19.08.20-கல்லிலே கலை வண்ணம் கண்டான் - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

19.08.20-கல்லிலே கலை வண்ணம் கண்டான்

 












Sl

எண் 

புகைப்படம்

கவிதை

1

462

பார்வையை மாற்றினால் பாதையை மாற்றலாம்/

விழிப்புணர்வுடன் கல்லைச் செதுக்கும் சிற்பி/

காணுவான் கடவுளை அச் சிற்பத்திலே/

சிலைகளின் அழகு சிந்தனையின் சிறப்பு/


எம் புலன் அடங்கும் கல்லிலே/

அனைத்தையும் வெளிப்படுத்துதே ஓர் கல்/

கல்லின் பொறுமை அழகிய உருவமாகிறதே/

உனது பொறுமை உன்னத மனிதனாக்குமே/


தயா

2

244


எண்ணற்ற எண்ணங்களின் வடிவமைப்பு சிலைகள் //

தன்னம்பிக்கை கொண்டே சிற்பியும் படைப்பான் //

விழிப்புணர்வால் விந்தைகள் பல கண்டிடுவான் //

கள்ளமில்லா வெள்ளை உள்ளம் கொண்ட //


சிலைகளையும் செதுக்கிடுவான் கல்லிலும் கலையாய் //

ஆவேசமுகத்தையும் அழகாக வடித்திடுவான் அன்புடன //

கல்லிலே கலைவண்ணம் சிற்ப்பியின் குருதியாகும் //

உயிரேற்றம் கொடுத்திடுவான் தன்னுயிர் மூச்சாலே //


கவிஞர் கோவை செல்லப்பன்

3

250


ஆதி மனிதன்  குகைதனில் வாழ்கையில்/

ஆயுத மாக்கினான் கற்களை தற்காத்திட/

அடுத்து வந்தவன் கல்லிலே கண்டான்/

காக்கும் கடவுளை ஆனந்தம் கொண்டான்/


கற்பனைகளை கண்ணில் கண்டான் விரலிடைக்/

கொண்டான் வடித்து வைத்தான் சிலைதனை/

எண்ணங்களை வடிவங்களாக்கி செதுக்கிய சிலைகளில்/

கலைகளை தந்தான் மகழ்ந்து மகிழ்வித்தான்/


செல்வலஷ்மி

4

716


கையினிலே உளிபிடிக்க உருவானது கற்சிலை

கவனமெங்கும் சிதறாமல் எண்ணமெல்லாம் ஒருநிலை

நினைத்தபடி வந்துவிட்டால் சிந்தைக்கொள்ளும் மகிழ்ச்சி

சற்றேயது சிதைந்துவிட்டால் வந்திடுமே இகழ்ச்சி


பிள்ளைபேறு போலவே மிகுந்த சிரமமிருக்கு

வெளியானச் சிலைகளுமே ரசிக்கும்படி இருக்கு

அத்தனைக்கும் பொறுப்பேற்று சிற்பியங்கே நிற்கிறார்

சேயைபார்த்த தாயைபோல தூக்கிக்கொஞ்சி மகிழ்கிறார்.

நாகை. ஹாஜா

5

707


பாறையில் மறைந்து கிடக்கும் சிற்பமே.!/

பார்வையில் கண்டு எடுத்தான் சிற்பியே.!/

அல்லவை அகற்றிட அன்றாடம் உழைக்க/

நல்லவை சிற்பமாய் நயமாய் வந்ததே/


சிற்றுளி ஒன்று செய்திட்ட செயலில்/

சிறுபொறி ஒன்று சிந்தையில் வந்ததே/

அல்லவை தேடியே அனுதினம் மாற்றுவோம்/

நல்லவை நாடியே நலமாய் போற்றுவோம்/


✍️பா.ச.கண்ணன்


6

745


கலை வண்ணம்,இறைவன் கொடை /

எண்ணங்களும் கற்பனைகளும் சிந்தையில் எழுந்ததுமே/

கல்லையும் கடவுள் ஆக்கிடுவான் சிற்பி/

உளியினால் செதுக்கியே உருவம் அமைத்திடுவான்/


படிக்கல்லையும் தடையாக நினைக்காமலே படைத்திடுவான்/

அற்புதச் சிற்பங்கள் சிலைகளும் உயிர்த்திடுமே/

விதிமுறைகள் யாவும் விளக்கமாய் தெரியுமே/

வித்தையென வியந்து பார்த்திட வைத்திடும்


க.சுலோஜனா

7

735


சிற்பியின் கனவு உலக அங்கிகாரம்/

பாராங்கல் உளியால் அழகு சிற்பம்/

சுத்தியின் அடி உளியின் வலி/

கடின உழைப்பு கல் உயிர்பு/


கல்லில் கழிப்பு செயலில் சிலை/

அடிமாட்டுக் கூலி கொத்தடிமை சிற்பி/

தொல்லியல் சிலை கடத்தினால் கோடி/

சிற்பச்சிகர நகரம் மகாபலிபுரம்,


   படைப்பாளி பைரவி

8

763


கல்லைக் கண்டு ஒதுங்கிச் சென்றான்/

கல்லைக் கொண்டு நெருப்பு மூட்டினான்/

கல்லைக் குடைந்து  குகை அமைத்தான் /

கல்லுக்குள் இருக்கும்  சிற்பத்தைக் கண்டான் /


கல்லை உளியால் செதுக்கி நின்றான்/

கல்லில் பிறந்தது கலை உணர்வு /

கல்லில் இருந்து பிறந்த சிலையை /

கடவுள் என்று வணங்கி நின்றான்/


பிரேமா பூ


9

541


தமிழனவன் பெயர் சொல்லி நாளை

தரணியாள வந்த இந்த நிலை 

தமிழின் பாரம்பரியம் தனைப் போற்ற 

தானாய் உதித்த புதிய முறை....


கல்லிலே கலை வண்ணம் கண்டு

சொல்லிலே எங்கள் உரிமை வென்று 

எண்ணியே முடிக்கும் எதுவும் நின்று 

எழுது தமிழின் மூச்சே என்று.....


முல்லை நீதன்......

10

221


சிற்பியின் மனத்துச் சிந்தனையில் பிறந்தது

சிற்பமும் வடிவமும் சிறப்பாக அமைந்தது

கற்புள்ள பெண்மையும் கடவுளின் உருவமும் 

கற்பனைப் படைப்பாய் கவின்மிகு கலையாய்


இத்தரையில் வந்திடும் இன்பச் செயல்களின் 

இத்தனை அழகின் இனிய செல்வங்கள்

புத்தியுள்ள மனிதனின் புதுமைப் படைப்பாய்

புத்தம் புதியதாய் புதிதச் சிற்பக்கலையே


புஷ்பா கிறிஸ்ரி

11

344


இயற்கையின் படைப்பில் எதிலும் குறையில்லை

இயலுமை உள்ள கரங்களில் கிடைப்பின்

புல் கூட பாயாக மாறும்

கல் கூட சிலையாக ஆகும்


படைப்புக்கள் எல்லாம் கலைநயம் மிக்கவையே

பார்ப்போர் கண்களே பொருள் கொடுக்கின்றன

வடிவற்ற கற்களே அழகான சிலைகளாகையில்

வனப்பான மானிட வாழ்வு கலையாகாதோ!


#எமா#


12

580


கல்லைக் கண்ட சிற்பி அவனே//

எல்லை இல்லா மகிழ்ச்சி கொண்டான்//

உளியை எடுத்தே சிற்பம் செய்தான்//

அளித்தான் அவனே அழியாத உருவை//


மனதில் நிறைந்த கலையின் உணர்வை//

தனது கையால் செதுக்கும் அவனோ//

வரலாற்றை பதிக்கும் வல்லவன் தானே//

உரத்தே சொல்வோம் உத்தமன் அவனென!//


சுந்தரலிங்கம் நிருத்திகன்., அல்வாய்.


13

317


கல்லில் மண்ணில் வடிப்பது சிற்பம்/

கலைஞர் திறமையைக் காட்டும் நித்தம்/

கடவுள் சிலைகள் தத்ரூபம் இருக்கும்/

முன்னாள் இன்னார் தலைவரை வடித்தும்/


பூங்காவில் வைக்கக்  கண்டு களித்தனர்/

பூமியில் சாதனைகள் படைத்த மனிதர்கள்/

வருகின்ற தலைமுறை தெரிந்து கொள்ளவே/

வடிவங்கள் உருவங்கள் கல்லில் இருப்பதே/


க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம், அவிநாசி

14

510

வலி தாங்கும் கற்களே சிலையாகும்/

உளியின் உதவியுடன் சிற்பம் பிறக்குமே/

சிந்தையில் தோன்றும் கற்பனைகள் சிலையாகும்/

கைகளின் உதவியுடன் கலைநயம் படைப்பார்கள்/


துன்பங்களைத் தாங்கினால் இன்பங்கள் வந்திடுமே/

வலிகளைத் தாங்கினால் வழிகள் பிறக்குமே/

சிற்பியின் திறமையால் சிற்பங்கள் வளம்பெறும்/

கல்லிலே கலைவண்ணம் பாங்காய் மிளிருதே/


ராதாமணி

15

482


உளியால் கலை வடிக்கும் சிற்பி! 

கற்பனையை சிலை வடிக்கும் அற்புதமே!

வறுமையை அகற்றும் பெருமையை உயர்த்தும் !

கல்லில் செதுக்கும் சிற்பம் சிறந்ததே!


கல்லில் இறைவனை படைக்கும் படைப்பாளி !

காணவும் கண் கோடி வேண்டுமே !

எண்ணத்தை வண்ணமாகி உயிர் கொடுப்பார் !

கலை நயத்தை வியந்து போற்றுவோமே.


 தஞ்சை கோ பாலசுப்ரமணியன்

16

755

கல்லொன்றைக் கண்டெடுத்தான் கற்பனையில் சிலையமைத்தான்

சிந்தனையில் வடிவமைத்துச் சிற்றுளியால் செதுக்கிவைத்தான்

கல்லுக்குள்ளே ஒளிந்திருந்த அழுக்கையெல்லாம் அகற்றிவிட்டான்

கண்களுக்கு விருந்தளிக்கும் கலையழகைச் சமைத்துவைத்தான்

கருவறைக்குள் அருள்புரியும் கடவுளையும் காணவைத்தான்

கண்களையே கவர்ந்திழுக்கும் கன்னிப்பெண்ணைக் காட்சிவைத்தான்

கல்லினிலே சிற்பியவன் கலைவண்ணம் கண்டுகொண்டான்

உளிக்கொண்டு தாளமிட்டு அபிநயங்கள் புரியவைத்தான் ஜெயக்குமார் சுந்தரம்         

17

747


சிற்பியின் எண்ணம் சிலையின் வண்ணமே //

கையின் வித்தை கலைகள் வளர்த்திடுமே// 

கற்பனை வடிவம் கற்சிலை வார்த்திடுமே// 

கடவுளை படைத்திடும் பிரம்மனும் சிற்பியே//


உளியின் உறவு  உதிரும் துகள்கள்//

உருவம் பெறும் உறுதிக் கற்கள்// 

உலகில் நிலைத்து உற்சவ மூர்த்தியென// 

கருவறைத் தரிசனம் தருவது நிதர்சனம்//


ஜெ.சுகமணியன், வாழப்பாடி

18

201


உளிகொண்டு கல்லுடைத்து சிலைசெய்வான் சிற்பி /

கலையுணர்வு கொண்ட கவிஞனாம் அவனே/

உழைத்து ஊதியம் தேடும் படைப்பாளி/

கற்பனையை உருவாக்கி கடவுளையும் வடித்திடுவான்/4


கலையழகு கொண்டவன் கல்லிலே கருணையை /

கைகளால் செதுக்கி பேச வைத்தவன்/6

கடவுள் அவதாரங்களை கண்முன் படைத்தவன் /

பாறாங் கல்லையும் வணங்கிட வைத்தவன் //


புவனா சற்குணம்  கனடா

19

450


கற்களை செதுக்கி அற்புதமான சிற்பங்களை

உளியின் உதவியுடன் கற்பனைத் திறனுடன்

படைத்து சிற்பக்கலைக்கு சிறப்பு சேர்க்கிறான்

சிற்பி! ஆண்டவனும் அதை உணர்ந்து


ஆனந்தமாய் கல்லுக்குள் கம்பீரமாய் அமர்ந்தே

அருளை பொழிகிறான் அவனைப் படைத்தவனாய்

சிற்பியும் புகழைப் பெறுகிறான்! ஆயினும்

உதவிய உளி ஒதுங்கியே கிடக்கிறது!


ரேணுகா சுந்தரம்


20

638


உயிர்ச் சிலைகள் வடிக்கும் ஒப்பற்ற

கலை நயமும் கருவில் திருவான

கலைஞன் ஆற்றல்

தமிழன் அடையாளம்


சிற்பம் சிலைகள் பேசும் வித்தை

கோவில் கோபுரம் மணி மண்டபம்

உலகியல் அதிசயம் வடித்தவன் இவனே

ஆயிரமாயிரம் ஆண்டு கடந்தும் சாட்சி


கவிஞர் கோ.நவமணி


21

616


கல்லின் உயிர் சிற்பத்தின் வெளிப்பாடு

காவியத்தின் உச்சக் கட்ட வளர்ச்சி

நெருப்பையும் தருவான் திடத்தையும் வழங்குவான்

மனிதனுக்கு முன் உலகில் பிரகாசித்தவன்


கலைகளுக்கு அழியா உருவம் கொடுத்தவன்

திறனால் பூமியில் கவிஞனை உருவாக்கியவன்

கவியாலும் கானத்தாலும் உலகை வென்றவன்

ஏழைகளின் பசி தீர்க்கும் தோழன்


கா.கேமலாரூபினி

22

463


கல்லிலே வடித்த சிலை ஒன்று

காலத்தை வென்று கடவுளாய்  வாழும் !!

கல்லினைப் பார்த்தால் சிற்பியின் கண்களுக்கு

சிலையின் வடிவம் நிழலாய்த் தெரியும் !!


சிற்றுளிக் கொண்டு சில்லினை அகற்ற

சிற்பமே வடிவமாய் முழுவதாய்த் தோன்றும் !!

முகனை எழில்தான் முத்திரை பதிக்கும் !

நீள்விழிக் கண்களோ நம்மையேப் பார்க்கும் !!


அரவிந்தன் தஞ்சை

23

204


 

குடவரைக் கோயில்கள் புடைப்பின் சிற்பங்கள்//

ஒற்றைக்கல் இரதங்களென ஒவ்வொன்றும் உரைகல்லாம்//

உன்னதக் கலைகளுக்காய் உலகுபுகழ் சின்னங்கள்//

நளினமும் இயல்பும் நடமிடும் சிலைகள்//


இயற்கையின் வனப்பினை எழிலுறச் செப்பிடும்//

காலத்தை வென்றிட்ட கட்டிடக் கலைகளில்//

சிறந்திட்ட திராவிடரின் திறந்தனை பரப்பிடும்//

கல்லிலே சிலைசெய்த பல்லவன் சாதனைகள்//


ஆஸாத் கமால்


24

652


பாறையாய் ஓரத்திலே அமர்ந்து இருந்தானே!/

விட்டிருந்தால் அப்படியே இருந்து இருப்பானே!/

சிற்பியின் எண்ணத்தில் சிறகடித்து எண்ணங்கள்/ 

கல்லிலே கலை வண்ணம் கண்டான்/ 


உழியும், சுத்தியலும் இணைந்தன கையிலே!/ 

சிற்பியின் கை வண்ணமே கலைநயமே!/

அவனது எண்ணங்களின் பிரதிபலிப்பே சிலையே/ 

வலி தாங்கும் கல்லே தெய்வநயமே!/


கூ.மு.ஷேக் அப்துல் காதர்


25

434


கல்லுக்கு உயிர்கொடுக்கும் கலைஞானி கரங்கள்/

படைப்பாளி பிரம்மன் கொடுத்த வரங்கள்/

சிந்தனை தீட்டியே சிற்பங்கள் வடித்திடும்/

மனிதர்கள் வடிவிலான மகத்தான மாமன்னர்கள்/


அழியாப் புகழோடு வாழும் சிற்பங்கள்/

அடையாளம் கொடுத்தோரைப் புகழ்ந்திட வைத்திடுமே/

உலகமே மடிந்தாலும் மண்ணோடுப் புதைந்தாலும்/

என்றாவது ஒருநாள் தோண்ட எழுமே//


மீனாட்சி சுந்தரம்

26

465


கல்லை கல்லாகக்கண்டவன் எடுத்து

வில்லிலே வைத்து வீசிக் கொல்லும்

உணர்வு மட்டுமே உள்ளம் தன்னில்

உயிர்த்து கிடக்கும் உணவின் நோக்கில்

கல்லுக்குள் உயிரை காண்போன் மனதில்


கல்லொன்றும் தெரியாத கனிமுகமே தெரியும்

உளியை மனதுள் தாங்கி மெல்லிய

உணர்வுகளை விரலில் தாங்கி செதுக்கும்

உளியின் ஒவ்வொரு உரசலும் பூவாய்

விழுந்து உருவை புதுக்குதல் திறனே


இரா.வெங்கடாசலம்

27

636


வழியிலே சிலை ஒன்று கண்டான்!

விழியிலே ஒளி மின்னல் என்றான்!

எழிலதை விழி கொண்டு  உண்டான்!

வழியின்றி  பழி ஏற்றுக் கொண்டான்!


அவள் நினைவினில் புகுந்து வென்றான்!

அவன் நினைத்ததில். வெற்றி பூண்டான்!

கவிஞன் கற்பனையில் கதையொன்று வரைந்தான்

கல்லெல்லாம் அவளைச் சிலையாகப் புனைந்தான்!


சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி

28

240


உளிகொண்டு உடைந்திடும் கற்கள் சிறப்பாக//

கற்பனை திறனில் சிலைகள் வருமே//

உழைப்பாளி படைப்புகள் நாட்டுக்குத் தேவையே//

கடவுளின் திருவுருவம் பிரமிப்பூட்டும் வடிவமைப்பில்//


கைகளில் செதுக்க கலைநயம் பெறுமே//இதிகாசங்கள் புராணங்களில் படைப்புகள்  பேசும்//

பரம்பரை தொழில்நுட்ப கட்டமைப்பு இவையே//

வியக்க வைக்கும் சிற்பங்களில் அழகோவியம்//


உமா பாலகிருஷ்ணன் பெங்களூர் 🏵️

29

618


கல்லாய் இருந்தேன்  கவனிப்பு எதுவுமில்லை/

கண்டான் கலைஞன      கொண்டான் உரிமை/

செதுக்கினான் உளியால்       தாங்கினேன் வலியை/

வடித்தான் சிலையாய்     மிளிர்ந்தேன் அழகாய்/


மயங்கினர் மானிடர்      உயர்ந்தேன் புகழில்/

வடித்தவனோ மகிழ்வில்      வாழ்த்துக்களோ குவிந்தன/

அவனியில் இன்று      அழிவில்லா சொத்தாய்/

நிற்கிறேன் நிமிர்ந்து     நிலைப்பேன் நீடூழி/


ஔவை.

30

373


சித்திரத்தில் ஏறிய பத்திரமாய் வரைந்து

எட்டுத் திக்கிலும் புகழினைப் பரப்பிட

சிற்பங்கள் செதுக்கி வர்ணங்கள் பூசிட்டி

உயர்ந்து விளங்கிட முன்னேற்றம் கண்டேன்


கல்லிலே கலையின் வண்ணம் கண்டனர்

கவிதையை வடித்தே கொட்டினர் பலரும்

அழகுச் சிலைகள் அரங்கம் ஏறியது

ஆண்டவன் அருளால் மனதும் மகிழ்ந்தது!!


ஜயந்தினி வாகீசன்

31

564


உளி கொண்டு உலகம் வியக்க 

அழியாத கலைக்கு அர்த்தம் சேர்த்திட 

மதி நிறை மேதை செதுக்க

துதித்திடும் வண்ணம் தெரிகிறதே சிற்பம் 


எண்ணற்ற வகையில் எளிய முறைமை 

வண்ணங்கள் பல வர்ணனைக்கு அப்பால் 

கண்கள் கவர்ந்திடக் காரணம் தேட

உண்மை ஒளி உயரம் தொடுதே.


இராசையா கௌரிபாலா.

32

259


விரியும் கற்பனை கல்லையும் காவியமாக்கும்.../

தேர்ந்த சிற்பியின் சிந்தனை சிறகடிக்கும்.../

ஆற்றலில் விரல்கள் முத்திரை பதிக்கும்.../

ஒளிரும் வடிவம் உள்ளத்தை அள்ளும்.../


உயிரோட்ட படைப்பில் உள்ளம் உருகும்.../

நுணுக்க வேலைப்பாடுகள் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.../

உளியோடு உறவாடும் உன்னத உழைப்பாளி.../

அழியா சிற்பங்களை உருவாக்கும் படைப்பாளி...!/


ஜெயலெட்சுமி மாணிக்கம்

33

247


கல்லிலே வடித்தது எல்லாம் சிற்பியின் /

எண்ணத்தில் உதித்த வண்ணக் கனவுகள் /

உளியால் செதுக்கி உருவத்தைப் படைத்து/

பார்ப்பவர் விழிகளுக்கு பரவசமூட்டி ஊரும் /


உலகமும் வியந்துப் பாராட்டி சிலைக்குச்/

உடலும் தந்து உயிரும் கொடுத்து/

பேசும் தெய்வமாக்கி கையெடுத்து வணங்கிட /

வைத்திடுவான் கல்லிலே கலைவண்ணம் கண்டவன்/ 


த.காமராசு.,தாராசுரம் கும்பகோணம்

34

668


கல்லிலே கலை வண்ணம் கண்டான்/

கல்லுக்கு உயிர் வடிவம் அளித்து/

கடினமாம் இதயங்களை உருக வைத்து/

தமிழனின் தமிழின் பெருமையை நிலைநிறுத்திய/


கல்லணை முதல் தஞ்சை ஆலயமும்/

அன்னை மீனாட்சியின் கோவில் சிற்பங்களும்/

காண்போரை கவர்ந்திழுத்து மெய்மறக்க செய்திடவே/

காலங்கள் பலகடந்தும் கைவண்ணம் மிளிர்ந்திடுதே/


ஏஞ்சல்சோபிதா

35

582


கல்லில் கலையின் வண்ணம் கண்டான்

    கவிதை பாடி இசையை வென்றான் 

சில்லை நீக்கி சிலையைச் செய்தான்

      சிவனை அதிலும் தேடி எடுத்தான்


கல்லுள் தேரை ஒளித்து வைத்து

     காற்றுஇல் மூச்சை அடக்க வைத்தான்

கல்லைக் கண்டால் கடவு ளில்லை

     கடவுள் கண்டால் கல்லு மில்லை.


நெடுவை இரவீந்திரன்

36

726


சிரிக்காத கல்லையும் சிரிக்க வைத்தான்/

சிறைப்பட்ட மனிதனுக்கும் விடை கொடுத்தான்/

சிக்கல்களையும் எளிதாக செதுக்கி எடுத்தான்/

கவலைகளையும்  கற்களோடு கரைத்து செய்தான்/


கடவுளுக்கும் கண்களை தானம் வழங்கினான்/

கால் இழந்தவனுக்கும் நம்பிக்கையை ஊட்டினான்

உளியை எடுத்தாலே உறக்கம் மறந்தான்/

பாறைகளையும் கடைந்தே கலைகளையும் வளர்த்தான்/


-காளிராஜ்பாலகணேஷ்

37

287


அன்றைய  மன்னர் நன்றே வளர்த்திட்ட

கலைகளின் பரிமாணம் இன்றும் காண்கிறோம்கற்களில் வடித்தவை காலம் காலமாய்

சிற்பமாய்  செதுக்கி சிலையாய் நிற்பவை


கலைஞனின் வருவாய் கணிசமாய் இருப்பின்

கவனம் முழுவதும் கலையில் செலுத்தலாம்

கவ்விடும் பசியுடன் கல்லுளி  ஒலிக்குமா

கலைஞனைப் பேணினால் கலைகள் வளர்ந்திடும்


தண்டபாணி

38

261


முன்னோர்கள் செதுக்கிய சிற்பங்கள் அனைத்தும்

அடுத்தடுத்த தலைமுற அறியவேண்டிய சொத்துக்கள்

தங்களது சிந்தையில் துளிர்த்த அத்தனையும்

சமூகத்துக்கு அவர்கள் கொடுத்த படிப்பினைகள்

நமது பண்பாட்டின் சிற்பங்களாக எழுத்துக்களாக


சிற்பிகள் உளிகளால் கற்களில் செதுக்கினரே

கல்லிலே கலை வண்ணம் கண்டனரே

ஓலைச் சுவடிகளில் எழுத்தாணியால் எழுதியதுமுண்டு !


~ வள்ளல் இராமமூர்த்தி

39

238


கலைகளைக் கல்லிலே காணவே வைத்தவன்../

காவியமாய் கவினுற காணவே காட்சியாய்../

திறனுறும் மேன்மையை உளிகளால் உயர்த்திய../

தமிழனின் கைத்திறன் தரணியில் தனித்துவம்../


சமத்துவம் வாழ்வியல் சரித்திரம் ஆகுதே/

கலாச்சாரம் பண்பாடு கைகாட்டும் உன்னையே../

கற்களில் காட்சியாய் ஆவணங்கள் பதிந்ததே. /

கலைகளின் வண்ணங்கள் காண்பதில் இன்பமே...//


#இளந்தை சேது

40

709


பெருங்கற்கள் பிளந்தெடுத்து நயமாகப் பிரித்தெடுத்து// 

சிற்பக்கூட கருவறை செதுக்கிய வடிவங்கள்// 

உளியோசை  செவிக்கேட்டு வெளியேறும் சிற்பங்கள்// விழிகளுக்கு விருந்தளிக்கும் எழிலூட்டும் சிலைகள்//  


உயிரில்லாக் கற்களிலும் கலைவண்ணம் கண்டானே// 

வலிதாங்கும் கல்லிலும்  தெய்வீகம் சொன்னானே// 

நளினங்கள் அசைந்தாட தலைநிமிர்ந்த எண்ணங்கள்// 

உயரியக் கலையாம்  சிற்பியின் சிற்பக்கலை// 


தாழை. இரா. உதயநேசன்

41

654


உயிரற்ற கல்லை உருவாக்கினான் உயிரோவியமாய்!      

கலைவண்ண சிற்பங்களை செதுக்கினான்  சிற்பியுமே!   

கலைஞனின் உளிஓசையில் கல்லும் கவிபாடியதே!    

சிற்பியின் கைவண்ணத்தில் கலையெழில்  மிளிர்ந்திடுமே! 


காண்போர் வியந்திட கண்காட்சியில் இடம்பெற்றிடுமே!   

உயிரற்ற ஓர்கல்லின்று சீமான்வீட்டு உப்பரிகையிலே!   

சிற்பமாய்ச் செதுக்கியவன் கையேந்தும் நிலைதானோ!   


பொன்.சுந்தர பாண்டியன்  சோழவந்தான்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages