22.08.20. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - தென்குமரிக் கவிதைக்களம்

புதன், 26 ஆகஸ்ட், 2020

22.08.20. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே












Sl

எண் 

புகைப்படம்

கவிதை

1

261

உண்ணும் உணவே உடலாய் உருமாறுமே

அதனை வணங்கி உவப்புடன் உண்போமே

உழைத்துக் கொடுத்த விவசாயியை வாழ்த்துவோமே

உணவளித்த இறைவனுக்கும் நன்றி கூறிடுவோமே !


~ வள்ளல் இராமமூர்த்தி

2

378

எதிர்பார்ப்பு எதுவுமின்றி   பிறருக்கு உதவி

பசியைப் போக்கும்    மகத்தான கொடையை

மனதிலே மகிழ்வோடு   வழங்கிடும் வள்ளலே

உயிரைக் கொடுத்திடும்     உன்னத தெய்வம்


முல்லை நிரோயன்

3

735

பசி கொடியது வறுமை வாட்டுமே/

வளமில்லை  இளமைக்கல்வி துறக்கும் அபாயம்/

சுரண்டல் சுதந்திரம் வறியோர் பெருகும்/

உணவு உன் உரிமை பிச்சையல்லவே,


   படைப்பாளி பைரவி

4

760

பசிப்பவர் வயிறு பதைக்கும் உயிரு ......

புசித்திடக் கொடுத்தல் புண்ணியம் ஆகும் ......

ஏழைகள் வாழ்வில் எரியும் நெருப்பு .........

வறுமை ஆற்று அனைத்திலும் சிறப்பு ......


கிழக்கு வானம் முஸ்தபா மெளஜூத்..

5

614

கொடுமையில் வலி நிறைந்தது வறுமை/

அதைவிட துன்பம் இளமையில் பசி/

அதனை போக்கிட உணவு அளிக்கும்/

கருணை உள்ளங்களே உயிர் கொடுப்போர்கள்/


விஜயலட்சுமி

6

697

உண்ணும் உணவை உழவு செய்து / 

உலக மக்களுக்கு கொடுக்கின்ற பெருமை / 

மண்ணில் விவசாயிக்கு மட்டுமே உண்டு / 

உண்டி கொடுத்தோரே உயிர் கொடோத்தோர்...! 


முனைவர் பெ.வெற்றிநிலவன்,குடந்தை...

7

482

பசித்த உயிருக்கு உணவு அளித்திடுங்கள் !

இளமையில் வறுமை வாட்டம் கொடுமையே!

இரக்கம் கொண்டால் சிறக்குமே வாழ்க்கை !

உண்டிக் கொடுத்தார் உயிர் கொடுத்தாரோ .


தஞ்சை கோ பாலசுப்ரமணியன்

8

755

உணவின்றி பட்டினியில் பலகோடி மக்கள்

உணவுதனை வீணாக்கி வீதியிலே கொட்டாதே!

குழந்தையாக இருக்கையிலே கற்றுக் கொடுத்திடு

கொடுக்கின்ற குணமதனை ஊட்டி வளர்த்திடு


- ஜெயக்குமார் சுந்தரம்                 

9

722

பசிக்கின்ற பொழுதினில் யாருமற்ற பாரினில்/

அறத்தைக் காத்து ஏழைகளுக்கு உதவிடும்/

அமுதளிக்கும் கொடையாளியே இறைவியாக என்றும்/

உயிரைக் காத்த உன்னத உத்தமர்கள்/


சுஜாதா அருணாச்சலம்

10

746

பசியால் வாடுது ஏழையின் வீடு/

பார்ப்பவர் மனதில் எரியுது நெருப்பு/

ஏழைக்கு உணவு கொடுத்தவர் வாழ்வில்/

இறைவன் அருளால் இன்பம் பொங்குமே/


-- மௌஜீத் ஏ ஹசன்--

11

344

விந்தாக கருவறையில் உறங்கி உருவாகி

விருட்சமாக மண் மீது தழைத்திட

பசி போக்கும் சீவன்களெல்லாம் உலகில்

உயிர் தந்த பெற்றோருக்குச் சமமே!


#எமா#

12

593

வறுமையின் பிடியில் வயிற்றுக்குள் போராட்டம்/

உணவின்றி மயக்கம் உள்ளத்தோடு உருவத்தையும்../

மாற்றியே நடைபிணமாய் நாளும் வாழ்வோருக்கு./

அன்னம் அளித்தலே அகிலத்தில் சிறப்பு/


     ...                 .    தங்க.மனோகரன்.

13

238

பசிப்பிணி ஆற்றிடும் பாரினில் உள்ளோர்.../

மறந்திட வேண்டாம்  கடவுள் மனிதனாய்../

உண்டியை கொடுத்தவர் உயிரை கொடுத்தவரே../

காலம் யாவும் கடவுளாய் கண்டிடு..///


#இளந்தை சேது


14

710

பசியால் வாடிடும் குழந்தைகள் உள்ளவரை/

இறைவனுக்கு ஊற்றிடும் பாலெல்லாம் வீண் /

உயிர் கொடுத்த பலனை அடைவாய்/

பசித்த வாய்க்கு அன்னம் வழங்கினால்/


அம்பிகா ஸ்ரீகுமார்

15

756

அன்னை தந்தை ஆருமே இல்லையே//

அக பையிலே பசியின் தொல்லையே//

என்னை அழைத்தாரே ஓர் ஏழை//

அன்னம் தந்தாரே; 'ஆண்டவனே' என்றேனே!// 

        

கன்னிமுத்து வெல்லபதியான், இலங்கை.

16

201

அன்றாடம் கிடைத்த உணவுக்கு நன்றிகள் /

வறுமையின் பிடியில் வாடிடும் உயிர்கள்/

பார்ப்பவர் மனதில் கவலைகள் ஆயிரம்/

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே/4


புவனா சற்குணம்  கனடா

17

718

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!//

உள்ளத்தால் அவரை வணங்குவோம் தினமே!//

உண்மையிலும் அவரே உலகின் அச்சாணி!//

உணவினைத் தந்துமே வளர்ப்பாரே பேணி!!//


கீழ்கரவை குலசேகரன், இலங்கை

18

213

பசியின் கொடுமையை அனுபவித்தால் புரியும்  //

கிடைக்கும் உணவே அமிழ்தமாகத் தெரியும் //

உயிர் வாழ்ந்திட உணவு அவசியம் //

கொடுக்கும் மனங்களே இறைவனின் ஆலயம்.


கவிஞர். மருத்துவர்.ஜெயக்குமார்  பலராமன்.

19

761

இறைவன் படைப்பில் ஏராள தவறுண்டு/

அதில் ஒன்றுதான் பசியோடு இருக்கும் குழந்தைகள்/

அந்தக் குழந்தையின் பசிபோக்கும் மனிதர்கள்/

படைக்கும் இறைவனைவிட உயர்ந்தவர்கள்/


மு, துரைப்பாண்டியன்

20

743

ருசிக்காக உண்டு வாழும் மானிடனே/

பசியால் வாடும் ஏழைகளை கண்டாயா/

அன்ன தானம் பல உயிர்களை/

காப்பாற்றும் என்பதை எப்போது உணர்வாய்/


இளங்கோ


21

259

பசிக்கும் வயிறு சோர்ந்து துவளும்.../

கண்கள் இருண்டு காட்சிகள் மறையும்.../

தேவையறிந்து உணவு வழங்குதல் பலனாகும்.../

உண்டவர் கண்ணில் நன்றி கண்ணீராகும்...!/


ஜெயலெட்சுமி மாணிக்கம்

22

582

மழைவான் பொழிந்து மண்ணில் வருவான்

தொழுவோன் யாவருக்கும் சோதியாய் அருள்வான்

பிழைப்போர் கொடும்பசிப் பிணித்தீர உழைத்து

உழவோன் உண்ணகொடுத்து உயிர்கொடுத்தானே!


நெடுவை இரவீந்திரன்

23

386

இல்லறம் ஏற்றோர் நல்லறம் செய்தே//

ஏழைகள் பசியைப் போக்கும் வண்ணம்//

உறவெனப் பேணி உணவுகள் வழங்க/

உலகும் வாழும் வறுமையும் தீரும்/.


தென்கரை தாயுமானவன்.

24

207

உண்ணும் உணவிலே உயிர்கள் வாழும்/

பசித்த உயிர்கள் துடித்துப் போகும்/

பட்டினி போக்கிடும் பசிப்பிணி மருத்துவர்களாலே/

உலகம் இன்றும் உயிர் வாழ்கிறது/


-முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி.

25

317

பசியால் வாடிய  அந்த பிள்ளைக்குப்

பசியை அறிந்தவன் கொடுத்தது அமுதம்

வணங்கிச் சாப்பிட அன்னபூரணி அருளும்

வளரும் மழலைக்கு ஒழுக்கம் அதிகம்


க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம், அவிநாசி

26

732

செல்வந்தனிடம் கொடுக்க மனம் இல்லை/

பசியால் வாடினாலும் உயிரே போனாலும்/

கடந்து செல்லும் நாட்டினிலே உணவளித்து/

உயிர் கொடுப்போரை  மறவாமல் போற்றுவோம்/


கீதாஞ்சலி

27

247

உயிரையும் உடலையும் கொடுத்த இறைவன் /

உயிர்களுக்கு பசியையும் கொடுத்து உணவைத்/

தேடிச் செல்கின்ற பக்குவத்தையும் கொடுத்து /

பசியாறியவுடன் களைப்பையும் உறக்கத்தையும் கொடுத்தான்/


த.காமராசு. தாராசுரம் கும்பகோணம் 

28

258

பலவகைப் பலகாரம் உடல் கெடுக்கும்/

பசியிலே பழையசோறும் உயிர் காக்கும்/

உணவை வீணாக்காதீர், வேண்டுபவர்க்குத் தந்திடுவீர்/

உண்ணக் கொடுப்பவர்கள் உயிர் காப்போரே!


                    தங்க. சரவணன்,வடபழநி, சென்னை-26.             

29

450

பத்தும் பறந்திடுமே பசி வருகையிலே

இடும்பைத் தரும் வயிற்றுக்கு உணவிடுவோர்

உலகிலே உயர்ந்தோரே! தானங்களில் சிறந்த

அன்னதானம் செய்வோரை நாமும் வணங்கிடுவோமே!


ரேணுகா சுந்தரம்

30

709

பசியால்  வாடிட  காதுகள் மூடும்// 

உணவுகள் ஈந்திட உள்ளம் குளிரும்// 

கண்கண்ட தெய்வம் கண்முன்னே  தெரியும்// 

உள்ளங்கள் வாழ்த்தும் உயிர்கொடுத்த  பெருமக்கள்// 


தாழை. இரா. உதயநேசன்

31

771

ஏழையின் வயிற்றில் அணையா நெருப்பு/                            

பசியினை அகற்றிடு அதுவே சிறப்பு/                                     

பயிரினை காத்திடு போய்விடும் பஞ்சம்/                            

பாரினில் புகழ்ந்திடும் உயிர்களின் நெஞ்சம்/

                          

மா.சு.திருக்குமரன்.

32

768

அமுதூட்டும் கைகளில் அன்னையின் அன்புணர்ந்து//

கைகூப்பி நன்றிதனைக் கூறுகின்றாள் சிறுமி//

உணவளித்துப் பசிதீர்த்துக் கனிவளித்துத் தொண்டாற்றும்//

நல்லோர் இருப்பதனால் நானிலமும் சிறக்கிறது//


புவனா சந்திரசேகரன்

33

463

பசியென்று வருவோர்க்கு உணவளித்தல் நன்று!

அன்னமளிப்பது அறச் செயல்களில் ஒன்றே !

இருப்பதைப் பங்கிட்டு வாழ்தல் மனிதயியல்பு!

மண்ணில்  இருக்கும்வரை மனிதம் காப்போம் !


அரவிந்தன் தஞ்சை.

34

483

ஒருநாளில் ஒருவேளை ஒருவாய் உண்டிதந்தோர்/1

உயிர்தந்தோர இறைவனாய் உலகில் உயர்ந்தோரே/2

தரணியிலே பசிக்கொடுமை தாங்கொண்ணாத் துயரம்/3

அழிபசி தீர்ப்போரை ஆண்டவனாய் வணங்குவோம் / 4


ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை


35

707

பசியால் வாடிடும் பிள்ளையைக் காண/

பதறுதே மனமும் பட்டினியைப் போக்க/

அன்னையைப் போல அமுதினை ஊட்ட/

அவலமும் நீங்கி கமலமும் மலருதே/


✍️பா.ச.கண்ணன்

36

425

ஒருவேளை உணவுக்காக தவிக்கும் மக்கள்

அன்றன்று ஆகாரத்தை இறைவா தாரும்

வறுமை ஒழியட்டும் விடியல் மலரட்டும்

அனைவரும் மகிழ்வுடன் உலகில் வாழ்ந்திடுவோம்


கலாகண்ணன்

37

647

படைத்தவனுக்குப் படையலிடும் பலநூறு  கைகள்//

பசித்தவனின் பாழும் பட்டினிப்  போக்கிட //

பிடிசோறும் பகிர மறுப்பதுவும்  ஏனோ //

பாசாங்குதாரியின்  பசப்புதலை ஏற்பனோ பரமனுமே //


நாக நந்தினி

38

692

இரைப்பையவே இரையாக்கிடும் வேளையில் இரை /

தந்திட்டு பசி கிள்ளி விட்ட /

நேரத்தில் துள்ளி வந்து அள்ளித்தந்த /

மனமும் வாழ்வதாலே மாரியும் பொழிகிறது!/


முனைவர். சு.சித்ரா கரூர் தமிழ்நாடு

39

283

பசியும் வந்தால் பத்தும் பறக்கும்/

அன்ன சத்திரம் ஆயிரம் அமைத்து/

பசியின் வலியைப் போக்கி நாமும்/

உலகில் உயிர்களை  வாழவே வைப்போம்/


ஜமுனாமலர் இந்திரகுமார்

40

409

உண்ணும் முன்னே வணங்கும் சிறுமி//

பண்டு தொட்டே இன்று வரையும்//

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே//

என்றே மொழியுது உண்மைத் தத்துவம்//

***************

க.சுதர்சனக்குரு.

41

725

உணவின் மகிமை உணர்ந்தக் குழந்தை/

முதலில் இறைவனையும் பின்னர் தாயையும்/

வணங்கி சாப்பிடத் தொடங்குகிறது/

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே//


கவிஞர்.மரு.கி.ம.எழிலன்


42

434

அடுப்பூட்டி உணவூட்ட வழியின்றித் தவித்திடும்/

புலம்பெயர் மக்களோ பூமியில் பல்லாயிரம்/

தவிப்போர்க்கு தானமிட்டால் தரணியே சொர்க்கமாகும்/

கிடைத்த வாழ்க்கையை வரமென எண்ணுவோமே//


மீனாட்சி சுந்தரம்

43

769

கண்கள் மறைத்திடும் கருத்தினை அழித்திடும்//

கடும்பசி போக்கிட, கயமையும் கைவரும்//

உயிரென ஓம்பிடும் ஒழுக்கம் காத்திட//

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே ! //


- கற்பகாம்பாள் கண்ணதாசன்

44

636

கண்ணுங் கருத்துமாய் கல்வி புகட்டலினும்//

கொண்ட புண்ணியம் கொட்டிக் கொடுத்தலினும்// 

வண்டி வண்டியாகப் பொருள் கொடுத்தலினும்//

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!


சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி

45

652

உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவுவீரே!/

அவர்கள் வாழ்த்தினால் எங்கும் சிறக்கலாமே!/

உணவு கொடுத்தவனுக்கு நன்றி சொல்லி/

உண்ணும் வழக்கம் யாவருக்கும் பழக்குவோம்/


கூ.மு.ஷேக் அப்துல் காதர்

46

717

உண்டி இல்லா மனிதர் வாழ்வு/

அண்டி வாழும் அவலச் சாவு/

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே/

உண்மை இதை உணர்ந்தே நடப்போம்/


கந்தசாமி நடேசன்

47

616

அன்னம் அளிப்போா் பூமியில் கடவுள்

பசியை போக்கும் சிந்தையும் செயலும்

அதிக மனங்களில் பதியும் புண்ணியம்

ஏழையின் எதிரியை விரட்டி விருந்தோம்பு


கா.கேமலாரூபினி

48

578

ஏழையின் வாழ்வில் எதுவரை துயரோ//

ஒருசாண் வயிற்றில் பசிதான் பிணியோ//

மருந்தென உணவும் கிடைத்திடல் வரமே//

வறியவர் உணர்வும் அறிவாரோ மனிதர்//


...கவியாசகன்...!!!


49

726

உணவு தருபவன் ஆண்டவனின் மறுஉருவம்/

உணவைப் பெறுவனோ கடவுளுக்கே நிகரானவன்/

பசி என்பவனை பட்டினி போடாதே/

வயிறையும் மனதையும் குளிரச் செய்க/


-காளிராஜ்பாலகணேஷ்

50

574

உணவின்றித் துடிக்கையில் உதவிடும் உள்ளங்கள்

நிலையிலாத  வாழ்வில் நிலையாக நிற்பர்

வாடிடும் செடியை நாடிடும் நீராய்

உயிர்ப்பிக்கும் தூதுவர் உலகிலே சிறப்பர் .


துரைராசா காண்டீபன், திருக்கோவில் .

51

618

வறுமையின் கொடுமையில் வாடும் உயிர்/

வயிற்றுப் பசியால் ஏங்கும் பிஞ்சு/

வரமாய்க் கிடைக்கும் அரிதாய் உணவு/

வணங்கி வாழ்த்தும் ஏழை உள்ளம்/


ஔவை.

52

564

அன்பு கொள்வோம் அனைத்து உயிர்களிடம் 

துன்பம் கண்டு தோள் கொடுப்போம் 

பசித்தவர் வயறு பசியாறிட கருணையுடன் 

ரூசித்திடும் ஏழையின் உள்ளத்தில் நீயிருப்பாய்.


இராசையா கௌரிபாலா.

53

773

ஒரு மனிதனை வாழ வைத்தால் //

இனம்  வாழ உரம்  விதைத்தவரே.. //

ஓரிறையின் உபதேசம்  இதுதானே அறிந்திடுவீர். //

பசித்தோர்க்கு உணவளிக்கும் பண்புதனை வளர்த்திடுவீர்...! //


எம்.எம். நிஜாமுதீன்

54

716

உண்ணும் உணவுக்க வந்தனைச் செய்வோம் //

அன்னம் இட்டவர என்றும் மறவோம் //

உழவினால் வந்தது தட்டில் சோறு //

உழவருக்குக் கொடுக்கணும் நூற்றுக்கு நூறு.//


- நாகை. ஹாஜா

55

387

அண்டி வந்தவர்க்கு அன்னம் கொடுப்பதினும் //

சிறந்த செயல் எதுவும் இல்லை //

உண்டிக் கொடுத்தார் உயிர்க் கொடுத்தோரே //

உணர்வாய் மானிடா நாளும் செயலாக்கு// 


சென். இலக்குவன் ஈரோடு


56

221

ஏழ்மைக் கொடுமையை உலகில் தந்தவன்

ஏழைக்கு உணவளிக்க எம்மைப் படைத்தானே

உன்னை என்னை இங்கனுப்பிய இறைவனுக்கு

உன்னன்றி காட்டிட உணவழிததிடு ஏழைக்கே


புஷ்பா கிறிஸ்ரி

57

254

மண்ணும் பெண்ணும் ஒன்னுன்னு எண்ணு/

பயிர் வளர்த்து உயிர்காக்கும் உழவன்/

உயிர் கொடுத்து வளர்க்கும் பெற்றோர்/

வட்டில்சோறு நினைத்தே நாளும் உண்ணு/


கி.மா.கனகராசன். சூலூர்.

58

287

உதிரத்தைப் பாலாக்க ஊட்டினாள் அன்னை

ஓடாய் உழைத்தவன் உணவுக்காக தந்தை 

பள்ளியில் கற்கையில் பகலுணவுக்கு ஆசான்

இப்படி இப்படி எத்தனையோ இறைவன்


தண்டபாணி

59

613

பண்போடு வளர்ந்தவள்

அன்னப்பூரணியை வணங்க்கிறாள்/

உயிரென எண்ணிய தாய்தந்தை போற்றிட/

உணவின்  அருமையை உணர்ந்தக்  குழந்தை/

உண்டி  கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே/


ஜெயாசந்திரமோகன்

60

428

ஏழைகள் இல்லாத இடமில்லை நாட்டினிலே

பசியிலே வாடிய பலவுயிர் போகுத

அன்னத்தை அளித்த அவர்களைக் காப்போம்

இல்லார்க்கு இல்லையெனச் சொல்லாது கொடுப்போம்


சுப்பிரமணியன் அன்புமலர்

61

604

அன்னத்தில் தெரிகிறது  ஆண்டவனின் முகம்//1

மழலையின்  முகத்தில தெறிக்கிறது  நிம்மதி//2

மனிதன் தெய்வமானதில்  சாதம் பிரசாதமாகி//

மழலையின் பசிப்பிணிக்கு  மருந்தென ஆனதே///

ஃஃஃஃஃஃஃஃஃஃஃ

கவிஞர் கோவை ஆறுமுகம்



போட்டி முடிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages