Sl | எண் | புகைப்படம் | கவிதை |
1 | 745 | விடியும் வரைக்கும் விழிகள் மூடாது பம்பரமாய் சுழன்று பாடுபட்டு உயிர் காக்கும் உன்னத சேவை க.சுலோஜனா | |
2 | 247 | விடியல் நாளை என்ற நம்பிக்கையில்/ நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது/ தொற்று நோய்க்கு தடுப்பூசி வரும்வரை / த.காமராசு.உ.எண்.247 தாராசுரம் கும்பகோணம் | |
3 | 266 | இடைவெளி விட்டு நடைமுறைப் படுத்தி இன்னல் வராது இல்லத்தில் இருந்து பணிதனைத் தொடர்ந்தால் பலனதுகிட்டும் ...பூமகன்... | |
4 | 463 | தொற்றெனும் காலம் தொடங்கியது முதல் இன்னல்கள் சந்தித்தோம் நாம் . ஒற்றுமை காட்டி வென்று காட்டுவோம் ! அரவிந்தன் தஞ்சை | |
5 | 210 | உலகினை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோயினால்... அவதியுறும் மக்களுக்கு மருத்துவர்களே...! உரைத்திடுவீர் உரக்க விடியல் எப்போது....? திருமதி சுப்ராணி சிவகுமார்.....✍ | |
6 | 735 | உலகெலாம் பரவி சீரழிக்கும் கிருமி/ மருத்துவ களத்திற்கு அபாய எச்சரிக்கை/ அறிவியல் ஆராய்ச்சி காக்குமே.
படைப்பாளி பைரவி | |
7 | 414 | நோயும் நொடியும் முடிவது எப்போது/ தேயும் வாழ்வும் தெளிவதும் காயும் கனிய விடியலும் எப்போது/. சோ.மீனாட்சிசுந்தரம் | |
8 | 725 | உலகையேச் சூழ்ந்துப் பற்றியதேக் கொரோனா/ நோயாள் மக்கள் அவதிறுற்று மடிகிறார்களே/ 'விடியல் எப்போது' இறைவா.................................✍️ கவிஞர். மரு. கி. ம. எழிலன் | |
9 | 746 | முகங் காட்டா முழுச் சனியன்/ மூச்சடைத்து மூர்ச்சையாக முழுநேரம் சுத்துகிறான்/ விடியல் எப்போது முடிந்தால்தானே/ --- மௌஜீத் ஏ ஹசன்--- | |
10 | 482 | தொற்றால் தொடரும் துன்பம் விலகிடவே ! கற்றவர்கள் மருந்து காணும் வரை ! நம்பிக்கையுடன் உறுதியுடன் தனித்திருப்போமே . தஞ்சை கோ பாலசுப்ரமணியன் | |
11 | 258 | இறையும் காணாது இருக்கும் நேரம்/ எதைக் கண்டும் அஞ்சாதே/ தொடர்ந்திடு பயணம், நிச்சயம் விடியும்! தங்க. சரவணன், வடபழநி, சென்னை-26. | |
12 | 378 | நவீன யுகத்தில் நாதியற்றுத் தவிக்கின்றோம் மானிடர் வாழ்வில் இத்தனை துன்பமே காலங்களைக் கழிக்கின்றோம விடயலுக்காய் முல்லை நிரோயன் | |
13 | 483 | புன்னகை இழந்தோம் வீட்டில் புதைந்தோம் பொருளா தாரம் பாலை ஆச்சு இறைவா விடியல் எப்போது ? ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை | |
14 | 401 | செக்கிலிட்ட வித்தென மக்களைக் கசக்கி பிழியும் கயவர் கூட்டம் புத்தொளி பிறக்குமா? விடியல் எப்போது? செல்வம் பழனியப்பன். | |
15 | 450 | முடங்கிய வாழ்க்கையும் பாதித்த நோயாளிகள் மீள்வதும் தொற்றியத் தொற்றுநோய மாய்வதும் எப்போது! விடியுமே வாழ்க்கையும் அப்போது! ரேணுகாசுந்தரம் | |
16 | 669 | திடீரென உதித்தாய் திகைப்பில் ஆழ்த்தியே..! உயிரினை உறிஞ்சும் உயிர்க்கொல்லி ஆனாய் எப்போது விடியல் கிடைக்குமோ.....! நஸீரா வசூக் | |
17 | 207 | தொற்றுக் கிருமிகளின் தொடர்ந்த தாக்குதலால்/ மனிதயினமே அச்சத்தில் தவிக்கிறது/ மாற்றங்கள் தந்திடும் விடியல் எப்போது?/ -முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி. | |
18 | 240 | விழித்திருந்து விலகியிருக்க தனித்திருந்து தவிர்த்திருக்க// விளக்கம் கேட்டால் விடை பெறும்// நாட்களும் விரைவில் வந்திடும்// உமா பாலகிருஷ்ணன், பெங்களூர் 🏵️ | |
19 | 727 | விடியாத விடியலுக்காக ஏங்கும் விழிகள் // விடைகொடு இறைவா மனமிரங்கி // விடக்கிருமி மடியட்டும் மருத்துவம் ஓயட்டும் // சுசி சுசேனு | |
20 | 510 | தொற்றும் பற்றுதே விடாமல் துரத்துதே/ விந்தை உலகில் விடியல் எப்போது/ மனம் கலங்காது காத்திருப்போம்/ ராதாமணி | |
21 | 709 | விழியுறங்கா கண்கள் கவலையில் மனிதம் // கொரோனா தொலைந்தது வாழ்க்கை// தெய்வமாய் மருத்துவம் தூய்மைப் பணி // தாழை. இரா. உதயநேசன் | |
22 | 755 | தொழில் நிறுவனம் மூடிக் கிடக்குது ஏழை வயிறு வாடிக் வதங்குது எதிர்காலம் கொரோனா கையில்?. - ஜெயக்குமார் சுந்தரம் | |
23 | 726 | தனித்திருந்தால் நாளைய உலகம்/ கூடியிருந்தால் அனைவரின் வாழ்க்கையும் நரகம்/ பாவம் இன்றைய மருத்துவர்களின் நிலையும்/ --காளிராஜ்பாலகணேஷ் | |
24 | 722 | தொற்றினால் பற்றிய உயிர்க் கொல்லியே/1 மனித உயிர்களை வதைக்காமல் செல்வாயே/2 மானிடருக்கு விடியல் எப்போது/3 சுஜாதா அருணாச்சலம் | |
25 | 344 | ஆட்கொல்லும் ஆட்கொல்லியின் ஆக்கிரமிப்பான ஆட்கொள்ளலில் இருந்து மானிடர் எமக்கு பூரண விடியல் எப்போது ஆண்டவரே? #எமா# | |
26 | 317 | மருத்துவ உலகம் போராடி வருது மகத்துவம் இல்லாமல் போகுது வருத்தம் அளிக்கிறது கிருமிகள் தாக்குது க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம், அவிநாசி | |
27 | 254 | விடுதலை பெற்றும் எளியோருக்கு விடியலில்லை/ கொரோனாவால் முகத்தை மூடினோம்/ கொடும்பசியை எதைக் கொண்டு மூடுவது/ கி.மா.கனகராசன்.சூலூர். | |
28 | 337 | தொடரும் தொற்றினால் முடங்குதே வாழ்வு/ என்றுதான் கிடைக்குமோ தீர்வு/ விரைவில் வந்திடுமோ இதற்கொரு முடிவு/ கலாராணி லோகநாதன் | |
29 | 652 | வேண்டாததை உண்டவன் பரப்பி சென்றானே!/ எமன் வலை விரித்து பிடிக்கிறானே!/ இதிலிருந்து விடியல் எப்போது
கூ.மு.ஷேக் அப்துல் காதர் | |
30 | 434 | தனித்திருந்து விழித்திருந்து சமூக இடைவெளியில்/ இன்னும் சிலகாலம் பயணம் தொடர்ந்தால்/ விரைவில் மலரும் விடியல்// மீனாட்சி சுந்தரம் | |
31 | 614 | கனவுகளும் கற்பனைகளும் உண்மையாகிவிடும் என/ நம்புகிற இளமை கால எழுச்சிகள்/ விடியலை நோக்கி செல்கின்றன/ விஜயலட்சுமி | |
32 | 717 | ஆளைக் கொல்லும் ஆட் கொல்லியே நாளை கொலை ஆவாய் விடியும் வேளை வரும் விரைவில் கந்தசாமி நடேசன் | |
33 | 604 | ஊரடங்கி உறவடங்கிப் இருந்தாலும்// மனம் அடங்கி வீடடங்கி இருக்கும் வரை// தானடங்காது தலைவிரித்தாடுமே தொற்று// ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃகவிஞர் கோவை ஆறு-முகம் | |
34 | 597 | மனதினுள் ஏக்கம் விழிகளில் கண்ணீர் / ஆதவன் வரவல்லவே விடியல்../ நோயற்ற சுகந்திரமான வாழ்க்கையே வியலெப்போது?// லக்க்ஷிகண்ணா | |
35 | 409 | தடைகள் பலவும் தாண்ட வேண்டும்// விடியல் எப்போது கிடைக்கும்// மட்டின்றி பெருகிறது கொரோனா வைரசு// க.சுதர்சனக்குரு. | |
36 | 201 | பெற்ற சுதந்திரம் பேண முடியாமல் / உயிர்கொல்லி நோயொன்று உலகினை வெருட்டுதே / விடியல் எப்போது கிடைக்குமா நிம்மதி// புவனா சற்குணம் | |
37 | 757 | நாளை வரும் ஆயிரம் ரூபாய் என்ற மனக்கோட்டையில் மலையக விழிகள் மலையேறுகின்றன விடியல் எப்போது? இரா.டயாளினி | |
38 | 699 | கோரக் கொரானாவின் கட்டுப்பாட்டில் இந்திய/ நாட்டின் சுதந்திரத் தினம்/ இருண்டுக் கிடக்கிறது மகிழ்ச்சியின்றி அமைதியாய்/ முனைவர்.அக. வீரவன்சாரா | |
39 | 707 | விரட்டும் கிருமியோ தொடருதே தினமும்/ இழக்கும் உயிரோ உயருதே நாளும்/ கலங்கும் பொழுதும் விடியுமோ? ✍️பா.ச.கண்ணன் | |
40 | 278 | ஆளறியாக் கிருமியாய் அகிலத்தை அலைக்கின்றாய்/ அடுத்தவேளை சோற்றிற்கு அந்தரிக்க வைக்கின்றாய்/ விடியல் எப்போது?? வினாவானதே./ கிருஷ்ணலதா வசீகரன், ஜெனீவா- சுவிஸ் | |
41 | 269 | உயிர் சுவாசமெனும் இயல்பான மூச்சிகாற்றை முக கவச சிறைக்குள் சிறைப்படுத்தியே வாழ்கிறோம் விடுதலைக்கான நாட்களை எண்ணியப்படியே ஆலங்குளம், சொ.செ.சுப்பிரமணியன் | |
42 | 204 | கொள்ளை நோயும் கொல்லும் துயரம்// பயத்தில் நடுங்கிப் பயணிக்கும் அவலம்// முடியாதோ இறைவா விடியாதோ// ஆஸாத் கமால் | |
43 | 347 | உலகெங்கும் நடக்கிறது அதிரடி ஆட்குறைப்பு / தொல்லைகள் தொடர்கதையாய் விடாது விரட்ட/ முடிவுரை எழுதத் தொடங்கிட்டோம்/ வேங்கடலட்சுமி ராமர் | |
44 | 706 | நுண்கிருமிகள் கொல்லும் நூராயிரம் உயிர்களை/ உள்ளம் பதைக்க உறையுதே இரத்தமும்/ சொல்லாயோ இறைவா விடியல் எப்போது/ மாயாதேவி ,சென்னை | |
45 | 750 | வியாதி தொற்றி படுக்கையில் விழுந்தவர்கள்..! விரைவில் குணமடைந்து எழுந்திடும்..! விடியல் வந்திடாதோ பலிகளும் குறைந்திடாதோ..! தமிழ் வேந்தன் | |
46 | 758 | சுடும் ஆயுதங்கள் துளைத்தாலும் ... உயிர் மூச்சே நின்றாலும்... விடியும் என்றே போர் எல்லையின் வீரர்கள். சாந்தகுமாரி | |
47 | 592 | மடியல் தொடரும் அவலத்தில் உயிர்க்கொல்லி வடியலின்றி நாளும் தொற்றும் கொடுமையில் விடியல் எப்போதென்று யாரறிவர் கவிஞர் ராம்க்ருஷ் | |
48 | 718 | உயிர் அழிக்கும் 'கொரணா'வின் தாக்கத்தாலே;// உலகத்தில் நடக்கின்ற கொடுமை நீங்க,// விடியல் எப்போழ்து வரும்?!// கீழ்கரவை குலசேகரன்,இலங்கை | |
49 | 242 | விடியும் வரையில் நாமும் காத்திருந்தால் விந்தைகள் எதையும் சாதிக்க இயலாது விரைந்துவா விடியச் செய்வோம்……. கவி செங்குட்டுவன் | |
50 | 373 | முகக்கவசம் காத்திடும் கொரோனா வராதென வைத்தியர்கள் கண்கள் தூக்கமின்றித் தவிக்க மக்களின் விடியல் எப்போது!! ஜயந்தினி வாகீசன் | |
51 | 580 | உலகினை விரட்டும் கொடிய நோயால்// பல உயிர்கள் மடியும் நிலையில்// உலவுகின்றோம் விடியல் தேடி// சுந்தரலிங்கம் நிருத்திகன்., அல்வாய். | |
52 | 246 | முடியாத தொற்றினால் விடியாத வாழ்க்கையில் படியாத நோயும் இடியாக தொடர்கிறதே விடியலும் வந்திடுமோ இம்மண்ணிலே. செல்வம் செல்வகுமார் | |
53 | 206 | ○இயற்கையின் வரமாம் பசுமை காய்கள்/ ○தவிற்தே உண்டோம் குறைந்தது வீரியனுக்கள்/ ○தொற்றாய் பற்றியது எளிதில்/ சோலைகண்ணன் | |
54 | 261 | தொற்றினால் வருகின்ற தொல்லைகள் ஏராளம் மக்களின் துன்பங்களுக்கு விடிவுதான் கிடைக்குமோ இல்லையேல் வாழ்நாள் முழுதும் தொடருமோ ! ~ வள்ளல் இராமமூர்த்தி | |
55 | 613 | விழித்திருந்து காத்திருப்போம் சுகாதாரத்தைப் பின்பற்றுவோம்// மருத்துவ உலகம் தடுப்பூசியை கண்டுப்பிடிப்பர்/ ஆராய்ச்சியாளரை நம்புவோம் விடியும்/ ஜெயாசந்திரமோகன் | |
56 | 710 | உலகையே உலுப்பும் கொடிய நோயாம்/ பாடகரைக் கூட பாடாய் படுத்துகிறது / எப்போது விடியல் எமக்கு/ அம்பிகா ஸ்ரீகுமார் | |
57 | 256 | அபாய வலையில் சிக்கித் தவிக்கிறோம்/ அனைவரும் ஆபத்தென விலகி ஒதுங்குகிறோம்/ இதற்கு விடிவுதான் எப்போது . நட்புடன் ஜெயபால் வி.பி. | |
58 | 560 | வாழ்வே ஏக்கமாய்ப் போனதே/ அதனால் துக்கமாய் வாழ்கிறோமே/ இன்பம் எப்போது வரும்? தயா | |
59 | 618 | வரலாறு காணாத தொற்றுக் கிருமியால்/ வாழ்வெல்லாம் இருள் மயம் ஆனதே/ விரைந்து வந்திடு விடியலே/ ஔவை. | |
60 | 241 | சுதந்திரமாய் வாழ்ந்தோம் எங்கிருந்தோ வந்த தொற்றைக் கண்டு அஞ்சியே வாழ்கிறோம் முகத்தை மூடியபடி தீர்வின்றி!! அனுராதா நாகப்பன். | |
61 | 224 | விடியுமென்ற நம்பிக்கையில் தொடர்கிறது வாழ்க்கை/ துடிப்போடு வென்றிடுவோம் நோய்த்தொற்று அபாயத்தை/ மடியட்டும் அடியோடு உயிர்க்கொல்லி/ ~க.குணசேகரன் | |
62 | 616 | சுயநலம் விடுத்து பொது நலத்திற்காக போராடும் பூமியின் தெய்வங்கள் கிருமி அழிந்து விடியல் மலருமா கா.கேமலாரூபினி | |
63 | 348 | சுருண்ட கிருமி உலகை மடக்க // கைப்பிடிக்குள் மனிதன் ஆராய்ந்தான் // மிரண்டான் வானமெங்கே விடியல் எப்போது // உடுமலை ராமர் | |
64 | 243 | நான்கு சுவர் இடுக்கினிலே முடங்கியதால் // பகலும் இரவானது கொரோனா கொடியவளாள் // நோயிலிருந்து விடுதலை எப்போது // இந்திரா ஆனந்தன் | |
65 | 259 | மருத்துவ வல்லுநர்களுக்கு சவால் விடுத்து... லட்சக்கணக்கான உயிர்களை அழித்த... நுண்கிருமியின் மரணத்திற்கு உலகம் காத்திருப்பு...! ஜெயலெட்சுமி மாணிக்கம் | |
66 | 759 | இன்ப துன்பமான இயற்கையிலே செயற்கை செய்வினைகளை செய்திட்ட மனிதமே! மதங்களை மறந்து மனிதத்தை உணர்வதெப்போது? இராஜா கிர்த்திக்கா | |
67 | 399 | ☀/ காலைக் கதிரவன் பூபாளம் பாடுமே!.../ ☀/ உதயத்தில் உழவன் உழவு செய்திடவே .../ ☀/ நாளைய விடியல் நமக்காகுமே!.../ --சாக்கை.பொன்னழகு. | |
68 | 721 | விடியல் என்ற ஒன்று/ தன்னைத் தட்டி எழுப்பும் என்று/ கண்மூடி உறங்குவோர் விழிக்கும்போது விடியல்.../ ......பாலு தியாகராசன்...... | |
69 | 716 | முகக்கவசம் அணிந்திட்டோம் இடைவெளிவிட்டும் நகர்ந்திட்டோம் //1 கைகளைச் சுத்தமாய்க் கழுவிட்டோம் //2 காத்து நிற்கிறது விடியல் மருந்திற்கென்றே. //3 - நாகை. ஹாஜா | |
70 | 747 | உயிர்கொல்லி மடிந்து விடியல் எப்போது// நடந்திடும் ஆய்வுகள் தந்திடும் தீர்வுகள்// மலர்ந்திடும் மனிதம் நிலைத்திடும் எப்போதுமே// ஜெ.சுகமணியன், வாழப்பாடி | |
71 | 674 | கண்களுக்குத் தெரியாத கயவனே கருணையில்லா// கடுகளவு காலனிடமே விலைகளாக உயிர்களும்// விடியலே விரைந்து வருகவே// இரா.தேவி | |
72 | 239 | இயற்கையின் சீற்றங்கள்கூட பரவாயில்லை// உயிர்ப்பலி வாங்கிடும் தோற்றுக்கிருமி// ஏனிந்த கோரப்பசி மனிதர்களை///அழிப்பது யாரோ//// குமார் | |
73 | 425 | தொற்றும் நோயால் ஊரடங்கு வந்ததே மாற்றமும் கிடைக்கட்டும் இறைவனின் கருணையோடு காத்திருப்போம் நாமும் விடியலுக்காக கலாகண்ணன் | |
74 | 388 | கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமி வந்து கலைத்தது இயல்பு வாழ்க்கையை, விடியல் தேடுவதே வாழ்க்கையானது இப்போது...! செண்பக ஜெகதீசன்... | |
75 | 636 | முடிவில்லா தீநுண்மி உலகை விட்டொழியும்/ நாள் எந்நாளோ அந்நாளே// விடியும் பொன்னாள்! சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி | |
76 | 574 | விலையிலா உயிர்க்கு முடிவிலா பிணி/ பனித்துளி ஈர்க்கும் பகலவனே / விடத்துளி உறிஞ்சும் விடியல் எப்போது ./ துரைராசா காண்டீபன், திருக்கோவில். | |
77 | 562 | மருத்துவரின் அறிவுரையை மனதிலேற்று / வாழ்கை முறையை உறுதியாய் மாற்று/ நோய்த்தொற்று தொலைந்து விடியல் பிறக்குமே/ பா.பத்மநாபன் | |
78 | 287 | மறையும் காடுகளும் இறக்கும் இயற்கையும் என்றோ கேட்டன விடியல் எப்போதென்று இன்று கேட்கிறான் மனிதன் தண்டபாணி | |
79 | 564 | விடியல் எப்போது விடை கொடு அடைபட்டுத் தினம் வதைபட்டது போதும் இனியும் பொறுக்க மாட்டோம். இராசையா கௌரிபாலா. | |
80 | 515 | கொடிய நோய்க்கிருமி அரக்கனிடம் சிக்கிய/ குவலயத்தின் வேதனை இருளகன்ற விடியலுக்காகக்/ கண்ணீரோடு மூச்சுத்திணறிக் காத்திருக்கிறோம் /
லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன் | |
81 | 226 | நல்லோர் வாழ்வதுவே நலிந்தது இப்போது/ / மூடர்கள் ஆட்சியினால் அழிந்தது பாரம்பரியம்/ / உலகிற்கினி விடியல் எப்போது/ இராம.சுதாகரன்.சென்னை.. |
விடியல் எப்போதென
விநயமாய் கேட்டதற்கு
விடியல் இப்போதென
விரைவாய்ப் பதிலின்றி
விரக்தியாய்ச் சோகமாய்
விவரித்தீர் நிலைமைகளை
விடியலுக்குத் தூரமில்லை
விடியலதும் உண்டிங்கே
விடியும்வரைக் காத்திருப்பு
விளக்கேந்தி ஒளியளிக்க
வித்தகராய் மருத்துவரும்
வித்தகத்துச் செவிலியரும்
வித்ததுவாய் விழுததுவாய்
விலக்கின்றித் தியாகமாய்
விரவிட்டு மனிதமாய்
வியப்பின்றிப் புனிதமாய்
வில்லத்தனத்துக் தாக்கத்தை
விவரமாய்க் கையாண்டு
விலக்குகின்றார் துயரதனை!
விழுந்திட்ட மனிதகுலம்
விழுப்பமுறும் நாளதுவும்
விழைந்திட்டால் நேர்மையாக
விளைந்திடுமே பயனதுவும்
விடிந்திடுமே கடந்திடாது
விடியலாலே கடந்திடலாம்
வில்லங்கத் தொற்றிதனை!
பங்கேற்ற கவிவுறவுகளுக்கு, நன்றியையும் வாழ்த்துகளையும்,
தென்குமரி கவிதைக்களம்
கறுகின்றதிங்கே!
போட்டிக்கான பதிவுகள் நிறைவுறுகின்றது;
மீண்டும் சந்திப்போம் மகிழ்வாக " மூவழில் மூன்றிலே"
என்றும் அன்புடன்
மருத்துவகவிஞர் பெ.தி.சுகுமார்&
பரமராஜ் முதாதையா.
82 | 749 | தானா வந்ததில்லை சீனா தந்ததென்று வீணா விளம்பாமல் வீறு கொண்டெழுவோம் விடை கொடுப்போம் கொரோனாவுக்கு க.மூ.முகம்மது றிஸ்மி இலங்கை | |
83 | யுகங்களின் எழுச்சியை போல், மனிதனின் மனிதங்கள் விடியுவது எப்போது..? கதிரவனின் மறைவின் பின்னா? இராசலிங்கம் சுதர்ஷினி |



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக