27.08.20-சொற்கள் : மொட்டு, சிட்டு, பட்டு,நட்டு. - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

27.08.20-சொற்கள் : மொட்டு, சிட்டு, பட்டு,நட்டு.

 












Sl

எண் 

படம் 

கவிதை

1

624

மொட்டு அரும்பியது மூவாயிரம் தோட்டத்தில்/

சிட்டுக்கள் போட்டது சிங்கார நடனம்/

பட்டு வண்டுகள் பாடி தேனுண்டன/

பட்டு வச்ச காவல்பொம்மை சிரித்தது/.


முனைவர் சி அழகிரி

2

778

மொட்டு மலர்ந்து அகம் மகிழ்ந்தது//1

சிட்டுக்கள் உறவைத் தேடுது//2

பட்டுச் சிதறிடும் சாரல்//3

வயல்வெளியில் நாற்று நட்டு பாடல் //4


கவி அழகன்

3

378

மொட்டு மலர்ந்த    மல்லிகைச் செடியிலே

சிட்டும் வாழ்ந்தது   மகிழ்வோடு அன்று

கயவர் கைப்பட    பட்டுப் போனதே

மீண்டும் நட்டு  வளர்த்திடுவேன் சிட்டினை


முல்லை நிரோயன்

4

669

அன்பின் உறவோ மொட்டாய் மலர்ந்திட /

சிட்டாய் வானில் சிறகடித்துப் பறக்கவே/

 பட்டான உள்ளம் இணைந்திட என்றும்/

நாற்றாய் வேரூன்றி நிலைத்ததே வாழ்வு/


நஸீரா வசூக்

5

254

மொட்டு மலர்ந்தால் மெட்டமைக்கும் பறவைகள்/

சிட்டாகப் பறந்துவந்து  தேன்குடிக்குமே/

பட்டு இதழ்கள் பாழ்படாமல் /

நட்டுவைத்த செடியின் முகவரியே பூக்களானதோ/


கி.மா.கனகராசன். சூலூர். 

6

773

சிரிக்கும் மை விழி சிட்டு

கைவிரல் மேனியில் பட்டு

ஆசையை அவளிடம் நட்டு

பெயர் சொல்ல மலர்ந்தது மொட்டு.


எம்.எம்.நிஜாமுதீன்

7

779

மொட்டென தாய் மடி பிறந்து...... / 

சிட்டென சிறகடித்துப் பறந்து...../ 

பட்டென உறவுகளோடு இணைந்து..../ 

நட்டு வைத்த விருட்சமாய்  வாழ்வோம்.........  


 ரமணி சிவா

8

261

#_மொட்டு மலர்ந்தது மணம்,கமழ்ந்தது

#_சிட்டுக்்குருவிகள் குவிந்தனவே

#_பட்டு,உடை,அணிந்து

மகளிர்,நாத்து,#_நட்டு,மகிழ்ந்தனரே !

 

 ~ வள்ளல் இராமமூர்த்தி

9

761

மொட்டுப் போன்று அழகாய் சிரித்தவள்/

சிட்டாக பறந்து விட்டாள்/

பட்டுப்போன்ற என் மனதில்/

நட்டு வைத்தால் மலர் செடிகள்/


 மு, துரைப்பாண்டியன்

10

580

மொட்டு அவிழ்கின்ற தாமரை போல்//

சிட்டுக்களாய் மழலைச் செல்வங்கள்//

பட்டுப் போன்ற மனமுடனே//

நட்டு வைத்தனர் அன்பெனும் மரத்தை//


சுந்தரலிங்கம் நிருத்திகன்., அல்வாய்.

11

763

மொட்டு  அவிழ்ந்து  பூத்தப் பூவை /

சிட்டுப்  போல பறந்தே/

பட்டான தன் இதயத்தில் /

நட்டு வைத்தாள் உன் நினைவுகளை /


பிரேமா பூ 

12

240

மொட்டு இருந்தது செடியில் அழகாக//

சிட்டு குருவி அமர்ந்ததும்//

பட்டு  இதழ்கள் விரித்தது//

நட்டு வைத்தால் இயற்கையை ரசிக்கலாம்//


உமா பாலகிருஷ்ணன், பெங்களூர் 🏵️

13

735

வண்ண மலர் மூலம் மொட்டு/

சிட்டுக்குருவி கானம்

பட்டுப்புடவை ஆடம்பரம்/

மரக்கன்று நட்டு காப்பாய் பூமி.


   படைப்பாளி பைரவி

14

450

செடியிலே மலராக விரிகிறது மொட்டு!

அதன் பட்டு  இதழ்களில்

தேன் அருந்துகிறது சிட்டு/

அன்று நட்டு வைத்த செடியிலே!


ரேணுகா சுந்தரம்

15

588

ரோஜா மொட்டு தாய் செடியில்!... /

வசிகரிக்கும் சிட்டு வருவதற்குள், /

கை பட்டு பூப்பதற்குள்.. /

மனைவி தலையில் நட்டு மகிழ்ந்திடுவேன். /


   ~~பாரிஉமா. சர

16

770

மொட்டு மலர்ந்தது காதல் வந்தது 

சிட்டுக்குருவிடம் தூது போகச்

பட்டாடை உடுத்தி பருவப்பெண் 

கண்களால் காதல்சொன்னேன் நாணத்தில் தலைநட்டால்


ஸ்ரீதர் லெட்சுமணன்

17

259

மொட்டு பூத்த செடியில் அமர்ந்து.../

சிட்டு உறவுகளை தேடுது.../

பலமான காற்று பட்டு.../

நட்டு வைத்த செடிகள் பாழானது...!/


ஜெயலெட்சுமி மாணிக்கம்

18

246

மொட்டு ஒன்று  மலர்கின்ற பருவம்

நட்டு வைத்த செடியினிலே.

சிட்டு ஒன்றுத் தொட்டுத்தான்

பட்டுப் போகுமோ மொட்டும் மலராமலே.


செல்வம் செல்வகுமார்

19

780

செடி ஒன்று நட்டு வளர்த்தேன்/

மொட்டு ஒன்று விட்டது/

பட்டு இதழ் விரித்தது/

சிட்டும் திரும்ப வந்து விட்டது.


இன்னிலா போஸ்

20

201

நட்டு வைத்த பூஞ்செடியில் அழகிய/

 மொட்டு ஒன்று மலர்ந்தது /

பட்டு இதழ்களிலே தேனருந்த/

பறந்தோடி வந்ததே அழகிய  சிட்டு//


புவனா  சற்குணம்   கனடா

21

749

மொட்டு விரிந்த அழகிய மலரிலே

சிட்டு ஒன்று வந்தமர்ந்து

பட்டு இதழ்களின் நடுவே

அலகினை நட்டு நறுந்தேனைக் குடித்தது


க.மூ.முகம்மது றிஸ்மி, இலங்கை

22

258

நட்டு வைத்த குச்சி, கொடியாக/

மொட்டு மலரத் துடிக்கிறது/

ஓய்வுக்காக சிட்டு அமர்ந்திட/

பட்டுப் போகாமல் இருக்க வேண்டினேன்!


                 தங்க. சரவணன், வடபழநி, சென்னை-26.          

23

461

நட்டு வைத்த  பூஞ்செடி ஒன்றில்/

மொட்டு மலர்ந்து விரிந்திட/

சிட்டுக் குருவி தேனருந்த /

பட்டு இதழில் பதிந்து அமர்ந்தது./


கோ.அருச்சுணன்

24

769

இங்கே பார் ஒரு மொட்டு

 பறக்கும் சின்னச் சிட்டு

செடியோ  பச்சைப் பட்டு

இதைக் கிட்டு வைத்தான் நட்டு.


  - கற்பகாம்பாள் கண்ணதாசன்

25

614

மொட்டு விரிய காத்திருக்கும் வண்டு/

சிட்டாய் வந்து அமர்ந்தால்/

கால்களில் மகரந்தம் பட்டு/

நட்டு வைத்த வேறொன்றுக்கு மாறுமே/


விஜயலட்சுமி

26

422

மொட்டு ஒன்று மலர்ந்து சிரித்தது/

சிட்டு கண்டு மகிழ்ந்தது/

பட்டு மலர்ச் செடியினை/

நட்டு வைத்து வீட்டில் வளர்த்தது./


தங்கவேலு கந்தன்

27

207

பூச்செடிகளை நட்டுப் பராமரிக்கும் அழகில்/

மொட்டுகள் மலர்ந்தே மணமாகும்/

பட்டு இதழ்கள் மென்மையாகும்/

சிட்டுக்கள் வந்தே தேனை அருந்தும்/


-முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி.

28

755

சிட்டுப் போன்ற பெண் ஒருத்தி

பட்டுப் போன்ற கூந்தலிலே

மொட்டவிழ்ந்த மலரைச் சூடி

நட்டுவனின் தாளத்துக்கு நடனம் ஆடினாளே


     - ஜெயக்குமார் சுந்தரம்                   

29

698

மொட்டாகி மலராகி பதுமையாய் பூத்தவளே/

மனமும் சிட்டாகி பறக்குதடி/

மெல்லிய கைகள் பட்டே/

நாயகனாய் வருகிறேன் நட்ட வீதியிலே/


தேனி ஆ.சுந்தர்

30

256

#மொட்டு மலராகி மணம்  பரப்பும்/

#சிட்டு வந்து தேனுண்ணும்/

#பட்டு பூச்சிகளும் நாடிடும்/

#நட்டு வச்சு பூங்காவாய் மாற்றுவோம்/


      .......நட்புடன் ஜெயபால் வி.பி.

31

482

மொட்டு ரோசா  அழகாய் இருக்குது/

 நட்டு வைத்தேன் வாசலில்/

 பட்டுப்  போகாமல் நீரூற்று/

சிட்டு  வந்திடும் தேனைப் பறிகிடவே.


 தஞ்சை கோ பாலசுப்ரமணியன்

32

647

மொட்டாய் மலர்கையில் மனிதத்தை விதைத்துவிடு //

சிட்டாயிருக்கச் சிந்திக்கக் கற்றுக்கொடு //

பட்டாயிருக்கப்  பண்பைப் புகுத்திவிடு //

நல்நாற்றை  நானிலம் தனில்  நட்டுவிடு //


நாக நந்தினி

33

756

மொட்டு மலர்ந்து அழகு தரும்//

சிட்டு விரைந்து வரும்//

'பட்டு' தேன்  சிந்தும்//

நட்டு வைத்த மனமோ மகிழும்//

          ***

கன்னிமுத்து வெல்லபதியான்

34

768

நட்டு வைத்தேன் நாற்றொன்றை நேற்று//

மொட்டு மலர்ந்தது இன்று//

பட்டுப் போன்ற பூவழகில்//

விட்டுத் தெறித்தன உள்ளத்துத் துயரமெல்லாம்


புவனா சந்திரசேகரன்

35

732

நட்டு வைத்த செடியிலே ஒய்யாரமாய்/

சிட்டு குருவி ஒன்று/

பட்டு போன்ற இதழ்களிலே/

அமர்ந்து மொட்டை ஆராய்ந்து பார்க்கிறது/


கீதாஞ்சலி

36

771

மொட்டு ஒன்று மலர்ந்திடக் கண்டு/                      

சிட்டுத்  தேனையும் சுவைத்திடப்                       

பட்டுப்  பாதங்கள் பட்டவுடன்                          

நட்டு வைத்த பூச்செடியும் அசைந்தாடியதே/

    

மா.சு.திருக்குமரன்

37

210

#மொட்டு விரிந்து மணம் வீசிட...

பறந்து வந்ததே #சிட்டு..

#பட்டுச் சிறகை விரித்து..

#நட்டு வைத்த மரத்தில் இளைப்பாறியதே...


திருமதி சுப்ராணி சிவகுமார்...✍...

38

250

#நட்டு வைத்த ரோசா செடியில்

#மொட்டு ஒன்று கண்டேனே

#சிட்டு ஆக சிறகடித்து

#பட்டு ரோசா பறித்தேன் நான்


செல்வலஷ்மி

39

414

மொட்டு விரிந்தால் மலர் ஆகும்/

சிட்டுப் பறந்து சிறகடிக்கும்/

பட்டு நூல் சேலையாகும்/

நட்ட விதை பயிராகி வளரும்/


சோ.மீனாட்சிசுந்தரம்

40

463

மொட்டு  முகை ஆகி மலராகும்!

தேன் உண்ணும் சிட்டு .

பட்டு மென்மை இதழ்கள் !

நட்டு வைத்தால் பலன் தருமே!


தஞ்சை அரவிந்தன்

41

775

மொட்டு மலந்திடும் நேரமோ அதிகாலை//

சிட்டு சிறகடிக்கும் வானிலே//

பட்டு போல மின்னிடும்//

நட்டு வைத்த நாற்றும் விளையுமே// 


மல்லிகா சக்திதேவி

42

238

தோட்டத்தின்  நடுவிலே முல்லையை #நட்டு../

வளர்ந்து பூத்ததே #மொட்டு../

#பட்டான இதழ்களிலே வாசம்../

#சிட்டொன்று வந்துதே சீர்மிகும் வாசத்திற்கு../


#இளந்தை சேது

43

709

மொட்டு விரிந்த உன் காதல் //

சிட்டெனப் பறக்குது மனம் //

பட்டுத்தி தாலிக்  கயிறுடன் //

பந்தக்கால் நட்டு பரிசம் போடுவேன்//


தாழை. இரா. உதயநேசன்

44


பூத்தது சிரித்தது புன்னகை மொட்டு...

பூந்தேனைப் புசித்தது சிட்டு...

பூவிதழ் தென்றலில் பட்டு...

பூக்களின் வாசனை பூமியில் நட்டு !


-ஆ.முருகானந்தம்

45

717

மொட்டு விரிந்த ரோசாப் பூவில்

சிட்டுக் குருவிகள் பட்டுச்

சிறகுகள் விரித்துப் பறந்தன

நட்டு வைத்த நானும் பரவசமானேன்


கந்தசாமி நடேசன்

46

386

மொட்டு விரிந்தது இதழ்கள் பரப்பி/

சிட்டு விரைந்தது தேனருந்த/

பட்டுத் துகிலென சிறகடித்து/

நட்டுவைத்த செடியென நாணிக் கவிழ்ந்தது/.


தென்கரை தாயுமானவன்.

47

743

மல்லிகை மொட்டு விரிந்து இருக்க/

சிட்டுக் குருவி அமர்ந்து/

அவசரப் பட்டு அசைந்ததால்/

நட்டு வைத்த செடியும் வீணாதே/


இளங்கோ

48

613

நட்டு  வைத்த  ரோஜா செடியில்/

மொட்டு  ஒன்று கண்டேன்/

சிட்டுக்  குருவி  பாதம்/

பட்டு  ரோஜா மொட்டு விழுந்தது


ஜெயாசந்திரமோகன்

49

399

📣/#மொட்டு மலராகிட      தேன் உருவாகிட!..../

📣/#சிட்டு காத்திருந்து        புசித்தது!.../

📣/#பட்டுச் சிறகால்        பறந்தே!.../

📣/#நட்டு உயர்ந்த     கொடிக்கம்பில் அமர்ந்ததே!.../


                     --சாக்கை.பொன்னழகு.

50

727

மொட்டு விட்ட ரோஜா மலர் //

சிட்டு பார்க்க பூத்திருக்க //

பட்டு வண்ண ரோஜாவே //

உன்னை நட்டு வைத்தவர் யாரோ ? //


சுசி சுசேனு

51

421

மொடடு மலர்ந்து முகம் சிரிக்கும்/

சிட்டுக் குடிக்கும் தேன்/

பட்டுச் சிறகுப் பறவை/

நட்டு வளர்த்த நல்லச் செடியினிலே/


---செம்போடை சோழன்---

52

428

என்னவள் ஓரு ரோசா மொட்டு

பாவையோ பருவச் சிட்டு

வதனமோ காஞ்சிப் பட்டு

நட்டு வைத்த  செடி அவள்.


சுப்பிரமணியன் அன்புமலர்

53

348

மெட்டு கட்டி தொடர்ந்தது மொட்டு //

கானம் சேர்த்த சிட்டு //

பட்டுப் போல் சிரித்ததே //

நட்டு வைத்த செடிகள் குலுங்க //


உடுமலை ராமர்

54

347

நட்டு வைத்த செடி  உயிர்த்தது

மொட்டு  மலர்ந்து பூவானது

பார்த்த சிட்டு பரபரப்பானாள்

கண்ணடி பட்டு காயாது காத்திடவே/


வேங்கடலட்சுமி ராமர்

55

636

மொட்டாக மலர்ந்து மணம் வீசுபவளே!!

சிட்டாகப் பறந்து விடாதே!

பட்டு எடுத்து விட்டேன்!

நட்டுகிறேன் கொட்டகைக்கால்  வீட்டில் இன்று!


சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி

56

776

மொட்டவிழ்ந்து சிரிக்கும் மலரில் .

தேன் சிட்டு வந்தமர்ந்து.

பட்டுசிறகை விரிக்க வேண்மென 

நட்டு வைக்கிறேன் நானுமொருசெடி.


பார்வதி பாலசுப்ரமணியம்

57

718

பட்டு  விட்ட மரத்தின் அடியில்,/

நட்டு வைத்த மரத்தில்,/

மொட்டு ஒன்று மலர,/

சிட்டு வந்து தேன் குடித்தது!/


கீழ்கரவை குலசேகரன், இலங்கை

58

604

மொட்டென இருந்த என் இதயத்தில்//

சிட்டென நுழைந்துச் சிறகடித்து//

பட்டென மனதைப் பறித்து     //

நட்டு வைத்தாள் காதல்  செடியை//


கவிஞர் கோவை ஆறுமுகம்

59

747

நட்டு வைத்த ரோசாச் செடியிலே//

மொட்டு விட்டு  மலர்ந்திடவே//

சிட்டு   உறிஞ்சும் தேனினாலே//

பட்டு விடுமோப் பாரம் தாங்காமலே//


ஜெ.சுகமணியன், வாழப்பாடி

60

618

நட்டு வைத்த பூச் செடியிலே/

பட்டுப் போன்ற இதழ்களுடன்/

மொட்டு மலர்வதைக் கண்டு/

சிட்டு ஒன்று சிறகடித்து வந்ததே/


ஔவை.

61

483

தீபம் போன்ற அழகு மொட்டு/

துணையின்றித் தவிக்கும் சிட்டு/

ஆவணியில் கல்யாணப் பட்டு/

அழகாய் நடக்கும் முகூர்த்தக்கால் நட்டு/


ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை

62

737

நட்டு வைத்த பூஞ் செடியில்

நன்றாய் மொட்டுக்கள் மலர்ந்தன

பட்டுப்  பூ  விதழ்களில்

சிட்டு வந்து தேன் குடித்தது


திருமதி சரோஜனி நடேசன்

63

409

செந்நிற மொட்டு மலரும் நேரம்//

சிட்டு ஒன்று மரத்தில்//

பட்டு மாதிரி பளபளக்கும்//

குருவியும் உட்காரநட்டு வைத்தளரே//

****

க.சுதர்சனக்குரு.

64

387

மொட்டுகளே மனிதனில்லா இடத்தில் மலருங்கள் //

சிட்டுகளே கானகம் செல்லுங்கள் //

பட்டுப் போன மரமகற்றி//

நட்டு வையுங்கள் புதிய மரம்// 


சென். இலக்குவன்,ஈரோடு

65

569

மொட்டுப் போலவே கனவுகளை விரித்துச் //

சிட்டு என்று பறந்து //

பட்டுக் கொண்ட அனுபவத்தால் //

நட்டு எழுந்திடு இலட்சியம் அதனை //


செல்வி. ஆர்த்திகா சுவேந்திரன்

66

722

மொட்டின் இதழ் விரிந்து மணந்திட/

சிட்டுக்களின் மனம் சிலிர்த்திட/

பட்டுத் தெறித்த ஒளியில்/

நட்டு வைத்த செடியின் பசுமை/


சுஜாதா அருணாச்சலம்

67

312

மொட்டு மலர்ந்து மலர் ஆகும்

சிட்டு தேனைக் குடித்து மகிழும்

பட்டுப் போன செடி வாடியதென

நட்டு வைத்தேன் வேறொரு விதையை..


பொ.சுப்புலட்சுமி

68

448

மொட்டைப் போல மலரக் காத்திருந்து,

சிட்டைப் போல சிறகடித்து,

பட்டு போன்ற மென்மையான உன்மேல்,

நட்டு வைத்தேனென் காதலை!!


சுமி ஹரி

69

269

மொட்டாக அவள் விரித்த பார்வை

சிட்டாக மணம் பறக்குதே

பட்டு  எடுத்து பார்க்கிறாள்

நட்டுகால் பந்தலில் அத்தை மகள்..!!


சொ.செ.சுப்பிரமணியன்

70

777

மல்லிகை மொட்டுக்களோடு என் இதயமடி

சிட்டாய்ப் பறந்த மனதால்

பட்டுப் போன வாழ்க்கையடி

நட்டு வைத்த மரத்தடியில் நானடி


~~~கவிதை காளிதாஸ்

71

328

திட்டுச் செடியில் அரும்பிய மொட்டில் /

பட்டுச் சிறகு அசைத்து /

சிட்டு- பட்டும் படாமல் 

நட்டநடு வானிலே ஆடியதே நாட்டியம் !! 


   வெ.தண்டபாணி சூலூர்

72

239

மொட்டுகள் மலராமலே கருகிடும் சிறார்கள்/

சிட்டுகள் உணவுக்கு காத்தல்/

பட்டு கல்யாணத்திற்கே அடையாளம்/

நட்டு வைக்கும் மரங்களைப் பேணுவோம்/


குமார்

73

726

நட்டு வைத்த அலைபேசி கோபுரங்களால்/

பட்டுப் போன்ற பறவையான/

சிட்டுக்குருவி சிறகொடிந்து திரிகிறது/

மொட்டுக்களும் பிறப்பிலே சாம்பல் ஆனதே/


-காளிராஜ்பாலகணேஷ்

74

782

இலங்கையில் ஆட்சி அமைத்தது மொட்டு  //          ஐயின மக்கள் சிட்டு //                 

இலங்கைத் தீவில் அகப்பட்டு //                             ஒற்றுமை விதையை நட்டு விருட்சமாக்கிடு  //           


இலங்கையன்.ஜனாப்  பி.டீ.எம்.இஸ்மாயில்.

75

562

நட்டு வைத்தேன்  பூச்செடி தோட்டத்திலே/           

பட்டுப் போகாமலிருக்க நீரிறைத்தேன்/

மொட்டு மலர்ந்தது பூவாய்/

அழகியச்சிட்டு அமர்ந்து தேனை உறிஞ்சியதே/


பா.பத்மநாபன்

76

221

மொட்டு மலரொன்று மலர்ந்து சிரித்தது

சிட்டுக் குருவியும் சிறகடித்து

பட்டுச் சிறகுடன் பளபளத்தது

நட்டு வைத்த நாற்றிலே குந்திச்சிரித்தது


புஷ்பா கிறிஸ்ரி

77

373

மொட்டு விட்டதே பெண்ணும் பூத்திட

சிட்டுப் போன்று பறக்கிறதே

பட்டுப் போன்ற கன்னங்கள் 

நட்டு வைத்த காதலோடு வளர்கிறது!!


ஜயந்தினி வாகீசன்

78

652

மொட்டுகள் திறந்தால் சத்தங்கள் வருமோ?/

சிட்டுகள் பாடலே அருமைதானே!/

பட்டுகள் இல்லா திருமணமோ?/

நட்டுகள் இன்றி இயந்திரங்கள் ஓடிடுமோ?/


கூ.மு.ஷேக் அப்துல் காதர்

79

760

மொட்டு மலர்ந்து இதழ் விரித்தது ../

சிட்டெனப் பறந்தது நினைவு .../

பட்டுப் பூவாய்ப் பறந்தாள் .... /

நட்டு விட்டுப் போனாள் ஆசையை ..../


கிழக்கு வானம் முஸ்தபா மெளஜூத்

80

707

#மொட்டு அவிழும் மாலை நேரம்/

#சிட்டு ஒன்று பாடுதே/

#நட்டு வைத்த மரமும்/

#பட்டு போல நாளும் மிளிருதே/


✍️பா.ச.கண்ணன்

81

590

#நட்டு வைத்த நாற்றங்கால் யாவிலும்

#பட்டுத் தெறிக்கும் மழைநீரால்

#மொட்டு விட்ட மலர்வனத்திலே

சுற்றி வருதே #சிட்டுகள் கூட்டம்


      *ரேணுகா ஸ்டாலின்*

82

287

வண்டின் வருடும் கால்கள் பட்டு

வெட்கித்த மொட்டு  விரிந்தது 

கால்களை நட்டு குடித்தது 

சிட்டெனப் பறந்து வனத்தில் மறைந்தது


தண்டபாணி


83

515

ஆசையாக நட்டு வைத்த பூச்செடியில்/

அழகான மொட்டு அரும்பிட/

இசையோடு  நெருங்கிய சிட்டு/

பட்டு இதழ்களில் முத்தம் பதித்தது/


லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன்


84

578

மொட்டும் மலர்ந்து நறுமணம் பரப்பிட//

சிட்டும் நாடியே வந்திடும்//

பட்டாய் அமர்ந்து தேனருந்தி//

நட்டச் செடியில் இனிதே பறந்திடும்//


...கவியாசகன்...!!!

85

668

நட்டு வைத்த செடி ஓன்றில்/

மொட்டு இதழ் விரிக்க/

அழகில் மயங்கிய சிட்டு/

பட்டு இறகை விரித்து அமர்ந்ததே/


ஏஞ்சல்சோபிதா

86

425

மொட்டு மலர்ந்த அழகான பூவில்

சிட்டுக்குருவி பறந்து வந்து

பட்டு போன்ற சிறகடித்து

நட்டு வைத்த செடியில் இளைப்பாறியதே....


கலாகண்ணன்

87

654

வந்தாலொரு   தேவதை!    

நட்டுவைத்த செடியில் பூத்திட்ட  மலரெனவே   

பளபளத்தன அவளின் பட்டுக் கன்னங்கள்!  

மொட்டவிழ்ந்த. முல்லையென. மோகனமாய் இதழ்விரித்தாள்!    


பொன்.சுந்தர பாண்டியன்  சோழவந்தான்



போட்டி நிறைவு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages