13.11.20- ரேவா : ரேவா_வரலாற்றுப்புதினம் - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 13 நவம்பர், 2020

13.11.20- ரேவா : ரேவா_வரலாற்றுப்புதினம்

 



13.11.20



ரேவா_வரலாற்றுப்புதினம்


முன்னுரை


காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னர்களிலேயே அதிகபட்ச ஆண்டுகள் சுமார் அறுபத்தி ஐந்து ஆண்டுகள் ( கி.பி.731_கி.பி.796 ) ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து நல்லாட்சி புரிந்தவன் பல்லவ மல்லன் என அழைக்கப் பட்ட  இரண்டாம் நந்திவர்மன் .


நந்திவர்மனது வாழ்வில் நடந்தேறிய பல நிகழ்வுகளை  மையமாகக் கொண்டு கற்பனை முலாம் பூசி இந்த வரலாற்றுப் புதினம் படைக்கப் பட்டிருக்கிறது. 


வரலாற்றில் சித்ரமாயனைக் குறிப்பிடும் பொழுது பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மனின் புதல்வன் ஒரு சிறுவன் என பதிவிட்டுள்ளனர்.  ஒரு சிறுவனை அரசுக் கட்டிலில் ஏற்க மறுத்து மற்றோர் சிறுவனை ஏன் காம்புஜ நாட்டிலிருந்து தருவிக்க பல்லவ அரசபிரதானிகள் முயற்சிக்க வேண்டும், இங்குள்ள சிறுவனான சித்ரமாயனையே  ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி இருக்கலாம் அல்லவா..? ஏனிந்த முரண்பாடு..இதற்கான காரணம் வரலாற்றில் தெளிவாக இல்லை..!

எனவே நான் சித்ரமாயனை வாலிபனாக சித்தரித்துக் காட்டியுள்ளேன்.அவனை பலரும் வெறுப்பதற்கான காரணத்தையும் தெளிவாக இங்கு பதிவு செய்திருக்கிறேன். 


அதே போன்று சில நிகழ்வுகளும் வரலாற்றிலேயே தெளிவற்றுக் காணப்படுகிறது, உதாரணமாக நந்திபுர முற்றுகையின் போது நந்திவர்மன் எதற்காக நந்திபுரம் சென்றான். விக்கிரமாதித்தன் காஞ்சிக்குள் நுழைய நந்திவர்மன் காஞ்சியை விட்டு அகன்றான் என்கிறது வரலாறு. அதுவும் சில குழப்ப முடிச்சுக்களே..! விக்கிரமாதித்தன் பிடியில் இருந்த காஞ்சி மீண்டும் பல்லவர் வசம் எப்படி வந்தது ..? என பல்வேறு சந்தேகங்கள் வரலாற்றில் காணக்கிடைக்கின்றன. 


நான் அவைகளுக்கெல்லாம்  இக்கதையில் அதற்கும் நியாயம் சேர்க்க முற்பட்டிருக்கிறேன். வரலாற்று நிகழ்வுகளில் ஆண்டுகளில் நடந்தேறிய நிகழ்வுகள் பலவும்  முரண்பட்டே காட்சி தரும் . அதை பல நூல்களோடு ஒப்பிட்டும் எனது பார்வையில்  சரிசெய்யவும் முற்பட்டிருக்கிறேன்.


இக்கதையில் வருகின்ற கதாபாத்திரங்களில் முக்கியமான

பெரும்பாலோனோர் 

சரித்திரத்தில் இடம் பெற்றிருந்தவர்களே. கற்பனைப் பாத்திரங்கள் மிகக் குறைவு. 


பல்லவர்கள், பாண்டியர்கள், கங்கர்கள், சாளுக்கியர்கள், இராஷ்டிரகூடர்கள் காம்புஜத்தின் சென்லா வம்சத்தினர் என பரந்துபட்ட பல தேசங்களில் இக்கதைப் பயணிக்கிறது. அங்கெல்லாம் உங்களையும் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு அழைத்துக் கொண்டுச் சென்றிருக்கிறேன். அந்நாளைய மக்களின் வாழ்வியலையும், சூழலையும் நீங்கள் தெரிந்து கொள்ளவும் ஓரளவு வகை செய்யும்.


இங்கு முக்கியமான ஒருவரையும் நான் குறிப்பிட வேண்டும், திருமங்கை ஆழ்வார் நந்திவர்மனது காலத்தில் வாழ்ந்தவர், அவரது சில பாடல்கள் வாயிலாக பல்லவருடன் அவருக்கிருந்த தொடர்பினையும் அறிந்து கொள்ள முடிகிறது. அவரையும் ஒரு கதை மாந்தராக நானிங்கு உலவ விட்டிருக்கிறேன். அது மட்டுமின்றி அவரது கவிதைகள் பலவற்றில் எனக்குப் பிடித்த  சிலவற்றை மங்களாசாசனப் பாடல்களாகவும் காண்பித்திருக்கிறேன்.குறிப்பிட்ட கோவில்களின் மங்களாசாசனப் பாடலாக அது இல்லாமல் இருக்கலாம்..ஆனால் நம் மனதை கவர்ந்த பாடல்களாக அது இருக்கும் என்பதில் ஐயமில்லை.


உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில்  "ரேவா" மிளிர்வாள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


நன்றி..வணக்கம்.


அனேக ப்ரியங்களுடன்.


அனுராஜ்..


இப்புதினம் மலர உதவியவை :


BIBLIOGRAPHY


1. A History of South India 

     _ Thiru.K.A.Nilakanta Sastry


2. PANDIAN Kingdom.

     _ Thiru.K.A. Nilakanta Sastry


3. பாண்டியர் வரலாறு_

     தமிழக வரலாற்று  வரிசை I

     _  திரு.T.V. சதாசிவ பண்டாரத்தார்


4.  Rashtrakutas and their times 

      _  Mr. Altekar


5.  Pallavas of Kanchi

      _  Mr. R. Gopalan


6. Chalukyas of Vatapi

     _  Mr.K.V.Ramesh


7. Concise History of Karnataka

     _ Dr.Suryanath U Kamat


8. Ancient India

    _ Mr. Ramesh Chandran


9. History of India

     _  Mr.Jayapalan


10. The Gangas of Talakad

        _ Mr.M.V.Krishna Rao


11. பண்டையத் தமிழக வரலாறு

       _ திரு.மயிலை.சீனி.வேங்கடசாமி


12. சமணமும் தமிழும்

       _ திரு.மயிலை.சீனி வேங்கடசாமி


13. தென்னாட்டுப் போர்க்களங்கள்

       _ திரு.பன்மொழிப் புலவர்                 

          க.அப்பாதுரை


14. பல்லவர் வரலாறு

        _ டாக்டர்.மா.இராசமாணிக்கனார்.


15. தகடூர் வரலாறும் பண்பாடும்

       _ இரா.இராமகிருஷ்ணன்


16.  அதிசயக் கோவில் அங்கோர்வாட்                                  

        _ திரு. அமுதன்.


இத்துடன்  இணைய வழித் தேடல்கள். மற்றும் திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages