Sl | எண் | புகைப்படம் | கவிதை |
1 | 462 | வாழ்க்கையை வாழும் வழி தெரியவில்லை/ குழப்பத்தைத் தீர்ப்பார் யாரும் இல்லை/ அருவி கூறியது என்னைப் பார்/ என்னைப் போல ஓடிக் கொண்டேயிரு/ தெளிந்தது மர்மம் ஓடுகிறேன் நிற்காமலே/ தயா | |
2 | 697 | மழையில் நனைந்த மலைக் கிழவி / நீர்க் கூந்தலை நிலத்தை நோக்கி / தலைகீழாய் உலர்த்தி மகிழ்கிறாள் அருவியாய் / கார் காலம் நரைத்த நிலையில் / காற்றோடு நீர்த் திவலைகள் விளையாடுகின்றன...! முனைவர் பெ.வெற்றிநிலவன்,குடந்தை... | |
3 | 698 | காற்று மண்டலங்கள் தென்றலாய் சப்தமிட// கார்மேகக் கூட்டங்கள் கைக்கூடித் துளிர்க்க// வெள்ளமாய் கரைப்புரண்டு அருவியாய்க் கொட்டுகிறது// இயற்கையின் கொண்டாட்டம் எழிலாய்த் தோன்ற// மனிதனின் திண்டாட்டம் குளிராய் குறைகிறது// தேனி ஆ.சுந்தர் | |
4 | 477 | வெள்ளிச் சலங்கை சூடிய மாதவி// ஆடும் ஆட்டம் காணுவோம் வாரீர்// சூட்டைத் தணிக்க அருவியாய் வந்தாள்// மூலிகை முத்தம் உடலெங்கும் தந்தாள்// மீண்டும் வருவாயா?கண்ணீரோடு கேட்டாள்???// ரத்னபாரதி | |
5 | 735 | இயற்கையின் இன்ப ஊற்று சுற்றுலாவில் மகிழ்வு அருவியின் அரும்பணி பசுமையின் தோழமை நாட்டின் செழுமையெ ரமேஷ் பைரவி | |
6 | 409 | கருமுகில் வந்தாலே கனமழை பொழியும்// ஊரில் மண்ணும் வளம் பெறும்// மலைகளில் இருந்து அருவி சொரியும்// பலவித சுகங்கள் பலன் அளிக்கும்// மாந்தர்க்கு கையாள்வது அவரவர் திறமையே// **************** க.சுதர்சனக்குரு. | |
7 | 614 | பசி போக்கிட வருமானம் இல்லை/ வேலை கொடுப்போர் யாரும் இல்லை/ கொட்டும் அருவி போல் வாழ்க்கை/ முடிவில்லாமல் செல்கிறது புகலிடம் தேடி/ கிடைக்கும் என்ற நம்பிக்கை வைத்து/ விஜயலட்சுமி | |
8 | 715 | அசைந்தாடும் மேகமாய் பாறைகளுக்கிடையே வடிகட்டி கரடு முரடான கற்களில் மோதி சேதாரம் ஏதுமில்லாமல் இறங்கும் அருவி உடையாமல் உருண்டோடி வளையும் நாணலாகும் மனமும் ஆற்றில் படகாய் நடனமாடும். அ.உமர்பாருக். | |
9 | 280 | மலையின் உச்சியில் மறைந்து நின்றாய்// மருத்துவ மூலிகைகள் சேகரித்து வருவாய்// மழையில் கொட்டும் அருவி அழகாய்// குளிக்கத் தூண்டும் குளிரும் நடுங்கும்// வேடிக்கைப் பார்த்து வீட்டுக்குத் திரும்புவோம்// கோட்டீஸ்வரி ராமசாமி | |
10 | 428 | தென்றலது தேவதையாய் தேகத்தைத் தீண்டியதே குற்றாலச் சாரலிலே குளிரென்னைச் சீண்டியதே கொட்டும் அருவி குளித்திடவா என்கிறதே என்னவள் துணையின்றி நனைவதற்கு மனமில்லையே அருகிருந்தால் அவளுடனே அந்திவரை மூழ்கிடுவேன். சுப்பிரமணியன் அன்புமலர் | |
11 | 307 | ஓங்கிய மலையில் ஊற்றாய் பிறப்பாய்// ஓடைகளாய் ஒன்றுசேர்ந்து சிற்றாறு சேர்ந்திடுவாய்// நீர்நிலை அடைந்து அருவியாய் பொழிந்திடுவாய்// உன்போக்கில் சென்று கடலிலே கலந்து// நீர் சுழற்சியால் மழையாய் பிறந்திடுவாய்// வில்லியம் சம்ராஜ் | |
12 | 483 | விழுந்தாலும் நடந்தாலும் வியனுலகு பயனுறுமே/ பொழிகின்ற மழைவெள்ளம் புரண்டுவிழும் மலையில்/2 எழில் ததும்பும் அருவியாய் இன்பத்தின் எல்லையது / 3 வழியெல்லாம் மூலிகையின் வளமெடுத்து மக்களுக்குப்/4 பழுதின்றித் தொண்டுசெய்யும் பாலெனவே மனம்மயங்கும்/5 ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை | |
13 | 254 | துளித்துளி மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி/ பாதை அமைத்து ஓடுவதால் ஆறானாய்/ சோதனைகள் வரும்போது பாயும் அருவியானாய்/ பார்ப்போருக்குப் பாடம் ஒன்றைச் சொல்கிறாய்/ சோதனைகளை சாதனையாக்கி வாழ்வில் வெல்லலாம்/ கி.மா.கனகராசன். சூலூர். | |
14 | 722 | கார்முகில் கூட்டம் முகடுகளின் நடுவே/ மலையைக் கடந்து சென்ற கருமேகம்/ பொறாமையால் கண்டது வீழ்ந்த #அருவியை/ இரைச்சலின் ஓசையை ரசித்து ஆர்ப்பரிக்கும்/ ஆனந்த அழகில் மயங்கி சென்றது/ சுஜாதா அருணாச்சலம், திருப்பூர் | |
15 | 671 | மலைமகள் முந்தானை காற்றில் அசைந்திட அழுதிடும் மண்குழந்தைக்கு அமர்ந்தபடி பாலூட்டும் அன்பின் அழகுதான் வெள்ளை அருவியானதோ விந்தையோ விண்வெளி வீசிடும் சாமரமோ வெண்ணிற ஆச்சரியக்குறியோ அழகின் தொங்கலோ... கி.அருள்குமரன். தலைஞாயிறு. | |
16 | 238 | மலையில் பிறந்த மழலை நீயே../ மகிழ்ந்து மடங்கி மண்ணில் மணக்கும்../ சரிந்து தெரிக்கும் சாரல் அருவி../ படர்ந்து நிலத்தில் பாய்ந்து நிறைக்கும்../ நன்செய் புன்செய் செழித்து வளரும்..// #இளந்தை சேது | |
17 | 721 | கார்மேகம் கருக்கொண்டு பார்மீது நீர்த்தூவ,/ நிலமகளின் மேனியிலே நெளிந்தோடும் நீரழகே./ அருவியெனப் பேராகி அசைந்தாடும் பேரழகே./ வீழ்ச்சியும் தோல்வியன்று விளக்கிட்ட தத்துவமே./ அனைத்தும் உன்னாலே அறிவோமே மண்மேலே./ ......பாலு தியாகராசன்.... | |
18 | 207 | பச்சைப் பட்டுடுத்தி பரவசமாய்த் திகழும்/ அழகிய மலைத்தொடர் ஆனந்தக் காட்சி/ சிந்தைக் குளிரக் கொட்டும் அருவி/ வீழுகின்ற அருவியில் குளித்தாலே குதூகலம்/ மூலிகைகளைச் சுமப்பதால் நோய்கள் தீரும்/ -முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி. | |
19 | 344 | குருவி போல உயரப் பறந்திடு கருவி போன்ற வாழ்வை மறந்திடு அருவியாகப் பூவுலகில் பொங்கிப் பாய்ந்திடு மருவி வரும் குணங்கள் காத்திடு உருவி நீயும் தீயதை வீசிடு! #எமா# | |
20 | 718 | இயற்கை அழகோ எங்கும் கொஞ்சுகின்ற/ இனிதான மலை முகட்டிலே இருந்து/ மலை அருவி பாய்ந்தே வரும்!/ மனங்களுக்கு மகிழ்வினை அள்ளித் தரும்!/ கவிஞர் கீழ்கரவை குலசேகரன் | |
21 | 732 | மலைகள் மீதிருந்து உருண்டு புரண்டு/ செடி கொடிகளை கடந்து வருகையில்/ மூலிகைளுடன் கலந்து வரும் அருவி/ நோய் நொடியின்றி நாம் வாழ/ இயற்கை அளிக்கும் உன்னத பரிசு/ கீதாஞ்சலி | |
22 | 618 | இயற்கையின் அழகாய் இறைவன் படைப்பாய்/ இமயத்தில் இருந்தும் மண்ணின் காதலால்/ இறங்கி வரும் அருவித் தாயே/ இவ்வுலகம் உய்த்து உயர்ந்து வாழ/ இரங்கும் உனதருள் மண்ணிற்கு வரமே/ ஔவை. | |
23 | 688 | மலையோரம் தென்றல் வீசும் குளிர்மையாக/ சாலையோரம் கைகோர்த்து நடப்பார்கள் மகிழ்ச்சியாக/ அருவி கொட்டும் இடங்களில் சலசலப்பாக/ கேட்கும் சத்தங்கள் மனதுக்கு இதமாக/ ஆனந்தமான வாழ்க்கை தருமே நிம்மதி/ கீத்தா ராமன் | |
24 | 386 | அன்பே அணைத்ததும் ஆரத் தழுவுகிறாய்/ ஆனந்த மழையிலே உடலே சிலிர்க்கிறாய்/ அருவிபோல் ஏன்தானோ கண்ணீர் உகுக்கிறாய்/ அன்புக்குக் கரையின்றி உடைப்பாய் வழியுதோ/ ஆசையில் கூடுவேன் அணைகள் போடுவேன்/. #தென்கரை##தாயுமானவன்# | |
25 | 463 | மலையினில் பெய்த மழைத் துளியெல்லாம் / திரண்டு காட்டாற்று வெள்ளமாய்ப் பாயும் / அருவி எனும் பெயரில் தானும் வின்னில் இருத்து நிலம் நோக்கி பாய்வது வீழ்வது போல் இருக்கும் / நிலவினை உருக்கி ஊற்றியது யாரோ.... அரவிந்தன் தஞ்சை | |
26 | 259 | ஓசையுடன் வெண்மேகக் குவியலாய் கொட்டும் / கண்ணுக்கும் உடலுக்கும் வழங்கும் குளிர்ச்சி / உச்சி மலையின் வற்றா அருவி / உல்லாச உற்சாகக் குதூகலத்தின் தளமாகும் / வயது வரம்பின்றி அனைவரையும் கவரும் / ஜெயலெட்சுமி | |
27 | 348 | பழைய ஆணையை விட்டுத் தள்ளுங்கள் // விளையும் மூடத்தனத்தைச் சுட்டு விடுங்கள் // அசையும் கணக்கில் அருவிப் பெருக்கில் // தூங்கும் நாவாயும் கரையைச் சேரட்டுமே // ஏங்கும். தாகமும் விரைவில் தீரட்டுமே // உடுமலை ராமர் | |
28 | 707 | நித்தமும் விழுகிறது விழுந்ததும் எழுகிறது நில்லாமல் பாய்கிறது நிம்மதியாய் வாழ்கிறது அருவி போலவே ஆனந்தம் கொள்ள அன்றாடம் நீயும் அயராது உழைத்திடு கெடுதலை அகற்றி கேடின்றி வாழ்ந்திடு ✍️பா.ச.கண்ணன் | |
29 | 226 | மலையில் விளைந்தாலும் கடலையேச் சேருமது// மண்ணின் துணைநாடும் வெள்ளி நீரோடையது // ஓடைகளாய் ஒன்றிணைந்து அருவியாய்க் கொட்டிடுமே/ / மந்திரச் சலங்கையென மலையினின்றுப் பாய்ந்தோடும்/ / வழிநெடுக வளமாக்கி மக்களால் வாழ்த்தப்படும்!!! &&&&&&&&&&&&&&& இராம.சுதாகரன்..சென்னை.. | |
30 | 737 | மேகம் கறுத்தது மின்னல் இடித்தது தாகம் தீர்க்க தரணி செழிக்க ஆகாய கங்கை அருவிகள் ஆகி ஆர்ப்பரித்து ஓடின ஆழியுடன் கலந்தன அவனி எங்கும் பசுமை விளைந்தது திருமதி சரோஜனி நடேசன் | |
31 | 723 | கடலின் நீரெடுத்து ஆவியென மேகமானாய்/ கார்மேக புணர்ச்சியில் துளித்துளியாய் மழையானாய்/ மழைநீர் பெருக்கெடுத்து பொதிகைமலை அருவியானாய்/ வீழ்ந்த நிலமோடி ஆறென கடலடைந்தாய்/ வாழ்வின் ஓட்டமோர் சக்கரமென கற்ப்பித்தாய்/ - நெல்லை ஆடலரசன்@Natarajan துபாய் | |
32 | 434 | மண்ணுக்குள் புதைந்த வளங்கள் ஆயிரம்/ தோண்டக் கிடைக்கிறது தமிழரின் அடையாளம்/ அருவி போன்று கம்பீரமாய் காட்சியளிக்கும்/ தேடலில் கிடைத்திடும் புதைபொருள் ஆதாரங்கள்/ உலகமே பாராட்டும் தமிழரின் பாரம்பரியம்// மீனாட்சி சுந்தரம் | |
33 | 652 | எங்கிருந்து இங்கு வந்தாய் அழகிய/ எப்பொழுது நின்று பேச போகிறாய்/ ஆழமாக குதிக்கும் அருவியே பயமில்லையோ?/ எங்கு விரைவாய் ஓடி செல்கிறாய்/ இயற்கையின் அழகு செல்வம் நீயுமல்லவோ?/ கூ.மு.ஷேக் அப்துல் காதர் | |
34 | 347 | பருவத்தில் பெய்திடும் மழைநீர் கூட்டணி / தடைகளைத் தாண்டி தாவியே பாய்ந்திடும் / தடுத்திட முனைந்தால் தகர்த்திடும் அருவி/ இயற்கை அன்னை வெண்கேசம் உலர்த்துகின்ற காட்சியினை ஒக்கும் பார்த்தாலே பரவசம்/ வேங்கடலட்சுமி ராமர் | |
35 | 616 | இயற்கை அன்னையின் அழகிய கொடை# சிகரத்தில் பூக்கும் வெள்ளைத்தாமரை# அருவியாய் பொழியும் ஆனந்த மழை# காண்பவரை மயக்கும் வெள்ளை மேனகை# இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவுப்பாலம்# கா.கேமலாரூபினி | |
36 | 261 | தென்மேற்குப் பருவமழை அண்டை மாநிலங்களில் அளவுக்கு அதிகமாக பூமியில் பொழிந்திட திசை மாற்றப்பட்ட உபரிநீர் அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் அழகினைக் காண்பதற்குக் கண்கள் இரண்டும் புண்ணியம் செய்தனவோ ! ~ வள்ளல் இராமமூர்த்தி | |
37 | 482 | மலையில் இருந்து புறப்பட்டதே வெள்ளமாக / மனதுக்கு மகிழ்வை கூட்டுதே அழகை/ அருவி கொட்டும் எழிலை கண்டேன் / கவலைகள் காணாமல் போனது எனக்கும் / இயற்கை அற்புதம் மனதுக்கு நிம்மதி . தஞ்சை கோ பாலசுப்ரமணியன் | |
38 | 317 | கானக வழியில் விழுந்தது தண்ணீர்/ காணக் காட்சியில் அழகானது பன்னீர்/ அருவித் துளியில் ஆனந்தம் வெண்ணீர்/ ஆர்பரித்துக் கொட்டும் ஆடியில் மழைநீர்/ ஆபத்து இருப்பதை உணர்ந்துத் தவிப்பீர்/ க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம், அவிநாசி | |
39 | 725 | மேலிருந்து விழுந்தாலும் சிலிர்த்து எழுகிறாய்/ உற்சாக மிகுதியால் மகிழ்ந்து சீரிப்பாய்கிறாய்/ சிற்றோடையை நதியாக்கும் அருவி நீயே/ எல்லோரையும் மனம் குளிரச் செய்கிராய்/ வெண்மை நிறத்திலிருந்து சமாதானத்தையும் உணர்த்துகின்றாயே.......✍️ கவிஞர். மரு.கி.ம.எழிலன் | |
40 | 388 | உருக்கி யூற்றிய வெள்ளியாய் வீழ்கிறாய் உள்ளங்கள் எல்லாம் கொள்ளை கொள்கிறாய், அருவி உந்தன் அழகிலே மயங்கினோம்.. நிலத்தில் நதியாய் நீயே ஓடிடினும் நிலைத்திடும் நீரின் வீழ்ச்சியாய்ப் பேரழகே...! செண்பக ஜெகதீசன்... | |
41 | 717 | கறுத்தது மேகம் தெறித்தது மின்னல் இடித்தது வானம் பொழிந்தது மழையே ஓடைகள் அருவிகள் ஆறுகள் விரைந்தன ஓதும் கடலினைக் கலக்க விழைந்தன உழவோர் உழைப்பில் உவகை கொண்டனர் கந்தசாமி நடேசன் | |
42 | 716 | அருகில் வர தயங்கி நின்றேன் //1 தண்ணீர்க் கொண்டு தலையில் அடித்து //2 சத்தியமே செய்து நான்தான் அருவியென்றாய் //3 தேகம் பிடித்து வலி எடுத்தாய் //4 நீ அருவியல்ல இயந்திரக் கருவி. - நாகை. ஹாஜா | |
43 | 221 | தாளத்துடன் ராகத்துடன் தானாகப் பாய்கிறது தாகத்துடன் இருக்கும் தன்னுயிரைக் காக்கிறது வீழ்ந்தாலும் வேகத்துடன் நடந்திடும் அருவி தாழ்திடாது சோர்ந்திடாது தொடர்ந்து நடக்கிறது பள்ளத்திலும் மேட்டிலும் பாதைகளக் கடக்கிறது புஷ்பா கிறிஸ்ரி | |
44 | 668 | வான்மழை நிலத்தில் பொழிந்திட நீரானாய்/ காணும் இடமெல்லாம் உரிமை கொண்டாய்/ மலையிலிருந்து வீழ்ந்திட அருவி யென்ற/ பெயர்க் கொண்டு அனைவரின் மனதையும்/ கொள்ளைக் கொண்டாய் இயற்கையின் படைப்பே/ ஏஞ்சல்சோபிதா | |
45 | 674 | வானமகள் வடித்த கண்ணீரில் வந்திறங்கி // பாறை இடுக்கில் பதுங்கி பயந்தோடி // பருவத்தில் பாயும் அருவி நீயோ // உந்தன் அழகில் அனைவரையும் ஆழ்ந்திடவே// உலகின் எட்டாம் அதிசயம் என்பேனே// இரா.தேவி | |
46 | 270 | கயல்நீந்தும் கடல்நீரும் கனன்றதால் ஆவியாக !// உயரமாய் எழும்பியே உலாவரும் மேகமாகி !// அயராது மழைபொழிய அருவியாய் உருவெடுத்துப் !// பயமின்றிப் பாய்கிறது பார்தழுவி ஓடவே !// நயமுடன் நாட்டினை நலமுடன் செழிப்பாக்க !// தளவை வில்லவன்கோதை . அண்ணாமலைப்புதூர் . | |
47 | 654 | அரங்கினிலே இசை வாணரின் பண்ணிசை! பாய்கின்றது இசையெனும் இன்ப வெள்ளம்! ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியென.கீதமழை! இன்னிசை கேட்டிடும் மாந்தரெல்லாம் மயங்குகின்றார்! மகுடியின் ஓசையில் மயங்கிடும் நாகமென! பொன் .சுந்தர பாண்டியன் சோழவந்தான் | |
48 | 741 | மலையின் மழலையே மண்தொடும் விடலையே / விட்டு உருவியே கொட்டும் அருவியே / இரைந்திடும் இசையே ஈடில்லா விசையே / ஒய்யார ஓசையே உனக்கில்லை பாசையே / இடறி விழும் வெள்ளைக் கம்பளமே / இடறி விழுபவர் ஆவார் நொம்பலமே / இயற்கை விரித்த திரைச் சீலையே / தண்ணீர் கொண்டு செதுக்கிய சோலையே/ நீ மட்டுமே விழுந்தால் அழகு / மற்றவை விழுந்தால் ஆகுமே பழுது / கண்ணைப் பறித்திடும் நீர் வீழ்ச்சியே / கண்ணால் கண்டிடகிட்டும் எழுச்சியே / கவிரதன்,மதுரை | |
49 | 636 | முத்தான கருத்தில் நின்று நிறுவி/ மூன்று வார்த்தை கவிதை தருவி/ கவிதை எழுத தலைப்பு அருவி/ கவினுறு சொற்கள் தமிழில் தருவி/ தானொரு கவிஞர் என்று நிரூபி! சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி | |
50 | 562 | மலைகளில் பிறப்பெடுத்து மண்ணை வளமாக்குகிறாய்/ கண்ணுக்கும் மனதுக்கும் விருந்து படைக்கிறாய்/ அருவியே உன்னழகை புகழாதக் கவிஞருண்டோ/ மூலிகைச்செடிகளை தழுவிப் பொழிகிறாய்/ உன்னத மருத்துவராய் உடலைக்காக்கிறாய்/ பா.பத்மநாபன் | |
51 | 728 | மலை முகட்டி லிருந்து மழைநீர்// அலையெனத் திரண்டு அடி நோக்கி// விழுவதையே அருவியென விளம்பி நிற்போம்// கலையழகு போலிருக்கும் அதன் ஒலியில்// உளம் மகிழ்வோம் இயற்கையினை நாம்மதிப்போம்.// ஆவூர்க்குமரன் தமிழீழம், (கணபதிப்பிள்ளை சிவகுமார்),சுவிட்சர்லாந்து | |
52 | 373 | கொட்டும் மழை சில்லென்ற காற்று குளிர்ந்த நிலவு நிறைந்த மனது சலசலவென அருவி சாய்ந்து ஓடுது குளித்திட ஆசை நித்தமும் ஓசை பார்க்க அழகும் பருவத்தின் வயது!! ஜயந்தினி வாகீசன் | |
53 | 201 | மலைகளில் ஊற்றெடுத்து மண்ணை வளமாக்கி / மேலிருந்து கீழ்நோக்கி ஓடிவந்து குதிக்கிறாய் / அருவியே உனதழகைப் பாடாத புலவருண்டோ// ஆர்ப்பரிக்கும் உன்னழகில் மயங்கியே சாய்கிறேன்/ அழகோடு அசைந்தாடி விரைந்தோடி வந்திடுவாய்// புவனா சற்குணம் கனடா | |
54 | 504 | சாரல் கொண்டு நீயும் வீச// சத்தம் இன்றி நானும் பேச// ஆனந்த மொழி சிந்தும் அருவியே// உந்தன் அழகில் நனைந்தேன் மயங்கியே// நீராட வேண்டும் நித்தமும் நீயே// மு.சந்தோஷ் | |
55 | 613 | ஆடிக்காற்றோடு மழையும் சேர்ந்து அடிக்க// துளித்துளியாய் கொட்டும் பன்னீரைக் கண்டேன்// குற்றால அருவியிலே குளித்த ஞாபகம்// மேலிருந்து விழ்ந்தாலும் மலைகளின் மருந்தாவாய்// என்னே சுகம் சிறுப்பிள்ளை ஆனேன்// ஜெயாசந்திரமோகன் | |
56 | 726 | கடவுள் கொடுத்த சுவையான பானமே/ உன்னில் மூழ்கியவனுக்கு கிடைக்கும் மோட்சமே/ தீராத அமுதினைக் கொண்ட அருவியே/ மேகங்களின் வீட்டு யுத்தத்தில் உருவானாயோ/ தெய்வங்கள் தட்டிவிட்ட குடத்து நீரே/ --காளிராஜ்பாலகணேஷ் | |
57 | 258 | பொத்துக் கொண்டு பூமாரி பொழிய/ ஆடிக்காற்று சில்லென, நெஞ்சை ஆரத்தழுவ/ அருவியாக வீழுகின்ற நீரினை, பூமியன்னை/ பொறுமை கொண்டு வாங்கியே வழங்குவாள்/ வீழ்ந்தாலும், வாழ்ந்தாலும் நீ பூமியாகிடு..! தங்க. சரவணன், வடபழநி, சென்னை-26. |
திங்கள், 10 ஆகஸ்ட், 2020
அருவி
Tags
# இடைச்சொல் போட்டி
# கவிதை போட்டிகள்
# முடிவுகள் நிலுவை
Share This
About பாலா திரு
முடிவுகள் நிலுவை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக