04.08.20-வரப்புயர நெல் உயரும் - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

04.08.20-வரப்புயர நெல் உயரும்











Sl

எண்

புகைப்படம்

கவிதைக்ஷ

1

462

மண்ணை நம்பி விதை விதைக்கிறோம்/

மழையை நம்பி பயிர் இடுகின்றோம்/

அது மட்டும் போதுமா இருக்குமா/

உன்னை நம்பி உழைப்பைக்கொடு/

வரப்புயர நெல் உயரும் மெய்யாகவே/


தயா

2

216

கருமேகம் திரண்டது காவிரி நிறைந்தது//

கல்லணைத் திறந்தது கானலும் மறைந்தது//

காணியில் பாய்ந்ததது காய்ந்தது விளைந்தது//

வெம்மை மறைந்தது பசுமை படர்ந்தது//

வரப்புயர நெல்லுயர்ந்து உள்ளம் மலர்ந்தது//


அ.மாணிக்கவாசகன் அம்பிகாபதி.

3

461

வெட்டும் வரப்பு கூட்டும் உயரம்./

திரட்டும் தண்ணீர் உருட்டும் கதிரே/

சிறக்கும் வளமே சேர்நெல் களமே/

பிறக்கும் மகிழ்ச்சி பட்டப் பாடே/

ஊருக்கும் உணவு உவந்து அளிப்பரே./


கோ.அருச்சுணன்

4

450

நீரும் வேரும் சீராய் அமைந்தால்

நாளும் பொழுதுமாய் பயிரும் வளரும்

காலம் நேரம் கருத்தாய் பார்த்தால்

வரப்பின் உயரம் ஓங்கியே உயரும்

உழைக்கும் மக்களின் பசியும் தணியும்!


ரேணுகா சுந்தரம்

5

477

உழுது பயிரிடவே ஆசைகள் பிறக்கும்!!// 

சேற்றை சந்தனமாய் உள்ளமது நினைக்கும்!!//

நெல்லோ அடுத்தவர் உலையில் கொதிக்கும்!!//

வைக்கோலே உழவனுக்கு கூலியாய் கிடைக்கும்!!//

ஆயினும் விதைத்திடவே கைகளும் துடிக்கும்!!// 


******ரத்தின பாரதி கோவை***

6

240

ஆடிப்பெருக்கு எடுத்து ஒடிவரும் காவேரி//

ஆடியில் விதைத்தால் தையில் அறுவடை//

வயல்களில்  எல்லாம் பசுமை படர்ந்தது//

பக்குவமா பாதுகாத்தனர் விளைச்சல் பெருகியது//

வரப்புயர நெல்லுயர்ந்து விவசாயம் செழித்தது//


உமா பாலகிருஷ்ணன் பெங்களூர் 🏵️

7

698

காரிருள் மேகமும்  கனலாய் வெம்மியது //

காத்திருந்த உழவனுக்கு உற்சாகம் கொட்டியது//

கழனியிலே நீரும் வானுயரமாய் உயர்ந்தது//

விதைத்த வித்து பசுமையாய் மாறியது//

உழைத்த உழவனுக்கு வாழ்க்கையும் உயர்ந்தது//


தேனி ஆ.சுந்தர்

8

428

காணி நிலமுண்டு காளை மாடுண்டு

கலப்பை இங்குண்டு காலில் பலமுண்டு

ஆழ உழுவதற்கு ஆசை எனக்குண்டு

வானம் பொழிந்தாலே வயலுக்கு வளமுண்டு

வரப்புயர நெல்லுயர வயிறாற உணவுண்டு.


சுப்பிரமணியன் அன்புமலர்

9

238

உழுதொழில் செய்வோனே உலகில் உயர்ந்தவனாம்../

விளைநிலத்தை வீரியமாய் நலமான விதையோடு../

பருவத்தில் பயிர்செய்து பக்குவமாய் உரமிட்டு../

தேவையான நீரினைத் தேக்கியே சீரமைப்பான்../

விளைந்தக் கதிர்களை விளைவாக்கி சேர்த்திடுவான்../


இளந்தை சேது

10

463

மருத நிலத்தின் மாண்பு வயல்களே!

செந்நெல்  வயல்நிரப்ப கதிரோன் உதவும்!

உழவுக் காளைகள் கழனியை பண்படுத்தும் !

விதைதூவி நாத்துநட்டு  களைபறித்து நீரபாய்த்தால்

தலைகுனிந்து நெற்கதிர்கள் நிலம் நோக்கும் !


அரவிந்தன் தஞ்சை

11

517

வரப்புயர நெல்லுயரும் வரமென்றே வாழ்வுயரும்/

பயிர்களின் வளர்ச்சியிலே வளமண்ணும் பெருமையுறும்/

கதிரெல்லாம் சிரந்தாழ்ந்து அறுவடையை எதிர்நோக்கும்/

வேர்வைக்கு வித்திடும்  விளைநிலம் செழித்திடும்/

உழவரின் உழைப்பினில் உலகமும் நிலைத்திடும்/


      -ஆனந்த் சுந்தரராமன்

12

409

ஆடியும் வந்தது தேடிய மழையும்//

பொழிந்தது வாய்காலில் வெள்ளம் வழிந்தே//

ஓடியது வரப்புயர நெல் உயரும்//

கதிர் முற்றும் அறுவடை செய்தே//

அவனியைக் காப்பான் நம் உழவன்//

*********

க.சுதர்சனக்குரு.



13

261

ஆடிப்பட்டம் தேடிmவிதைத்தால்mவிளைச்சல்

அமோகம் ஆகுமன்றோ வரப்பும் உயர்ந்தால்

கேட்கவும் வேண்டுமோ நீரும் உயரும்

நெல்லும் உயரும் விவசாயம் செழிக்குமே

மக்களின் தேவைகளும் மகிழ்வோடு நிறைவேறுமே !


~ வள்ளல் இராமமூர்த்தி

14

614

செல்வம் சேர ஆசை பிறக்கும்/

பிறருக்கு பகிர மனம் தடுக்கும்/

லட்சம் சேர்ந்தால் கோடியை நாடும்/

பட்டினி சாவை போக்கிட நினைத்தால்/

நாமும் வாழ்ந்து பிறரும் வாழலாமே/


விஜயலட்சுமி

15

510

மேகம் சூழ்ந்திட மழையும் பொழிந்திடும்/

வயலும் வாழ்வும் வளம் பெற்றிடுமே/

பார்க்கும் இடமெல்லாம் பசுமை பொங்கிடும்/

வரப்புயர நெல்லும் உயர்ந்து செழித்திடுமே /

உழவனின் மனமும் களிப்பில் மூழ்கிடுமே/


ராதாமணி

16

592

நீர்ச் சேந்தல் நிரந்தர நிலையானால்/

நீரணைக்க வரப்புயரும் நீரளிப்பும் அதிகமாகும்/

நீரளிப்பு அதிகமாகியதும் வேர்ச்செடியும் உயரும்/

நிரந்தரக் குளிப்பிலே நிம்மதியாய் உண்டிடும்/

உண்டிடும் உணவாலேmநெல்லும் நீண்டுயருமே./


கவிஞர் ராம்க்ருஷ்

17

613

மழை  பொழிந்தால் பயிர்  விளையும்/

ஆடியிலே  விளைச்சல் தையிலே அறுவடை/

உழவன்  உழைத்தே ஓடாய்  போனான்/

உழவன்  சேற்றில் கை  வைத்தால்/

நாம்  சோற்றில்  கை  நனைப்போம்/


ஜெயாசந்திரமோகன்


18

201

வானம் பொழிந்தாலே வயலும் செழிப்பாகும்/

பயிரின் வளர்ச்சியிலே நெல்லும் கதிராகும் /

வரப்புயர நெல்லுயரும் வளமான வாழ்வுயரும்/

கதிர்கள் தலைசாய்ந்து அறுவடைக்குத் தயாராகும்/

உழவரின் உழைப்பினிலே உலகமே பசியாறும் //  


புவனா சற்குணம்   கனடா


19

234

ஆடிப் பிறந்தது மழையும் பொழிந்தது..!!

உழவன் ஏர்பூட்டி நாற்று நட..!!

ஏற்றமுடன் பயிர்கள் செழித்து வளர..!!

நாளும் உழைப்பான் வேர்வை சிந்திட..!!

வரப்புயர நெல்லுயரும் தரணியில் வாழ்வுயரும்..!!


அமுதா.ரா

20

386

வானமழை பொழிந்தாலும் தானதவம் மிகுந்தாலும்/

விவசாயி மனம்வைத்து ஏரிகளைப் பெருக்கிடவே/

மடைதிறந்து உழவிட்டு நடவிட்டுப் பயிர்வளர்ப்பான்/

வரப்புயர நீர்பாய்ச்சி நெல்லுயர விளைவிப்பான்/

அன்னவனின் உயர்வில் அவனியும் உயர்ந்திடுமே/.


தென்கரை தாயுமானவன்.

21

204

அல்லும் பகலும் அயராது உழைத்து//

அகிலத்தின் பசியாற்ற அக்கறையோடு விதைத்து//

நெல்லும் வளர்ந்து விளைச்சலும் மலிந்து//

பஞ்சத்தை தீர்த்திடப் பாடுபடும் விவசாயி//

சீரான மழையினால் வரப்புயர நெல்லுயரும்//


ஆஸாத் கமால்

22

476

மழையும் பொழிந்து மகசூல் பெருகியது/

பயிர்கள் செழிக்கப் பஞ்சமும் நீங்கியது/

நீரும் உயர நெல்லும் உயர்ந்தது /

வரப்பும் உயரவே நெல்லும் நிமிர்ந்தது/    

நாடும் வீடும் நலமும் பெற்றதே/


     தங்க.ஜான்பீட்டர்

23

207

நிலமதைப் பண்படுத்தி நாற்றுகள் நட்டு/

வளமதைப் பெருக்க நன்னீர் பாய்ச்சி/

கதிர்கள் வளர்ந்திட காவல் காத்து/

பொறுப்புடன் உரமதை நிலத்தில் வார்த்தால்/

வரப்புயர நெல்லுயர்ந்து வாழ்வு சிறக்கும்/


-முனைவர் கவியருவி ஜோதிபாரதி தேனி.

24

692

வரப்புயர நெல்லுயரும் உள்ளமுயர உயர்வுயரும்/

நீருயர  மணந்திடும் மலர் உயரும் 

குணமுயர கோபுரமாகும்! பள்ளத்தை நோக்கி 

பயணிக்கின்ற நீரோட்டத்திலே ஊறிட்ட கதிரே

ஊருக்கே படையிலிடும்! ஊயிரையும் காத்திடும்!


முனைவர். சு. சித்ரா , கரூர் தமிழ்நாடு

25

258

வரப்புயர  நீரும், நீருயர நெல்லும்/

உயர்ந்திட, ஆடிப்பட்டம் தேடி விதை..!/

படித்து ரசிக்கலாம், வேறென்ன சொல்ல!/

விளைநிலத்தை எல்லாம், விலைநிலங்கள் ஆக்கிடவே/

விவசாயி துணிந்திட, நாளை சோற்றுக்கு..?


                    தங்க. சரவணன், வடபழநி, சென்னை-26.        

26

434

ஓய்வின்றி உழைக்கும் உழைப்பாளர் மத்தியில்/

நிலத்தை உயிராக நேசிக்கும் மனிதம்/

விவசாயம் செய்திடும் உழவனின் வாழ்க்கை/

உயரும் அந்நாளில் உலகம் பசியாறும்/

வரப்புயர்ந்து நாற்றுகளோ வானுயர்ந்து வளரும்//


மீனாட்சி சுந்தரம்

27

726

பூமித்தாயின் மடியில் புனித ஆன்மாவாகி/

நீலவானின் மடியிலே மழலையாக உருமாறி/

மேகம் என்ற மேன்மைப்பிறவி கொண்டு/

மழை என்னும் மகிழ்ச்சிதேவதை பிறந்திட/

மண்ணிலே நீர்பாய வரப்புயர நெல்லுயரும்/


🙏காளிராஜ்பாலகணேஷ்🙏

28

259

விவசாயம் நாட்டின் வனப்பும் வளர்ச்சியும் /

உண்ணும் உணவு உயிர்களுக்கு அவசியம் /

உழுதல் உழைப்பின் மேன்மையை உணர்த்தும் /

சேற்றில் புதையும் கால்கள் செப்பனிடும் /

வயிற்றுச் சோற்றுக்கு வழி சொல்லும் /


ஜெயலெட்சுமி

29

728

வரப்புயர நெல்லுயரும் அதுவழியாய் பசிகுறையும்//

இரப்பவர்கள் இல்லையென்றால் இவ்வுலகு தழைத்தோங்கும்//

புறப்படுவாய் வயல்நோக்கி பூமிதனை உனதாக்கி//

இரக்க குணத்தோடு எல்லோர்க்கும் உணவுகொடு//

மரித்துவிட்ட மனிதம் மாண்படையும் மண்ணுலகில்.//


கவிஞர் ஆவூர்க்குமரன்

30

483

மாதத்தில் தவறாமல் மூன்றமுறை மழைபொழிய /1

தீதகல வரப்புயரும் செழித்தோங்கி நெல்உயரும் /2

கதிர்முற்றித் தலைசாய காசினியில் உழவர்கள்/3

தலைநிமிரும் பூமியிலே தடுமாற்றம் நீங்கியே /4

நிலையுயரும் மக்களிடம் நிம்மதி உருவாகும் /6


ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை

31

697

அல்லும் பகலும் உழைத்து விளைத்தப் பயிர்கள் / 

நெல்லை முத்தாய் மணியாய் தருகின்ற பொழுதில் / 

பஞ்சம் நீர்ந்து நெஞ்சம் நிறையும் இன்பத்தில் / 

வரப்பு உயர நெல் உயர்ந்தது சுவர்க்கமாகுமே...! 


முனைவர் பெ.வெற்றிநிலவன், குடந்தை...

32

254

மேகங்கள் கருத்து ஆடிக் காற்றடித்தாலே/

தாகமும் விவசாயி சோகமும் நீங்கிவிடுமே/

பயிர் வளர்த்து உயிர் காக்கவே/

வரப்பு உயர்ந்து நீர் நிறைந்தாலே/

சிறப்பாக வாழலாம் புவி மீதிலே/


கி.மா.கனகராசன். சூலூர்.

33

716

கார்மேகம் பொழிந்திடவே பூமியெங்கும் குளிரும் //1

வயற்காடு அத்தனையும் தண்ணீரால் நிறையும் //2

ஏறுபூட்டி உழுதிடவே நெற்பயிர்கள் வளரும் //3

அறுவடைக்குத் தயாராகி தலைவணங்கி நிற்கும் //4

உழைத்ததற்குப் பலனாய் உழவருக்குக் கிடைக்கும்.//5


- நாகை. ஹாஜா

34

725

தரிசைப் புஞ்சையாக்கி ஏரோட்டிச் சீராக்கி/

வயலில் வரப்பிட்டு நீர்ப் பாய்ச்சி/

நெற்பயிர் நட்டு வளர்ந்துக் களையெடுத்து/

நிறைந்த நெல்மணிகளை அறுவடைசெய்தே/

உணவும் பணமும் சேர்த்தானே உழவன் ...........!


கவிஞர்.மரு.கி.ம.எழிலன்

35

348

கடைமடைக் காவிரி மறிக்காமல் பாய்ந்தால் //

சிறுவிழி மழையும் இருகால் ஓடுமே //

நடவை நாற்றும் செழிப்பாய் இருக்க //

வரப்பும் உயரும் நெல்லும் உயரும் //

உழவன் கனவும் உருப்படியாய் உதவிடுமா //


உடுமலை ராமர்

36

482

நிலத்தை வளப்படுத்தி நீரைக் கட்டுவான் /

சேற்றுடன் ஓன்று கலந்து உழைத்திடுவான்/

நாற்றைப் பக்குவமாய் பறித்து நட்டு /

பகல் இரவாய்ப் பக்குவமாய் காத்திடுவார் /

வரப்புயர நெல் உயர்ந்து மகிழ்ந்திடுவார்.


 தஞ்சை கோ பாலசுப்ரமணியன்

37

242

வானம் பார்த்த பூமியிலே நாளும்

வரையறை இல்லாமல் உழைத்தே வாழும்

உழவனின் உழைப்புக்குக் ஊதியமாய் இங்கே

விளைச்சலும் இல்லை விலையும் இல்லை

வரப்புயர நெல்லும் உயரும் காலமென்று?……..


கவி செங்குட்டுவன்

38

707

மருதமும் இன்றோ மறந்து போனதே/

மனித இனமோ மருந்தில் வாழுதே/

வரப்பினை உயர்த்தியே வாழ்விழந்து போகிறான்/

நெல்மணிகள் உயரவே நெடுங்காலம் உழைக்கிறான்/

இயற்கையதை ஒழிக்கவே எவர்வாழ்வும் உயராதே/


✍️பா.ச.கண்ணன்

39

616

நீர் நிரம்ப நிலம் செழிக்கும்/

நிலம் குளிர்ந்தால் வெள்ளாமை பெருகும்/

உழைப்பின் உன்னதம் உயர்வின் வெளிச்சம்/

இயற்கை உழவனின் உயிர்த் தோழன்/

வரப்பும் நெல்லும் வாழ்வை செழிக்கும்/


கா.கேமலாரூபினி

40

618

மேகம் திரண்டு மழையாய்ப் பொழிய/

மண்ணில் எங்கும் மகிழ்ச்சி பொங்க/

பாயும் நீரை வெள்ளமாய்த் தேக்க/

வரப்பை உயர்த்தி கதிர்கள் செழிக்க/

அறுவடை பெருகி வாழ்வு சிறக்குமே/


ஔவை.

41

605

வான்மேகம் அமுதத்தை வகையாகப் பொழிந்திடவே /

கானாறு பெருக்கெடுத்துக் காசினியை வளமாக்க /

ஊணதுவும் உருவாக்கி உண்ணுகின்ற நிலைபெறவே /

பூண்டிடுவோம் சபதத்தைப் புவியினிலே நாமுந்தான்/

உயர்த்திடுவோம் வரப்பினையே உலகோரும் வாழ்வதற்கே.


மஞ்சுளா ரமேஷ்

42

562

உலகிற்கே உணவளிக்கும் உழைக்கின்ற விவசாயி/

என்றும் ஏழையாக இருந்திடலாமா இப்புவியில்/

இயற்கையன்னை தவறாமல் பொழியட்டும் மாமழையை/

வரப்புயர நீருயரும் நல்விளைச்சல் பெருகிடுமே/

உழைப்பவனின் மனம் இன்பத்தில் திளைத்திடுமே/


பா.பத்மநாபன்

43

723

அரைவயிறு கஞ்சிச்சோறுக்கு உடல்பூசிய கழனிச்சேறு/

வராமழைக்கும் தராகாவிரிக்கும் நிலம்சிந்திய வியர்வையீரம்/

வரப்புச் சண்டையில்  வயல்கள் வக்கீல்களுக்கானது/

விதைநெல்லுக்கும் வாங்கிய கடனுக்கும் அறுவடை/

வரப்புயர்ந்தென்ன வறுமையில் வாடும் என்னுழவன்/


- நெல்லை ஆடலரசன்@Natarajan,துபாய்   

44

674

பகலெல்லாம் பாடுபட்ட பாமரனும் பசியுடனே//

பச்சைத்தண்ணீரோடு பழைய கஞ்சியே ஆகாரமானதே//

படுத்தாலும் உறக்கம் இன்றி பாவிகளாய்//

வரப்புயர நெல்லுயருமே வாழ்வும் உயருமா//



இரா.தேவி

45

718

வரப்பு உயர நெல்லும் உயரும்!/

வாழ்வு மிகவே செழித்து ஓங்கும்!/

இரந்து உண்ணும் நிலைமை ஒழியும்!/

இனிய உழவர் இதயங்கள் மகிழும்!/

இன்பமே வாழ்வில் என்றும் தங்கும்!!/


கீழ்கரவை குலசேகரன் இலங்கை

46

668

வான்மழை பூமித்தாயை குளிர்விக்க வேண்டி/

வள்ளலாய் நீரை வாரி வழங்கிட/

வரப்பை உயர்த்தும் மண்ணின் மைந்தனின்/

வியர்வை முத்துகள் நிலத்தில் வீழ்ந்து/

உழைப்பின் பரிசாய் நெற்கதிர் விளைகிறது/


ஏஞ்சல் சோபிதா

47

515

வானம் பொழிந்தால் பூமி செழிக்கும்/

வயல்களில் வரப்புயர்ந்து நீர்வளம் சிறக்கும்/  

விவசாயிகள் உழைப்பு தடையின்றி நடைபெற்று/

விளையும் நெற்கதிர்கள் எல்லோருக்கும் பசியாற்றும்/

வறுமை ஒழிந்து நாடும் உயர்வடையும்/


லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன்

48

221

பரபரப்பு வாழ்க்கை பாழாகி மறையாது

வரப்பு உயர வாழ்வு செழிக்கும்

சிறப்பாய் உரைத்த சிந்தனையை ஒளவை

உழவரின் கைகளில் உழுதிடும் கலப்பை

உழைப்பைத் தந்திடும் கவலைகள் தீர்ந்திடும் 


புஷ்பா கிறிஸ்ரி

49

247

மழையாய் பொழிந்த மேகத்தை நீரை /

மண்ணில் நனைந்திட வளமாய் பயிர்கள் ./

நாளும் வளர்ந்திட வரப்பு உயர்ந்து/

நெற்கதிர் வளர்ந்து உழவனின் மனம்குளிர /

தானியம் பெருகி உலகம் செழித்திடும் /


த.காமராசு.தாராசுரம் கும்பகோணம்

50

652

வரப்புகளை உயரமாக்கி நீரை சேமித்திடு/

நீரின் உயர்வால் நெல்களுக்கு கொண்டாட்டமே!/ கொண்டாட்டத்தில் மென்மேலும் உயர்ந்திடுமே!/

உயர்ந்திடும் நெல்லால் விவசாயிக்கு கொண்டாட்டமே!/

விவசாயிகள் மகிழ்ந்தால் புவியெங்கும் பட்டினியின்மையே!


கூ.மு.ஷேக் அப்துல் காதர்


கவிதை பதிவிட்ட 

கவிஞர் பெருமக்களுக்கு வாழ்த்துகள்💐

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages