Sl | எண் | புகைப்படம் | கவிதை |
1 | மூவெழில் மூன்றிலே மூழ்கிடுது காதலதே மூச்செல்லாம் காதலே மூப்பில்லாக் காதலே மூண்டிடும் உணர்வதே மூலமாய் முத்தாடுதே மூழ்கிட்டு முத்தெடுக்க மூச்சடக்கி முகம்புதைக்க மூத்ததமிழ்ச் சொல்லெடுக்க மூவெழில் அழைக்கின்றதே மூன்றே வரிகளிலே மூலமாய்ச் சொற்களிலே மூழ்கிடாது பதினொன்றிலே! அருணா ரகுராமன் | ||
2 | " மலர்ந்த நினைவுகள் " மலர்ந்த நினைவுகளதும் மலர்ந்ததால் மலர்ந்ததே மலரென்ன மஞ்சமா மலரதே தஞ்சமா மலர்ந்ததால் மணமதே மலர்ந்ததே மனமதே மலர்ந்த நினைவுகளே மலர்ந்திட்ட நனவுகளே மலர்ந்திட்டு நனைந்திடவும் மலராகச் சிறந்திடவும் மலரட்டும் சிறுபடைப்புமே மலர்முகத்து நடுவர்களாய் மலர்குழும உறவுகளிங்கே மலர்ந்திங்கே அழைக்கின்றதே! மலருங்கள் மணமாடியே! மலர்ந்திட அழைக்கிறாளே மலர்ந்திட்ட தென் குமரியே! வருகவே! விரைகவே! வரவேற்குது களமிதுவே! தென்குமரிக் கவிதைக்களத்திற்காக, உங்களன்பு, மருத்துவகவிஞரும் பரமராசு முத்தைய்யாவுமே. | ||
3 | 345 | கரையெனத் தெரிந்தும்அடிக்கடி தொட்டுச்செல்லும் கடலலையில் பாதம் நனைத்த நினைவுகளை மறக்க துடிக்கிறது மனமேனோ மறுக்கிறது.. வைர. நாகராசன். | |
4 | 697 | காதல் கொண்டால் போதும் மனிதா / காணும் யாவும் அழகாய் மாறும் / நமக்குள் நாம் மகிழ்ந்திடுவோம்...! முனைவர் பெ.வெற்றிநிலவன்,குடந்தை... | |
5 | 201 | காதல் வந்தாலே கனவுகள் காட்சியாகும்/ கவலைகள் மறந்து கானம் இசைக்கும்/ மனதில் மகிழ்ச்சி தன்னை மறக்கும் // புவனா சற்குணம் கனடா | |
6 | 216 | அந்த மழைக்கால மாலை வேளையில்// மலையோர சமவெளியில் அமர்ந்து நாம்வளர்த்த// நினைவுகளில் மலர்கிறது காதல் ....// அ.மாணிக்கவாசகன் அம்பிகாபதி. | |
7 | 572 | தனிமையில் வாழ்ந்த என்னை இனிமையான// நினைவுகளுக்குள் கரைந்தவளே எப்படி மறப்பேன்// உன்னையும் உன் நினைவுகளையும்// ஶ்ரீதரன் பிரியா | |
8 | 244 | மெய்யான காதலும் காமத்தினைத் தேடாது // புரிதலின் எண்ணங்களும் சங்கமம் வாழ்க்கையில் // மலர்ந்த நினைவுகளும் நனவாகும் // கவிஞர் கோவை செல்லப்பன் | |
9 | 461 | மௌனமாய் மணந்து மனமே இருந்தது/ மங்கை விழியது மலர்ந்தால் சிறந்தது/ காதலாகிக் கனிந்தப் பயணமே. கோ.அருச்சுணன். | |
10 | 715 | மலர்ந்த நினைவுகள் பறந்து உன் வீட்டை கடக்கையில் என்னை அரவணைத்து வழியனுப்புகிறது நீயில்லாமல். அ.உமர்பாருக். | |
11 | 477 | பழைய நினைவுகள் அழகாய் விரியும்// மலர்ந்த மலராய் மணம் வீசும்// முதுமையில் நினைத்துப் பார்த்தால்// ****ரத்தின பாரதி கோவை**** | |
12 | 614 | இளமை கால நினைவுகளில் மூழ்கி/ மகிழ்ச்சி மட்டுமே பொங்கிய நாட்களை/ எண்ணி பார்க்கையில் பரவசம்/ விஜயலட்சுமி | |
13 | 428 | கல்லூரியில் ஒன்றாய் படித்து// ஈருடல் ஓருயிர் என்றே காதலித்து// கானல் நீராகக் காணமல் போனதே// சுப்பிரமணியன் அன்புமலர். | |
14 | 462 | மலராய் முகமாய் இருந்த என்னை/ மகிழ்ச்சியில் திளைக்க வைத்தாய்/ ஆனால் மலர்ந்த நினைவாக்கி விட்டாயே தயா | |
15 | 241 | குளிர்ந்த மலையோரம் வெப்பத்தை உள்வாங்கியபடி நீயும் நானும் தனிமையில் காதல் கவிதைப் பாட வந்தேன்... அனுராதா நாகப்பன் | |
16 | 735 | கல்லூரிப்பருவ காதல் கனவுகள் காலத்தால் அழியா கல்வெட்டு முதுமையில் பசுமை படர்ந்த நினைவலைகள் ரமேஷ் பைரவி | |
17 | 344 | மஞ்சல் வெயில் மாலை என் கண்கள் நோக்கி நீ 'பிரிவோம்' என்றது நினைவினில் துடிக்குதே! #எமா# | |
18 | 258 | தினமும் வாழ்வில் திருப்பங்கள் வருமே/ எண்ணிட சுகமும், சுமையும்! மலரும் நினைவுகளால் மகிழ்ச்சி கொண்டிடு! தங்க. சரவணன், | |
19 | 482 | இதயம் புன்னகையில் பூத்திருந்தாலே காதலி / இளைஞன் மணக்கக் காத்திருந்தாள் விதிவசத்தால் / பிரிந்தாலே மலர்ந்த நினைவுகளே . தஞ்சை கோ பாலசுப்ரமணியன் | |
20 | 240 | இதயம் தொட்ட பசுமையான நினைவுகள்//🍀 சுடும் வெயிலில் சுகமான தென்றலாய்//🌳 உயிரையும் உணர்வையும் உரசியது /🍁 உமா பாலகிருஷ்ணன்,பெங்களூர் 🏵️ | |
21 | 348 | வெப்ப மூச்சில் குளிர் காய்கிறேன் // ஏக்கத்தை இன்று நான் உணர்கிறேன் // பழைய நினைவுகளின் தாக்கத்தில் // உடுமலை ராமர் | |
22 | 207 | ஆசைக் கனவுகளை அள்ளிப் பருகும்/ ஆனந்த நினைவுகளாய் அலைபாயும்/ இளமைத் தென்றலில் இதயம் விரியும்/ -முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி. | |
23 | 604 | நீ அமர்ந்த வாகனம் என்னிடத்தில்// வலம் வந்த நீயோ வேரிடத்தில்// நினைவுகள் இரண்டுக்கும் மத்தியில்// கவிஞர் கோவை ஆறுமுகம் | |
24 | 727 | ஆர்ப்பரிக்கும் உன்னோடு உறவாடும் நேரமெல்லாம் // இதயம் வருடும் எண்ணங்கள் // இனிமை தரும் மலரும் நினைவுகளாய் // சுசி சுசேனு | |
25 | 502 | பனி சிந்தும் காலை பொழுதில்/ அவளும் நானும் மகிழ்ச்சியாக பேசி மகிழ்கிறோம்/ நெடுஞ்சாலைப் பயணத்தில்/ .................................... கார்த்திக்.கோ | |
26 | 588 | மலர்ந்த நினைவுகள்….! அலைகடல் ஓரத்திலே… அந்தி சாயும் பொழுதினிலே… அங்கமெல்லாம் மெலிந்து… - கண்கள் கண்டதும் பற்றிய காதலில் கரைந்து உருகி போன நாள்… மலர்ந்த நினைவுகளுன்றோ..?! கடந்த நாட்களில் கண்டபடி பட்டித்தொட்டி யெல்லாம் பகிர்ந்தது எங்கள் நெருக்கம். விரித்த கண்கள் விரித்தப்படி பார்த்த கண்கள் எண்ணிக்கை (இ)யில்லா பலநூறு ஆகும். சிட்டுக்களாய் இணைந்தது சிறகடித்து திரிந்த நாட்கள் மறக்கிற நாட்களா அது.. மறுக்கவும் முடியுமா..? ஓய்ந்துவிட்ட இன்றைய நாட்களில் மலர்ந்த நினைவுகளை அசைபோடும் நாட்கள் அன்றோ…? ~~~ பாரிஉமா. சர. | |
27 | 710 | பள்ளிக்காலத்தில் காதலுடன் காத்திருந்தேன்/ காலவோட்டத்தில் நோயுடன் காத்திருக்கிறேன்/ வைத்தியரான முன்னால் காதலியின் மலர்ந்த நினைவுகளுடன்/ அம்பிகா ஶ்ரீகுமார் | |
28 | 721 | காத்திருந்து தவித்திருந்து இல்லறம்/ சேர்வது காதல் என்றால் நம்மில் மட்டும்/ இல்லாமல் போனது எப்படி சகியே../ .....பாலு தியாகராசன்..... ( முதல்வரியின் மூன்று சொற்களின் முதலெழுத்து சேர்ந்து காதல் என வரும்) | |
29 | 613 | அந்தி சாயும் நேரம் நிலவாக அவளிருக்க மலர்ந்த நினைவுகள் நெஞ்சைத் தொட பரிமாறிக் கொண்டோம் ஜெயா சந்திரமோகன் | |
30 | 273 | கடற்கரை மணலில் காதலில் இணைந்தோம்/ மணந்தோம் வாழ்வில் மனங்கள் ஒன்றிட/ ஆழ்ந்தோம் ஆனந்த நினைவில்!/ கோவிந்தம்மாள் ரெத்தினம் | |
31 | 510 | ஏகாந்த நினைவுகள் ஏராளம் உள்ளதே/ கடந்த காலங்களை விழிகளில் நிறுத்துதே/ மனமும் மகிழ்ச்சியில் துள்ளுதே/ ராதாமணி | |
32 | 256 | கடந்த காலத்தின் காதல் நினைவுகள்/ கடற்கரைப் பூங்காக்களில் களித்த நிகழ்வுகள்/ மலரும் நினைவுகளாய்த் தொடருதே/ .......நட்புடன் ஜெயபால் வி.பி. | |
33 | 463 | நித்தமும் கண்ட கனவுகளை/ பொத்தி வைத்துப் போற்றி வந்தோம் / நிசமான பொழுதில் மலர்ந்த நினைவுகளே / அரவிந்தன் தஞ்சை | |
34 | 434 | புத்தகத்தில் மறைத்த மயிலிறகைத் தினமும்/ குட்டிப்போட்டுப் பெருகுமென்றுப் புரட்டிப் பார்த்து/ ஏமாந்த நினைவுகள் எனக்குள்ளே// மீனாட்சி சுந்தரம் | |
35 | 204 | இனித்திடும் காலமதில் இணைந்த நேரமதை// மண்ணறை சென்றாலும் மறக்குமா நினைவுகளை// சொர்க்கமும்பக்கத்தில் பூத்ததே// ஆஸாத் கமால் | |
36 | 381 | மங்கையவளின் முகத்தில் மலர்ந்த புன்னகையும்/ மனதோடு உள்ளார்ந்து மகிழ்ந்த தருணங்களும்/ பூத்திடும் வாடாத நினைவுகளாய்/ எம்.ஜே.எம்.சப்ரி | |
37 | 617 | காலங்கள் கடந்தாலும் கனவுகள் மலர்ந்தாலும்// நினைவுகள் நீங்காமல் இருப்பது// உணர்வில் கலந்தது உண்மையில் நடந்தது// #முதுவைமுகம் | |
38 | 287 | கடலினுள் குதித்து முத்து எடுத்தார்ப்போல் மனதினுள் மூழ்கி நினைவினைத் தேடினேன் உன்னைத் தவிர ஒன்றுமேயில்லை தண்டபாணி | |
39 | 246 | கிளர்ந்த நெஞ்சில் மலர்ந்த மலராய் எழுந்த நினைவுகள் புலர்ந்த பொழுது மிளிர்ந்த நிலவாய் ஒளிர்ந்தாள். செல்வம் செல்வகுமார் | |
40 | 465 | ஆற்றோரம் நடந்த கால்களின் சுவடுகள்/ காற்றிலே மூடி காணாது போனாலும்/ கண்ணுள் தெரியுதடி காதல் சுவடுகளாய்./ இரா.வெங்கடாசலம் | |
41 | 409 | வாலிபக் காதல் அனுபவிக்கத் தோன்றுது// மலர்ந்த நினைவுகள் இதயமதில்// விலகாது இன்பமாய் என்றுமே தொடரும்// ************** க.சுதர்சனக்குரு. | |
42 | 722 | பகிர்ந்த காதல் உணர்வுகளின் உன்னதம்/ பரிமாறிக் கொண்ட விழியின் பார்வை/ நெஞ்சில் மறவாத நினைவுகள்/ சுஜாதா அருணாச்சலம் | |
43 | 317 | சாலையே சோலைதான் சந்திக்கும் வேளைதான் இன்பத்தைப் பகிர்வதற்கு இருவருக்கும் ஆசைதான் இணைந்த பயணமே சொர்க்கந்தான்... க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம், அவிநாசி | |
44 | 668 | அலைகள் மோதி அசைத்தும் உடையாத/ வலிமை கொண்ட கரையைப் போல/ வலுவான காதலினை கொண்டோம்/ ஏஞ்சல்சோபிதா | |
45 | 373 | உன்னோடு நானும என்னோடு நீயுமாகி/ ஒன்றாகி உலாவுகின் காதலின் இன்பமே/ நமக்குள்ளே மலர்ந்த நினைவுகள்!! ஜயந்தினி வாகீசன் | |
46 | 669 | விழிகளின் சந்திப்பு வியக்க வைத்தாலும் விழித்திரையோ சிறையிட்டுக் கட்டி அணைத்ததும் மலர்ந்த காதல் நினைவுகளாய் ......! நஸீரா வசூக் | |
47 | 716 | மறைவாய்ப் படகிற்குள் மகிழ்ந்த தினங்கள் // 1 சுண்டல் வாங்கிச் சுவைத்தக் கணங்கள் // 2 பார் மலர்ந்த நினைவேயது.// 3 - நாகை. ஹாஜா | |
48 | 718 | பள்ளிக் காதல் முடிந்த பின்னே, பாவை உன்னைக் கண்ட நேரத்திலே, அள்ளி அணைத்திடத் தோணுதடி! கவிஞர் கீழ்கரவை குலசேகரன் | |
49 | 737 | மங்கை மனதில் மலர்ந்த நினைவுகள் மறக்க ஒண்ணா கனவுகள் இரண்டுக்கும் இடையே இதயம் துடித்ததே திருமதி சரோஜனி நடேசன் | |
50 | 578 | கனிந்த காதல்தனைக் காலம் காட்டுதே// காத்திருந்த தருணங்களை ஏகாந்தம் மீட்டுதே// மலர்ந்திடும் நினைவுதனை மனதினிலே// ...கவியாசகன்...!!! | |
51 | 456 | மிதிவண்டி கற்றுத் தந்த நாட்களை நெஞ்சினுள் சுகமாய் எண்ணிப் பார்க்கிறேன் வெள்ளமாய் ஓடுது நினைவுகள் சிங்கை கார்முகிலன் | |
52 | 708 | அவனோடு கை கோர்த்து/ உலாவிய பொழுதுகள் மலர்கிறது/ நினைவலையில் இனிமை கூட்டி// திருமதி பிரிந்தா புஷ்பாகரன் | |
53 | 386 | மலர்ந்தாய் மலர்ந்தேன் மனதில் நிறைந்தேன்/ உறைந்தாய் இதயம் உணர்வில் குழைந்தேன்/ பிரிந்தாய் சதியால் மலரிதழாய் வாடினேன்/. தென்கரை தாயுமானவன். | |
54 | 652 | மலர்ந்த நினைவுகள் என்றுமே வாடாதே!/ மனதில் பதிந்த நினைவுகள் மறையாதே!/ காலங்கள் நினைவுகளை பதித்திடுமே!/ கூ.மு.ஷேக் அப்துல் காதர் | |
55 | 233 | உலர்ந்து போனதாய் உறுதியாய் நம்பினேன்/ உன்னைக் கண்ட உடன்தான்/ மறைந்த நினைவுகள் மலர்ந்து விம்மினேன்/ முபீன் றிஸான் | |
56 | 242 | இளமையின் வேகம் மின்னலாய் மாறி/ வாலிபப் பயணம் வருடும் போது/ வந்திடும் நினைவுகள் சங்கீதம்.... கவி செங்குட்டுவன் | |
57 | 518 | தன்னுடைய கூட்டில் இருந்து மெதுவாக / எட்டிப் பார்க்கும் நத்தையைப் போல / அவ்வப்போது உந்தன் நினைவுகள்.../ வி.கல்பனாதர்மேந்திரா... | |
58 | 726 | மேகக் கூட்டங்களிலே மறைந்து விளையாடும்/ ஒற்றை விமானமாய்/ மறவாமல் மர்மம் காட்டுகின்றன உந்தன் ஞாபகங்கள்/ -காளிராஜ்பாலகணேஷ் | |
59 | 707 | ஈரமான தென்றல் ஈர்த்த நாளிலே/ இருவரும் சாலையின் ஓரமாய்/ இதயம் மகிழவே இயல்பாய் அளவளாவியது/ ✍️பா.ச.கண்ணன் | |
60 | 711 | நெஞ்சுக்குள் நீயிருந்த நினைவிருக்கு பெண்ணே // கனவுக்குள் குடியிருக்கும் சுகமிருக்கு கண்ணே // காலங்கடந்தும் மலரும் நினைவுகளாய் // நா . தமிழ் சுகு | |
61 | 717 | மலர்ந்த நினைவுகள் நெஞ்சில் இனித்தன மனதில் எங்கும் நீங்கா நிறைத்தன மாலை மாற்றி மகிழ்ந்திடுவோம் கந்தசாமி நடேசன் | |
62 | 347 | கைகாட்டும் திசையெலாம் பூக்குதே ஞாபகம்/ சலிப்பின்றிச் சருகுகளும் உலவுதே உயிரோடு/ அலுப்பின்றி ஆள்கிறாய் எனை வேங்கடலட்சுமி ராமர் | |
63 | 340 | இளமையின் தடுமாற்றம் அவளில் தொலைந்தது/ காதலில் துளிர்த்தே கவிதையாய் ஆனது/ இதுவே எனது மலர்ந்த நினைவுகள்/ ஏரூர் கவிமணி எம்.ரி.எம்.அன்ஸார். | |
64 | 307 | அதிகாலை பனியில் குளிக்கும் சாலையில்/ பயணம் மறந்து நின்றேன்/ கல்லூரி காதலின் குளிர்ந்த நினைவுகளால்// வில்லியம் சாம்ராஜ் | |
65 | 725 | பாசமுடன் பணிவிடைகள் செய்து/ அம்மா அப்பாவின் அன்பையே முறியடித்தாயே/ மலர்ந்த நினைவுகள் தேனாக இணிக்கிறதே.....✍️ கவிஞர்.மரு.கி.ம.எழிலன் | |
66 | 291 | பத்தம் பதசாலிப் பத்து வயதில்/ நித்தம் விளையாடும் நீர் விளையாட்டுக்கள் / நினைவில் இன்றும் நிழலாடுகின்றன/ ஜெயா தமிழினி | |
67 | 618 | மலரில் தேனீ அமரக் கண்டால்/ மறைவாய் தந்த அன்பு முத்தம்/ மலரும் காதல் நினைவாய்/ ஔவை. | |
68 | 263 | நித்தம் நிறைந்த அன்பான நேசம் நீயும் நானுமிணைந்த காதலின் வாசம் நிகரில்லா மலர்ந்த நினைவுகள் அன்பரசு சுமதி | |
69 | 671 | உனக்கு என்னையும் எனக்கு உன்னையும் காலம் கைகுலுக்கி அறிமுகம் செய்தது இப்போதும் இனித்திடும் இனியநொடி... கி.அருள்குமரன். தலைஞாயிறு. | |
70 | 580 | நெஞ்சில் என்றும் நனைந்திடும் உறவு// கொஞ்சி மகிழ்ந்த களிப்பான பொழுது// வஞ்சி அவளின் காதல்// சுந்தரலிங்கம் நிருத்திகன். அல்வாய். | |
71 | 289 | மலர்ந்த நினைவுகள் மனதினை மயக்கியே கற்பனையில் மிதந்தே கனவு காணும் / அற்புத இனிய தருணம் / சியாமளாரகுநாதன் | |
72 | 450 | பிறைநிலவின் அரை ஔியில் ஆற்றங்கரையில்/ உறவாடினோம் மனதோடு மனதாக ஒன்றாகினோம்! பேசிய கதைகளும் நினைவுகளில் நிலையானதே ரேணுகா சுந்தரம் | |
73 | 259 | நாட்குறிப்பை நெடுநாட்களுக்கு பின் நோட்டமிடுகிறேன் / பௌர்ணமி நிலவான முகம் / அமாவாசையாய் முடிந்தக் காதலை அசைபோடுகிறது...!!/ ஜெயலெட்சுமி | |
74 | 254 | மனம் திறந்த காதல் வாழ்க்கையில் மணம் வீசும்/ காலமெல்லாம் மகிழ்ந்து பேசும்/ தற்படமே சாட்சி/ கி.மா.கனகராசன். சூலூர் | |
75 | 425 | மலர்ந்த நினைவுகள் கருகி விதிவசத்தால் பிரிந்து ஆறாத வடுக்களாகக் குருதியில் கலந்து மரணித்து விட்டதே கலாகண்ணன் | |
76 | 674 | அப்பாவின் அன்பிலும் அரவணைப்பிலும் அடங்கிய// அழகிய நாட்களும் ஆழ்மனதின் ஆழத்தில்// மலர்ந்த நினைவுகளாய் நிலைக்குதே// இரா.தேவி | |
77 | 616 | அழகிய தருணங்கள் கொடுக்கும் நினைவுகளால் வாழ்வு இனிமையான வசந்தமானதுஉடலும் உயிருமாக இணைந்து திளைக்கின்றது கா.கேமலாரூபினி | |
78 | 574 | நீலவிழி நீளமுடி கன்னக்குழி காதல்மொழி/ என் அருகில் தேவதை/ எருக்கலம்பூ மாலையை ஏற்கவில்லை மறைந்துவிட்டாள்./ துரைராசா காண்டீபன், திருக்கோவில் . | |
79 | 213 | காதலைச் சொல்லிய இடம் அங்கே // உனது முடிவுக்காக காத்திருந்தேன் இங்கே // தேர்வு எழுதிய மாணவனாக. கவி.மரு.ஜெயக்குமார் பலராமன். | |
80 | 261 | மனைவியின் கரம் பிடித்தே கடற்கரை மணலில் நடந்தபோது அவளுடனான காதல் லீலைகள் மலர்ந்தன நினைவுகளாக ! ~ வள்ளல் இராமமூர்த்தி | |
81 | 562 | காயும் நிலவில் மகிழ்ந்திட்டப் பொழுதுகள்/ நதிக்கரையில் உலாவியத்தருணங்கள்/ வருடங்கள் கடந்தாலும் மலர்ந்திடுதே நினைவுகளாய்/ பா.பத்மநாபன் | |
82 | 636 | கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை/ நாம் எண்ணிப் பார்த்த போது/ மனதில் மலரும் நினைவுகள் சுத்தமல்லி உமாஹரிஹரன், திருநெல்வேலி | |
83 | 564 | துள்ளித் திரிந்த இளமைக் காலம் வத்து போகுதே கனவாய் பொற்கால வசந்தம் புத்துணர்வைத் தரவே. இராசையா கௌரிபாலா. | |
84 | 741 | வறுமை நெய்த கிழிந்த கால்சட்டை தபால் பெட்டி கிண்டல் கிழித்து போடலாம் இழிவில்லை இன்று. பி.கே.சாமி | |
85 | 247 | நினைவிலும் கனவிலும் உனது நினைவு / எனது மனதை நிழலாய் துரத்துகிறது / நீயோ பாராமுகமாய் செல்கின்றாய்/ த.காமராசு.,தாராசுரம் கும்பகோணம்# | |
86 | 215 | ஏற்றிவந்த இருசக்கரத்தே அவள் இருந்துகொண்டு பேசிப்பேசி பைத்தியமாக்கியதில் நான் கரைந்து சலவைசெய்யும் சோப்பாக இருந்துள்ளேன் கிருஷ்ணநாதன் | |
87 | 723 | உன்னை முதல்க்கண்டு பழகிய நாட்களும்/ நாம் பிரிவோமென கடைசியாய் பார்த்ததும்/ மலர்ந்த நினைவுகள், கடவுச்சொல்லாகநீ/ - நெல்லை ஆடலரசன்@Natarajan, துபாய் | |
88 | 210 | எண்ணிரண்டு வயதில் எழிலாய்த் தோன்றிய..... பெண் இவளின் காதல்... மறக்க முடியாத மலர்ந்த நினைவுகளாக.... திருமதி சுப்ராணி சிவகுமார்.....✍ | |
90 | 515 | மனதோடு பொருந்தி மகிழ்ந்திருந்த நினைவுகளை மீட்டிப் பார்த்து நெகிழ்வுற்று வாழ்ந்தால் மணவாழ்க்கை முதுமையிலும் இனிக்கும் லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன் | |
91 | 615 | மலர்ந்த நினைவுகள் வாசம் வீசுகிறது, உன்னோடு சண்டையிட்டுச் சேர்ந்த காலம், என்னோடு கரம்பற்றிச் சுற்றியது எல்லாம்.. செ.தமிழ்ச்செல்வன். | |
92 | 399 | 💔/ காதல் சுகங்கள் வாலிப முறுக்கில்!.../ 💔/ அந்த காலம் அசை போடாதே !../ 💔/ இந்த வாழ்க்கை சிறந்திடுமே! சாக்கை.பொன்னழகு. | |
93 | 228 | மலர்ந்த நினைவுகள் மாறாத வடுக்களாய் / புலர்ந்த பொழுதும் பூக்கட்டும் நல்லதாய் / கலந்த ஊடலின் களிப்பில்! / கவிஞர்.கோவி. இராசேந்திரன் | |
94 | 517 | மலர்ந்த நினைவுகள் வசந்தத்தின் வரவேற்பாய்/ மனதுக்குச் சுகந்தரும் புதுமணம் பரப்பிடும்/ பூக்களின் இதழ்களால் நிறைந்திடும்/ -ஆனந்த் சுந்தரராமன் | |
95 | 692 | வானைக் கிழிக்கும் மின்னலாய் கரையை / முத்தமிடும் அலைகளாய் பூவின் படுக்கையில் / உறங்கும் பனித்துளியாய் இதமானது/ முனைவர். சு.சித்ரா ,கரூர்,தமிழ்நாடு | |
96 | 654 | சோலையிளம் தென்றலின் சுகமான இராகங்கள்! வாலைக் குமரியவளின் பன்னீர்த் தூவல்கள்! மாலை நேரத்தில் மலர்ந்த நினைவுகளாய்! பொன்.சுந்தர பாண்டியன் .சோழவந்தான் | |
97 | 745 | மனதை விட்டு அகலாத மலர்ந்த நினைவுகள் நீங்காது நிற்பதாலேயே இன்னும் உயிர் வாழத் தோன்றுகிறது க.சுலோஜனா | |
98 | 475 | உன்னெழில் கண்டு உள்ளம் மகிழ்ந்தேன்/ வெண்ணிலா சிரிப்பில் மகிழ்ச்சியில் துலங்கினேன்/ மலர்ந்த நினைவுகள் கலந்திட உருகினேன்/ தங்க. ஜான்பீட்டர் | |
99 | 476 | மாலை நேரத்தில்.. மயக்கத்தில்/ மௌனமொழி பேசி மகிழ்ந்திருந்த தருணங்கள்/ மறைத்தே கடக்கிறேன் மலர்ந்த நினைவுகளை/ பரிமளாதேவி | |
100 | 283 | தொலைந்த காலங்கள் மனதினை வருடுதே/ சுகமான தேடலாய் சகந்தத்தைத் தருகுதே/ மலரும் நினைவாய் மனதினில் சுமக்குதே/ ஜமுனாமலர் இந்திரகுமார் |
போட்டி நிறைவு பெற்றது



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக