22.08.20-தலைப்பு : இயற்கையின் சீற்றம் - தென்குமரிக் கவிதைக்களம்

புதன், 26 ஆகஸ்ட், 2020

22.08.20-தலைப்பு : இயற்கையின் சீற்றம்

 












sl

எண் 

புகைப்படம்

கவிதை

1

261

இயற்கைச் சீரழிவு இதயத்தைக்ழ கரைத்திடுதே

மண் சரிவில் மாண்டவர் பலரே

தடைகளைப் படிகளாக மாற்றிடுவோமே !


~ வள்ளல் இராமமூர்த்தி

2

735

சுவர் வாழ்ந்தால் ஓவியம் நிலைக்கும்/

இயற்கைப்பாதுகாப்பு பிரபஞ்சம் பசுமை/

உலகம் உயர உழைப்பாயே,

   

படைப்பாளி பைரவி

3

482

இயற்கைச் சீற்றம் இதயம் வாட்டுதே!

எத்தனையோ உயிர்கள் மண்ணில் புதைந்ததே !

நினைத்தாலே கண்ணீர் பெருகுதே.


 தஞ்சை கோ பாலசுப்ரமணியன்

4

588

மணலைச்  சுரண்டியதால் அலைகள் சீறியது;/

 பசுமை வனத்துடன் விலங்களையும் அழித்ததால், /

தீய்ந்தோம், சரிந்தோம், புதைந்தோம். /

  

       - - சர. பாரிஉமா

5

238

இன்பமதை விதைப்பாய் இனிமையாய் இருக்கையில்../

காணாதத் துயரத்தை கட்டவிழ்த்து விடுவாய்../

வரம்பினை மீறும் மானுடர்க்கு..///


#இளந்தை சேது

6

770

இயற்கை சீற்றம் இன்னல்கள் கொடுக்குதே//

 பயணித்த வாழ்வு பாதியில் முடியுதே//

இனிய வாழுவு எப்போது வருமோ//


ஸ்ரீதர் லெட்சுமணன்

7

462

இயற்கையின் சீற்றம்/

மனிதன் மீதான இறைவனின் கோபம்/

திருந்து மானிடா


தயா

8

344

அன்னை இயற்கை அழுதாள், அடங்கினாள்,பொறுத்தாள்..

ஆனாலும் மானிடர் அடங்கவில்லை

இன்றோ ஆத்திரத்தில்  கொதிக்கிறாள்!


#எமா#

9

317

மண்ணிலே புதைந்து போனது குடும்பம்

கண்ணிலே கண்ணீர் வருவது நிறைந்தும்

இதையெப்படித் தேற்றுவது அழுதும்...


க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம்,அவிநாசி

10

614

ஒரு பக்கம் மழையும் வெள்ளமும்/

மறுபுறமோ பசியும் பிணியும் வாட்ட/

அல்லல் படும் மக்கள் கூட்டம்/

என்று தீரும் இயற்கையின் சீற்றம்/


விஜயலட்சுமி

11

710

இயற்கையை இயல்பாக இருக்க விடாது/

சீண்டி விளையாட நினைத்தது செயற்கை /

சீற்றமாகி எழுந்தது இயற்கை/


அம்பிகா ஸ்ரீகுமார்

12

580

இறைவன் தந்த இயற்கை உலகை/

துறைகள் சொல்லி அழித்திடும் போது//

இறைவன் ஆடும் தாண்டவம்//


சுந்தரலிங்கம் நிருத்திகன்.,

அல்வாய்.

13

247

ஊருவிட்டு ஊருசென்று மண்ணிலே மடிந்து

மறைந்து போனவர்களை தேடிக்கொண்டு இருக்கிறோம்

விண்ணிலே சென்று அலைந்து 


த.காமராசு. உ.எண்.247 

தாராசுரம் கும்பகோணம் 

14

312

இயற்கை அழிவு பேரழிவு இரத்தம்

உறைகிறது, இதைக்

காண நான் ஏன் பிறந்தேன்....


பொ.சுப்புலட்சுமி

15

465

மனித முயற்சியை உடலைப்  புதைக்கும்

இயற்கை ஆற்றலை இன்னும் புரியாத 

ஆறறிவு மனித மூடன்.


இரா.வெங்கடாசலம்

16

246

இடைவிடாத மழையினால் ஏற்பட்டதே நிலச்சரிவும்.

இயற்கையின் சீற்றத்தில் இழந்ததெல்லாம் உயிர்களே

தூக்கத்திலையே தொலைந்த வாழ்க்கையில்.


செல்வம் செல்வகுமார்

17

722

நாம் சீராட்டாத இயற்கை சீற்றமாக/

நாம் அழித்த  வனங்களின் அழுக்குரல்/

கண்ணீரின் சீரழிவாக வாழ்வில்/


சுஜாதா அருணாச்சலம்

18

709

உயிரிழந்து மண்ணில் புதைக்கப்பட்ட  ஏழையின் கனவுகள்/

தொடரும் இயற்கை சீற்றம்//

விடியல் நோக்கியே எந்நாளும்//


தாழை. இரா. உதயநேசன்

19

726

பூமித்தாயின் முகத்திலே கீறப்பட்ட கீறல்கள்/

வலி பொறுக்காத அன்னை/

கோபம் கொண்டு வேதனையை விதைக்கிறாள்/


-காளிராஜ்பாலகணேஷ்

20

765

பிழை பொறுக்கும் இயற்கை ஆங்கே//

இழைக்கும் பிழையொன்றை மனம் பொறுக்க//

 மனிதருமிங்கே பிழைப்பதும் உண்டோ?


திப்பு

21

326

இயற்கைக்கு  மாறாய் உயர்ந்திட  நினைத்து//

முயன்றிடும் போதில் சீற்றம் கொள்ளும்//

துயர்பட வாழ்க்கை ரணமாகிடுமே//


நாகராசன் சின்னசாமி


22

450

நிலையில்லா உலகத்திலே நிலையானது மாற்றமே!

இயற்கையின் சீற்றம் வெளிப்படுவதும் உயிர்களை

அழிப்பதும் உலகினில் எவருக்கும் தெரியாதே!


ரேணுகா சுந்தரம்


23

688

பொறுமை கொண்ட பூமித்தாயை சோதித்தார்களோ

அற்ப  மானிட  பதர்கள்

சீற்றத்தின் விளைவு உயிர்ச்சேதம்


கீத்தா ராமன்

24


கண்மூடி திறப்பதற்குள் திரண்டு தாக்கும்.../

உயிர் உடைமைகளை அழிக்கும்.../

பார்க்கும் நெஞ்சங்கள் பீதியில் உறையும்...!/


ஜெயலெட்சுமி மாணிக்கம்

25

755

இயற்கையை அழித்தால் பேரிடர் வருமே

காடுகள் மரங்கள் நீர் நிலைகளையும்

பாதுகாப்பது நாட்டுக்கு நலமே


       - ஜெயக்குமார் சுந்தரம்             

26

213

மனிதர்கள் செய்கின்ற இயற்கை அழிவுகள் //

மாபெரும் சீற்றங்களாக வருகின்ற விளைவுகள் //

தடுத்திட செயற்கையை ஒழிப்போமே.


கவி.மரு.ஜெயக்குமார் பலராமன்.

27

743

வானம் பொய்த்தால் மழை இல்லை/

நீர் இல்லையேல் விளைச்சல் கிடையாது/

இயற்கையின் சீற்றம் கோரமானது/


இளங்கோ

28

470

இயற்கை மென்மையாய் வருடினால் வாழலாம்

வன்முறை செய்தால் வாழ்வது எங்ஙனம் 

அனுகாது  அகலாது  பழகுவோம்.


நா.சுகுமாறன்

29

210

மனிதம் மறந்த மனிதனின் செயலால்../

இயற்கையின் சீற்றம் இன்னலே..../

இயற்கையைக் காத்திட இயன்றவரை முயன்றிடு.../


திருமதி சுப்ராணி சிவகுமார்....

30

207

சீரும் இயற்கை சீரழிக்கிறது மக்களை/

உழைக்கும் மக்களின் உயிர்கள்/

மண்ணுக்குள் புதைந்தே மரணத்தைத் தழுவுகின்றனர்/


-முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி.

31

258

இயற்கை சீற்றத்தை எவரும் வெல்லார்/

மனிதா நிறுத்திடு சுயநலம்/

உயிர்களின் ஓலம் நெஞ்சைப் பிழியுதே..!


                     தங்க. சரவணன்,வடபழநி, சென்னை-26.            

32

732

இயற்கை அன்னை சீற்றம் கொண்டால்/

நோய் பரவலை தடுக்க இயலுமா?/

பேரிழப்பை நாடு தாங்குமா/


கீதாஞ்சலி

33

766

இயற்கையின் ஆட்டம் அடங்கி ஒடுங்கியபின்

சவப்பெட்டியில் ஒரு சரித்திரம்..!

மண்ணில் புதைந்த நாளைய வரலாறு...!


சுரேஷ்குமார் தமிழ்செல்வன்

34

771

வலியவன் பணத்தால் கனவினை வென்றிட/

எளியவன் உழைப்பால் வருந்திடும் ஏழையை/

அழித்திடலாமோ இயற்கையின் சீற்றம்/


மா.சு.திருக்குமரன்.                                                                         

35

241

யார் மீது கோபமோ தெரியவில்லை

கண்மூடித் திறப்பதற்குள் மண்ணில் புதையும் கட்டிடங்கள்

பலியாகும் உயிர்கள்.


அனுராதா நாகப்பன்

36

409

நிலநடுக்கம் நாட்டிற்கு  உயிர்களுக்கு ஆபத்து//

உலகம் முழுவதும் இயற்கையின் சீற்றம்//

அலைவது மக்கள் கூட்டம்//


க.சுதர்சனக்குரு.

37


கண்மூடி திறப்பதற்குள் காட்சிகள் மாறும்.../

உயிர் உடைமைகள் அழியும்.../

காணும் நெஞ்சங்கள் பீதியில் உறையும்.../


ஜெயலெட்சுமி மாணிக்கம்

38

204

பொறுமையை இழந்த பூமியின் உக்கிரம்//

பொடியெனத் தகர்ந்தது மனிதனின் ஆணவம்//

சிதைத்தது இயற்கையும் கருணையின்றி//


ஆஸாத் கமால்

39

256

இயற்கையைச் சீண்டி இயல்பை மாற்றினோம்/

சீற்றத்தின்  விளைவே அழிவுக்குக் காரணம்/ 

இயற்கைக் காத்திட  இணைவோம் /


      .......நட்புடன் ஜெயபால் வி.பி.

40

756

இறைவனின் படைப்பில் இயற்கையே மேல்//1

மனிதனின் செயற்கையோ இயற்கையோடு மோதல்//2

இதனது சீற்றமோ அழித்தல்//3

        ****

கன்னிமுத்து வெல்லபதியான், இலங்கை.

41

399

*/ இயற்கையை சீண்டாதே இயற்கையும் அழிக்குமே!.../

*/ செயற்கை அறிவியலை  நம்பியதாலே!.../

*/ இயற்கை பேரழிவுகளைக் கொடுத்து சமனாக்குகிறது.../


                     --சாக்கை.பொன்னழகு.

42

692

கண்மூடி கண்ட எதிர்காலக் கனவுகளோடு //

நித்திரை கொண்டவர்களின் வாழ்வு சரிந்ததாய் //

மண்மூடி  புதைந்துப் போனதே


முனைவர்.சு.சித்ரா, 

கரூர் தமிழ்நாடு

43

378

இயற்கையின் நன்மைதனை    நாம் மறந்தோம்

அபிவிருத்தியெனும் பெயரில்    அழித்து ஒழித்தோம்

இயற்கையின் கோபமே     சீற்றமாய் ஆனது


முல்லை நிரோயன்

44

727

அநீதி தலைதூக்கி  ஆட்டம்போட //

இயற்கையன்னை  இறக்கமற்று போக //

விடியலுக்காக ஏங்கி இயற்கை எய்த நீதியிங்கே.. //


சுசி.

45

636

அடுக்கு மலைப் பகுதியில் சரிவு//

மீட்புக் குழுவினர் அகழாய்வு விரிவு//

மீட்கப்பட்ட சடலங்கள் வரிசை!


சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி

46

768

பாவங்களின் சுமையால் பூமித்தாய் சீற்றமுற//

மண்ணில் புதைந்த மாந்தர்//

தாய் மடியில் தஞ்சம் அமைதி வேண்டி//


புவனா சந்திரசேகரன்

47

434

செயற்கை மாற்றங்களை பூமியில் விதைத்தால்/

அழியும் உயிர்களோடு இயற்கையும் சாகும்/

இனியாவது விழிப்போமே மானிடரே//


மீனாட்சி சுந்தரம்


48


பாவங்களின் மூட்டை பாரமாய் அழுத்த//

சீறுகிறாள் இயற்கை அன்னை//

புதைகுழியில் அமைதியுறும் பூவுலக மாந்தர்//


புவனா சந்திரசேகரன்


49

388

கண்மூடித்தனமாக மனிதன் இயற்கையை அழிப்பதால்,

காத்திருந்து அதுவே அவனை

மண்மூடி அழிக்கிறது இயற்கைச் சீற்றமாய்...!


செண்பக ஜெகதீசன்...

50

254

படைப்பு இருந்தால் அழிவும் இருக்கும்

இயற்கையை ஆளலாம் வெல்ல முடியாது

கண்மூடிய மக்களை மண்மூடியது.


அழகு மாசிலாமணி

51

707

மண்ணுக்குள் உடல்களைத் தேடிடும் கூட்டமே/

மானுடம் என்றும் வாழ்ந்திடவே/

மண்ணின் உயிர்க்கும் இரக்கம் காட்டுங்களேன்/


✍️பா.ச.கண்ணன்

52

647

தன்னில் மூழ்கி எழும் பாவிகளின் //

பாவ பாரம் சுமக்க இயலாது //

பிளவுபட்டு நின்றதோ பேராழி //


நாக நந்தினி

53

259

பொங்கும் சீற்றம் புரட்டித் தள்ளும்.../

எதிர்பாரா தாண்டவம் எங்கும் நிகழும்.../

இயற்கை வழங்கும் பாடம்...!/


ஜெயலெட்சுமி மாணிக்கம்

54

425

நாளையின் விடியலுக்காகக் காத்திருந்த மக்கள்

இயற்கையின் சீற்றத்தால் புதையுண்டனரே

வாழ்வையே இழந்தோம் நிரந்தரமாக என்றும்....


கலாகண்ணன்


55

716

இயற்கையைப் போற்றிச் சிறக்க வாழு //1

இல்லையேல் அதன் சீற்றம் பாய்ந்து //2

புதையும் மானுட வாழ்வு.//3


- நாகை. ஹாஜா


56

763

அள்ளிக்கொடுத்த   இயற்கை அன்னை //

இயற்கையின்   சீற்றத்தால் கண்டிக்கிறாள் தண்டிக்கிறாள்//

இனியேனும்  மனம் தி(வ)ருந்துவாயோ  மானுடா //


பிரேமா பூ


57

721

தண்ணீர் புதைத்த உடல்களை மீட்டுக்// 

கண்ணீரில் கழுவி மீண்டும் புதைக்கும் கொடுமை//

வேண்டாம் இயற்கையே...


....பாலு தியாகராசன்....

58

347

அழிக்கும்  செயலை இயற்கை  செய்தால் /

அகிலமும் நொறுங்கிடும் ஆணவம்  அடக்கிட/

உலகிற்கு பாடம் நடத்திடும்


வேங்கடலட்சுமி ராமர்

59

233

ஏன் சீற்றம் கொண்டாய்/

எதனைக் கண்டு எதிர்த்து நின்றாய்/

எங்களைக் கொன்றாய் எதிரியாய் ஆனாயே/


முபீன் றிஸான்

60

410

அள்ளித் தருகின்ற இயற்கையை வரவேற்று/

ஆர்ப்பரிக்கும் வேளையிலே தடுக்கும்/

ஆற்றலைப் பெறவே வல்லமை வேண்டுமே/


கவிஞர்.ஞான பிரசன்னா..


61

386

இயற்கையின் சீற்றம் எதிர்கொள்ளல் துன்பமே/இயைந்தே வாழுதல் இன்பம் சேர்த்திடும்/

மயக்கம் போக்கிடு          வாழ்வது மாயமே/.


தென்கரை தாயுமானவன்.


62

21

காடுகள் அழித்து கட்டடங்கள் வளர்த்தோமே/

இயற்கையின் கோபமோ மழையின் சீற்றமாய்/

மாய்த்ததோ உயிர்களை மண்ணோடு.


#தனம்_மீனாட்சிநாதன் தூத்துக்குடி


63

758

அழியும் காடுகள் உயரும் வெப்பம்

கழிவுகளை வீசும் அணுஉலைகள்.

அழையாமல் வருமே இயற்கை  சீற்றமே..!!


சாந்தகுமாரி

64

717

எல்லை இல்லா ஆசையாலே/

இயற்கை சமனிலை கெடுத்தோம் நாமே/

இதனால் தானே எழுந்தது சீற்றம்/ 


கந்தசாமி நடேசன்

65

652

கொத்தாய் மனிதனை சரிக்கிறதே இயற்கை/

எதுவும் நிரந்திரம் இல்லை புரிந்ததே!/

மீண்டு வர இயலுமோ?/


கூ.மு.ஷேக் அப்துல் காதர்

66

578

ஐம்பூதம் மறந்து அகிலத்தை ஆண்டிட//

தொழில்நுட்பம் வளர்ந்து அழிவுகள் நேர்ந்திட

இயற்றையின் சீற்றம் தொடர்கிறதே//


...கவியாசகன்...!!!

67

616

இறைவனின் படைப்பு இயற்கை அதிசயம்

பேரழிவை உருவாக்கும் மாற்றம்

துன்பத்தை வழங்கும் அடங்கா சீற்றம்


கா.கேமலாரூபினி

68

428

இயற்கையின் சீற்றத்தில் இழப்புகள் ஏராளம்//

மதிக்கத் தவறிய மனிதனுக்கு//

மனவலியில் கொடுத்த தண்டனையோ//


சுப்பிரமணியன் அன்புமலர்

69

239

வளம் தந்த இயற்கையன்னை/

ஏனிந்த கோபம் அப்பாவிகள்மீது/

வாழ வைத்து வாரிக்கொள்ளுவதேன்/

வரிசையாய் பிணங்கள்/


குமார்

70

772

சினம் கொண்ட சீற்றமா..! இயற்கையின் மாற்றமே..! /

அழிவின் ஆதிக்கமே வேண்டாம்

மாற்றம் வேண்டி மன்றாடுகின்றோம்.


ப.க.கலாவதி

71

574

கொதித்தெழும் இயற்கை சிரித்திடும் போது

சாவாறு ஓடும் விழியருவி பாயும்

மனிதம் சமுத்திரமாய் சுத்திகரிக்கும் .


துரைராசா காண்டீபன், திருக்கோவில் .

72

240

இயற்கையை மனிதர்கள் அழிப்பதால்//

நல்லவைப் பயக்கும் பருவ மழை//

புயலாய் மாறி வெள்ளமாய் பெருகியது//


உமா பாலகிருஷ்ணன், பெங்களூர் 🏵️

73

618

இயற்கையின் சீற்றம் அழிவில் உலகம்/

இயல்பிற்கு மாறாய் மனிதனின் செயலால்/

இறைவனின் கோப வெளிப்பாடோ/


ஔவை.

74

562

இயற்கையே ஏனிந்தப் பெருங்கோபம்/

நீதானே எங்களை மண்ணில் மலரவைத்தாய்/

உன்னைச் சிதைத்ததால் தண்டனை வழங்குகிறாயோ/


பா.பத்மநாபன்

75

564

சீறுகின்றது இயற்கை சினம் கொண்டு 

புதுப்பித்தல் காண வேண்டும் மனிதன் 

விரைந்து செயற்படுதல் தீர்வு.


இராசையா கௌரிபாலா.

76

773

ஆணவம் ஒடுக்கி அகந்தை அகற்றிட

மதம் மறந்து மனிதம் காத்திட

இயற்கைச் சீற்றம் ஆசானாகுமே..!


எம்.எம்.நிஜாமுதீன்

77

387

செயற்கையை கொண்டு இயற்கையை சீண்டிட //

சீறிடும் இயற்கை இறப்பைக் கொடுக்கும் //

உணர்ந்திடு திருந்திடு மானிடா //


சென். இலக்குவன்

78

221

அன்பைத் தேடி அனுதினம் ஓடினாலும் 

அன்புக்காய் வாழ்வது அகிலத்தில் பிறர்க்காக

அருகிருந்து காத்திட ஆண்டவன் தந்தவாய்ப்பு


புஷ்பா கிறிஸ்ரி

79

287

பொறுத்துப்  பார்த்தாள் பூமிதேவி 

பெற்றவைகளை அழித்திட்ட மனிதனுக்கு 

பாடம் கற்பிக்கப் பொங்கி எழுந்தாள்


தண்டபாணி

80

674

வளங்களை அழிக்கும் மனிதனுக்கு //

இயற்கைச் சீற்றம் எடுத்துரைத்திடுதே தண்டனயாகவே//

பயனில்லையே பாமரன் பாவமே//


இரா.தேவி

81

737

இயற்கையின் சீற்றம் எல்லாமே நாசம்

மண்ணுக்குள் மறைந்ததே மனித வாசம்

நிலத்தின் நேசம் காப்போம்


திருமதி சரோஜனி நடேசன்

82

750

சொல்லிக் கொண்டு வருவது இல்லை..!

ஈவு இரக்கம் இல்லாமல்..!

அள்ளிக் கொண்டுச் செல்கிறது உயிர்களை..!


- தமிழ் வேந்தன்...✍

83

717

எல்லை இல்லா ஆசையாலே

இயற்கைச் சமநிலை கெடுத்தோம் நாமே

இதனால் தானே எழுந்தது சீற்றம்


கந்தசாமி நடேசன்

84

515

இறைவன் நமக்களித்த இயற்கை வளங்களின்/

அழிவுக்கு வழியமைத்த அறிவீனம் ஏற்படுத்தும்/

அபாயத்தில் சிக்கி அழிகின்றோம்/


லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages