26.08.20. போட்டி - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

26.08.20. போட்டி

 












Sl

எண் 

கவிதை

படம்

1

753

பனிப் பொழிவு

ஆடுகின்ற ஊஞ்சல்

குளிர் நடுக்கம்


செ.மூ. வேடியப்பன்

2

476

இலையுதிர் காலம் 

விழாமல் இருக்கிறது 

தொங்கும்  ஊஞ்சல் 


வ பரிமளாதேவி

3

755

சாரல் மழையில் 

மரத்தில் நனையும் 

ஊஞ்சல்


ஜெயக்குமார் சுந்தரம் 

4

726

அசைந்திடாத மரக்கிளை/

அசைந்து நடனம் ஆடும்/

ஆளில்லா ஊஞ்சல்


-காளிராஜ்பாலகணேஷ்

5

773

மரத்தின் கிளை

அசையாமல் தொங்கிக் கொண்டிருக்கிறது

ஆளில்லாத ஊஞ்சல்


எம்.எம்.நிஜாமுதீன்

6

709

ஆசை நனைகிறது 

போர்வை இல்லாமல் 

வாட்டும் குளிர் 


தாழை. இரா. உதயநேசன்

7

238

தொடரும் மழை..

ஆடாமல் ஊஞ்சல்..

ஆட்கள் வரவின்றி/.


#இளந்தை சேது

8

255

மரத்தில் ஊஞ்சல் //

நீண்டு செல்கின்றது //

அடைமழை //


பிரபு.ஐயாத்துரை

9

269

பனிப் பொழிவின்

தாக்கம் தனிமையில் 

ஊஞ்சல்//


எஸ் எஸ் சுப்பிரமணியன்

10

247

பனி மூட்டத்தில்

குளிர் எடுக்கிறது

ஆடுகின்ற ஊஞ்சலுக்கு


த.காமராசு

11

221

பனித் தூறலில்

மரக்கிளையில் ஊஞ்சல் காத்திருக்கிறது

காற்றில் ஆடியபடி


புஷ்பா கிறிஸ்ரி

12

434

அழகான புல்வெளிகள்

ஆடுகின்ற மேகக் கூட்டம்

மகிழும் ஊஞ்சல்.


மீனாட்சி சுந்தரம்

13

669

எங்கும் குளிர்ச்சி

எதுவுமே தெளிவாகத் தெரிவதில்லை

மழைக்காலம்


நஸீரா வசூக்

14

527

மரத்தில் ஊஞ்சல்

அசைய மறுக்கிறது

மழை மேகம்


சயூரன், காரைதீவு


15

337

தொங்கும் ஊஞ்சல்/

அசைவின்றி இருக்கிறது/

மரக்கிளை/


கலாராணி லோகநாதன்


16

722

பொழிந்த பனி/

ஊஞ்சலை தாங்கிய மரம்/

ரம்மியம்/


சுஜாதா அருணாச்சலம்


17

212

தொங்கும் ஊஞ்சல்//

நனைந்தபடி இருக்கிறது//

குருவிக் கூடு//


ஜெய வெங்கட்

18

241

பணிபோர்த்திய ஊஞ்சல் அசையாமல் இருக்கிறது மரக்கிளை

குளிர் காலம்.


அனுராதா நாகப்பன்.

19

706

மழை பொழிகிறது/

மரத்தில் ஊஞ்சல்/

காற்றில் ஆடுகிறது.


மாயாதேவி, சென்னை

20

224

ஆளில்லா ஊஞ்சல்/

மெல்ல அசைந்தாடுகிறது/

மரக்கிளையில் ஓணான்/


✍🏻க.குணசேகரன்

21

298

மரத்தில் ஊஞ்சல்/

உல்லாசமாக இருக்கிறது/

அதிகாலை நடைப்பயிற்சி!


பூமாதேவி


22

727

தனிமையும் ஆடுது 

வெறுமையில் ஊஞ்சலில் 

பனிவிழும் பொழுதில்..


சுசி சுசேனு

23

229

கிளையில் சுமைகள்

தெரியாமல் போகிறது!

ஊஞ்சல் ஆட்டம்!!


பேபி ஷகிலாதீசன்


24

765

தனிமையாக

ஊசல் ஊரடங்கு

ஆடாமலே


திப்பு


25

414

இயற்கையை ரசித்து/

ஊஞ்சலாட எவரும் வரவில்லை/

மொழிப்போராட்டத்திற்கு/


சோ.மீனாட்சிசுந்தரம்

26

329

ஆளில்லா ஊஞ்சல்//

ஆடிக்கொண்டே இருக்கிறது//

தலையாட்டி பொம்மை//


பா.இராமர், தேனி மாவட்டம்.

27

217

அசைந்தாடும் ஊஞ்சல்/;

ஆரணங்கே உந்தன்/;

இனிமையை இரட்டிப்பாக்குதே/.


க.ஆனந்தகுமார்.

28

405

மரத்தில் ஊஞ்சல்//

தொங்கிக் கொண்டிருக்கிறது// 

குரங்கொன்று//


ஐ.துஷ்யந்தன்

29

286

ஊஞ்சலின் கயிறுகள் /

நீளமாக இருக்கின்றன /

மரக் கிளைகள்


கவிஞர்அ. மாப்பிள்ளை ராவுத்தர்

30

719

தனிமையில் ஊஞ்சல் /

துணையாக இருக்கிறது/

சுற்றிலும் வெறுமை /


கவிதா ராஜசேகர்

31

482

இயற்கைக் கட்சி/

மகிழ்வைத் தருகிறது/

 ஊஞ்சல் ஆட்டம் /


தஞ்சை கோ பாலசுப்ரமணியன்

32


அதிகாலை வேளை   / 

ஆடாத  ஊஞ்சல்  /

ஏங்குகிறது மாலை வேளைக்கு../..........  


ரமணி சிவா


33

653

ஊஞ்சல் ஆட்டம்/

நினைவுக்கு வருகிறது/

குழந்தை பருவம்//


          மு.நஜீர் அகமது

34

624

அந்தரத்தில் நான்/

அருவத்தில் மனது/

ஊஞ்சல்/.


முனைவர் சி.அழகிரி

35

510

காற்றின் தாலாட்டில்/

இதமாய் ஆடுகிறது/

ஆளில்லா ஊஞ்சல்/


ராதாமணி

36

748

தனிமையில் ஊஞ்சல்/

ஆட யாருக்கும் விருப்பமில்லை/

பனி அதிகம்/


இரா.மதனகோபாலன், தருமபுரி.

37

588

கண்களுக்கு குளிர்ச்சி

வன(ம்)மட்டுமல்ல

வான் புகைக்கும் நிலையும்..!


பாரி உமா

38

616

பனி படர்ந்த பூமியால்

பசுமையின் தாண்டவம்

தனிமையில் ஊஞ்சல்


கா.கேமலாரூபினி

39

470

அழகிய ஊஞ்சல்

ஆடிக்கொண்டிருக்கிறது

காதலர் நினைவுகள்.


நா.சுகுமாறன்

40

388

மரத்தில் சருகிலைகள்/

காற்றடித்தும் கீழ்விழவில்லை/

கிளையில் ஊஞ்சல்...!


செண்பக ஜெகதீசன்...

41

614

குழந்தைகள் இல்லாமல்

மரத்தின் கிளையில்

ஊஞ்சல்


விஜயலட்சுமி

42

725

ஊஞ்சல் காத்திருக்கு/

பொன்மகள் வருவாளோ//

வான் மழை///


கவிஞர்.மரு.கி.ம.எழிலன்

43

483

தொங்கும் ஊஞ்சல் /

தொலைவில் தெரிகிறது/

தொலைந்த இளமை //


ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை

44

756

காலை மழை பெய்கின்றது//

கட்டிய ஊஞ்சல் ஏங்குகின்றது//

காதலியின் மனம்//

     

கன்னிமுத்து வெல்லபதியான், இலங்கை.

45

463

அழகிய வனம்

அமைதியாய் ஊஞ்சல்

நகரும் மேகம் !


அரவிந்தன் தஞ்சை

46

600

பனித்துளி சுமந்து

காற்றில் ஆடிக் கொண்டுள்ளது

ஊஞ்சல்


தட்சணாமூர்த்தி

47

776

நிலவில்லா வானம் போல்

/நீயில்லாப்பொளுதும்

வெறுமைதான் இந்த வனமும். ஊஞ்சலும் போல்.


பார்வதி பாலசுப்ரமணியம்.

48

743

மர கிளையில்

தொங்குது ஊஞ்சல்

யாருமின்றி


இளங்கோ

49

413

ஓயாமல் ஊஞ்சலை /

சத்தம் போட்டபடி ஆட்டுகிறது /

பனிக்காற்று //


அருண் சிவா...

50

422

பனிபடர்ந்த சூழல்

குளிர்கால வாடைக்காற்று

வெற்று ஊஞ்சல்.


க.தங்கவேலு.

51

278

நெல் வயல்

மழையில் நனைகிறது

ஊஞ்சல் இருக்கை.


கிருஷ்ணலதா வசீகரன்

52

777

பனிக் காற்றோடு

ஒரு இசைக் கேட்கின்றது

ஊஞ்சலின் ரசனையோடு!...


~~~கவிதை காளிதாஸ்

53

636

மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும்//

மாறாதது அலைக்கழியும் வாழ்க்கை/ 

ஊஞ்சல்!


சுத்தமல்லி உமாஹரிஹரன்,  

திருநெல்வேலி

54

270

ஆடும்       ஊஞ்சல்  !//

அமைதியைத்    தருகிறது  ! //

அதிகாலைப்     பொழுது  !//


தளவை வில்லவன்கோதை .

அண்ணாமலைப்புதூர் 

55

262

மரக்கிளையில் ஊஞ்சல்/ 

மனதைத் தொட்டு இழுக்கிறது/

மழைச்சாரல்/


சதா.முருகன்

56

763

என்னில் அமரும் /

மன்னவனை எதிர்நோக்கும் /

இதய ஊஞ்சல்


பிரேமா பூ


57


ஊஞ்சலைக் கண்டதும்/

ஊஞ்சலாடுகிறது.../

ஊஞ்சலாடிய நினைவுகள் !/


ஆ.முருகானந்தம், திருச்சி


58

747

பனியில் நனைந்த ஊஞ்சல்//ஆடாத நிற்கிறது காற்றில்லா காலை வேலையில்//

மரத்தின் கிளையில் இலைகள்//


ஜெ.சுகமணியன், வாழப்பாடி

59

287

ஆடாத ஊஞ்சல்

சிறுவன் வருகைக்காக க் காத்திருக்கிறது

கடந்தகால நினைவுகள


தண்டபாணி

60

226

பனிவிழும் மலர்வனம்/ /

பசிக்கு உணவில்லை/ /

ஊழிக்காற்று/ /


இராம.சுதாகரன்..சென்னை!!!

61

284

ஆட்டிவிட்டால் ஆட்டிவிடும்/ 

ஆட்டிவிட  ஆளின்றி ஆள் தேடி/

 ஆசையோடு பனி மழைக்குள் //


சா.மு. றிஸ்வான்

62

758

ஒற்றை ஊஞ்சல் /

மெல்ல மறைகிறது /

மூடுபனி /


சாந்தகுமாரி

63

735

தூண்டில்

மீன்

ஊஞ்சல்


ரமேஷ் பைரவி

64

759

பனியும் ,பசுமையும் அடர்ந்த தனிமையில் அசைகிற ஊஞ்சல்.


இராஜா கிர்த்திக்கா

65

370

கட்டியிருந்த ஊஞ்சல்

காணாமல் போனது

நேற்றிருந்த மரம்.


ராஜிலா ரிஜ்வான்

66

207

ஆடாத ஊஞ்சல்/

தனிமையில் தவிக்கிறது/

காதலர் உள்ளம்/


-முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி.

67

579

ஆலோலம் பாடி/

ஊஞ்சல் அசைகின்றது/

 கரையும்  பனி..


சி.செல்வி

68

497

ரசித்துப் பார்க்கிறேன்/

மழையோடு சேர்ந்து ஆடுகிறது/

என் ஊஞ்சல்! 


-சதீஷ்குமார் தமிழன்

69

399

ஆடாத ஊஞ்சல்./

ஆடுகிறது வேகமாய்./

ஆடிக்காற்றில் மரக்கிளை./


சாக்கை.பொன்னழகு.

70

259

பழைய ஊஞ்சல்

ஆடி மகிழ ஆளில்லை

பட்டண மோகம்....!


ஜெயலெட்சுமி மாணிக்கம்

71

604

அமைதியாய்  ஊஞ்சல்/

அசையாமல் இருக்கும் கிளை/

காற்றின் நிசப்தம்/


கவிஞர் கோவை ஆறுமுகம்

72

531

அடிக்கும் மழை

ஆடாமலிருக்கிறது

மரத்தில் இலைகள்


கோபால்

73

283

ஆட்டமில்லா ஊஞ்சல்/

மரத்தில்  இருக்கிறது/

அணிலின் வருகைக்காய்


ஜமுனாமலர் இந்திரகுமார்

74

555

மழலைகள்

வருகைக்காகவே

நிற்கின்றதே .


ரா.ரேகா ராஜகுமார்

75

312

இயற்கை ஊஞ்சலில்

இதய ராஜாவின்

மனதிற்காக


பொ.சுப்புலட்சுமி,தேவகோட்டை

76

249

அடர் மழையில்

ஆளில்லாமல்  தனிமையானது

ஊஞ்சல் !


வாணியம்பாடி  தியாகராசன்

77

496

பின்பனி விடியல்/

நினைவுகள் அலையடிக்கின்றன/

வரவேற்கும் ஊஞ்சல்.


.......திருமதி.ஞானபாரதி,புதுச்சேரி.

78

707

ஆளில்லா ஊஞ்சல்/

மழலையைத் தேடி வாடுகிறது/

பிள்ளையில்லா தாய்மனம்/


✍️பா.ச.கண்ணன்

79

638

ஆடுவதற்கு

களமுண்டு மரத்தில்

மனதில் இல்லை வலு


கவிஞர் கோ.நவமணி

80

421

மரத்தில் ஊஞ்சல்/

மகிழ்ச்சியைத் தருகிறது/

கிராமத்து வாழ்க்கை/


---செம்போடை சோழன்---

81

386

      மரத்தில் கட்டிய ஊஞ்சல்/

ஆடாமல் அசையாமல் நிற்கிறது/

மனதில் சிந்தனைப் போக்கு/.


தென்கரை தாயுமானவன்.

82

771

அசையாத ஊஞ்சல்/

கடும் பனியால் உறையும்/

மரத்தின் இலைகள்/.


மா.சு.திருக்குமரன்.

83

568

ஆடும் ஊஞ்சல்//

அசைவற்று கிடக்கிறது//

அச்சத்தில் மனம்.


கு.ஜெயக்குமாரி/ஜெய்

84

647

மூடுபனியின் மூர்க்கம் //

இறுகிப் போன இலைகள் //

உறைந்தது ஊஞ்சல்//


நாக நந்தினி

85

639

ஆடாத ஊஞ்சல் //

தேடிக்கொண்டிருக்கிறது //

ஆடுபவரை //


உடுமலை சே.ரா . முஹமது

86

619

பெண்களின் ஆனந்த ஆட்டம்

காணாமல் போய்விட்டது

தனிமையில் மரக்கிளை ஊஞ்சல்.


அருணா பாண்டியன் புதுச்சேரி.

87

617

ஆடிய ஆட்டத்தின்/ 

நினைவுகள் தாலாட்டும்/

காற்றில் ஆடும் ஊஞ்சல்//


#முதுவைமுகம்

88

562

மரத்தில் ஊஞ்சல்/

ஆடிக்கொண்டிருக்கிறது/

காற்றில் கிளை/


பா.பத்மநாபன்

89

560

பனியில் நனைந்தும் 

பரவசம் தருகிறது 

இளமை ஊஞ்சல்..


ருஷ் ஹனி..

90

613

கொன்று  குவிக்கும் மனிதர்களின்/

உயிர் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது/

கொரோனாவின் ஆதிக்கத்தில்/


ஜெயாசந்திரமோகன்

91

668

கொரொனா காலம்/

தனிமையின் கொடுமை/

இயக்கமின்றி ஊஞ்சல்/


ஏஞ்சல்சோபிதா

92

515

மரக்கிளையில் ஊஞ்சல்/

ஆட முடியாமல் தடுக்கிறது/

மழைக்கால சூழல்/


லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன்

94

768

ஊஞ்சலொன்று தவிக்கிறது//

பெண் மடியும் துடிக்கிறது//

குழந்தை ஒன்றைத் தேடியுமே


புவனா சந்திரசேகரன்

95

261

பனி கவிழ்ந்த தாவரங்கள்

நீரில் குளித்து அழகாகக் காட்சி அளிக்கின்றன

உதிக்கும் காலைக் கதிரவன்


 ~ வள்ளல் இராமமூர்த்தி

96

578

மூடுபனி தெளிய/

மீண்டும் தென்படுகிறது/

கிளையில் ஊஞ்சல்/ 


...கவியாசகன்...!!!

97

583

ஆடும் ஊஞ்சல்  //

நிலைத்து  நிற்கிறது  //

பால்ய நினைவுகள்  //


ஜெயசக்தி பிரபாகரன்.

98

781

பணித்துளிகள் என்னைச் சுற்றி உளாவர 

என் எண்ண அலைகள் இயற்கை அன்னையினை ரசிக்க 

ஊஞ்சள் பயணம் தொடர்கின்றது கற்பனை காவியங்களோடு.


நாகேந்திரன் பிரஷாந்தினி

99

716

மூடுபனி

வியர்த்து நிற்கின்றன

புற்கள்.


- நாகை. ஹாஜா

100

778

மரக்கிளை ஊஞ்சல்//

தென்றல் தாலாட்ட//

மேலும் கீழுமாக//


கவி அழகன்



போட்டி நிறைவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages