>>>>>>>நேசித்துப் பார் - தென்குமரிக் கவிதைக்களம்

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

>>>>>>>நேசித்துப் பார்

 



என் நண்பனே,


நேசித்துப் பார்

குடும்பத்தை நேசித்தால்

பொறுப்புகளை உணரலாம்.......


நேசித்துப் பார்

உறவுகளை நேசித்தால்

இன்பத்தினளவு உயரலாம்.......


நேசித்துப் பார்

நட்பை நேசித்தால்

தனிமையினளவு குறையலாம்......


நேசித்துப் பார்

மனைவியை நேசித்தால்

அன்பின் எல்லை விரியலாம்........



நேசித்துப் பார்

குழந்தைகளை நேசித்தால்

துயரினளவு குறையலாம்.......


நேசித்துப் பார்

முதியோர்களை நேசித்தால்

வாழ்வின் அனுபவம் தெரியலாம்........


நேசித்துப் பார்

ஆதரவற்றோரை நேசித்தால்

உண்மை அன்பை தெரியலாம்.......


நேசித்துப் பார்

ஊனமுற்றோரை நேசித்தால்

இறைவனின் கருனையை தெரியலாம்.......


நேசித்துப் பார்

விலங்குகளை நேசித்தால்

அவற்றின் மொழி தெரியலாம்.......


நேசித்துப் பார்

வெற்றியை நேசித்தால்

வாழ்வின் போராட்டத்தை ரசிக்கலாம்.......


நேசித்துப் பார் - எவ்வித

எதிர்பார்ப்பில்லாமல்

நேசித்துப் பார்........


உன்னைப் போல்

பிறரையும் நேசித்து பார்

மனிதரில் மாணிக்கமாய் திகழலாம்........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages