Sl | எண் | கவிதை | புகைப்படம் |
1 | 434 | நிம்மதி வாழ்வினைத் தேடி / வானில் பறவையின் நகர்வு/ புலம்பெயர் மக்கள்/ மீனாட்சி சுந்தரம் | |
2 | 698 | இறகில்லா வானம்/ சிறகடித்துப் பறக்கிறது பறவை/ ஊரடங்கில் மக்கள்/ தேனி ஆ.சுந்தர் | |
3 | 697 | எல்லைகளற்ற சுதந்திரம் / பறந்து வருகின்றன கோடியக்கரைக்கு / செங்கால் நாரைகள்...! முனைவர் பெ.வெற்றிநிலவன், குடந்தை... | |
4 | 639 | அன்னப்பறவை // ஆகாயத்தில் பறக்கிறது // மரமில்லா ஊரில் ..! உடுமலை சே.ரா . முஹமது | |
5 | 255 | பறக்கும் பறவை // அழகாக உள்ளது // நீல வானம் // பிரபு.ஐயாத்துரை | |
6 | 476 | தாய்நாடு நோக்கி இடம் பெயர்ச்சி செய்கிறது வெளிநாட்டுப் பறவை வ பரிமளாதேவி | |
7 | 247 | நிம்மதியைத் தேடி நெடுந்தூரம் செல்கிறது வானில் பறவை த.காமராசு | |
8 | 708 | நிறம்மாறும் இயற்கை/ இரைதேடிப் தவிக்கிறது/ ஏழைக்குழந்தை// திருமதி பிரிந்தா புஷ்பாகரன் | |
9 | 614 | விமான சேவை ரத்து/ விண்ணில் தொடர்கிறது பயணம்/ பறவை/ விஜயலட்சுமி | |
10 | 212 | வானில்பறவை// நாடு திரும்ப தவிக்கிறது// அகதியின் மனம்// ஜெய வெங்கட் | |
11 | 715 | வலசை போதலில் வசந்தமில்லை மின் காந்த அலைகளின் தொல்லை. அ.உமர்பாருக். | |
12 | 716 | வெளிநாட்டுப் பறவைகள் // 1 புலம் பெயர்கின்றன // 2 வெளிமாநிலத் தொழிலாளர்கள் / 3 -நாகை. ஹாஜா | |
13 | 495 | வலசைப் பறவை / இலக்கு நோக்கி செல்லும் / ஏவிய விண்கலம் / கரு.கிருஷ்ணமூர்த்தி | |
14 | 244 | பறக்கும் பறவை // பெருகிக் கொண்டே இருக்கிறது // பகுத்தறிவு // கவிஞர் கோவை செல்லப்பன் | |
15 | 383 | பறக்கும் பறவை / பலவண்ணம் காட்டுகிறது / ஓவியம் // த.யாசகன் | |
16 | 723 | பயமில்லாமல் உயரத்தில்/ பறக்குது பறவை/ கொரோனாவில் விமானச்சேவை/ - நெல்லை ஆடலரசன்@Natarajan துபாய் | |
17 | 345 | பறக்கும் பறவை நீரில் தெரிகிறது வேடனின் உருவம். வைர. நாகராசன். | |
18 | 287 | இன்றையத் தேடல் எங்கு இருக்கிறதோ உணவு மனிதக்கழிவுகளின் மலைகள் யக்னேஸ்வரன் தண்டபாணி | |
19 | 588 | எதையோ தேடி// எதற்கோ அளைகிறது// மனப்பறவை! பாரி உமா | |
20 | 483 | சிறகடிக்கும் பறவைகள் சிந்தை கவருமே சித்திர வானம் ! ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை | |
21 | 475 | வானில் பறவை/ இடம் பெயர்ந்துச் செல்கின்றது/ தொற்றின் அச்சம்/ தங்க.ஜான்பீட்டர் | |
22 | 207 | வண்ணப் பறவை/ வானிற்கு அழகு/ வட்ட நிலா/ -முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி. | |
23 | 734 | சிறகு இருக்கிறது பறந்துவிடாய்...நாங்களோ வழி தெரியாமல் விழி பிதுங்கி இருக்கிறோம் கொரோனாவால்.......... ஆர்.சிக்கந்தர் ஜலாலுதீன்...சென்னை… | |
24 | 727 | மேல்நோக்கு சிந்தனை மேகத்தை கடந்து கழுகின் தனித்துவம்.. சுசி சுசேனு | |
25 | 470 | ஒற்றைப் பறவை பிரிவில் தவிக்கிறது தொற்றாளர் மனம். நா.சுகுமாறன் | |
26 | 413 | வளர்த்த பறவை / எங்கும் தடுமாறி அலைகிறது / கவலையோடு குழந்தை / அருண் சிவா... | |
27 | 022 | பறவையின் வேகம்/ அதிகரித்துக் கொண்டு செல்கிறது/ மக்கள் பெருக்கம்/ பாண்டிச்செல்வி கருப்பசாமி | |
28 | 569 | வானத்தில் பறவை // பறந்து செல்கின்றது // கனவுகள் // செல்வி. ஆர்த்திகா சுவேந்திரன் | |
29 | 021 | சிறகடிக்கும் பறவை/ வேகம் அதிகரித்துச் செல்கிறது/ சிந்தனையில் மனம். தனம்_மீனாட்சிநாதன் | |
30 | 510 | பறவையின் பிம்பம் தெளிவாகத் தெரிகிறது/ ஆற்றுநீர்/ ராதாமணி | |
31 | 386 | ஒற்றை உயிர்/ வான்வெளியில் பறக்கிறது/ வண்ணப் பறவை/. தென்கரை தாயுமானவன். | |
32 | 337 | ஒற்றைப் பறவை/ தொடர்ந்து பயணிக்கின்றது/ வெண்மேகக் கூட்டம்/ கலாராணி லோகநாதன் | |
33 | 600 | பசிக்கு உணவு அலகில் பயணிக்கும் இரையாகும் மீன் .... தட்சணா மூர்த்தி | |
34 | 613 | சிறகுகளால் வானத்தையே வரைகிறது,/ பறக்கும் பறவை ஜெயா சந்திரமோகன் | |
35 | 261 | சிறகிருக்கு பறந்திட விண்ணில் பறக்கும் பறவையாக அழகிய வானம் ~ வள்ளல் இராமமூர்த்தி | |
36 | 213 | சிறகை விரித்து // வானில் பறக்கிறது // கவிஞனின் கற்பனை. கவி.மரு.ஜெயக்குமார் பலராமன் | |
37 | 388 | வானத்தில் பறவை/ உதிர்கிறது இறகு ஒன்று/ போட்டி ஆரம்பம்...! செண்பக ஜெகதீசன்... | |
38 | 531 | உயரத்தில் பறவை அழகாக இருக்கிறது வானத்தின் வண்ணம் கோபால் | |
39 | 726 | பறக்கின்ற பறவை/ காணாத தூரம் போகிறது/ வாடகை வீடு -காளிராஜ்பாலகணேஷ் | |
40 | 725 | வானில் சிறகடிக்கும் பறவை/ சுகமானப் பயணம்// விமானம்/// கவிஞர். மரு.கி.ம.எழிலன் | |
41 | 517 | அந்திவானம்/ பெரிதாகத் தெரிகிறது/ பறவை நிழல்/ -ஆனந்த் சுந்தரராமன் | |
42 | 721 | பரந்த வானுக்கும்/ சிறகடிக்கும் பறவைக்கும் ஒரு/ சமூக இடைவெளியோ.../ ....பாலு தியாகராசன்.... | |
43 | 719 | தனிமையில் பறவை / துணையாக இருக்கிறது / அவளின் ஞாபகங்கள்/ கவிதா ராஜசேகர் | |
44 | 238 | பறக்கும் பறவைக்கு.. பாதை தெளிவாகிறது.. பழத்தோட்டம்/ இளந்தை சேது | |
45 | 615 | வானில் பறவை ஒன்று, அழகாய் பறந்து வருகிறது, உதிர்ந்த இறகு.. செ.தமிழ்ச்செல்வன். | |
46 | 691 | சிறகு விரிக்கும் பறவை/ தொலைவினில் தெரிகிறது/ தொடுவானம். _சோலை ராஜகுமாரன் | |
47 | 532 | பறவையின் இறக்கை/ பல வண்ணத்தில் உள்ளது/ சீரற்ற வானம்/ தமிழன் தயா | |
48 | 668 | நீண்ட தூரம் இலட்சியப் பயணம் மறந்த களைப்பு ஏஞ்சல்சோபிதா | |
49 | 652 | அந்திரத்தில் அழகு/ பறவையின் சிறகு பறந்து விரிந்தது/ கண்களுக்கு நன்றி/ கூ.மு.ஷேக் அப்துல் காதர் | |
50 | 692 | சிறகை விரித்த பறவை/ இரைகளைத் தூவி / காத்திருக்கிறான் வேடன்!/ முனைவர். சு.சித்ரா, கரூர் தமிழ்நாடு | |
51 | 463 | வான வீதியில் பறவை பறக்கிறது. பூமியை நோக்கி. அரவிந்தன் தஞ்சை | |
52 | 283 | ஆடிப்பட்டம் உயரத்தில் பறக்கிறது பசித்த பேருந்து ஜமுனாமலர் இந்திரகுமார் | |
53 | 731 | வண்ண வானில் சிறகடித்து... தன் வண்ணக்கனவுகள் நோக்கி... பார்வையிழந்த இளைஞன் ஜெஸ்ஸி | |
54 | 259 | விரியும் சிறகுகள் / உறவுகளை கண்ட உற்சாகம் / அழகிய வானவில் / ஜெயலெட்சுமி | |
55 | 671 | சிறகடிக்கும் பறவை... பார்க்க அழகாய் இருகிறது. மகள்வரைந்த ஓவியம்... கி.அருள்குமரன். தலைஞாயிறு. | |
56 | 508 | இலட்சியம் நீலவானமும் கடலும் தாண்டியும் வானவில்! கலாராஜன் | |
57 | 732 | வானில் இயற்கை விமானம்/ சிறகடித்து பறக்கிறது/ கீதாஞ்சலி | |
58 | 482 | சிறகை விரிக்கும் பறவை / மகிழ்வைத் தருகிறது/ ஓவியரின் திறமை/ தஞ்சை கோ பாலசுப்ரமணியன் | |
59 | 241 | தனிமையில் பறக்குது பறவை இறகை உயர்த்தி வானில் இனத்தை தேடி தனிமையில். அனுராதா நாகப்பன் | |
60 | 270 | பறக்கிறது பருந்து !// ஓடுகிறது தரையினில் !// கோழிக் குஞ்சு !// தளவை வில்லவன்கோதை .அண்ணாமலைபபுதூர் . | |
61 | 226 | துள்ளிப் பாயுது கெண்டைகள்/ / உலகில் பல்லுயிர் பரவலே/ / வட்டமிடும் வல்லூறு/ இராம.சுதாகரன்.சென்னை.. | |
62 | 722 | பரந்தவானில் விரித்த சிறகின் அழகில் பட்சிகளின் சுதந்திரம் சுஜாதா அருணாச்சலம் | |
63 | 733 | உயரம் ஒரு பொருட்டல்ல விழுந்தால் தெரியும் உயிரின் வலி கவிஞர் கோ. நவமணி | |
64 | 535 | வன அழிப்பு மரங்கள் காணாமல் தேடுகிறது வலசை வந்த பறவை… உறையூர் வா.மகேஷ் | |
65 | 562 | வானில்பறவை/ பறந்துக்கொண்டிருக்கிறது/ ஆகாயவிமானம்/ பா.பத்மநாபன் | |
66 | 294 | ஒற்றைப் பறவை வானில் பறக்கிறது அழகிய பட்டம்!!! இசக்கியப்பன் | |
67 | 636 | வலுவுள்ளவரை பறக்கலாம்/ சூரைக் காற்றும் சூன்யமாகும்/ வானமும் வசப்படும். சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி | |
68 | 718 | வண்ணப் பறவை வானில் பறக்கிறது வானூர்தி! கவிஞர் கீழ்கரவை குலசேகரன் | |
69 | 373 | வானில் பறவைகள்/ நீண்ட நேரமாய்ப் பறக்கிறது/ துணை தேடி! ஜயந்தினி வாகீசன் | |
70 | 709 | நச்சுப் புகை/ வானில் கருமேகம்/ இடம் தேடிய பறவைகள் / தாழை. இரா. உதயநேசன் | |
71 | 707 | உயர்த்தில் பறவை/ இரை தேடி அலைகிறது/ எறும்புக் கூட்டம் ✍️பா.ச.கண்ணன் | |
72 | 280 | தெளிந்த வானில்// ஆனந்தாமாய் பறக்கிறது// ஒற்றைப் பருந்து// கோட்டீஸ்வரி ராமசாமி | |
73 | 552 | வட்டமிடும் கழுகு ! ஓடி ஒளிந்து கொள்கிறது ! தாயிடம் குஞ்சுகள் ! எம்.ஐ.எம். அஷ்ரப் | |
74 | 634 | விரிந்த சிறகுகள், // விடுதலையை விரும்பி அல்ல..// இரையை தேடி....// நெம்மேலி சுரேஷ்குமார் | |
76 | 496 | இயற்கையின் வினோதம்/ வியப்பு அளிக்கிறது./ பறவையின் வலசை. ...திருமதி ஞானபாரதி,புதுச்சேரி. | |
76 | 578 | வட்டமிடும் பருந்து/ மெல்ல நோட்டமிடுகிறது/ இரைத்தேடும் கோழி/ ...கவியாசகன்...!!! | |
77 | 619 | பறக்கும் பறவையின் வேகம் உணர்த்தும் அதிசயம் முயற்சி நிமிர்வு தரும். அருணா பாண்டியன் புதுச்சேரி. | |
78 | 616 | வண்ணமயமான வானில் பறக்கிறது சுதந்திரப்பறவை கா.கேமலாரூபினி | |
79 | 220 | தேடும் பறவை விடுவதாக இல்லை அந்தி வானம்... வளருங்கவி அமுதன் |
திங்கள், 10 ஆகஸ்ட், 2020
05.08.20-போட்டி
Tags
# கவிதை போட்டிகள்
# முடிவுகள் நிலுவை
# ஹைக்கூ
Share This
About பாலா திரு
ஹைக்கூ
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக