18.10.20 - தென்குமரிக் கவிதைக்களம்

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

18.10.20



கிஷோர் கான்



18.10.2020


*"காய்கறி" குறள்.*


*தக்காளி எப்போதும் உட்கொண்டால் தரணியில் எக்காலும் நோயில்லை காண்.*


*எலுமிச்சை புளித்தாலும் எடுத்ததை உட்கொள்வீர் எலும்புக்கு வலு சேர்க்குமே*


*வெங்காயம் இல்லாச் சாம்பார் எஞ்ஞான்றும் தங்காதே நாவில் ருசி.*


*பொல்லாத பேரையும் நல்லவ ராக்குமே புடலங்காய் போற்றிச் சுவை.*


*தள்ளாத வயதிலும் உள்ளே தள்ளுவாய் முள்ளங்கி மூன்றினைத்தான்*. 


*வெண்டைக்காய் இருக்கையில் சுண்டை எந்நாளும் தொண்டையில் இறங்காது காண.*


*வள்ளிக் கிழங்குண்ணார் வையத்தில் வாழ்ந்தும் வாழாதார் என்பது வழக்கு*.   


*கத்தரி உண்பாரே உண்பார் மற்றெல்லாம் இத்தரையில பித்தருக்குச் சமமெனக்கொள்.*


*பூசணியைச் சேர்த்தாரே புண்ணியர் பூவுலகில் புகழோடு வாழ்வார் அவர்* .


*காய்கறியைத் தின்னாதார் வாழ்க்கை எப்போதும் நோய்நொடியில் வீழ்ந்து கெடும்.*


*முருங்கைக்காய் ருசித்தாரே ருசித்தா மற்றோரெல்லாம் வெறுங்கையில் முழம் போடுவர்*


*காரிருளில் கண்தெரிய வேண்டுமெனில் பாரிலுள்ள கரிசலாங் கண்ணியைச் சேர்.*


*இரும்பைப் போல் இதயமது வேண்டுமெனில் கரும்பைப் போய் விரும்பிச்சுவை* 


*உரிக்க உரிக்கத் தோல்தான் வெங்காயம் என்றாலும் செரிக்குமோ உரிக்காவிடில்.*


*பறித்தவுடன் உண்ணுவீர் பரங்கியை எப்போதும் பலனது வேண்டுமெனில்*


*பாகற்காய் கசக்கும் என்பதால் சீண்டாதார் சோகத்தில் சேர்ந்து விழும்*.


*வெல்லத்தில் இரும்புண்டு ஆகையினால் சாப்பாட்டில் ஒருதுண்டு சேர்த்துச்சமை* 


*வாழ்வதனால் ஆய பயனென்கொல் வாழைக்காய் தாழ்வேனெவே எண்ணு பவர்.*


*கேரட்டைச் சேர்க்காத சமையல் கிணற்றுக்குள் தேரை வாழ்ந்த கதை*


*பீடுநடை போடுதல் வேண்டுமெனின் தினமும் பீட்ரூட்டை உணவில் சமை*.


*கொத்தவரை பீன்ஸ் முட்டைகோஸ் இவையெல்லாம் சத்தே எனவே சரியாய் உணர்* 


*கறிவேப்பிலை மல்லி கடுகு சேராதோர் சொறி பிடித்தோடுவார் காண்.*


*பொன்னிற மேனி வேண்டுமெனில் நீ அந்த பொன்னாங் கண்ணியைச் சேர்* 


*கண் இருந்தும்  குருடரே காசினியில்  காய்கறியை உண்ணாதவர்.*      


அனைவருக்கும் பகிருங்கள்..


Whatsapp...

#எம்கே.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages