06.08.20-நோக்கு, வாக்கு, தாக்கு, நீக்கு - தென்குமரிக் கவிதைக்களம்

சனி, 8 ஆகஸ்ட், 2020

06.08.20-நோக்கு, வாக்கு, தாக்கு, நீக்கு










Sl

எண் 

புகைப்படம்

கவிதை

1

216

நோக்கமது செம்மையானால் எண்ணியது நிறைவேறும்

வாக்கதுவும் இனிமையானால் வாழ்க்கை ஆனந்தமே

தாக்கிடும் தடியரைத் துணிந்தே வென்றிடு

நீக்கமற நிறைந்த இறையைப் பணிந்திடு//


அ.மாணிக்கவாசகன் அம்பிகாபதி.

2

210

எதிர்காலம் பற்றித் தூர #நோக்கு

நல்லோர் #வாக்கு  பலித்திட

துன்பங்களை எதிர்த்துத்  #தாக்கு 

தீய சிந்தனைகளை மனதில் #நீக்கு.


திருமதி சுப்ராணி சிவகுமார்.....

3

698

புதிய சிந்தனைகளைத்  தினமும் நோக்கு 

வாக்கிலே வாய்மையை நிறுத்து

சோம்பல் எதிரியை தாக்கு

தீய எண்ணங்களை அறவோடு நீக்கு


தேனி ஆ.சுந்தர்

4

461

தூய்மை நோக்கு நெஞ்சம் முழங்கு.

வாய்மை வாக்கு வழங்கு.

தீமை எதிர்த்து தாக்கு.

கடமையில் கையூட்டு களைந்து நீக்கு.


கோ.அருச்சுணன்

5

243

நோக்கம்  நல்லதானால் நன்மையே விளையும் //

வாக்கு சாதுரியம் உலகையாளும் //

தாக்கும் எண்ணம் உண்டானால்//

நீக்கு இன்றே மனம் அமையாகும்//


இந்திரா ஆனந்தன்

6

723

உன்னை நோக்கியதால் வந்த நம்காதல்/

உற்றார் தாக்கியதிலென் குருதிபோனதில்/

வாக்கு தந்தயென் உறுதிபோகாமல்/

நீக்கிய தடைகளைத்தாண்டியே நடந்தது நம்திருமணம்/


- நெல்லை ஆடலரசன்@Natarajan துபாய்   

7

201

பத்திரிகைச் செய்திகளை உற்று நோக்கு /

வாக்குச் சுத்தம் இருக்கிறதா /

எதிரியைத் தாக்கும் தன்மையா /

தீய சக்திகளை முற்றாக நீக்கு  //


புவனா சற்குணம்   கனடா

8

614

நல்லவர்கள் செயல்களை தினமும் நோக்கு/

தீயவற்றை உடனடியாக நிறுத்து/

கொடுமை நடந்தால் தாக்கு/

தீங்கு இழைப்போரை தண்டித்து நீக்கு/


விஜயலட்சுமி

9

256

#நோக்கு வர்மம் காதலுக்கு அவசியம்/

#வாக்கு ஏதேதோ வெளிப்படும்/

#தாக்கு சுயநல எண்ணத்தை/

#நீக்கு  சந்தேகத்தை வெற்றி நிச்சயம்/


      .......நட்புடன் ஜெயபால் வி.பி.

10

450

கேட்கும் சொற்களில் உண்மையை நோக்கு!

பொய்யான வாக்கு கயமையே!

அன்பினாலேயே அகிலத்தை தாக்கு!

போலிகளை மனதில் இருந்து நீக்கு!


ரேணுகா சுந்தரம்

11

605

நோக்கத்தை அடைவதற்கு நெஞ்சுறுதி கொண்டிடுவோம் /

வாக்கினிலே இனிமை கொண்டு /

தாக்க வரும் தடைகளையே /

நீக்கிடுவோம் நித்திலமாய் இப்புவியில் வாழ்வதற்கே.


மஞ்சுளா ரமேஷ்

12

348

ஏதுமற்ற நோக்கு இல்லாத போக்கு //

வாக்கு தவறிய சாக்கு //

தலை கவிழ்ந்தத் தாக்கு //

இருக்கும் குறையை நீயும் நீக்கு //


உடுமலை ராமர்

13

483

நோக்கும் போது நுண்மை வேண்டும்/

வாக்குத் தவறாமை சிறப்பு /

தாக்குத் தனியுடமை கொடுமை /

நீக்கு கவவைகளை நிமிர்ந்து செயலாற்று /


ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை

14

557

தீவிர முயற்சியோடு இலக்கை #நோக்கு

தவறாமல் நிறைவேற்று #வாக்கு

சமூக அநீதிகளை #தாக்கு

தீமை செயல்களை முழுமையாக #நீக்கு


கவிஞர் வெற்றிப்பொன்மொழியன்

15

238

வாக்களிக்க செல்லுமுன் உற்று #நோக்கு../

நல்லவருக்கே அளித்திடு #வாக்கு../

ஊழலில் ஈடுபட்டால் #தாக்கு../

மறுமுறை வாய்ப்பு வந்திடும் #நீக்கு..//


இளந்தை சேது

16

259

அலைபேசியை ரகசியமாக நோக்குவதைக் கைவிடு /

வாக்குவாதம் புரிந்து வருத்தாதே /

சந்தேகம் தாக்கும் நிம்மதியை /

மன அழுக்கைச் சுத்தமாக நீக்கு....!! /


ஜெயலெட்சுமி

17

386

நல்லன அனைத்தும் நாடியே நோக்கு/

நலம்தரும் முன்னோர் வாக்கு/

தீமைகள் இடர்ப்படின் தாக்கு/

தீதெனத் தெரிவதைத் திறனுடன் நீக்கு/.


தென்கரை தாயுமானவன்.

18

234

சுற்றி நடப்பதை உற்று நோக்கு..!!

வாக்கு இனிமையை தரும்..!!

தாக்கு   தடைகளை அறவே..!!

நீக்கு மனதில் இருக்கும் தீயதை..!!


அமுதா. ரா

19

727

குற்றம் நோக்கு சுற்றமில்லை..

யோசித்து கொடுத்திடு வாக்கு.. 

அநியாயத்தை கண்டால் தாக்கு.. 

தாழ்வு மனப்பான்மையை நீக்கு..


சுசி சுசேனு

20

428

குற்றம் நோக்கு  குறைகள் போக்கு.

உண்மை ஒன்றே வேத வாக்கு

பொய்மை எழுந்தால்  எதிர்த்துத் தாக்கு

ஏழைக்கு நேரிடும் இன்னல்கள் நீக்கு.


சுப்பிரமணியன் அன்புமலர்

21

716

பார்வையை என்றும் நேராய் நோக்கு //1

மாற்றாதே சொன்ன வாக்கு //2

கயவரையை எதிர்த்துத் தாக்கு //3

ஏழையின் துயரை உடனே நீக்கு.//4


- நாகை. ஹாஜா

22

207

உண்மைத் தன்மையை எதிலும் நோக்கு/

கொடுத்த வாக்கைக் காப்பாற்று/

தடைகளை எதிர்த்துத் தாக்கு/

தீய எண்ணங்களை மனதில் நீக்கு/


-முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி.

23

482

நோக்கத்தை அடைவதற்கு கடினமாக உழைத்திடுவோம் /

வாக்கினிலே உண்மைக் கொண்டு /

தாக்கவரும் துன்பத்தை நாளும்/

நீக்கிடவே  முன்னேற்றம் அடைவோம் வாழ்க்கையில் 


தஞ்சை கோ பாலசுப்ரமணியன்

24

425

நோக்கும் பார்வையில் மயங்கி விட்டேனே 

வாக்கும் சுத்தமாக இருக்கட்டும்

தாக்கும் வார்த்தையால் பேசாதே

நீக்குவாய் நீயும் கசப்பான வார்த்தைகளை


கலாகண்ணன்

25

726

நோக்குங்கள் சுற்றிலும் கயவர்களை கருவறுக்க/

கொடுங்கள் வாக்கினை வளமையாய்/

தாக்குங்கள் முப்பொழுதும் தடைகளை/

பாரதியினைப் போல் அச்சமதை நீக்குங்கள்/


காளிராஜ்பாலகணேஷ்

26

283

சிறந்த நோக்கை மனதில் சுமந்திடில் /

வாக்கும் வளமாய் இருந்திடும்/

தாக்குதல் இன்றியே மகிழ்வாயிடும்/

பொறாமை நீக்கியே வாழ்ந்திடு உலகில்/


ஜமுனாமலர் இந்திரகுமார்

27

347

அடக்க. வருவதனை அச்சமின்றி நோக்கு /

தந்த. வாக்கு  காப்பாற்று /

தன்மானம்  சுடுகையில்  தாக்கு /

மனதாலும் தீயதைத் தீண்டாது நீக்கு /


வேங்கடலட்சுமி ராமர்

28

735

சமுக நோக்கு உன் இலக்கு

மக்கள் வாக்கு செல்வாக்கு

அநீதி கண்டால்  எதிர்ப்பு

ஆபாச கவிதை கண்டால் நீக்கு


ரமேஷ் பைரவி

29

706

சுற்றி உள்ளவர்கள் நல்லவர்களா நோக்கு/

யோசித்த பின்பே நீ கொடு வாக்கு/

தவறெனத் தெரிந்த உடனே செய்பவனைத் தாக்கு/

செய்நன்றி மறந்தவனை மனதிலிருந்து நீக்கு/


மாயாதேவி சென்னை

30

718

எதிரியின் நகர்வினை உற்று நோக்கு!/

என்றுமே வாக்குகளை நிறைவேற்று,/

பலத்தோடுமே நீ தாக்கு!/

பாதையில் தடைகளை நீ   நீக்கு!/


கீழ்கரவை குலசேகரன் இலங்கை

31

258

உலகில் எவரையும் சமமாய் நோக்கி/

சான்றோர் வாக்கினை மதித்து/

எல்லையில் எதிரியைத் தாக்கி/

நலமுடன் வாழ்வோம் துன்பங்கள் நீக்கி..!


                    தங்க. சரவணன், வடபழநி, சென்னை-26.           

32

430

எண்ணங்களில் தேவை தொலைவு  நோக்கு //

தவற விடாதே வாக்கு //

எதிர்த்தால் நேரிடையாகத் தாக்கு //

எதிர்ப்படும் இன்னல்களை எளிதாய்  நீக்கு  //


பானுமதி இராஜேந்திரன்

33

345

நோக்கும்  எண்ணம் தவராக அமைந்திடின்

வாக்கும்  பொய்யாய் வலிமையிழக்குமே.

நீக்கும் நட்பையும் பிரிவாக

தாக்கும்  தம்மையே தான்சொன்ன  பொய். 


வைர. நாகராசன்.

34

604

வெற்றியைத்  தொலைநோக்குப்  பார்வையால்  நோக்கு//

வாக்குச் சாதுர்யத்தால் எதையும்//

தாக்கும் வல்லமையை வளர்த்து//

வரும் தோல்விகளைத் தன்னம்பிக்கையால் நீக்கு//


கவிஞர் கோவை ஆறுமுகம்

35

715

நேர்வழி நோக்கு சொல்லாதே போக்கு

தவறாகாது அறிஞர்கள் வாக்கு 

இலக்கைத் துரத்தித் தாக்கு

தேவையில்லாதது உன் மனதிலிருந்து நீக்கு


அ.உமர்பாருக்.

36

406

அற வழி நீ நோக்கு

அதுவே வாழ்வியல் வாக்கு

புத்திமை கொண்டு தாக்கு 

கத்திச் சண்டையை நீ நீக்கு....!


      கிறுக்கி ஆதிரா

37

522

நாட்டில் நடந்திடும் அநீதிகளை நோக்கு/

தீயவரைத் துணிந்து தாக்கு/

தீமைகளை வாழ்வில் நீக்கு/

நல்லோரைத் தேர்ந்து அளித்திடு வாக்கு/


_புதுவை.க.சரவணன்

38

463

நல்லதை நோக்க நன்மை விளையும் !

சொல்லிய வாக்கு சத்தியமாகும்!

அதர்மம் கண்டால்   தாக்கிடு!

ஒவ்வாத செயலை உடனே நீக்கிடு!!


அரவிந்தன் தஞ்சை

39

652

எதையும் புரிந்து கொள்ள நோக்கு/

சந்தர்ப்பங்களில் மீறிடாதே வாக்கு/

நம்மை தாக்குபவனை தாக்கு/

வாழ்வில் பொறாமை குணத்தை நீக்கு/


- கூ.மு. ஷேக் அப்துல் காதர் -

40

562

எந்தச் செயலையும் விழிப்புணர்வோடு நோக்கு/

கொடுத்த வாக்கைக்காப்பாற்று/

சமூகக் கொடுமைகளைத் தாக்கிடு/

கெட்ட எண்ணங்களை மனதிலிருந்து நீக்கு/


பா.பத்மநாபன்

41

613

விளைவுகளை  எதிர் நோக்க  விரைவோம்//

நம்மிடையே வாக்கு வேண்டாம்//

எதிர்ப்பு வந்தால் தாக்கு//

நம்பினார் கெடுவதில்லை நன்பனானாலும் நீக்குவோம்//


ஜெயாசந்திரமோகன்

42

517

சான்றோர் வழியை மனதால் நோக்கு/

ஈன்றோரின் வார்த்தையே வாக்கு/

உயர்வினில் இடரினைத் தாக்கு/

முயற்சியைத் தடுக்கும் சோம்பல் நீக்கு/

     

        ‌-ஆனந்த் சுந்தரராமன்

43

254

நோக்கும் போக்கும் சரியாக அமைந்தால்/

வாக்கும் வளம் காணும்/ 

தாக்கும் எண்ணம் தங்கினால்/

நீக்கு வாழ்வு நலம் பெறும்/


கி.மா.கனகராசன். சூலூர்.

44

423

நோக்கும் வினையும் ஒன்றென இருப்பின்/

வாக்கும் செயலும் சிறப்புறுமே/

தாக்கும் எண்ணம் வந்துவிடின்/

நீக்கும் நல்லவை நினைவில் இருந்தே !/


க.தங்கவேலு.

45

636

கொண்டிடு என்றும் அரிமா நோக்கு/

கொடுத்திடு உண்மை வாக்கு/

தகவிலர் தருவர் தாக்கு/

தகாத நட்புறவு சடுதியில் நீக்கு!


சுத்தமல்லி உமா ஹரிஹரன் திருநெல்வேலி

46

737

நோக்கு சிறப்பாய் அமைய வேண்டும்

வாக்கில் வாய்மை வேண்டும்

தாக்கி அழித்திடு பகைவரை

நீக்கு நெறி பிறழ்ந்தோர் உறவினை


திருமதி சரோஜனி நடேசன்

47

674

நல்லன நோக்கு நன்மை பயக்கு //

பெரியவர்களின் வாக்கு பெற்றிடவே //

தீமைகளை தெரிந்து தாக்கு //

வாழ்வில் தேவையற்ற தேடலை நீக்கு//


இரா.தேவி

48

296

வறியவரைக் காண்பின் கனிவுடன் நோக்கு/

நிலையறிந்து கொடுத்திடு வாக்கு/

இடர்வரின் அன்பினால் தாக்கு/

குறை சொல்வதை அடியோடு நீக்கு/


சுஜந்தினி யுவராஜா

49

344

உனக்கென உருவாக்கிக் கொள் பணிநோக்கு

அதையடைவதாய் வாக்குப் பண்ணு

வரும் சவால்களைத் தாக்குப்பிடி

வெற்றியடையுமட்டும் சோம்பலைத் தூர நீக்கு!


எமா

50

582

தினமும் பெறுவாய் ஈசனருள் வாக்கு

மனத்தில் சினத்தை நீக்கு

குணத்தில் அறத்தைத் தேக்கு

இனத்தின் பகையை ஈரமின்றித் தாக்கு!


நெடுவை இரவீந்திரன்

51

263

நோக்கு தூரமாய் இருத்தல் சிறப்பு

வாக்கு சுத்தம் வேண்டும்

தாக்கும் வார்த்தைகள்  தவிர்த்திடு

 நீக்கு மனதில் குரோத எண்ணத்தை 


அன்பரசு சுமதி

52

733

இன்பமே இதயமே எனை நோக்கு

மாறாது என்பதே வாக்கு காதல் கண்களால் தாக்கு

கைபிடிக்க மறுத்தால் மன்னவனை நீக்கு


கவிஞர் கோ.நவமணி, மணப்பாறை

53

717

சிந்தனையில் வேண்டும் தூரநோக்கு

சிந்தித்தே அளிப்பாய் வாக்கு

வாழ்வின் கொடுமைகள் தாக்கு

வரவுக்கு மீறிய செலவினை நீக்கு


கந்தசாமி நடேசன்

54

734

உற்று  நோக்கு..........

தவறாமல் இருக்கட்டும் நீ கொடுத்த வாக்கு.....

தீயவைகளை கண்டால்  உடனே போட்டுத் தாக்கு..

பொறாமை..தீயகுணங்களை மணதில் இருந்து நீக்கு........


...ஆர்.சிக்கந்தர் ஜலாலுதீன்.

55

709

ஏற்றத்தாழ்வுகள் இன்றியே நேர்பட நோக்கு// 

கூறிடு நம்பிக்கை வாக்கு// 

மடமைகள் அனைத்தையும் தாக்கு// 

சாதித் தீட்டுகள் முற்றிலும் நீக்கு//  


தாழை. இரா. உதயநேசன்

56

707

அகக்கண் கொண்டு அத்தனையும் #நோக்கு/

அரவணைப்பாய் இருக்கட்டும் #வாக்கு/

அநீதி கண்டு #தாக்கு/

மற்றவர் புரளியை மதியினின்று #நீக்கு/


✍️பா.ச.கண்ணன்

57

618

நல் நோக்குடன் செயற்படும் பிரதிநிதியை/

வாக்களித்து தெரிவு செய்தால்/

தாக்குதல் எதுவும் இன்றி/

போலிகளை அதிகாரத்தில் இருந்து நீக்கலாம்/


ஔவை.

58

732

நன்மை பயக்கும் செயல்களை நோக்கு/

அதிகரிக்கும் உன் செல்வாக்கு/ 

தீயவற்றை அஞ்சாமல் தாக்கு/

நண்பர்களாக இருந்தாலும் கண்டித்து நீக்கு/


கீதாஞ்சலி

59

409

இதையும் நோக்கு எதையும் கவனி//

எதற்காக வாக்கு அளித்தாய்//

அதனால் தாக்கு அவனுக்கே//

சினம் அதனை நீயே நீக்கு//

**********

க.சுதர்சனக்குரு

60

388

கண்களில் வேண்டும் கனிந்த நோக்கு

ஆளறிந்து கொடுத்திடு வாக்கு,

அநியாயத்தை எப்போதும் தாக்கு

அச்சம் என்பதை அறவே நீக்கு...!


செண்பக ஜெகதீசன்...

61

721

அகன்ற பார்வையால் அகிலத்தை நோக்கு./

அன்புக்கே அளித்திட வாக்கு./

அநீதியை உந்தன் அகிம்சையால் தாக்கு./

அறிவால் இருளை நீக்கு./


.....பாலு தியாகராசன்.....

62

692

குருவின் கருவான கருத்தை நோக்கு!/

தேசமே மந்திர வாக்கு!/

தடுத்திடும் தடைக்கற்களைத் தாக்கு/

மேன்மை படுத்தாத தாழ்வெண்ணங்களை நீக்கு/ 


முனைவர். சு.சித்ரா கரூர் தமிழ்நாடு

63

244

கர்ணனின் பேராற்றலை நோக்கினான் கண்ணன் //

பெற்றவளின் வாக்கில் அடிமையாக்கினான் //

தமையனைக் கொண்டே தாக்கினான் //

தர்மத்தையே தானமாக்கி  நிலைத்திட்டான் கர்ணன் //


கவிஞர் கோவை செல்லப்பன்

64

668

நற்சிந்தனை நிறைந்த தீர்க்கமான நோக்கமும்/

வெளிப்படும் வாக்குகளில் கனிவும் நேர்மையும்/

புழுதிப் புயலென தாக்கும் துன்பத்தையும்/

அறிவைக் கொண்டு நீக்குவாய் தீமையை/


ஏஞ்சல்சோபிதா

65

287

வாக்கின் வலிமை வாளினும் மிகுதி

தாக்கும் முறையைப் பொறுத்து

வெறுப்பை நீக்கிடின் நன்று 

இன்றேல் நோக்கு திரும்பிடும் நம்மீதே


தண்டபாணி

66

725

நோக்கு உலகை உண்மை விழியால்/

வாக்கு சேகரி நேர்மையாக/ 

தாக்கு அநீதிகள் இழைப்போரை/

நீக்கு அவர்களை உனதுத் தொடர்பிலிருந்தே..!


கவிஞர். மரு.கி.ம.எழிலன்

67

578

நேர்மையே உலகினில் வாழ்வென நோக்கு//

உயிரென எண்ணு வாக்கு//

பொய்ம்மையை உடைத்து தாக்கு//

போலி முகங்களை நட்பினில் நீக்கு//


...கவியாசகன்...!!!

68

569

நோக்கு எதிர்காலம் உந்தன் கைகளில் //

வாக்கு நேர்மையாக இருக்க //

தாக்கு தடைகளை நீயும் //

நீக்கு எதிர்மறை சிந்தனைகளை என்றும் //


செல்வி. ஆர்த்திகா சுவேந்திரன்

69

722

நேர்க்கொண்ட பார்வையால் திறம்பட #நோக்கு/

அறமான வாழ்வில் நேர்மையான #வாக்கு/

பெண்மையை வதைக்கும் புல்லுருவிகளை #தாக்கு/

அறியாமையை இயலாமையை என்றும்  #நீக்கு/


சுஜாதா அருணாச்சலம் திருப்பூர்

70

291

எதிர்காலத்திற்கு தேவை நீண்டகால  நோக்கு

இதனைக் கருதி போடு வாக்கு

தடைகள் வரின் நேரடியாகவே  தாக்கு

கூடவே  தீயனவற்றைத்  தேடி  நீக்கு


ஜெயா தமிழினி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages