Sl | எண் | புகைப்படம் | கவிதை |
1 | 344 | அந்தி சாயும் மாலை நேரம் ஆற்றங்கரையோரம் கண்டேன் ஓர் காட்சி ஆகாயம் பூசிக் கொண்டது இருட்டை ஆதவன் சொல்லாமலே ஓடி விட்டான் அழகு நிலா வரத் தயங்குகிறாள் புள்ளினங்கள் புகலிடம் தேடிப் பறக்கின்றன விசும்போ மெல்ல மெல்ல விசும்புகிறது இன்றைய நள்ளிரவு நிச்சயம் நல்லிரவாகும்! #எமா# | |
2 | 221 | வானம் கறுத்து வண்ண மேகங்கள் வானத்திலிருந்து அகன்று விடை பெறுகின்றன இருண்ட மேகக்கூட்டம் இருளுடன் கூடுகிறது இருளுடன் மின்னல் இரைந்து கேட்கிறது காற்றும் சுழன்று காய்ந்த சருகையும் காற்றுடன் எடுத்துக் கொண்டு போகிறது மழை முகில் முழித்துக் கொண்டது மழையுடன் இடியும் முற்றாக தரையிறங்குகின்றது புஷ்பா கிறிஸ்ரி | |
3 | 745 | மேகங்கள் இருண்டு வந்தால் வானம்/ அழுது தீர்க்கும் பூமி சிரித்து/ விளையாடும் மழை பெய்யக் கண்டு/ பயிர்கள் செழித்து வளர்ந்து விடும்/ வற்றிய கிணறும் குளமும் முற்றும்/ நிறையச் சற்று வெப்பமும் தணியும்/ கருமுகில் காணவே மயிலும் தோகையை/ விரித்து ஆனந்தக் கூத்து ஆடிடுமே க.சுலோஜனா | |
4 | 268 | மேகங்கள் இருண்டால் மாமழைப் பிறக்கும்... தென்றலும் கடனாகச் சாரலைப் பிடிக்கும்... வீட்டில் முடங்கியக் குடைகள் விழிக்கும்... வீதியில் விரித்தக் கடைகள் தவிக்கும்... வறுமை இறக்கும் செழுமை பிறக்கும்... வெப்பம் தணிக்கும் குளுமை நிலைக்கும்... தாகம் குறைக்கும் தேக்கம் நிறைக்கும்… வனங்கள் செழிக்கும் பசுமை தழைக்கும்... ...பூமகன்... | |
5 | 614 | பயிர்கள் வாடின தண்ணீர் இல்லாமல்/ உயிர்கள் மடிந்தன வருமானம் இல்லாமல்/ காடுகள் அழிந்து வீடுகள் முளைத்தன/ நீர் வரத்து வறண்டு போனது/ அரசியல் வியாதிகளின் சித்து விளையாட்டு/ இயற்கையின் சீற்றம் வெகுண்டு எழுந்தது/ மேகங்கள் இருண்டு வந்தால் மழை/ வருமோ என்ற ஏக்கம் விவசாயிகளுக்கு/ விஜயலட்சுமி | |
6 | 462 | மேகங்கள் இருண்டால் மழை வரலாம்/ துன்பங்கள் கூடினால் நன்மை வரலாம்/ மேகங்களை ரசிக்கக் கற்றுக் கொண்டோம்/ துன்பத்தையும் துணிகரமாக முகங் கொடுப்போம்/ இருண்ட மேக மழையால் பயிர் செழிப்புறும்/ துன்பத்தால் நாம் பக்குவப்பட்டு விடுவோம்/ எதையும் எதிர்கொள்ளும் வானம் போல/ நாமும் மாற்றம் அடைந்தால் வெற்றியே தயா | |
7 | 747 | மேகம் திரண்டு வானம் கறுத்து// தோகை விரித்து மயில் நடனம்// இருண்ட மேகம் மோதி இடிக்கும்// மின்னல் வெளிச்சம் கண்ணைப் பறிக்கும்//. மழைப் பொழிவு மரம் வளர்க்கும்// மண்ணில் பசுமை மனம் விரும்பும்// பயிர் விளைந்து பசியை தணிக்கும்// நீர்க் கொடுத்து உயிர் காக்கும்// ஜெ.சுகமணியன் வாழப்பாடி | |
8 | 722 | மேகங்கள் இருண்டால் மயில்களின் நடனம்/ கரிய மேகங்கள் மோகங் கொண்டு/ காரிருளைப் பிறப்பித்து முகடுகளை கடந்து/ நுரைப் பொங்கும் விரிந்த கடலைக்/ கண்டு நாணமுடன் அன்னநடைக் கொண்டு/ மெல்லியச் சாரலை வெள்ளிக் கம்பியாக/ தருவித்து நிலமகளை நீர்த்துளியால் அலங்கரித்து/ வரப்புகளை உயர்த்தி உழவனை மகிழ்வித்து/ மழையாகப் பொழிவதால் வனங்களும் உல்லாசமாக/ சுஜாதா அருணாச்சலம் | |
9 | 428 | மேகங்கள் இருண்டிருந்தால் வானவில் விழித்திருக்கும்.. தென்றலது திசைமாறித தெரியாமல் ஓடிவிடும் வானமே கதியென்ற வயல்களோ மகிழ்ந்திருக்கும் வற்றிய ஆறெல்லாம் வளமாய் நிறைந்திருக்கும்.. வாடிய பயிரெல்லாம்வருணனுக்குத் தலைவணங்கும் தண்ணீருக்குத் தத்தளிப்போ தற்காலிகமாய் நின்றுவிடும் அத்தனையும் அடைமழையால் அனுபவிக்கக் காத்திருக்கும். கருமேகம் மழையா உருமாற வேண்டுகிறேன்... சுப்பிரமணியன் அன்புமலர் | |
10 | 238 | மேகங்கள் திரள்வதோ பூமியில் மழைக்கு../ வானிலை மாற்றத்தால் வழக்கங்கள் மாறுது../ அன்றாட நிகழ்வுகள் தேக்கங்கள் காணுது../ உழவனும் உற்சாகத்தில் உணவினை உண்டிட../ மயில்களோ தோகையை விரித்து நடனமாடுது../ தெருவோர வியாபாரிகள் கடைகளை மூடிட../ மரம் செடிகொடிகளோ தலைகளை ஆட்டுதே../ மேகம் திரண்டிட மாறிடும் காட்சிகள்.../// #இளந்தை சேது | |
11 | 722 | வானம் மேகத்திற்கு நடத்தும் வளைகாப்பு./ பூமிக்கு நீர்க்குழந்தை வானில் வசந்தவிழா./ மின்னல் கண்சிமிட்டும் வெளிச்ச வீதியில்/ வயல்கள் காத்திருக்கு வானத்தைப் பார்த்திருக்கு./ காற்றுச் சுழன்றடிக்கக் கார்முகிலும் இறங்கிவரும்./ புதியதோர் மண்மணம் பூமியில் பிறந்துவரும்./ ஆவும் அழைத்திடும் ஆடும் கத்திடும்./ மானிடர் அனைவரும் மகிழ்ந்தே ஆடுவர்./ ......பாலு தியாகராசன்...... | |
12 | 348 | வான்முகந்த நீரும் மலையில் வீழும் // மேகங்கள் இருண்டு வந்தால் வாழும் // மழையோடு போராடும் செழித்த வயல்வெளி // பழித்திடும் வரம்பைத் தகர்த்து எரியுமே ^/ பருவங்கள் தருமே முழவிடும் இடியும் // குளங்கள் நிரம்பியே மீனினங்கள் கூத்தாடுமே // காவிரியும் வைகையும் மணமாய் கூடுமே // இருகை கூப்பியே வணங்குவேனே இயற்கையை // உடுமலை ராமர் | |
13 | 541 | மேனி குளிர்ந்து தாகம் தீர்க்க மேகம் இணைந்து காதல் கோர்க்க ஏனோ மனமோ ஆசை கொண்டு எனை ஏதோ செய்யச் சொல்கிறது..... வயல்கள் ஆங்கே வனப்பாய்ச் சிரிக்க வசந்தம் போலே வண்ணம் சொரிக்க இருண்ட மேகம் இதயம் குளிர்ந்து இனிமை என்றே துளியை வார்க்கும்..... முல்லை நீதன்...... | |
14 | 510 | மேகங்கள் இருண்டால் வான்மழை பொழியுமே/ மயிலினங்கள் தோகை விரித்து ஆடிடுமே/ உலகத்து உயிர்கள் வளமுடன் திகழுமே/ பிய்ந்து புறங்களிலும் பசுமைப் படருமே/ வற்றிய ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கும்/ உழவனின் மனமும் உயிர்ப்புப் பெறுமே/ மழைத் துளியால் வையகம் குளிருமே/ மனமும் உடலும் மகிழ்ச்சியி துள்ளுமே/ ராதாமணி | |
15 | 580 | வரட்சி வந்தே வாட்டும் வேளை// புரட்சி செய்வது போல இங்கு// திரண்டு வரும் மேகங்கள் அவற்றால்// இருண்ட பொழுது பொழியும் மழையே// வறுமை வந்து வாடியே நாளும்// வெறுமையால் வாழும் விவசாயி மகிழ்ச்சி// அறிவாயா உலகில் உந்தனை நாளும்// செறிவாய் விரும்பும் ஜீவனும் அவனே// சுந்தரலிங்கம் நிருத்திகன். அல்வாய். | |
16 | 483 | மேகங்கள் இருண்டு வந்தால் மழைபொழியும்//1 வாடிய பயிரினங்கள் வாட்டமின்றிச் செழிக்கும் //2 ஆடிப் பட்டம் தேடி விதைத்தோர் //3 அகங்குளிரும் தையிலே அறுவடை நடக்கும்//4 மாடியில் மட்டுமல்ல மண்குடிசை வாசலிலும் //5 மணக்கும் பொங்கல் மகிழ்ச்சி தங்கும் //6 கூடிவரும் திருமணங்கள் கெட்டிமேளம் மங்கலங்கள் //7 எல்லோரும் மனம்போல இன்புற்று வாழ்வாரே //8 ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை | |
17 | 413 | வீசும் காற்றின் வேகம் தீண்டும்/ விலகி ஓடும் மேகக் கூட்டம் / கூசும் ஒளியில் மின்னல் வெட்டும் / தூசும் ஒழிய மழையும் கொட்டும். / தேசம் செழித்துப் பயிர்கள் வளரும் / தாகம் தீர்க்க நீரும் நிறையும் / வாசம் வீசிப் பூக்கள் மலரும் / வசந்த காலம் வளத்தால் விளையும். / அருண் சிவா... | |
18 | 207 | மேகங்கள் கருத்தால் வானம் இருளும்/ மின்னல் கீற்றுகள் வானத்தைக் கிழிக்கும்/ இடியின் முழக்கத்தால் பூமியே அதிரும்/ மழையின் அம்புகள் பூமியைத் துளைக்கும்/ நனையும் பொழுதுகள் சுகமாய் இருக்கும்/ அதிகம் நனைந்தால் சளியே பிடிக்கும்/ ஆனந்த மழையில் பூமியே குளிரும்/ தேடும் மழையில் தென்றலும் ஒளியும்/ -முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி. | |
19 | 373 | வானமது திரண்டு மேகமது இருண்டு மழையது கொட்ட தூறலும் விழுந்தது மங்கையின் வனப்பு மாறாத நினைப்பு என்னோட அணைப்பு என்றும் உன்னோடு உள்ளம் உருகிட கள்ளம் இல்லாத வெள்ளை மனமான மௌன தேவதையே தென்றல் இதமாக சாரலின் மெதுவான குளிரும் இணைய வாவென் கண்ணே!! ஜயந்தினி வாகீசன் | |
20 | 254 | ஏழும் வானவில்லில் உண்டு/ எண்ணங்களில் மாற்றம் வண்ணங்களால் உண்டு/ வெண்மேகம் கார்மேகம் காற்றால் பயணம்போகும்/ கண்களுக்கு காணக் கிடைக்காத விருந்தாகும்/ மேகங்கள் இருண்டு வந்தால் மயிலது ஆடும்/ தாகம்தீர்க்க விலங்கினமும் புள்ளினமும் ஓடும்/ வேளாண்மை சிறந்து பரந்துபட்ட நாடுசெழிக்கும்/ வான்மழைக்கு நன்றிசொல்ல கைகள் குவிக்கும்./ கி மா.கனகராசன். சூலூர். | |
21 | 450 | திரண்ட மேகங்கள் பெருமழையின் அடையாளங்கள் வறண்ட நிலமோ வறட்சியின் அடையாளங்கள் வாடியப் பயிர்களை வாட்டத்துடன் பார்த்திருக்கும் விவசாயி கூடிய மேகங்களை நம்பிக்கையுடன் பார்க்கிறான் காற்று வந்துக் கலைக்காமல் போனால் கொட்டும் மழையே போதுமே! பட்ட பாடுகளுக்கு பலனும் கிடைத்திடுமே வறுமையின் கட்டுகளை வான்மழைதான் உடைத்திடுமே! ரேணுகா சுந்தரம் | |
22 | 328 | வெம்மை சுமந்து வரும் காற்றும் குளிர் தரும் தென்றலென மாறும் ! நாணலைப் பிடித்து ஓடி வரும் நதி மகளும் மகிழ்வோடு கடல் காதலனை ஆசையுடன் கை பிடிப்பாள்! தவளைகள் நித்திரை கலைந்து நீர்நிலை பாட்டு இசைக்க சுருதி கூட்டும்! உழவனது சோகங்கள் கலைந்து போகும்...!! வெ.தண்டபாணி , சூலூர் | |
23 | 246 | மேலைச் சூரியன் மறைகின்ற பொழுது வானம் இங்கே வண்ணங்கள் சேர்க்க மேகங்கள் இருண்டு மழையாகப் பொழிந்திட தாகம் கொண்டு தண்ணீருக்கு தவிக்கும் மக்கள் மனதிலே மகிழ்ச்சி வெள்ளம். சிறுதுளிகள் பெருமழையென பெறுகின்ற விவசாயி. வறட்சியிலே வாழ்க்கையைத் தொலைத்தவர் ஒருபக்கம். வரம்போல் வந்தமழையில் மகிழ்பவர் மறுபக்கம். செல்வம் செல்வகுமார் | |
24 | 259 | இருளும் மேகங்களால் மழை வரும்.../ இயற்கை வளங்கள் செழிப்பு பெறும்.../ வறட்சி நீங்கி குளிர்ச்சி காணும்.../ உழவர் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.../ மயிலினம் நடனம் சிந்தை அள்ளும்.../ நீர் அணைகள் நிரம்பி வழியும்.../ மழை நீர் சேகரிப்பு செய்வோம்.../ தேவைக்கு பயன்படுத்தி பலன் பெறுவோம்...!/ ஜெயலெட்சுமி மாணிக்கம் | |
25 | 710 | 1.எத்தனை சோதனைகள் அத்தனையும் தாங்குவாள்/ 2.வேதனையை சாதனை ஆக்கிடும் அறிவு/ 3.வலியினை கிலி கொள்ள வைத்திடுவாள்/ 4.விதியினை மதியினால் வென்று காட்டிடுவாள்/ 5.உலகையே அன்பினால் ஆட்சி செய்திடுவாள்/ 6.அடக்கினால் பணிந்திடுவாள் அடங்கினால் மிஞ்சிடுவாள்/ 7.மேகங்கள் இருண்டு வந்தால் மழை/ 8. பெண்கள் மிரண்டு போனால் பிழை/ அம்பிகா ஸ்ரீகுமார் | |
26 | 386 | கருமேகம் சூழ்ந்திருந்து காற்றுமே மோதினாலே/ கனமழை பெய்யலாகும் கழனிகள் செழிக்கலாகும்/ இருண்டது மேகமானால் இணைகளாய் மயில்களாடும்/ கதிரவன் ஆட்சிநேரம் வானிலே வில்லுமாகும்/ வானவில் வண்ணத்தாலே வறியவர் உவந்திருக்க/ விளைநிலம் உழவுமாகி நடவுகள் ஆகக்கூடும்/ பச்சையாய்ப் பயிருமாகி பசுஞ்செடி கொடிகளாகும்/ வறுமையும் குறைந்திடவே வளமையும் வாய்க்கலாகும்/. தென்கரை தாயுமானவன். | |
27 | 465 | மேகங்கள் இருண்டு வந்தால் வானில் மெல்லவே இருளும் சூழ்ந்து நிற்க மெல்லிய மேகங்கள் மோதிட ஒளிரும் மின்னலே முன்வந்து கண்கள் பறிக்க பின்னே வருகின்ற இடியின் முழக்கும் விண்ணை அதிரவிட்டு காதினை பொத்தவைக்க வட்டமிடும் பறவைகள் வந்திடவே கூண்டுக்குள் கொட்டுகின்ற மழையாலே குளிர்ந்திடவே நிலமுந்தான் தழைகள் தலைசாய்க்க தவளைகள் குதித்தாட உழவன் மகிழ்ச்சியில் உள்ளமும் நிறைத்திடுவான் இரா.வெங்கடாசலம் | |
28 | 240 | அழகிய வானத்தில் வானவில் தோற்றம்// கருமுகிலைக் கண்டதும் வண்ண மயிலது / தொகை விரித்து ஆனந்தத்தால் ஆடும் / கண்கள் மூடியே களிப்பூட்டும் விசித்திரமான// கருமேகம் இணைந்து ஆரவாரம் செய்யும்/ வெள்ளி மின்னல் வேகமாக பின்னலிட / வானம் மழை பொழிய முகில்கள்// கலைந்து புன்னகை புரிந்து விலகிடும்// உமா பாலகிருஷ்ணன், பெங்களூர் 🏵️ | |
29 | 748 | மேகங்கள் இருண்டு வந்தால் மழைதானே/ விவசாயிகள் மனம் மகிழ்ச்சி கொள்ளுமே/ செடிகள் கொடிகள் நலமாக வளருமே/ நாமும் மகிழ்வாக மண்ணில் வாழலாம்/ ஏரி குளங்கள் நிறையும் இங்கே/ கரையை அணைத்தே ஆறும் ஓடும்/ பயிர்கள் தழைத்துப் பசியைப் போக்கும்/ கருத்த மேகம் மழையைப் பொழியட்டுமே// இரா.மதனகோபாலன்,, தருமபுரி. | |
30 | 668 | மேகங்கள் இருண்டு வந்து வானும்/ ஒளியுடன் முழங்கி மாரியும் பெய்திட/ நிலமும் நனைந்து செழிப்பை அளித்து / பசிப்பிணியை போக்கி உலகை காத்திட/ இயற்கை வளங்களை பேணிக் காக்க/ உறுதியாய் நாமும் இணைந்து நின்று/ மரங்களை காத்து மண்ணரிப்பை தடுத்து/ மாசற்ற காற்றை வீசிட வைப்போம்/ ஏஞ்சல்சோபிதா | |
31 | 204 | கொளுத்தும் வெயிலால் உலர்ந்த தரையை// கொட்டும் மழையோ இறைத்தது நிறைத்து// இடியின் ஓசையில் அதிர்ந்தது வானம்// இமைகளை மூடிட வைத்தது மின்னல்// கருப்பாய் ஆடையைக் கட்டியே மேகமும்// கலைந்தே போகுதே திசையற்றுத் தொலைந்து// காய்ந்த நிலமும் கதகதப்பில் குளிர்ந்து// மேனியில் விழுந்த தண்ணீரால் மகிழுமே// ஏரூர் ஆஸாத் கமால். | |
32 | 617 | மேகங்கள் இருண்டன மேனிகள் சிவந்தன// தென்றல் புயலானது குளிர்ச்சி மழையானது // சூரியன் மறைந்தது இரவு மலர்ந்தது // தவளையின் சத்தம் தாரை அடித்தது// மின்மினிப் பூச்சிகள் விளக்காக பறந்தன// காலைப்பொழுதில் காளான் முளைத்தன// ஈசல் புற்றுகள் எழுந்து பறந்தன// கருமேகம் கலைந்தன சூரியன் உதித்தன// #முதுவைமுகம் | |
33 | 247 | மேகம் கருத்து மழையும் பொழிந்தது / மின்னல் அடித்து இடியும் இடித்தது / பூமியும் நனைந்தது மனிதர்களின் மனமும் / மகிழ்ந்தது மலைகளில் அருவிகள் தோன்றி / நதிகள் ஆனது நதிகள் பிரிந்து/ பல சிறு ஆறுகளாக ஓடி/ மண்ணில் நனைந்தது பயிர்கள் வளர்ந்தது/ நெற்கதிர்கள் விளைந்தது மனிதருக்கு பயனானது / த.காமராசு.தாராசுரம் கும்பகோணம் | |
34 | 296 | மேகங்கள் திரண்டு இருண்டு வந்தால்/ வேகம் கொண்டு இடிமின்னல் தோன்ற/ தேகம் நனைந்து இதயம் சிரிக்க/ தாகம் தீர்க்கும் மழையும் கொட்டும்/ முப்போகம் விளையும் வயலும் செழிக்கும்/ மோகத்தோடு அழகாய் பூக்கள் மலரும்/ பாகமாய் நீரும் பயிருக்கு வழிந்தோடும்/ சோகம் நீங்கி உழவனும் மகிழ்வான்/ சுஜந்தினி யுவராஜா | |
35 | 216 | மயிலதன் தோகையும் மானதுக் கண்களும்// விரிந்து வளைந்து மோனக் கூத்தாடும்// செந்நெல் வயலும் சேற்றிடைக் கயலும்// காட்டிடை முயலும் கிளையிடை அணிலும்// கிளர்ந்து எழுந்து கானக் குரலொடு கார்மேகக் குழலே கலைநிறை எழிலே// என்றொருக் கவிபாடி தன்னிலை மறந்தாடும்// தும்பிகள் சிறகடிக்கத் துன்பதும் பறந்தோடும்// செழித்தவன் தேநீரோடும் இளைத்தவன் கண்ணீரோடும்// கலந்தேக்_கரைந்தோடும். அ.மாணிக்கவாசகன் அம்பிகாபதி. | |
36 | 716 | கார்மேகம் புடைச்சூழ மழையெங்கும் பொழியும் நாடெங்கும் விவசாயம் தழைத்தோங்கிச் செழிக்கும் பசியில்லா வாழ்வுதனை பெற்றிடுவர் உழவர் வங்கிக்கடனைச் செலுத்திவிட்டு மகிழ்ச்சியிலே திளைப்பர் ஏரிக்குளங்கள் நிரம்பியெங்கும் பாசனங்கள் பெருகும் ஊற்றுக்களும் நீரூறி தாகந்தனைத் தணிக்கும் வான்மழையும் பொழிந்திடவே வளமெங்கும் பெருகும் வறுமையெனும் கொடியநோய் நாட்டைவிட்டே ஓடும். - நாகை. ஹாஜா | |
37 | 270 | மேகங்கள் இருண்டு வந்தால் மும்முரமாய் !// மின்னலதும் மின்னியே மண்ணதனைப் படம்பிடிக்கும் !// தாகத்தால் வறண்டபூமித் தண்ணீர் கேட்டுத் !// தகையாக வெடித்துமே பிளந்து நிற்கும் !// யாகங்கள் செய்வதாலே எழும்பும் புகையும் !// எட்டியுமே கருமேகம் ஒட்டி இழுக்கும் !// போகங்கள் விளையவென்றே பொழியும் மழையும் !// புதுவெள்ளம் பெருக்கெடுக்கப் பெருகும் குளமும் !// தளவை வில்லவன்கோதை .அண்ணாமலைப்புதூர் . | |
38 | 604 | கவிழ்த்து வைத்த கருங்குன்றுகளாய் வானில் //1 குவிந்திருக்கும் மேகங்கள் இருண்டு சூழ்ந்திட//2 ஏர்முனை தன்னில் நிலமும் சிரிக்க//3 உலர்ந்த உழவர்கள் மனதினை நனைத்தாய்//4 கார்முகிலே அழிவில்லா மழையினைத் தந்தாய்//5 நீயும் மனம் இறங்கா விட்டால்//6 ஆழியின் நீரும்ஆவியாய் போகும்//7 அனலாய் மாறும் அண்டமே அழியுமே//8 கவிஞர் கோவை ஆறுமுகம் | |
39 | 707 | கார் முகிலும் திரண்டு வர/ கானக மயிலும் களிப்பாய் ஆடிடுமே/ பார் முழுதும் பொழிந்து விட/ பஞ்சம் எங்கும் பணியாய் நீங்கிடுமே/ வேர் முடியும் நனைந்து வர/ வெள்ளாமை அதுவும் மலையாய் கூடிடுமே/ கூர் பயிரும் வளர்ந்து விட/ குவலயம் எங்கும் நிறைவாய் மகிழ்ந்திடுமே/ ✍️பா.ச.கண்ணன் | |
40 | 618 | வான் மேகங்கள் இருண்டு வந்து/ வாரி வழங்கும் கருணை மழை/ வரண்ட பூமி மேனி குளிர/ வாவிகள் நிறைந்து நீர் பெருக/ வயல்கள் செழித்து வளமாய் வளர/ வறுமை அகன்று செல்வம் பெருக/ விவசாயி மனது மகிழ்ந்து சிரிக்க/ வையம் எங்கும் வாழ்வு சிறக்குமே/ ஔவை. | |
41 | 317 | கடலில் இருந்து சிறுதுளி பெருகும்/ கருமேகம் ஆனதும் பயணம் போகும்/ மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் பொழியும்/ குளிர்ந்த காற்று இதமாக வீசும்/ இடியுடன் மின்னல் வேகத்தில் இருண்டும்/ எங்கும் எதிலும் தண்ணீர் நிறையும்/ சேமித்து வைக்க ஏரிகள் வேண்டும்/ சேதாரம் இல்லாமல் காப்பாற்ற லாபம்/ க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம்,அவிநாசி | |
42 | 463 | கடல்கொண்ட நீர் கதிரவன் உதவியால் .. அவியாகி மேகமென வானில் அலையும் ! தென்கிழக்கில் கார் மேகம் சூழ்ந்திடின் கட்டாயம் மழை வந்து மகிழ்வித்திடும் ! வான்பார்த்த பூமியெல்லாம் மழைக்கு ஏங்கிடும் ! போதிய நீர் கிடைத்தால் தான் ! செந்நெல் வயல் நிரம்பி இருக்கும் ! வாய்க்கால் நெடுக மீன் விளையாடும் ! பெய்யும் மழையை கடலுக்கு அனுப்பாமல் சேகரித்து பயன் படுத்தல் நலமே! அரவிந்தன் தஞ்சை | |
43 | 749 | பூவுலகும் தன் ஒளியை இழக்கும்/ புறப்படும் இடியோசை காதையும் பிளக்கும்/ மெல்லிய குளிர்ந்த காற்றும் வந்து/ மேனியை இதமாகத் தடவிச் செல்லும்/ புள்ளினங்கள் பண்ணிசைத்து கூட்டம் கூட்டமாய்/ தம் புகலிடங்கள் தேடிச் செல்லும்/ வாடிய பயிர்கள் எல்லாம் கூடியே/ குதூகலிக்கும் ஓடிவரும் மழையை எண்ணி/ க.மூ.முகம்மது றிஸ்மி,இலங்கை | |
44 | 636 | போகர்கள் கலந்து தந்தால் மருந்து!/ காகங்கள் சேர்ந்து வந்தால் விருந்து/ கன்னியர் மிரண்டு பார்த்தால் இட்செறிக்கை!/ காளைகள் மிரண்டு வந்தால் எச்சரிக்கை!/ மாமியார் மருமகள் இடையே புகைச்சல்!/ தகப்பன் மகன் தலையில் குடைச்சல்!/ மேகங்கள் இருண்டு வந்தால் மழை! சோகங்கள் வாழ்வில் வந்தால் தொலை! சுத்தமல்லி உமா ஹரிஹரன் திருநெல்வேலி | |
45 | 602 | "வானம் கருக்க வையகம் குளிரும் வயல்கள் நனைய விளைச்சல் பெருகும் வானம் பார்த்த பூமிக்கு நாளும் மாரி" என்பவளே அந்த மேகம்
அதுவே உயிரினங்களின் நீர் ஆதாரம் பருவநிலையை காட்டும் பகலவனையும் மறைக்கும் வான்வெளியில் எங்கும் நிறைந்து இருக்கும் நல்லோர் பொருட்டே 'மழை'யென பொழியும்
ஜி.வெங்கடேசன்.. | |
46 | 562 | இருண்ட மேகங்கள் மழைக்கான தூதர்கள்/ இடியும் மத்தளம் அடித்திடத் துடிக்கும் மின்னலும் ஒளியாய் வானினைப் பிளக்கும் தவளைகள் தாளவாத்தியக் கச்சேரியை தொடங்கும்/ காற்றும் வீசிட சப்தத்துடன் விரையும் பூமியும் எதிர்ப்பார்ப்பில் வானினை நோக்கும்/ கூட்டமாய்த்தட்டான்கள்அங்குமெங்கும் அலைந்தோடும்/ விவசாயின் மனமோ மகிழ்ச்சியில்துள்ளும்
பா.பத்மநாபன் | |
47 | 201 | கடலில் இறங்கி கானலாய் நீரெடுத்து / கார்மேகம் கறுத்துவர பூவுலகும் இருண்டிடுமே / இடியோடு முழக்கமும் கண்ணைப் பறித்திடும் / மின்னல் ஒளிவீச சோவென மழைகொட்டும் / குளங்களிலே தேக்கினால் கழனிகள் குளிர்ந்திடும் / நீரைச் சேமித்தால் சீராகுமே பயிர்ச்செய்கை/ புள்ளினங்கள் கூட்டமாய் மகிழ்ந்து உறவாடும்/ வாடிய பயிர்களும் வாவென்று வரவேற்கும்// புவனா சற்குணம் | |
48 | 652 | மேகங்கள் இருண்டு வந்தால் மகிழ்வே!/ மயிலும் தோகை விரித்து ஆடிடுமே!/ மண்ணும் நினைந்து மகிழ்ந்திட எதிர்நோக்கிடுமே!/ மேகங்களின் கருமை நீங்க கரைந்திடுமே!/ மனிதனின் மனதையும் மேகங்கள் குளிர்வித்திடுமே!/ சாலை காலியாகி வீட்டில் அடைக்கலமாவோமே!/ சூடான பண்டங்களை தின்ன ஆசையேறுமே!/ இயற்கையில் குளுமையே என்றும் ஆனந்தமே!/ கூ.மு.ஷேக் அப்துல் காதர் | |
49 | 287 | கடலினின் ஆவியால் கருவுற்ற மேகங்கள் பருவத்தின் சுயற்சியில் பருத்துக் கருத்தது தண்ணீர்க் குடம் உடைந்து தாரையாய் தரையில் பெய்தது தரணியும் செழித்தது கருமையைப் பார்த்தது போதும் இனி கண்குளிர என்னைப் பார் என்கிறது வண்ணத்தோகை விரித்த மயில் மேகங்கள் விலகின முழுமதி தலைகாட்டியது தண்டபாணி | |
50 | 434 | காய்ந்துபோனப் பூமியின் பசுமையைக் காண/ கண்ணீர் வடிக்கும் வானகத்து உயிர்கள்/ தவமிருந்து கார்மேகத்தை திரளாக ஒன்றுதிரட்டி / மழையைப் பூமிக்கு அனுப்பிடும் அதிசயம்/ மற்றவர் துயரைக் காண்கின்ற கண்கள்/ தன்னுயிர் போன்று எண்ணியே வாழ்ந்தால்/ தற்கொலை என்றொரு தரித்திரம் தொலையுமே/ புன்னகை தேசம் விரைவில் மலருமே// மீனாட்சி சுந்தரம் | |
51 | 480 | மேகமது இருண்டிடவே தோகைமயில் விரித்திடுமே! தாகமதை தீர்த்திடவே தரணியெங்கும் பொழிந்திடுமே! தானியந்தான் காட்டிலிட்ட தகப்பனும் சிரித்திடுவார்! ஏழை வயிறும் எட்டித்தான் பார்த்திடுமே! சோலையது பூத்திடவே சொல்லுங்கிளி மகிழ்ந்திடுமே! மேய்ச்சலில்லா காய்ச்சலும் மெல்ல குளிர்ந்திடுமே! குளங்களெல்லாம் நிரம்பிடத்தான் குவலயமே செழித்திடுமே! பசித்திருக்கும் சாமிக்கெல்லாம் படையலுந்தான் படைத்திடுவோமே! கலைச்செல்வி | |
52 | 674 | மேகங்கள் இருண்டு முழக்கம் கொடுத்திட// வறண்ட நிலமும் வானை வாழ்த்திடவே// காய்ந்த பயிரும் கலக்கம் தொலைக்கையிலே// காற்றோடு குயில்களும் காதல் கொள்கையில்// களைத்த உள்ளமும் கவலை நீங்கியே// கருணைக் கொண்ட கடவுளை வணங்கிடவே// இரா.தேவி | |
53 | 578 | ஏர்பிடித்து நிலமுழுது எண்ணற்றக் கனவோடு// பருவத்தில் விதைத்திட குலதெய்வத்தை தொழுது// விளைவித்த உழவர் உறக்கம் தொலைத்து// வயல்வெளியை காத்து விளைந்திட எதிர்பார்க்க// பருவமழை பொய்த்திட பாமரனும் துடித்திடுவான்// பட்டகடன் வட்டியோடு வறுமையும் அதிகரித்திட// பயிர்நிலமும் காய்ந்து சருகாக மாறிவர// மேகங்கள் இருண்டு வந்தால் மகிழ்ந்திடுவர்// ...கவியாசகன்...!!! | |
54 | 723 | காலைக்கதிரும் கடல்நீரும் புணர்ந்து ஆவியாகி/ தென்பொதிகைத் தென்றலால் மேகமென சூல்கொண்டு/ தாய்மை வலியென கேட்டன இடியோசை/ கருமேகத்தாய் ஈன்றனள் மழைக் குழந்தையை/ செவிலித்தாயாய் பூமிமாதா தன்மடி தாங்கினாள்/ மண்தொட்ட ம(ழை)ழலையவள் ஆற்றுவழி வளர்ந்தாள் பச்சைப்பசேலென வயலென செழித்தாள் மங்கையவள்/ பருவமெய்தி கடலடைந்து காத்திருக்கிறள் கதிரவக்காதலனுக்கு/ - நெல்லை ஆடலரசன்@Natarajan துபாய் | |
55 | 261 | மேகங்கள் இருண்டு வந்தால் பாரினில் மழை பொழிந்திட வாய்ப்பு உண்டாமே மயில்கள் தோகையை விரித்து ஆடிடுமே புல்லினங்கள் கூட்டிற்குப் பொழுதுடனே திரும்பிடுமே
வானவில்லின் வண்ணங்கள் மனதினை மகிழ்விக்குமே விவசாயிகள் உவப்புடனே நிலங்களை உழுதிடுவரே பயிர்களும் வளர்ந்து மகசூல் குவித்திடுமே மக்களின் தேவைகள் குறைவின்றி தீர்ந்திடுமே ! ~ வள்ளல் இராமமூர்த்தி | |
56 | 258 | கருமேகம் திரண்டிட, கருணையுடன் வான்மழை/ காதலுடன் உறவு கொள்ள வந்ததே/ ஏரிகுளம், ஆறெல்லாம் நீர் நிறைந்திட, பூமியும் செழித்தது, புள்ளினங்கள் மகிழ்ந்தது/ வானில் இருந்து வந்த மழையை/ சுயநலம் கொண்ட மாந்தர், மண்ணில்/ சிறை பிடித்து சீண்டிப் பார்க்க/ பக்கத்து மாநிலத்தார் பரிதவிப்பு நியாயமோ! தங்க. சரவணன், வடபழநி, சென்னை-26. | |
போட்டி நிறைவு | |||
57 | 613 | மேகங்கள் இருண்டு வந்தால் மழைப்பொழியும்// இடியும் மின்னலும் சேர்ந்தே இசைக்கும்// விவசாயின் உள்ளம் ஆனந்தத்தில் துள்ளும்// வயல்கள் நனைய பயிர்கள் செழிக்கும்/ ஏரி குளம் நிறைந்து வழியும்/ ஆனந்தமாய் பிள்ளைகள் சிறகடித்து மகிழ்வர்/ வானமும் பூமியும் குளிர்ச்சியை தந்தது/ மலையின் சாரலில் நித்திரையும் வந்த்து/ ஜெயாசந்திரமோகன் | |
58 | 726 | பூமியிலே ஆவியாகி புனிதப் பிறப்பெடுத்து/ வானிலே சென்று பிரசவித்த மேகங்கள்/ இருண்டு வருகையிலே வழிகள் பிறக்குதே/ மனிதர்களின் வாழ்விலே வெளிச்சங்கள் தெரியுதே/ வாயில்லா உயிர்களும் வாழ்த்திச் செல்லுதே/ மரங்களும் மழையின் வருகைக்கு தலையாட்டுதே/ காற்றும் அழைப்பிதழை அள்ளிக் கொடுக்குதே/ மண்ணிலே மண்வாசனை எங்கும் நிறைந்திடுதே/ --காளிராஜ்பாலகணேஷ் | |
59 | 669 | பரந்து விரிந்த நீல வானிலே / மேகங்கள் சூழ்ந்தே இருண்டு வந்ததால்/ எங்கும் இருள் மெதுவாகவே தோன்றிடவே....!/ .ஏதோ மாற்றம் மனதில் தோன்ற / சிந்தனைச் சிறகுகளை விரித்து நோக்கிட/ விவசாயிகள் உள்ளம் மகிழ்வதைக் கண்டேன்/ தாவரங்கள் மௌனமாய்ச் சிரித்தபடி தலைதூக்கிட/ கொட்டும் மழைக்காய் காத்திருக்கிறது ஆவலோடு/ நஸீரா வசூக் | |
60 | 291 | மேகங்கள் இருண்டால் மயில் ஆடும்/ தாகங்கள் தீர உயிரினங்கள் காத்திருக்கும் / வேகம் கொண்டு மனிதர்கள் வேர்வைத்துளி / அகத்திலிருந்து வழிய கழனிகளுக்கு விரைவர் / புள்ளினங்களும் புளங்காகிதம் கொண்டு தத்தம் / இருப்பிடங்களுக்கு இதமாய் விரைந்து செல்லும் / இயற்கை அன்னையோ இறும்பூ எய்தி / அமைதியாய் அழகாய் காட்சி அளிக்கும் / ஜெயா தமிழினி | |
61 | 727 | மேகங்கள் இருண்டு வந்தால் மாரி மழைக்கு அறிகுறி // இடியும் மின்னலும் இசைமீட்டிட வறட்சி பூமி வணங்கி வரவேற்குதே // வான தேவதைகள் சூழ்ந்து வாழ்த்து மழை தூவ, வசந்தக் காற்று வீசுது மேனி சிலிர்த்திட// காய்ந்து வறண்டு தவிக்கும் உயிரினங்களும் விளைச்சல்களும் தாகம் தனித்து மகிழ்ந்திடுமே.. // சுசி. |



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக