29.09.20- கௌரவம் : சிறுகதை - தென்குமரிக் கவிதைக்களம்

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

29.09.20- கௌரவம் : சிறுகதை

கவிச்சிகரம் அமுதன், தமிழ்நாடு


29.09.20


கெளரவம்(சிறுகதை)


வாசலத்தான் எட்டி எட்டிப்பாத்துக்கிட்டுந்தாரு பொன்னுச்சாமி... வீட்டுல அவருமட்டும் தனிதான் . பொண்டாட்டியெல்லாம் கோவிச்சிக்கிட்டு அப்பன் வீடுபோனவ போனவதான்...அங்கேயே போய்சேந்துட்டா


அவபோனதுக்கூட போகல இப்புடியும் ஒருமனுசன் இருப்பானான்னு ஊரு சனங்கபேசிக்கிட்டாக . இருக்குறபோதுதான் போய்ப்பாக்கல கோவிச்சிட்டு போனவளக்கூப்புடவும் இல்ல


போனவ போனவதான்னு இருந்துட்டாரு. ஆராவது ஏதோகோவத்துல போனா அதுக்காக அப்புடியே விட்டுறதான்னு சொன்னவகளுக்கு போயா புன்னாக்கு மனுசனுக்கு கவுரவம் தான் முக்கியம். அது இல்லாம மனுசன் இருக்குறதுல எந்தபிரயோசனுமுமில்லம்பாரு. அதுக்காகவேறகலியாணம் பண்ணச்சொன்னவகளையும் திட்டுவாரு.


இன்னொருதடவ எவனாவது அந்தத் தப்பத்திரும்பச்செய்வானாம்பாரு


இருவது வருசத்துக்கு முன்னாடி நடந்தது அது


அவரோட மக லதா படிக்கபோன எடத்துல காதல் வசப்பட்டுட்டா . அவன் சாதி வேற இவரோட நெனப்புல அது கீழான சாதி அதுனால கோவம் தலைக்கேறிப்போச்சுமகளைப்பாதில படிப்ப நிறுத்திக் கூட்டியாந்துட்டாரு ஒடனே தங்கச்சிமகனுக்கு ஒடனடியா கலியாணமும் ஏற்பாடு பண்ணிப்புட்டாரு. மக அழுதுபொலம்புனா எனக்கு இதுல இஸ்டமில்ல ந்னு ஆனா இவரு காதுலயே போட்டுக்கல. ஆளக்காவல் வைச்சிட்டு கலியாண வேலையப்பாத்தாரு,


அவரோட தங்கச்சி மகன் சரியான பொறம்ப்ப்போக்கு.


நெறயாச்சொத்துஅனுபவிக்கவே பொறந்தவன்ன்னு நெனச்சிக்கிட்டான்போல. காசஎப்புடியெல்லாம் கரைக்கனுமோ அப்புடிக்கரைச்சான் கூட ஒரு கூட்டம் சீட்டு குடி கூத்தியான்னு. அவனுக்குத்தான் கட்டிவைக்க ஏற்பாடு அவசரக்கலியாணம் அதுநால சுருக்கமா ஏற்பாடு . பொண்டாட்டிகாரிக்கும் புடிக்கல வேறசாதி வேணாம் ஆனா நம்ம சாதில வேற நல்ல மாப்புள்ளயாவது பாருங்கன்னா


அதுக்கு இவரு உம்மக அந்தப்பயலோட ஊரு சுத்துனது எல்லாருக்கும் தெரிஞ்சிபோச்சி


எவன் வந்து கட்டுவான் ஒம்மகளை இவனக்கைல கால்ல விழுந்து தான் நானே சம்மதிக்க வைச்சேன்னாரு. அதுக்கு இவள கெணத்துல புடிச்சித்தள்ளுயா புண்ணியமாப்போகும்ன்னா


ஓம்வாயப்பொத்திக்கிட்டு சோலியப் பாருன்னாரு. அவசரமாக்கலியாணமும் நடந்துமுடிஞ்சிபோச்சு.


மகபோன மறுநாளே திரும்பிவந்தா. அவன்கூட வாழ்மாட்டேன்


அவன் தண்ணியப்போட்டுட்டு வந்து அடிக்கிறான் கேக்காதகேள்வியெல்லாம் கேக்குறான்னா. இவரும் போயிப்பேசிப்பாத்தாரு. அவன்சொன்னான் இந்தாயா நீ கெஞ்சிக்கேட்டதால கலியாணம் பண்ணிக்கிட்டேன் அம்புட்டுத்தான் மத்ததுல நீ தலையிடாதன்னான். இவரு கட்டாயப்படுத்தி


கொண்டுபோயி விட்டாரு திரும்ப வீட்டுக்கே வந்தா.


அவன் கூத்தியாளக்கூட்டியாந்து வீட்டுலயே குடித்தனம் நடத்துறான் இனிமே அங்க போகமுடியாதுன்னா. இவருபோயி திரும்ப அவமானப்பட்டு வந்தாரு. இதுக்கு நடுவுல மககாரிய ஒருநா காணாம். அம்மாகாரி எனக்கு எதுவும் தெரியாதுன்னு சாதிச்சாஅப்புறமாத் தெரிஞ்சது அவ அவளோட ஆளோட ஓடிப்போயிட்டான்னு. இதுக்கு ஏற்பாடு பண்ணது ஆத்தாகாரின்னு . அன்னிக்கி பொண்டாடிய போட்டு வெளுத்துப்புட்டாரு


அவ அடிதாங்கமுடியல. கோவத்துல ஒரு வார்த்தை சொன்னா. வேணும்னு இது ஓம் மகளே இல்ல. வேறாளுக்குப்பொறந்ததுன்னு.


வெளியதள்ளிக் கதவச்சாத்துனாரு போனவ போனவதான். அவசெத்துப்போயி ஒருகொஞ்ச நாளுக் கழிச்சி அவபொட்டிய தொறந்துபாத்தாரு அது அவளோட பொட்டி யாரையும் தொடவிடமாட்டா. பூட்டுப்போட்டுருப்பா இப்ப பொட்டியே துருப்பிடிச்சிப்போச்சி தட்டுனவன்ன தொறந்துக்கிச்சி. அதுல மேலாப்புல ஒரு பேப்பர் இருந்துச்சு


அதுல அவ எழுதிவைச்சிருந்தா. என்னிக்காவது நீ இதப்படிப்பன்னு தெரியும். அன்னிக்கி நான் வேணும்ன்னு பொய்சொல்லிட்டேன் உன்னோட திமிற அடக்க . மத்தபடி அவ நம்ம மகதான்நான் அப்புடிசொல்லன்னா நீ தேடிப்போயி அவளை வெட்டிருப்ப உன் மக இல்லன்றதால வெறுத்துப்போயி விட்டுட்ட


என்ன மன்னிச்சுடுங்கன்னுஅன்னிக்கி அழுது பொலம்புனாரு.


போனவாரம் வீட்டுக்குகடுதாசி வந்துச்சு


மககாரிகிட்ட இருந்து. ஒங்க பேத்திக்கிக்கலியாணம் வைச்சிருக்கு பத்திரிக்க வைக்க அவளே தனியா வாறா. வேணும்னா வாங்க. புடிக்கலன்னா விட்டுருங்க ஆனா பேத்தி மனசநோகடிச்சிறாதீகன்னு


அவருக்குள்ள என்னமோ நடந்துச்சு  இம்புட்டு நாளா பாக்காத பேத்திய பாக்க மனசு அல்லாடுச்சு. இப்புட்டுநாளா சாமி கும்புடாதவரு பேத்தி நல்லாருக்கனும்னு சாமிகிட்ட வேண்டி காசு முடிஞ்சிபோட்டாரு.  பேத்திகாரி வந்தா அவ மூஞ்சி அப்புடியே பொண்டாட்டிமாதிரி இருந்துச்சு. பொண்டாட்டி நெனப்பு வர கண்ணீர் வழிஞ்சிச்சி.எவ்வளவு பெரிய மனுசி அவன்னு.மகளுக்காக தன்னையே அழிச்சுகிட்டவ வாம்மா என்னோட செல்லபேத்தியேன்னு


கண்ணீர்வழிய க்கூப்புட்டாரு ......அவ தயக்கத்தோட உள்ளவந்தா அவசொன்னா... தாத்தா எங்கமேல கோவமான்னு கேட்டா. இல்லைம்மா எல்லாம் கரைஞ்சிடுச்சுன்னு கண்ணீரோட சொன்னா


அப்ப பேத்தி காலம் மாறிக்கிட்டு இருக்கு.


மனுசங்களும் மாறிக்கிட்டுதானிருக்காங்க......காலம் எல்லாத்துக்கும் ஒரு பதில் வைச்சிருக்கு அது தெரியவரும்போது நம்மல நாமலே


மாத்திக்கவேண்டிய அவசியம் வருமுன்னா... தாத்தா கேட்டாரு அம்மா வரலயா அவளையும் பாக்கனும்ன்னாரு கண்ணுல நீர் சிந்த அவர் மூஞ்சில அப்ப மகமேல இருக்குற பாசம் வழிஞ்சிச்சு......


கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages