மழலை
....................................
மழலையின் சிரிப்பில்
மனங்கள் மலரும்/
அம்மா என்கையில்
ஆயிரம் மலர்வு/
அன்னையும் அன்பை
பொழிந்தே அணைப்பாள்/
மலடி என்னும்
பெயரைப் போக்கும்/
கருவாய்த் தரித்து
தாய்மை ஆக்கும்/
மகவாய் மலர்ந்து
மானம் காக்கும்/
தாயின் குருதி
பாலாய் மாறும்/
புதுமை கண்டு
மனமும் குளிரும்/
பொக்கை வாயின்
சிரிப்பும் அழகு/
கன்னக் குழியின்
சிரிப்பும் அழகு/
தத்தி நடக்கையில்
தரணியே மகிழும்/
மழலையின் மொழியில்
குவலயம் குளிரும்/
பள்ளி செல்லும் பருவம்
செழிப்பே/
கற்பனை யாவும்
ஊற்றாய் எடுக்கும்/
நல்ல நூல்களைக்
கற்றுத் தெளிவர்/
பெரியோர் மதிப்பைப்
பேணிச் செல்வர்/
உயிர்களில் இரக்கம்
காட்டி நடப்பர்/
உளத்தில் கருணை
ஒளியை வளர்ப்பர்/
அன்பை ஊட்டி
பண்பை வளர்த்து/
ஏழையின் கண்ணீர்
துடைத்தும் விடுவர்/
கருணையின்
கடந்தும் செல்வர்/
ஜமுனாமலர் இந்திரகுமார்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக