Sl | எண் | புகைப்படம் | கவிதை |
1 | 606 | நுரைத்த நரையில் நிரம்பிய அனுபவம் / மங்கிய கண்களில் தங்கிடும் ஏக்கம்.. / அழையா விருந்தாளியாய் வந்திடும் நோயும்.. / தவிப்பின் சிறைகளில் மனமது மாயும் ரேகையாய் படர்ந்த முகத்தின் சுருக்கம் / காமம் கலவா காதலின் நெருக்கம்.. / - வினோத் பரமானந்தன் | |
2 | 697 | முதுமை முகத்திலே ரேகையாகி ஓடுகையில் / இளமைக் காலத்து இன்பங்கள் அருவியாகும் / நெஞ்சிலே ஊற்றாகி அன்பாக சுரந்திடும் / கண்களால் பார்ப்பதே பேரின்பம் ஆகும் / தள்ளாடும் போதினிலே துணையாகும் மனங்கள் / இணைந்தே இருந்திட்டால் அதுவே சுவர்க்கம்...! முனைவர் பெ.வெற்றிநிலவன், குடந்தை…. பி | |
3 | 698 | தள்ளாடும் காலத்தில் தலைமையான நெஞ்சங்கள்// முதுமை காலமிது அனுபவத்தின் கோலமிது// ஆதரவை நாடும் பாசத்தின் வெளிச்சமிது// கட்டியவனே கைக்கொடுக்கும் கலங்கமில்லா உறவுமிது/ எதிர்ப்பார்த்த கோணங்களில் எச்சங்களாய் இளமைப்பருவம்// முதுமை காற்றினிலே ஊஞ்சலாய் கடந்தகாலம்// தேனி ஆ.சுந்தர் | |
4 | 461 | அனுபோக அனுபவ ஆட்சிப் பெற்றது/ இளமையின் துள்ளல் இழக்க ஏற்றது/ தொற்றிக் கொண்டு தொடரவே உற்றது/ அன்பு ஒன்றே அணைத்துப் பற்றியது/ உனக்கு நானாய் எனக்கு நீயாய்/ பண்பின் வழியது பாதையும் ஆனதே/ கோ.அருச்சுணன் | |
5 | 715 | கடல் கடந்த இரு பறவைகள் // ஒன்றையொன்று கோதிக் கொள்கிறது விரல்களால்// தங்கப் பலகையில் ஓவியம் காவியமாக// வாழ்ந்த நாட்களை மனதில் வரையும் // நரை விழுந்தாலும் பிறை விழாது// தாங்கிப் பிடிக்கும் ஓர் அன்பு. அ.உமர்பாருக். | |
6 | 716 | வயதான காலத்தில்வந்துவிடும் முதுமை /1 யாருக்கும் தெரியாது இதனுடைய அருமை /2 எந்நாளும் இருக்கும் உடலினிலே நடுக்கம் /3 சொன்னாலும் புரியாது காதினிலே மந்தம் /4 அக்காலத்து பேச்சையே இக்காலத்திலும் பேசும் /5 பக்கம்வர துடிக்கும் பாசத்திற்கு ஏங்கும் /6. - நாகை. ஹாஜா | |
7 | 482 | முதுமையில் நோய் மனிதனை வாட்டுமே / வேதனையை நெஞ்சில் நாளும் கூட்டுமே / அன்புள்ளம் கொண்ட மனைவி துணையிருக்க/ வேதனையும் கானல் நீராகும் வாழ்க்கையில்/ மனைவி மட்டுமே உயிராகவே காத்திடுவாள் / ஈருடல் ஓருயிராகி இன்பமாகவே பார்த்திடுவாள் / தஞ்சை கோ பாலசுப்ரமணியன் | |
8 | 710 | 1. கண்டதும் காதல் கலவியில் முடியலாம்/ 2. காவியக் காதல் கதைகளில் வரலாம்/ 3. கருத்தொருமித்த காதலே கடைசி வரைக்கும்/ 4. இன்றைய காதல் இடையிலே முறியலாம்/ 5. மரணம் வரைக்கும் தொடரும் காதல்/ 6. முழு(து)மை பெறுமே முது(ழு)மைக் காதல்/ அம்பிகா ஸ்ரீகுமார். | |
9 | 462 | ஓடிக் களைத்தகாலம் இதுவோ/ துன்பங்கள் கூடும் காலம் இதுவே/ துயரங்களை அன்பு காட்டி போக்கிடுவீர்/ நமக்காய் உழைத்தவரை ஒதுக்காதே யாருக்காகவும்/ உழைப்பினால் அவர்களை பார்த்துக் கொள்/ போன பின் அழுவதில் பயனேது/ தயா | |
10 | 708 | மாசற்ற காதல் இங்கே மகத்துவமாய்/ பாசத்தின் பிணைப்பும் உடன் பக்குவமாய்/ ஆசைகளைக் கடந்து அன்பிலே திளைத்து/ அத்தனை உறவினையும் ஒருங்கிணைந்த பாடு/ இளமையின் இனிமைகளை இல்லறத்தின் முழுமைகளை/ நிறைவாய்க் காட்டுது இழையோடும் சதுரத்தில்...// திருமதி பிரிந்தா புஷ்பாகரன். | |
11 | 700 | ஊன்றும் ஒருகோல் உதவும் கைதாங்கி/ தோற்றம் மாற்றம் தோலிலே சுருக்கம்../ காயின் முதிர்ச்சி உண்ணக் காய்கனியாக/ நாற்றின் முதிர்ச்சி பல்வகை தானியமாக../ மனிதனின் முதுமை அனுபவ பெட்டகமாக/ நரைதிரை நடுக்கத்தினுள்வாழ்வியலின் முழு(து)மை..! +++++++++++ மைக்கேல்ராஜ், ஒசூர் | |
12 | 483 | இளமையிலே ஒன்றாகி இனிமையிலே கலந்தாடி/ 1 தள்ளாடும் வயதுவரை தனிமையை அறியாமல்/2 முதுமைவரை இல்லறத்தில் முழுமையாய் அறம்வளர்த்து 3 துன்பத்தும் இன்பத்தும் தொடர்ந்திடும் துணையாகி /4 வாழ்வதுதான் உலகுக்கு வழிகாட்டிச் சிறப்பதுதான் /5 அன்பான அறவாழ்வில் அமுதான பண்பாகும்/6 ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை | |
13 | 450 | கூந்தலின் கருமையும் வெண்மையும் காதலின் வண்ணங்களை கலைக்க இன்றளவும் இயலவில்லை! ஒன்றை ஒன்றுப் புரிந்த உள்ளங்கள் இளமையிலும் முதுமையிலும் அன்பின் முகவரியில் குதூகலமாய் வசிக்கின்றன! உண்மைக் காதலுக்கு ஒரு ஆயுள் போதாதென உணர்ந்ததாலே! ரேணுகா சுந்தரம் | |
14 | 238 | மண்ணில் விழுந்த நாளின் தொடக்கம்.../ தொடரும் ஆயிரம் நினைவுகள் கூட்டம்.../ இல்லறம் தொடங்கி இதயம் இணைந்தது../ நல்லறம் கடந்தது நாட்கள் நலமுடன்../ வாரிசுகள் வசதியுடன் வாழ்வைத் தொடங்க../ இறைவன் தந்தது அனைத்தும் முழுமையே../ இளந்தை சேது | |
15 | 428 | எழுபதும் எண்பதும் சருகாய் போயுமே இனியதாய் காதலில் இருபதாய் இருக்குதே புன்னகை அன்பிலே புரிதலில் தோழனாய் கள்ளமே இல்லாத உள்ளமே வெள்ளையாய் கல்லறை வரைக்குமே கனிவுடன் காதலே இறையவன் படைப்பிலே இப்படியும் அற்புதம். சுப்பிரமணியன் அன்புமலர். | |
16 | 721 | வாலிபங்கள் பெற்ற முதுமைக் குழந்தைகள்/ வயதான பின்னாளில் வருந்தாத அன்றில்கள்/ ஆற்றோரம் வீற்றிருக்கும் அழகான தேவதைகள்.../ அரிதாரம் பூசாத வாழ்வின் இலக்கணங்கள்/ எச்சங்கள் துச்சமென விட்டதனால் இந்நிலையோ/ மிச்சங்கள் வாழவிட்டு முழுமை பெற்றனரோ.../ ......பாலு தியாகராசன்.... | |
17 | 618 | நரையும் வழுக்கையும் கூடி வர/ நோய்கள் எல்லாம் தொடராய் வர/ நடை தளர்ந்து மெதுவாய் வர/ தடி வேண்டும் துணைக்கு வர/ நினைவுகள் மட்டும் பசுமையாய் வர/ வாழ்க்கைப் பயணம் அனுபவமாய் வருமே/ ஔவை. | |
18 | 671 | முடிவன்று முதுமை வாழ்வின் வளமை/ இளமை தொடங்கிய அனுபவ செழுமை/ இனிமையின் முழுமை முதியோர்க்கு பெருமை/ இன்றைய இளையோர்க்கு எதிர்காலக் கருவூலம்/ காலத்தின் அற்புதத்தை காட்டிடும் கண்ணாடி.../ பின்பற்றிட இனித்திடுமே இவர்களின் முழு(து)மையே.../ கி.அருள்குமரன். தலைஞாயிறு. | |
19 | 652 | அன்பின் முழுமை முதுமையில் தெரியும்./ குழந்தைகளாக மாறும் முதுமை அருமை./ நரை விழுந்த பின்னேயும் காதல்./ அறுபது ஆகியும் பிரியாத முதுமை./ கரம் பிடித்தது முதல், காதலே!/ நரை அதிகரித்தும் கொஞ்சல் குறையவில்லையே!/ கூ.மு.ஷேக் அப்துல் காதர் | |
20 | 201 | முதுமை வாழ்வில் வருவது வழமை / சாதிக்கப் பிறந்தவர் நாமென்ற பெருமை/ ஆற்றோரம் ஆறுதலாய் வீற்றிருக்கும் இவர்கள்/ தனிமையில் வாழ்ந்தாலும் தாங்காத மகிழ்ச்சி/ காலத்தின் அற்புதம் கொடுத்து வைத்தவர்கள் / முதுமையிலும் அன்பாய் வாழ்வது மகிழ்ச்சி // புவனா சற்குணம் கனடா | |
21 | 207 | இளமை அழகில் வாழ்ந்த காலம்/ மலரும் நினைவுகளாய் மனதில் ஓடும்/ முதிர்ந்த அழகில் சிறக்கும் வாழ்க்கை/ பாசத்தின் பகிர்வில் பல்லாண்டு வாழும்/ நேசக் கனவுகளாய் நெஞ்சம் நிறையும்/ வாழ்வின் முழுமை முதுமையில் சிறக்கும்/ -முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி. | |
22 | 597 | முன்னோக்கிச் செல்கையிலே முழு(து)மையைக் காண்பாய்/1 வில் போன்ற முதுகின் தோற்றம்/2 வெண்முடி தோல் சுருங்கி நிலத்திலே/3 இளமையைத் தேடுவது போலுன் நடையழகு/4 கூண் விழுந்த கண்கூடத் தனியழகு/5 பொக்குவாய்ச் சிரிப்போடு பார்க்கையிலே கொள்ளையின்பமே..// லக்க்ஷிகண்ணா | |
23 | 518 | கரம் பிடித்த நாளில் இருந்து / முழுமையாய் வாழ்கின்றோம் ஓருயிராய் இணைந்து / ஒருவருக்குள் ஒருவர் என்றும் அடைக்கலம் / அன்பில் படைக்கின்றோம் புதிய இலக்கணம்/ காலங்கள் கடந்தாலும் நிற்போம் நிழலாக / இன்பத்திலும் துன்பத்திலும் இருப்போம் துணையாக... / வி.கல்பனாதர்மேந்திரா.. | |
24 | 675 | காலங்கள் ஓடுகையிலே காண்பது ழுழு(து)மையே// வாழ்கையின் முடிவினை உணர்த்துங் கோலமே// கூண் விழுந்த கண்கள் நரைமுடி// வில்லைப்போல் முதுகிருக்குமே இளமையின் மறுபக்கமே கருவிலே பரிணாம வளர்ச்சி இப்போ/ பரிணாமம் தேய்ந்து போகும் காலமிது// அருண் | |
25 | 269 | கண்களோடு இணைந்திடும் கரையில்லா சுவாசமே..!! கண்ணீரில் கலந்திடும்ரகாலத்தின் கவசமே..!! கவலைக்கு மருந்தாகும் மனைவியும் நீயே..!! கண்டிப்பை வழங்கிடும் ஆனந்தத்தின் தீயே..!! முதுமையின் வாழ்க்கையழகு பாசத்தின் பிணைப்பழகு..!! வளர்பிறை வாழ்க்கை வளமான முழு(து)மையே..!! ஆலங்குளம்,சொ.செ.சுப்பிரமணியன் | |
26 | 312 | முதுமை உடலில் தான் மனதிலில்லை. 1 வயது வயது ஆக ஆசை 2 மகிழ்வு நிறைந்த எண்ணங்கள் தானே 3 உருவாக்கி வாழத் தோன்றும் நிலை 4 கடந்த காலத்தின் நிகழ்வுகள் தானே 5 மனம் அசை போட்டு வாழும். 6 பொ.சுப்புலட்சுமி, தேவகோட்டை | |
27 | 268 | முதுமை கொண்ட மனங்கள் இரண்டு… முழுமை கண்ட வாழ்வை மகிழ்ந்து... இளமை குளுமை பசுமை வனத்தில்... இனிமை தந்தத் தனிமை இடத்தில்... நினவாய் மலரும் காதல் கனிந்து... நிழலாய்த் தொடரும் புனிதம் அறிந்து... ...பூமகன்... | |
28 | 465 | முழுமை என்பது முதுமையில் கனவே// இளமை கவர்ச்சியில் விழுகிற மனங்களில்..// மோகமே இருப்பின் முப்பதில் முடியும்// காமமே நிற்பின் கழிந்ததும் புளிக்கும்// அன்பின் பிணைப்பே அணைத்த நகரும்// துன்பம் வரினும் தொடரும் பிணைந்தே.// இரா.வெங்கடாசலம் | |
29 | 386 | முதுமைப் பருவம் வாழ்வில் வழமை/ ஆற்றங் கரையின் பூங்கா வனத்தில்/ அமர்ந்து ஆடும் இனிய மனங்கள்/ நிறைந்த வாழ்வு நீளும் இன்பம்/ குறைந்த பொறுப்பு கூடிய வாழ்க்கை/ சிறந்த தம்பதியர் சீருடன் வாழட்டும்/. தென்கரை தாயுமானவன். | |
30 | 668 | இளமை ஊஞ்சாலாடும் இனிய பருவத்தில்/ கன்னியை கைபிடித்து இல்லறமாம் பாதையில்/ இனிதாய் நடைபயின்று இன்றுவரை இடறிடாமல்/ முதுமையிலும் முழுமையாக முத்தமது இனித்திடவே/ முன்பயனின் நன்மையினால் முல்லையவள் அன்பினிலே/ இதயமது ஒன்றாக இணைந்தே வாழ்கின்றோம்/ ஏஞ்சல்சோபிதா | |
31 | 249 | இளமையில் கொண்ட அன்பு குறையாமல் ! முதுமையிலும் தொடரும்ட பந்தமே தம்பதிகளாக ! ஒருவரை ஒருவர் புரிந்துணர்வு கொண்டே ! வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் இணைந்தே ! அனுபவித்து வாழ்ந்திடும் நேசக்கார சோடியாக ! இளையோருக்கு இவர்களே பாடமாக அமைந்தனரே !!! வாணியம்பாடி தியாகராசன் | |
32 | 373 | இருபதில் தொடங்கிய அறுபது வரையிலும்/ அன்பான காதல் ஆசையுடன் ஊடல்/ இனிமையான வாழ்வு இளமையைத் தந்தது/ முதுமை நாட்களில் முழுமையாய் ஆனது/ இருவர் கரங்களும் இணைந்தே இருந்தது/ கடைசி வரையும் கூடியே இருக்கும்!! ஜயந்தினி வாகீசன் | |
33 | 613 | இளமைக்கடந்து முதுமையிலும் முழுநிலவாய் அவரிருக்க தள்ளாடும் முதுமையிலும் தளராத மேனியுடன்// இளமையின் நினைவுகள் முதுமையிலும் அசைப்போடும்// தாங்கிப்பிடிக்க துணையிருந்தால் அடம்பிடிக்கும் மனமே முதிர்ந்த வயதிலும் பேசியே கொன்றிடுவார்// இருகரம் கோர்த்தே இணைந்திருப்போம் இறுதிவரை// ஜெயாசந்திரமோகன் | |
34 | 573 | இளமையில் பற்றிய கரங்கள் இவை/ முதுமையிலும் விடுவதற்கு மனமில்லை இன்றுவரை/ இன்பத்தையும் துன்பத்தையும் இணைந்தே எதிர்கொண்டோம்/ இனிவரும் நாட்களிலும் இயலாத நாட்களிலும்/ இறைவனின் அழைப்பினிலும் விலகாமல் பயணிப்போம்/ மு .சுகப்பிரியா | |
35 | 724 | படைப்பின் பரிணாமம் பார்ப்பதற்கு பரிதாபம்/ கொடுப்பதெல்லாம் கொடுத்து கோடியே உலகுக்கு/ விடைபெறும் வேளையில் வேதனையான உறவுகள்/ எச்சங்கள் மிச்சங்கள் எதிர் பார்க்கும் கழுகள்/ எதிர்பார்ப்பின்றி தவிக்கும் இனிமையான ஜோடிகள்/ அடிமைக்கோலமிடும் வாரிசுகளிடம் அகப்பட்டு தவிக்குது ஒலுவில் எஸ்.எல்.அன்வர் | |
36 | 515 | இல்லறத்தை நல்லறமாய் ஏற்றுவாழும் பந்தத்தில்/ இன்பமும் துன்பமும் இருவருக்கும் பொதுவாகும்/ இளமையில் தொடங்கும் உண்மையான காதல்/ இயலாமை முதுமையிலும் நீங்காமல் தொடரும்/ அன்பான பிணைப்பு ஆயுளுக்கும் நீளுகின்ற/ அற்புத நேசமாக முழுமையுடன் இனிக்கும்/ லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன் | |
37 | 578 | இளமைக் கோலமது காலத்தால் மாறிடவே// வாலிப கனவுகளை இதயத்தில் சுமந்தப்படி// துன்பத்தில் துணையென இன்பத்தில் மகிழ்வென// குறைவில்லா அன்பினிலே குடிகொண்ட முதுமையிது// களங்கமற்ற காதலிற்கு தற்கால ஆசான்கள்// தடுமாறும் வயதினிலும் தளராத உள்ளங்கள்// ...கவியாசகன்...!!! | |
38 | 602 | நாதஸ்வர ஓசையிலே கைபிடித்த நாயகனே கட்டழகு காளையாக காட்சி தந்தவனே மாறாத மனசோடு மகிழ்வ தருபவனே ஏற்றமிகு வாழ்வினிலே எனை காப்பவனே உனது அங்கத்தில் சரிபாதியாய் கொண்டவனே முதுமையே ஆனாலும் முழுமையாய் ஆட்கொள்பவனே.
.......கோ.வெங்கடேசன்........ | |
39 | 564 | முழுமை பெறும் முதுமையில் முதிர்ச்சி வெறுமை இல்லை மனம் பொறுமையாய் குறுநகை செய்து குற்றம் காணாது திடமான முடிவுகள் செயல் வடிவம்பெற அடம் பிடிக்காது அன்புடன் நிறைவேற்றிட அனுபவ அறிவிலும் அர்த்தங்கள் சேர்க்கும். இராசையா கௌரிபாலா. |
இத்துடன் நிறைவு பெற்றது



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக