்க்கமாய் தோன்றிட //

எதிர்ப்பைத் தாண்டி காதல்   வென்றது  //


என்னவள் வீணையென  மீட்டி இசைத்தேன்//

எந்தன் சுருதியில் மழலை இசையானது  //


மழலை  வரவால் வாழ்வே சொர்க்கமானது //

எட்ட  நின்ற உறவும் கிட்டியுறவாட  //


துன்பங்கள் பறந்தோடி இன்பம் பொங்கிட //

மழலை  கீதத்தில் வீடே சங்கீதமானது //


இந்திரா ஆனந்தன்



23

562




அன்பான  மனைவி பொறுப்புள்ள கணவன்/

ஒழுக்கமான குழந்தைகள் குடும்பமே கோவிலாகும்/


வளைந்து கொடுக்கும் நாணலைப் போல/

அனைத்து சூழலிலும் கணவனும் மனைவியும்/


விட்டுக்கொடுத்து வாழ்ந்திட இல்லறம் இனிக்குமே/

உண்மையும் அன்பும்         கொண்டு ஒருவருக்காக/


ஒருவர் வாழ உயர்ந்திடும் வாழ்வு/

ஒளிவுமறைவின்றி எண்ணங்களை பகிர்ந்தலே

வண்ணமயமான/


இல்லற வாழ்விற்கு அடித்தளம் ஆகுமே/

நற்பண்புகளை நாளும் ஊட்டி குழந்தைகளை/


வளர்த்தால் குடும்பத்தில் குதூகலம் பொங்குமே/

இல்லத்தில் சங்கீதம் இன்பமாய் ஒலித்திடுமே/



பா.பத்மநாபன்



24

616




இரு மனங்கள் கூடும் ஆலயம்💞

மழலைகளின் மொழி இனிமையான கீதம்💞


தாய் தந்தையின் அன்பு பெட்டகம்💞

தாத்தா பாட்டியின் அரவணைப்பு கூடம்💞


சுமைகளை தாங்கும் சுகமான பூஞ்சோலை💞

மனையாளின் தாலாட்டு பூபாள ராகம்💞


பிஞ்சு குழந்தைகளின் செல்ல அழுகையிலும்💞

கொஞ்சும் குமரியின் நாணப் பாா்வையிலும்💞


பல ராகங்கள் உருவாகும் கலைக்கூடம்💞

மன நிம்மதியும் ஓய்வும் அளிக்கும்💞


தென்றலும் பாடும் நந்தவனச்சோலை💞

கல்லும் மண்ணும் கானம் பாடும்💞



கா.கேமலாரூபினி



25

718



எல்லோர்க்கும் இன்பத்தைத் தருவது  சங்கீதம் !/

இறைவனையும் மயக்கும் இனிதான கீதம் !/


இல்லமே சங்கீத மயம்  ஆகினாலே/

இறைவனும் அங்கேயே குடி இருப்பானே !/


தாய், தந்தையோ சங்கீதக் கலைஞர்கள் !/

சங்கீதத்தில் உயர்ந்த சந்தோசத் தம்பதிகள் !/ 


வாய்த்த மகளுக்கும் சங்கீதத்தில் பிரியம் !/

வாய் திறந்தாலோ வந்திடுமே இராகம் !!/


எழு ஸ்வரங்களாய் ,இல்லத்தில் உள்ளோர்கள்/

எல்லோருமே இணைந்து இசைப்பதுவே இன்பம் !/


சூழ்ந்திடும் துன்பங்கள் பறந்தே ஓடிடும் !/

சுகமான வாழ்வு இல்லத்தில் மலர்ந்திடும் !/



கீழ்கரவை  குலசேகரன் 

இலங்கை   



26

668




அன்னை தந்தை யுறவில் மகிழ்ந்து/

அழகிய இல்லம் மழலைகளால் நிரம்ப/


அழகிய ராகம் மறைந்து இசைக்க/

நேர்த்தியான இல்லம் நன்மையில் மகிழும்/


கூட்டுக் குடும்பம் குவலயத்தில் கொண்ட/

மனங்கள் எல்லாம் மகிழ்ச்சியில் திளைக்க/


சிரிப்பின் ஒலியால் அதிரும் பூமகள்/

தன்னை மறந்து சங்கீதம் இசைக்க/


அன்பின் இல்லம் அழகிய கூடாய்/

இனிய ராகம் நிறைந்து வழிய/


எழும்பிடும் நாதம் தாலாட்டு பாட்டாய்/

இல்லம் மகிழும் இனிய சங்கீதத்தில்/



ஏஞ்சல்சோபிதா



27

287




கடல்அலை கரைதனைத் தழுவிடும் ஒசை

குயிலது பேடையைக் கூப்பிடும் கூவல்


மலர்தனைச் சுவைத்திடும் வண்டின் ரீங்காரம்

கொடிகளைத் தழுவிடும் தென்றலின் இசை


படைப்பின் வெளிப்படைப் பாட்டாய்  வந்தது 

இயற்கையில் இருப்பதை இல்லத்தில் நுழைத்தான்


எங்கிலும் எதிலும் இசையைப் புகுத்திட்டான்

காதல் வந்திடின் கவிதையாய் வடித்தான்


தலைச்சன் பிறந்ததும் தாலாட்டாய்ப் பாடினான்

பரமனின் கோவிலில் பாசுரம் இயற்றினான்


இசையில்லா இல்லமே இல்லையே இன்று 

இறைவனுக்கு நேர்வழி இசையே என்றாயிற்று 



தண்டபாணி



28

613




இல்லறத்திலே புகுந்து விட்டால் நல்லறமே //

இல்லாளின்   வருகை இசையாய்   கலகலக்க //


மெட்டியொலியும் வளையல் சத்தமும் நெஞ்சையல்ல 

இன்பங்கள்  துன்பங்கள் எல்லாம் மாறிடுமே//


உறவு பந்தங்கள் கலகலக்கும் சத்தங்கள்//

இல்லறமே சங்கீதமாய் இசைப்பாடும் வாழ்விலே//


இல்லாளின் கூந்தலிலே மணக்கும் மல்லிகை//

யாருமில்லா நேரத்தில் அணைத்திட தோணுதே/


துன்பங்கள் பறந்தோடி மழலையின் சிரிப்பில்//

பிள்ளைகளின் சந்தோசத்தில் குடும்பமே மகிழுதே//


தாத்தா பாட்டி கொஞ்சலிலே  நானுதே//

குலவிளக்காய என்னவளிருக்க சங்கீதமாய்வாழ்வோமே



ஜெயாசந்திரமோகன்



29

261




இருமணம் இணைந்ததோ திருமணம் நடந்ததோ

இருவரும் உவந்தே இல்லறம் நடத்தினர்


பாசத்துக்கு சாட்சியாக பிள்ளைகள் இரண்டு

பெற்றோறை மீறிய திருமணம் ஆனதால் ... (4)


அவர்கள் அளித்த இடைஞ்சல்கள் ஏராளம்

அத்தனையும் கடந்தே அழகாக வாழ்ந்தனர்


உறவுகள் உதவி இல்லை எனினும்

நட்புகள் பலர் நலமுடனே உதவினர் ... (8)


சிறுசிறு சண்டைகள் இருப்பினும் சலிக்கவிவ்லை

ஊடுதல் அவர்கள் காதலை ஊக்குவித்தது


கசப்புகளை மிஞ்சியே களிப்புற்று மகிழ்ந்தனர்

அவர்கள் இல்லம் சங்கீதமாக திகழ்ந்ததே !


~ வள்ளல் இராமமூர்த்தி






போட்டி நேரம் இத்துடன் நிறைவு பெறுகிறது! 

இனிவரும் கவிதைகள் ரசனைக்கே!.

நடுவர் தென்கரை தாயுமானவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages