15.08.20:சுதந்திரம் - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

15.08.20:சுதந்திரம்

 













Sl

எண்

புகைப்படம்

கவிதை

1

540

மரணித்துக் கிடக்கும் மனங்களில் ஒலிக்கிறதே/

சுதந்திரம் எனும் தவிப்பின் ஓசை/

கொண்டாட உயிரில்லையே அனாலும் திருப்தி/

வென்றிட்ட வெற்றியை கொண்டாடும் தலைமுறையால்/


க,யேசுசகாயம்,இலங்கை

2

745

சும்மா இருந்தால் சுதந்திரம் கிடைக்காது/

தேசியப் பற்றும் தியாக மனமும்/

தணியாத தாகமும் ஒருங்கே கொண்டு/

பாடுபடவே நிம்மதி வாழ்வும் விடுதலை/

வெற்றியும் வீடு தேடிவந்திடும்

க.சுலோஜனா

3

244

எண்ணற்ற தியாகங்களின் உதிரமே சுதந்திரம் //

கள்ளமில்லா வெள்ளை உள்ளமாய்ப் பிறந்தது //

களங்கப்படுத்தும் அன்னியரை வீழ்த்திடுவோம் விழிப்புணர்வால் //

தரணியில் பாரதத்தின் பெருமையை உயர்த்திடுவோம் //


கவிஞர் கோவை செல்லப்பன்


4

706

தியாகிகள் நினைவு வீர வணக்கத்துடன்/

இன்னல்கள் தீர்ந்து இன்பமானது விடுதலையாக/

தனியாத தாகம் தனிந்தது சுதந்திரமாக/

இந்தியன் உணர்வுடன் இந்நாளைக் கொண்டாடுவோம்/


மாயாதேவி, சென்னை


5

463

அடிமை வாழ்வு புரியாத வரை

சுதந்திரத்தின் சுகம் தெரியாது நமக்கு!

ஒற்றுமை காட்டி பகைமையை விரட்டுவோம்!

தேசப் பற்றினை தெளிவாய்க் காட்டுவோம்!


அரவிந்தன் தஞ்சை.


6


தேச  தியாகிகளின் எல்லையற்ற மகிழ்ச்சி ....

துக்கங்களை இழந்து களிப்பு பெற்றநாள் ....

என்னை அடிமையாக்கியவன் என்னிடமே சரணடைந்தநாள்.....

இன்னல்கள் ஏதுமின்றி இன்பமாய் வாழ்கின்றோம் .....


செல்வமுருகன் வேலாயுதம்


7

482

இந்திய தேசம் தொற்றால் வாடுதே !

இயற்கை உணவைத்  நாளும் தேடுதே !

மனதால் ஒற்றுமைக்  கொண்டு வாழ்ந்திடுவோம் !

பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்திடுவோம் .


தஞ்சை கோ பாலசுப்ரமணியன்

8

697

அடியும் உதையும் பட்டுப் பெற்று / 

ஆங்கிலேயனை விரட்டி வாங்கிய சுதந்திரம் / 

ஏழைகள் பாமரர்க்கு கிடைக்கவே இல்லை / 

சுரண்டும் பண்பற்ற மாந்தர் கூட்டத்தாலே...! 


முனைவர் பெ.வெற்றிநிலவன்,, குடந்தை...

9

726

விடியாத நள்ளிரவிலே விடுதலை வாங்கி/

இருட்டினிலே சுதந்திர தீபம் ஏற்றி/

உயிர் கொடுத்தோரின் தியாகத்திலே நித்தமும்/

சுவாசக் காற்றினை நாங்கள் சுவாசிக்கிறோம்/


--காளிராஜ்பாலகணேஷ்

10

746

தீண்டாமை ஒழிய வேண்டும்/

தீயவர்கள் மறைய வேண்டும்/

முன்னோரின் மூச்சுக் காற்று முழுவதும் மணக்க வேண்டும்

நாளை மலரனும் சுதந்திரம் நிலைக்கணும்/


--- மௌஜீத் ஏ ஹசன்---

11

756

தம் தரம் 'சுயம்' சுதந்திரம்...!

எம் வரம் இந்த மந்திரம்...!

உம் இடம் ஏன் அவதந்திரம்...?

நாம் தடம் பதித்தோம் ' கொடியிடம்'...!!


கன்னிமுத்து வெல்லபதியான்

12

414

வரியை வசூலித்து வஞ்சனை செய்கிறார்கள்/

நரியாய்ப் பள்ளிகளில் பஞ்சாங்கம் பார்க்கிறார்கள்/

புரியாத பலரிங்கு பாசாங்கில் வாழ்த்துகிறார்கள்/

சரியாகச் சொல்வதானால் சுதந்திரம் எமக்கில்லை/


சோ.மீனாட்சிசுந்தரம்

13

483

அந்நியரை விரட்டினோம் அளவற்ற தியாகத்தால்/

ஆனந்த சுதந்திரம் அடைந்தது கனவா?/2

பொருளா தாரம் புன்னகை இழந்தோம்/3

வருங்காலம் செழிக்க வேண்டுவோம் இறைவனை //4


ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை


14

450

முறையாக பயன்படுத்தினால் முன்னேற வழியுண்டு!

தவறாக பயன்படுத்தினால் விபரீத வினையுண்டு!

எளிதாக கிட்டாத ஏற்றமிகு சுதந்திரத்தை

மூச்சுள்ளவரை நாமும் நாட்டுமக்களாய் காத்திடுவோம்!


ரேணுகா சுந்தரம்

15

510

தாய்க்கு நிகராக தாய்நாட்டை நேசிப்போம்/

பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்திடுவோம்/

சாதிகளை மறந்து சகோதரத்துவம் பேணுவோம்/

அடிமை வாழ்க்கையை அடியோடு அகற்றுவோம்/


ராதாமணி

16

424

காரட்டு தேரேற காலெடுத்து வைத்து

 ஊரெட்டிப் பார்க்க  ஊர்பட்ட ஆசையே

 கறிகாய் உண்டு நோய் எதிர்த்து

கரோனா துரத்தி  போவோம் வாங்க!   


குயில்மு இரசியா பேகம் .

17

614

வருடந்தோரும் சுதந்திரதின வாழ்த்துக்கள் மட்டுமே/

மீதம் உள்ளது நம் நாட்டினிலே/

ஊழலில் திளைத்த அரசியல்வாதிகள் இருக்கையிலே/

வறுமையை போக்கிட எதனை சாதித்தோம்/


விஜயலட்சுமி

18

312

சுதந்திரம் கிடைத்தது என மகிழ்வில்

தலைமுறையில் முதல் சாதனைஆசிரியர் என//

பெருமைக் கொண்டே நிமிர்ந்து வாழும்//

பெண் என படைக்கும் கவிதை....


பொ.சுப்புலட்சுமி

19

652

சுதந்திரம்   பெற    இழந்தவை   ஏராளம்/

ஒற்றுமையே  மூச்சாக   செயற்பட்டனர்   அனைவரும்/ ஒற்றுமையை குலைக்க பாடுபடுவோர்   மத்தியில்/

ஒன்றாக நின்று சுதந்திரத்தை   காப்போம்/


கூ.மு.ஷேக் அப்துல் காதர்

20

755

பொது கிணறில் தண்ணீர் அள்ள

கீழ் சாதிக்குத் தடை இருக்கு

கீழ் சாதி மக்கள் வீட்டில்

சுதந்திர நாள் கொடி பறக்கு


      - ஜெயக்குமார் சுந்தரம்            

21

344

சுதந்திரம் என்பது நினைத்தபடி வாழ்வதல்ல

பிறர் சுதந்திரத்தில் மூக்கை நுழைக்காமல்

மனசாட்சியின் குரலுக்கு விரோதம் செய்யாமல்

மனமகிழ்வுடன் வாழ்தலே சுதந்திரம் ஆகும்!


#எமா#

22

254

வரிக்குமேல் வரிபோட்டு வரிக்குதிரை ஆக்கினார்கள்/

சாதி மதம் வளர்த்து சண்டை கோழியாக்கினார்கள்/

கல்விக் கொள்ளையால்(கை) நாடு சுடுகாடானது/

(சு).தந்திரத்தால் ஏய்த்து  வாழவதெப்படி  முடியும்/


கி.மா.கனகராசன். சூலூர்.

23

207

இரத்தம் சிந்திப் பெற்ற சுதந்திரம்/

யுத்தத்தில் வென்ற அகிம்சை மந்திரம்/

நித்தம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்று/

அடிமை விலங்கை அறுத்தெறிந்ததைப் போற்று/


-முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி.

24

743

சுதந்திர போராட்ட தியாகியின் மகன்/

அரசு வழங்கிய மானியத்தை மறுத்தவர்/

எனது தந்தை என்ற பெருமிதம்/

வாழ் நாள் முழுவதும் போதுமே/


இளங்கோ

25

732

ஊரடங்கினால் வீட்டினுள் முடங்கி கிடக்கிறோம்/

வருமானம் ஏதும் இல்லாமல் பசியினால்/

சுதந்திர காற்றை என்று சுவாசிப்போம்/

விடை தெரியா புதிர் தான்/


கீதாஞ்சலி

26

588

வெளிக் காற்றில் கொரானா மாசு!//

வாய் மூடிய நிலையில் சுதந்திரம்?! //

வீட்டில் சிறைபட்டு போன நிலையில், //

நாட்டின் பொருளாதாரம் வீழாது நிமிர்த்திடுவோம். //


      ~~ பாரிஉமா. சர

27

229

பெற்ற சுதந்திரம் பேணி காப்போம்

இயற்கை வளங்களை பாதுகாத்துக் கொள்வோம்!

நற்ற விதைகள் வளர்த்துப் பெருக்குவோம்

செயற்கை தீமைகளை விரட்டி அடிப்போம்!!


த.பேபி ஷகிலா

28

278

அன்னை மண்ணது ஆனந்தம் கொண்டது/

அடிமை வாழ்வதை அழித்து நிமிர்ந்தது/

சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் துணிந்தது/

இன்னல்கள் தொலைத்து இமயத்தைத் தொட்டது/.


கிருஷ்ணலதா வசீகரன், ஜெனீவா- சுவிஸ்

29

269

மதம் பலவோடு மலர்ச்சியும் ஓங்க//

இமையென நம்மைக் காக்கும் சுதந்திரதினம்//

இமயமும் குமரியும் இணைத்திடும் வண்ணம்

மூவர்ணக்கொடியும் சிலிப்புடன் பறந்திட சுதந்திரதினம்//


ஆலங்குளம்,சொ.செ.சுப்பிரமணியன்

30

546

சொல்லில்  மட்டும்  சுற்றும்   சுதந்திரம்/

சொல்லாமல் கொல்லும்   சாதி வெறி/

ஆட்டிப்  படைக்குதே  அதிகாரத் திமிர்/

கண்துடைப்பு  ஆனது  பெற்ற  சுதந்திரம்/


செ.க.முகமட் ஹுசைன்

31

204

வீட்டுக்குள் முடங்கியே விம்முகின்றது வாழ்க்கை//

நேசத்தைத் தள்ளியே வைக்கிறது தொற்று//

சுதந்திரக் காற்றுக்கும் தடையென முகக்கவசம்//

நரகமாய்த் தினமும் நகர்கிறதே  பொழுது//


ஆஸாத் கமால்

32

707

சாதி மத பேதம் இல்லையே/

சாத்திரம் பார்த்து சண்டை இல்லையே/

அடிமைப் பட்டுக் கிடந்த நாளிலே/

அத்தனையும் உள்ளதே சுதந்திர நாட்டிலே/


✍️பா.ச.கண்ணன்

33

258

இரத்தம் சிந்தி வாங்கிய விடுதலை/

ஒருவேளை சோத்துக்கு விற்பதற்கு அல்ல/

உரிமை காத்து, கடமை செய்வோம்!

சுதந்திர உணர்வை ஊட்டுவோம் தலைமுறைக்கு/


                   தங்க. சரவணன்,வடபழநி, சென்னை-26.        

34

580

இருப்பிடம் தேடியே அலையும் தமிழர்//

தெருவினில் வாழும் துன்பங்கள் நீங்கி//

சுயமாய் வாழ்ந்திட கிடைக்கும் நன்னாளே//

உலகில் சுதந்திரம் என்னும் பொன்னாள்!//


சுந்தரலிங்கம் நிருத்திகன்.,அல்வாய்.

35

718

பெற்ற சுதந்திரத்தைப் பேணிடவே முடியாது,/

இற்றைவரை பேதங்களை வளர்க்கும் எம்மவர்க்கு,/

பெற்ற சுதந்திரத்தால் பயனும் ஏது?/

பிரிவினைகளே நாளும் வளரும் போழ்து?!/


கீழ்கரவை குலசேகரன், இலங்கை

36

261

#_சுதந்திரம் மக்களின் பிறப்புரிமை அன்றோ

அடிமை வாழ்க்கை ஆபத்தை நல்கிடுமே

தன்னுயிர் ஈந்தே போராடியவர் பலரே

அவர்தம் தியாகம் பொதுநலன் கருதியே !


~ வள்ளல் இராமமூர்த்தி

37

463

""அன்னை மண்ணை அன்னியரிடமிருந்து மீட்டநாள் !

அடிமை விலங்கோடித்து  சுதந்திரத்தை உணர்ந்தநாள் !

தியாகிகள் தம்மை நினைக்கும் நாள் !

நெஞ்சில் கொடிகுத்தி நடக்கும் நாள் !


அரவித்தன் தஞ்சை

38

317

இன்னலில் கிடைத்தது இன்பம் கொடுப்பது

உதிரத்தில் வென்றது உற்சாகம் பிறக்குது

வன்முறை சம்பவங்கள் பலகாலம் நடந்தது

வரலாற்று மையமாக சுதந்திரம் கண்டது...


க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம், அவிநாசி

39

213

ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்து கிடைத்தது //

அநியாயக் காரர்களின் கைகளுக்குப் போனது //

சொந்த மண்ணிலேயே சுரண்டுவதாய் ஆனது

முழுமையான சுதந்திரமும் கனவாக இருக்கிறது.


கவி.மரு.ஜெயக்குமார் பலராமன்.

40

373

இரவிலே கிடைத்த இனிமையான நாள்/

பெண்களுக்கு வெளியே பாதுகாப்பு இல்லை/

சுதந்திரம் இல்லாத மக்களின் வாழ்வில்/

மலருமா மகிழ்ச்சி  பதில்களை தருவாரோ!!


ஜயந்தினி வாகீசன்

41

750

ஆங்கிலேயரிடமிருந்து விடுதலையாகி அடிமைகளாகிப் போனோம்..!

ஆதிக்க சாதிகளிடமும் ஆளும் அரசியல்வாதிகளிடமும்..!

வாங்கிய சுதந்திரத்தை  வாக்குப் பெட்டிகளில்..!

போட்டுத் தொலைத்துவிட்டு போராடுகிறோம் உரிமைகளுக்காக..!

தமிழ் வேந்தன்

42

465

சுதந்திரம் சூடு பட்ட பூனையாக

அப்பப்பே அலரி துடித்து ஓடுகிறது

ஏழைகளைக் கண்டால் ஏனோ பயந்து

சுட்டவனிடமே போய் சுருட்டு படுக்கிறது.


இரா.வெங்கடாசலம்

43

618

அடிகள் வாங்கியும் அடங்காது நிமிர்ந்து/

அன்பின் வடிவாய்  அகிம்சை வழியே/

அடைந்தோம் சுதந்திரம் ஆங்கிலேயரை எதிர்த்து/

அறிவுடன் சிந்தித்து அழகாய்ப் பாதுகாப்போம்/


ஔவை.

44

409

அந்நியனின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்தே//

அகிம்சை வழியில்  போராடி இந்தியா//

சுதந்திரம் அடைந்ததுவே மக்கள் ஆட்சியின்//

எழுபத்து மூன்றைத் தொடுகின்றது இன்று//

*************

க.சுதர்சனக்குரு.

45

616

பல உயிர்களின் தியாகமே சுதநதிரம்

போராடி பெற்றதை போலிகளால் இழக்காதே

வீசும் காற்றிலும் விளையும் பயிரிலும்

விடுதலையை விதையாய் மண்ணுக்குள் விதைத்திடு


கா.கேமலாரூபினி

46

347

காய்கறி  கொண்டும் கொடியை அமைக்கலாம்/

எதனைக் கொண்டு தேசப்பற்று வளர்ப்பது?/

மும்மதமும்  சம்மதமாய் ஒற்றுமை  வளர்ப்போம் /

மூடிய இதயக் கதவுகளைத் திறப்போம்/


வேங்கடலட்சுமி ராமர்

47

224

சுதந்திரம் வந்தது; மகத்துவம் தந்தது/

தந்திரம் தெரிந்தது; தவறுகள் புரிந்தது/

எந்திரம் புகுந்தது; விந்தைகள் பெருகியது/

வந்தேமாதரம் சொல்வோம்; சுதந்திரம் வெல்வோம்/


✍🏻..க.குணசேகரன்

48

470

வெள்ளையரை விரட்டி பெற்ற சுதந்திரம் .

கொள்ளையர் கைகளில் கொடுத்தாகி விட்டது.

வறுமை  நோய்கள் வளமில்லா பாரதம்

சாதிமதச்   சண்டையால் சமத்துவம்  போனது

சுதந்திர  நாட்டில்  அடிமையாய்  வாழ்க்கை.


நா.சுகுமாறன்

49

759

நாகரீகங்கள் பல வளர்ந்திட்ட போதிலும்

நான்கு சுவர்களுக்குள் அடங்கிடும் பெண்மையும்

நாட்காலிகளால் நாட்கூலிகளாக பஞ்சம் பிழைக்கும்  நம்மவர்களும் அடைந்திட வேண்டும் சுதந்திரம்! 


இராஜா கிர்த்திக்கா

50

259

மக்கள் தொகையில் தொழில் வளங்களில்...

சிறப்பான முன்னேற்றம் கொண்ட தேசம்...

உலக அளவில் உயர்ந்த பார்வை...

சுதந்திர மண்ணில் வறியவர்களுக்கோ வசந்தமில்லை...!


ஜெயலெட்சுமி மாணிக்கம்

51

239

வாங்கிய சுதந்திரத்தின் பலன் வரியவற்கில்லை //

காய்கறியால் கொடி கற்பனையின் ஆதிக்கம்//

உடலைப் பாதுகாக்கும் சத்துள்ள பொருட்களால்///

பறக்கிறது ஆகாயத்தில் விலை உயர்ந்து////


குமார்

52

434

உதிரத்தை இழந்த உறவுகளைத் துறந்த/

கனவுகளைத் தொலைத்த கற்பனைகளைப் புதைத்த/

இன்பங்களை மறந்த இருட்டில் வாழ்ந்த/

தியாகிகளால் கிடைத்ததே தேசத்திற்குச் சுதந்திரம்//


மீனாட்சி சுந்தரம்

53

747

அடிமை  சங்கிலி  தகர்த்து எறிந்து//

மடமை வழக்கை  மண்ணில் புதைத்து//

ஏற்றம் கொடுக்கும் எண்ணம் கொண்டு// 

சுதந்திரம் காத்து  சுகமாய் வாழ்வோம்//


ஜெ.சுகமணியன், வாழப்பாடி

54

716

அகிம்சை என்பது எங்கும் இல்லை 

அக்கிரமம் செய்ய அளவே இல்லை 

பச்சிளம் குழந்தைக்குபாதுகாப்பு இல்லை

நாளும் நடக்கிறது இதற்கில்லை எல்லை

மதுவால் கெட்டது குடும்ப வாழ்க்கை

அன்றாடம் பெண்டிர் படுகிறார் தொல்லை

உண்மை சுதந்திரம் என்று கிடைக்கும் 

ஏங்கித் தவிக்கிறது மக்கள் உள்ளம்.


- நாகை. ஹாஜா

55

712

இன்னுயிர் இழந்து ஈட்டிய சுதந்திரமோ /

இந்தியத் தேசத்தில் எங்கோ போயிற்று /

மறைந்த சுதந்திரத்தை மீட்டுத் தருவதற்கு /

மீண்டும் பிறப்பாயா? எங்கள் பிதாவே. /


            ந.முருகன்

56

246

சுற்றியது இராட்டை சுதந்திரம் பெறவே.

சுழன்ற அத்தீயில்  சுருண்டது ஏகாதிபத்தியம்.

சுதந்திர நாட்டில் சுரண்டல் அதிகமாக

சுரணையற்ற  சமுதாயம் பொங்கும்போது‌ மாற்றமாகும்.


செல்வம் செல்வகுமார்

57

522

சுதந்திரம் நம்முரிமை அதுநமக்கான உரிமையே..../

அடுத்தவர் உரிமையைப் பறிப்பதும் அடுத்தவர் உடமையை.../

அடைய முற்படுவதும் மடமையென புரிவோம்.../

சுதந்திரம் என்பது யாவருக்கும் பொதுமையெனத் தெளிவோம்.../


புதுவை.க.சரவணன்

58

337

எண்ணற்றோர் தியாகத்தில் மலர்ந்ததிந்தச் சுதந்திரமே/

செங்குருதிக் கடலிலே செழித்ததிந்தத் தேசமே/

பெற்ற விடுதலையைப் பாங்கோடு காத்திடுவோம்/

தாய்மண்ணை வணங்கியே தலைநிமிர்ந்து

வாழ்ந்திடுவோம்/


|| கலாராணி லோகநாதன் ||

59

574

சிவப்பு ஆற்றில் தியாகத் தோணியில்

சிரம் ஆயிரம் சிலுவையில் அறைந்து

மறம் சாற்றி மாசறு பூமியாக்கி

அந்நியரின் கையினின்று பிரித்தோமே தேசம்.


துரைராசா காண்டீபன், திருக்கோவில்.

60

201

உயிரைக் கொடுத்து ஈட்டிய சுதந்திரம் /

அகிம்சை வழியில் வென்றெடுத்த தேசம்/

நம்மை நாமே ஆளுகின்ற அதிகாரம் 

போற்றிப் பாதுகாத்து பெருமையோடு கொண்டாடுவோம்/


புவனா சற்குணம்   கனடா

61

636

ஆரஞ்சு நிறத்துக்கு கேரட் வைத்தனையே!

வெள்ளை நிறத்தில் வேட்டி விரித்தனையோ?!//

பச்சைக்கு ஏற்ற வெண்டைக்காய் கிடைத்ததுவோ?!//

நீலநிற காயொன்று கிடைக்காமல் போனதுவோ?!


சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி

62

562

சுதந்திர பூமியில் சுகமாய் வாழ்கிறாய்/

தாய்மண்ணை மீட்டிட்டத் தியாகிகளை போற்றிடு/

நமக்காக உயிர்துறந்த வீரர்களை நினைத்திடு/

விடுதலைக்காக முழங்கிய கவிஞர்களை தொழுதிடு/


பா.பத்மநாபன்

63

723

அர்த்தஜாமத்தில் வாங்கினோம் 74ஆண்டுகளாய் தூங்கினோம்/

சுயநலவாதிகளை நம்பினோம் பொதுநலன்களை மறந்தோம்/

லஞ்சலாவண்யங்களை வீழ்த்திடுவோம் பசிபஞ்சங்களை ஓழித்திடுவோம்/

இளைஞர்களே வாருங்கள் சுதந்திரக்காற்றை நுகர்ந்திட


- நெல்லை ஆடலரசன்@Natarajan   

64

613

ஒற்றுமையே உயர்வாக ஒன்றாய் கூடிடுவோம்//

நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களைப்/

போற்றுவோம்  இந்நியன் என்பதில் பெருமைக்கொள்வோம்/

வந்தேமாதரம் கூறியே துணிந்து எழுவோம்/


ஜெயாசந்திரமோகன்

65

674

சிந்திய செங்குருதியும் சிதறிய உடல்களுமே//

தாய்மண்ணை தலை வணங்கி சாய்ந்தென்ன//

சுகந்திரமும் நிலைக்க சுற்றுமும் வாழவே//

தூபியில் தூய  உள்ளங்களும் தூங்கியதே//


இரா.தேவி

66

578

அஞ்சா நெஞ்சத்தோடு அடக்குமுறை வென்றோம்//

குருதியில் நனைந்த தாயவளை மீட்டோம்//

அகிம்சையின் மொழிகளில் அடங்கினான் அன்னியன்//

ஒற்றுமையே ஓங்க உயர்ந்தது சுதந்ரக்கொடி//


...கவியாசகன்...!!!

67

760

தந்திரம் நிறைந்தோர் தந்தது சுதந்திரம் .... /

அந்திரப் பட்டோருக்கு அது மந்திரம் ........,

சிந்திய இரத்தத்தின் சித்திரம் இது .........

சாதித்துக் காட்டிய சரித்திரம் இது ........


கிழக்கு வானம் முஸ்தபா மெளஜூத்


போட்டி நிறைவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages