சுருங்கி வரும் விவசாயம்
..........................................
காடும் அழியுதிங்கே
பச்சையம் தெரியுதில்லை/
காட்டுத்தீ பரவுதிங்கே
விலங்கினம் தொலையுதங்கே/
சனத்தொகை பெருகிச்செல்ல
கட்டடம் வானைத்தொடுதே/
சூழலும் வெப்பமாக
மும்மாரி குறையுதிங்கே/
தொழிற்சாலை பெருகுதிங்கே
இயந்திரம் இயங்குதிங்கே/
பொறிமுறை கூடிச்செல்ல
வேலையும் குறையதிங்கே/
இளைஞரின் நாட்டம்யாவும்
கணினியில் ஆர்வமாக/
நிலங்களும் பாழாய்ப்போக
விவசாயம் சுருங்கிவருதே/
வயலிலே நெல்லுமில்லை
வரப்பிலே நீருமில்லை/
அறுவடை ஒன்றுமில்லை
ஆதாரம் கூடவில்லை
உணவின் தேவைகூட
குளிசையாய் மாறிவருதே/
உணவுக்கே பஞ்சம்வந்து பட்டினிச்சாவும் வருமோ!
இத்தனையும் போக்க
நாங்கள் துணிவுடன்
துணிந்து நிற்போம்.!
இந்திரகுமார் ஜமுனாமலர்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக