25.08.20- தலைப்பு : சமத்துவ கல்வி - தென்குமரிக் கவிதைக்களம்

புதன், 26 ஆகஸ்ட், 2020

25.08.20- தலைப்பு : சமத்துவ கல்வி












Sl

எண் 

படம் 

கவிதை

1

735

சமத்துவக்கல்வி தீண்டாமை நீக்கும் சமூகநீதிக்கல்வி/

எல்லோருக்கும் கட்டாயக் கல்வி வரம்/

கிராமத்தில் அறியாமை நீக்கும் அற்பதம்/

ஏழைக்கு எட்டும் ஏட்டுக்கல்வியகம்/

இலவச அரசுப் பள்ளி வாழியவே.


   படைப்பாளி பைரவி

2

668

சமூகத்தில்  மாற்றமும் மலர்ச்சியும் வந்திடவே/

மாறிட வேணும் கல்வி முறையே/

ஏற்றத் தாழ்வுகளின்றி கிடைத்திடும் கல்வி/

வளரும் தலைமுறையை வாழ்ந்திட வைக்கும்/

சாதனை திட்டம் சமத்துவ கல்வியே/


ஏஞ்சல்சோபிதா

3

773

உன்மையிலே வெட்கக்கேடு கல்வியிலே பாகுபாடு

தகப்பன் செய்வதே மகனின் தொழிலாம்

ஓரினம் மட்டும் உயர்ந்து நிற்குமாம்

நாடு வளம்பெற வேண்டும் என்றால்

கல்வியில் சமத்துவம் வேண்டும் அன்றோ..


எம்.எம்.நிஜாமுதீன்

4

614

ஏழை பணக்காரன் வேறுபாடுகள் போக்கவே/

சமத்துவ கல்வி நாட்டினில் வேண்டுமே/

தாழ்வு மனப்பான்மை எனும் நஞ்சினிலே/

மாணவர்கள் எதிர் காலம் பாதிக்குதே/

சிந்திப்போர் உண்டோ பணமிருக்கும் மேதாவிகளே/


விஜயலட்சுமி

5

221

சாதியும் மதமும் சாற்றிடாத ஒருநிலையில்

சாதித்துக் கற்றிடும் சமத்துவக் கல்வியை

பாரபட்சமின்றி யாவரும் பொதுவுடன் கற்றால்

ஏழ்மை பணக்காரனென எவ்வித பாகுபாடின்றி

தாழ்ச்சியுடன் கல்வியைத் தரணியில் கற்றிடலாம் 


புஷ்பா கிறிஸ்ரி

6

207

ஏற்றத் தாழ்வுகளை தகர்த்து எறிந்தே/

எல்லோரும் சமமென்ற எண்ணத்தை வளர்த்திடும்/

சமூக மறுமலர்ச்சியே சமத்துவக் கல்வி/

எதிர்காலத் தலைமுறைக்கு ஏற்றம் அளித்திடும்/

கல்வியின் சாதனையை காலமெல்லாம் போற்றும்/


-முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி.

7

483

சீர்கொண்ட ஞானமும் சிறப்பான கல்வியும்/1

ஓர்நிலையில் எல்லோரும் உயர்வாகப் பெற்றிட / 2

இமயம் முதலாய்க் குமரி வரையில் /3

சமத்துவக் கல்வி சட்டம் வேண்டும் /4

உலகில் சமநிலை உருவாகித் தழைத்திடவே / 5


ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை

8

717

வாழ்வை வளமாக்கும் சமத்துவக் கல்வி/

அனைவருக்கும் கல்வி அதுவே சிறப்பு/

வறியோர் செல்வர் வேற்றுமை வேண்டாம்/

ஏழைக்கு எழுத்து இறைவனின் வாக்கு/

கல்வி என்பதன் புனிதம் காப்போம்/


கந்தசாமி நடேசன்

9

224

சமத்துவம்  தந்திடும் சமச்சீர் கல்வியே/

நடத்துவோம் நாடெங்கும் அதற்கொரு வேள்வியே/

எளிமையான பாடங்கள் கற்றலை இனிமையாக்கும்/

கூடுதல் பாடங்கள்ஆற்றலை சோம்பலாக்கும்/

சமத்துவக் கல்வியால்சாதிக்கலாம் உலகினிலே/


✍🏻க.குணசேகரன்

10

588

சமத்துவ கல்வி சாதிவெறி போக்குமா?../

பாரதி கனவு முழுதும் பலிக்குமா?../

பள்ளிப் பருவம் கடந்து விட்டால்,/

அறிவுக் கண் மூடிடுதே, அகத்தில்.. /

வஞ்சம் பெருகிட கொலைகளும் பெருகுதையா... //


  ~~பாரிஉமா. சர

11

238

சமநிலையாய் சமுதாயம் சரித்திரம் பதியட்டும்.../

ஓர்நிலையென உயிர்கள் ஒப்புரவுடனே ஓங்கட்டும்../

சமநிலைக் கல்வியை சட்டமாக நிறைவேற்றிட../

ஏழையும் பணக்காரனும் வாழ்வானே சமமாக../

வாய்ப்புகள் சமமாகிட வளருமே சமத்துவம்..///


#இளந்தை சேது


12

386

சத்தியம் வேண்டியது சமத்துவக் கல்வியே/

நித்தமும் அரசுகள் வணிகமய மாக்கியே/

ஏழைக்கு ஒன்றும் செல்வருக்கு மற்றொன்றாய்/

கல்வியைக் கொடுக்கின்ற கபடம் நீடித்தும்/

வர்க்கபேதம் வளர்க்கும் வழிமுறை தவிர்ப்போம்/.


தென்கரை தாயுமானவன்.


13

450

ஆண்டவன் தந்தது அனைவருக்கும் சமஅறிவு!

இதில் உயர்வும் தாழ்வும் எங்கிருக்கு!

வறுமைக்கும் செல்வத்திற்கும் போட்டிகள் எதற்கு!

சமத்துவக் கல்வியே போதும் எமக்கு!

அனைவரும்  கற்போம் வேற்றுமைகள் இன்றியே!


ரேணுகா சுந்தரம்

14

256

சாதி மதம் மொழி கடந்து/

சகல குழந்தைகளும் ஒன்றாய் அமர்ந்து/

ஏற்றத் தாழ்வுகளை அறவே மறந்து/

இயல்பாய்க் கற்பதே சமத்துவக் கல்வி/

ஒற்றுமை ஓங்கி வேற்றுமை மறையும்/


      .......நட்புடன் ஜெயபால் வி.பி.

15

317

சரிசமம் கொண்ட ஞானத்தின் வெளிபாடு//

சந்தோசம் மிகுந்த அரவணைப் போடு//

ஆண்கள் பெண்கள் படிக்கும் பாடு//

அறத்தை அன்பை விதைப்பதைக் கூறு//

செலவுகள் இல்லாமல் சிகரத்தில் ஏறு//


க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம், அவிநாசி

16

707

நிறத்தின் பேதம் நிம்மதி கெடுக்கும்/

இனத்தின் பேதம் இன்னலைக் கொடுக்கும்/

நீயா நானா போட்டியும் இல்லை/

உயர்வோ தாழ்வோ வேற்றுமை இல்லை/

சமமாய்க் காணும் சமத்துவக் கல்வி/


✍️பா.ச.கண்ணன்

17

763

ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் உருவாக/

எல்லோரும் சம மெனும்  சமத்துவம்  பெற /

கல்வியை  காலத்தால் அழியாது காக்க /

எளியோர் அனைவரின் கனவுகள் மெய்ப்பட /

சமத்துவக் கல்வியை சட்டமாக மாற்றுவோம்./


பிரேமா பூ


18

261

சமத்துவ கல்வி அவசியம் தேவையே

குழந்தைகளின் குறைகள் யாவும் நீங்கிடுமே

அவர்களின் ஏற்றத்தாழ்வு எண்ணங்கள் குறைந்திடுமே

கல்வியின் பயன் அனைவருக்கும் கிட்டிடுமே

அவரவர் தாய்மொழி தவறிடாமல் கற்பரே !


~ வள்ளல் இராமமூர்த்தி


19

470

திண்ணைக் கல்வி எல்லோர்க்கும் இல்லை

குருகுலப் பாடமோ எளியவர்க் கில்லை

குலக் கல்வி சாதிக்கொரு நீதி 

மேனாட்டு படிப்பு  மேலோர்க்கு  மட்டுமே 

சமத்துவக் கல்வியே சமச்சீர் கல்வி.


நா.சுகுமாறன்

20

592

கல்வியறிவில் ஏற்றத்தாழ்வில்லை கற்பதில் இருக்கலாமா

சொல்லித்தரும் பாங்கில் பாகுபாடு காட்டலாமா

சாதிமதமற்ற சமத்துவம் எங்கும் மிளிரணும்

கடைச்சரக்கல்ல கல்வி பற்றுவரவு எதிர்பார்க்க

எல்லோர்க்கும் கல்வி எளிதாகக் கிட்டட்டுமே.


கவிஞர் ராம்க்ருஷ்

21

771

சமத்துவம் ஒன்றே சரியென்று பாடு/

சமமதில் மாற்றிட வரலாற்றுக் கேடு/

கல்வியில் பிரிவினைப் பார்ப்பது வேதனை/

பாரினில் உயர்ந்திடப் படிப்பதே சாதனை/

சரித்திரம் படைக்கட்டும் சமத்துவக் கல்வி/


மா.சு.திருக்குமரன்.                                                                                                                                      

22

747

வேற்றுமைக் கலைந்து     ஒற்றுமை வளர்ந்திடுமே// 

உயர்ந்தோர் தாழ்ந்தோர்        உள்ளம் மறந்திடுமே//

கற்றல் வாய்ப்பினை     சமமாய் பகிர்ந்திடுமே// 

ஏழைக்கும் ஏட்டுக்கல்வி      எளிதில் கிடைத்திடுமே// 

அனைவருக்கும் உகந்தது          சமத்துவக்  கல்வியே//


ஜெ.சுகமணியன்வாழப்பாடி

23

259

அறிவுக் கண்களை திறப்பது கல்வி.../

ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தும் மனதில் இடைவெளி.../

வளரும் குழந்தைகள் பாகுபாட்டால் தள்ளி.../

தாழ்வு மனப்பான்மை வருமே சொல்லி.../

சமத்துவம் கைகோர்த்தால் சரியாசனம் சமமாகுமே...!/


ஜெயலெட்சுமி மாணிக்கம்


24

434

சாதிகளை விடுத்துச் சமயங்களைத் துறந்து/

ஒற்றுமை உணர்வை ஊட்டும் வகையில்/

ஒன்றுபட்ட சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில்/

உலகமே கையிலெடுத்த உன்னத ஆயுதம்/

சரித்திரம் போற்றும் சமத்துவக் கல்வி//


மீனாட்சி சுந்தரம்


25

312

கல்விக் கற்றுப் பெருமை அடையப் 1

பிறந்தோம் என உணர்ந்து மகிழ்வுடன்2

படித்து முன்னேற வேண்டும் என்ற. 3

நிலையில் வாழ்வில் உறுதி எடுத்து. 4

முன்னேற அனைவரும் கற்பதே சிறப்பு. 5


பொ.சுப்புலட்சுமி, தேவகோட்டை.

26

652

சமத்துவமாய் கற்றுக் கொடுக்க வாரீர்/

பாகுபாடுகள் இல்லாமல் கல்வியைக் கற்பீர்/

வேறுபாடுகள் இன்றி ஒன்றாக படிப்பீர்/

திறமை உள்ளவன் அறிவை வளர்க்கலாம்/

எவனும் இதிலே முயற்சியை விதைக்கலாம்/


கூ.மு. ஷேக் அப்துல் காதர்

27

465

கல்வியில் சமத்துதுவம் காண்பதே அறிவு

சொல்லில் ஒன்றும் செயலில் ஒற்றாய்

வெள்ளை உள்ள விலையிலா பாமரனை

கள்ள பேச்சால் கரைத்து தன்னின்

இனத்தைக் காக்கும் எண்ணம் இழிவே


இரா.வெங்கடாசலம்

28

748

சகலருக்கும் வேண்டும் சமத்துவக் கல்வி/

சாதி மதம் அனைத்தையும் கடந்து /

சரித்திரம் படைக்கும் சமமான வாய்ப்பு/

பால் பேதம் அற்று சமுதாயத்தில்/

எல்லோரும் சேர்ந்து கூடியே முயல்வோம்//


இரா.மதனகோபாலன், தருமபுரி.

29

716

உடலில் ஓடும் இரத்தம் சிவப்பு

சமத்துவம் என்பது இதிலே இருக்கு

இதையறிந்தால் வருமோ நமக்குள் கசப்பு 

உயந்தவர் தாழ்ந்தவர் வேற்றுமைப் போக்க

சமத்துவ கல்வியைத் தருவோம் சிறக்க.


- நாகை. ஹாஜா

30

463

மனிதரில் சகலரும் சமமாக  வில்லை!

கேள்விகள் நம்மை இனம் பிரிக்கும்!

உயர்வும் தாழ்வும் பிறப்பில் இல்லை!

மன ஊணம் உடையவர் செயலது.

கல்வியை விற்பனை செய்வது மோசடியே!


அரவிந்தன் தஞ்சை

31

726

ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான கல்வி/

ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே நீதி/

கற்றிடும் படிப்பிலும் பல மாறுபாடுகள் /

வேறுபாடுகளை வேரோடு களை எடுப்போம்/

சமத்துவம் படைத்து கற்றலை எளிதாக்குவோம்/


-காளிராஜ்பாலகணேஷ்

32

618

சாதி மத      பேதங்கள் கடந்து/

சரிநிகர் சமானமாய்     சட்டங்கள் உதிக்க/

சமத்துவக் கல்வி       தரணியில் ஒளிர/

சகலரும் அடைவர்      அறிவில் உயர்வு/

சந்ததிகள் எல்லாம்    ஒற்றுமை ஓங்கும்/


ஔவை.

33

636

சாதிகள் சமயங்கள் இருக்கும் வரையிலும்/

அரசியல் வியாதிகள் அழியும் வரையிலும்/

சமத்துவக் கல்வி ஏட்டுச் சுரைக்காய்/

தேர்தல் நேரத்தில் பேசிக் திரிவார்/

காரியம் முடிந்ததும் கைகழுவி விடுவார்!


சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி

34

613

பள்ளித் தோட்டத்தில் தினம்தினம் பூக்கட்டும்/

புதிய  சிந்தனைப் பூக்கள் மலரட்டும்/

சாதிமத வேறுபாடுயின்றி கல்வி   தொடரட்டும்/

பூமிதாயின் மடியில் பிறந்த குழந்தைகளே/

சமத்துவகல்வியை வேறுபாடுகள் இன்றி  பயிலுங்கள்/


ஜெயாசந்திரமோகன்

35

755

உயர்ந்தவனும் தாழ்ந்தவனும் செல்வந்தனும் பாமரனும்

நாட்டுபுறம் நகரத்தான் ஆணென்றும் பெண்ணென்றும்

எந்தவித பேதமின்றி ஏற்றதாழ்வு ஏதுமின்றி

கல்விதனைக் கற்றிடவும் உயர்கல்வியில் உயர்ந்திடவும்

சமவுரிமை சமுதாயம் வளர்த்திடுமே சமத்துவகல்வி


       - ஜெயக்குமார் சுந்தரம்               

34

247

சமத்துவம் காணுவோம் சமாதானம் பேணுவோம்/

சமத்துவக் கல்வி யாவருக்கும் கொடுத்திடுவோம்/ 

கல்வியின்தரம் உயர்ந்தால் நாமும் உயர்ந்திடுவோம்/

நாம் உயர்ந்தால் நாடும் உயர்ந்திடும்/

என்று நாடே போற்றும்படி வாழ்ந்திடுவோம் /


த.காமராசு.தாராசுரம் கும்பகோணம்

35

287

வேலையைக் குறிவைத்து வேட்டையாடும் பெற்றவர்

தனியார் பள்ளியில் தரமான படிப்பினில்

தம்தம் பிள்ளையை தனித்து அனுப்பினர்

ஏழைக்கு ஏற்றது  சமத்துவக் கல்வி

என்பதோர் நியாயம் எப்படி வந்தது 


தண்டபாணி

36

213

பாகுபாடில்ல கல்வியே நாட்டின் தேவை //

காமராஜரும் இதற்காகவே சிந்தினார் வியர்வை //

வியாபாரமாக இன்று ஆனது நாட்டில் //

அரசு பள்ளிகளோ ஆளில்லா சுடுகாட்டில் //

அத்தனையும் மாறிட ஏக்கங்கள் நெஞ்சில்.


கவிஞர்.மருத்துவர். ஜெயக்குமார். பலராமன்.

37

765

சமத்துப் பிள்ளைகளுக்குத். தானென் றிருக்கும்/

குபேரக் குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கும்/

சமாதிக் கல்வியை சம்மட்டியால் நொறுக்குவோம்/

பள்ளிக ளெல்லாம் அரசுடைமை செய்வோம்/

சமத்துவக் கல்வியால் அனைவரும் உய்வோம்!


திப்பு


போட்டி நிறைவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages