18.10.20 - அத்தியாயம் : 131 : புலவி - தென்குமரிக் கவிதைக்களம்

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

18.10.20 - அத்தியாயம் : 131 : புலவி



பெ.தி.சுகுமார்.



18.10.20




<><><><><><><><><><><><><>

   " திருக்குறள் கவிதை "

    தினம் ஒரு அதிகாரம்

 இன்பத்துப்பால் - கற்பியல்

          அதிகாரம் - 131

                  " புலவி "

                 ●●●●●

<><><><><><><><><><><><><>


தலைவர் வந்தால், 

விரைந்து தழுவாமல்;

தலைவரிடம் பிணங்கி

இருந்து சற்று;

தலைவர் அடையும்,

துன்பமதும் காண்போம்!

தலைவரிடம் ஊடலும்,

அளவோடு காணணுமே!


காணும் உணவில் ,

அமையும் உப்பாய்;

காணும் அளவாய்,

ஊடலும் மிகுந்தும்;

காணின் உப்பால்,

சுவையது கெட்டிடும்;

காணும் பிணக்கம் ,

நீங்காத் துன்பமே!


துன்புற்று ஊடலைப்

பிணக்கம் பின்னிடும்;

துன்புற்ற பிணக்கத்தை,

அன்பு காத்திடாது;

துன்புற்று வாடிய, 

பூங்கொடி அறுப்பதாகுது!

துன்புறுவர் மலர்

மங்கை ஊடலாலே!


ஊடலது தலைவியிடம்,

ஆடவர்க்குத் தனியழகு!

ஊடலில்லாப் பெரும்பிணக்கு,

பழுத்திட்ட பழம்போன்றது!

ஊடலில்லாச் சிறுபிணக்கு,

சிறுகாய் போன்றது!

ஊடலது அளவோடு,

பக்குவமாய் வேண்டுமே!


வேண்டா ஐய்யத்தால்,

புணருங்கால் துன்பமென;

வேண்டா ஐய்யத்தால்,

காதலருக்குத் துன்பம்!

வேண்டிடும் அருங்குணத்தால்,

தன் குற்றம்;

வேண்டியதைக் கொள்ளாதவரை,

வருந்திப் பயனில்லையே!


பயனுறும் நீரும்,

நிழலுமாய்க் கூடலுக்குப்;

பயனுறும் ஊடலும்,

அன்புடையாருக்குத் தேவை!

பயனுறும் ஊடலும், 

நீக்கி மகிழாது;

பயனுற்றுக் கூடுநினைவு,

நெஞ்சத்து ஆசையாகுமே!


கவிதை ஆக்கம்

மருத்துவகவிஞர்

பெ.தி.சுகுமார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages