29.11.20-கதையின் பெயர் : அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே.... - தென்குமரிக் கவிதைக்களம்

ஞாயிறு, 29 நவம்பர், 2020

29.11.20-கதையின் பெயர் : அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே....







அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே....


“ஐயா.... லோடு வந்திடிச்சிய்யா”


வாட்ச்மேன்  கனகராஜ் வந்து சொல்லவும், கேபினில் இருந்து வெளியில் வந்தார்  ராகவன் ..  பழைய மெசின் அடிக்கடி தொல்லை பண்ணியதால் புதிதாக ஆர்டர் பண்ணியிருந்தார்.


மெதுவாக எட்டு பேர்கள் சேர்ந்து இறக்கி வைக்க,,  அவர்களில் ஒருவன் மிகவும் துரு துரு வென்று பளீர் என இருந்தான். வயது இருபத்திஐந்துகுள் தான் இருக்கும், இருந்தாலும் மற்றவர்களை எப்படி தூக்கி எப்படி கொண்டு வந்து வைக்க வேண்டும் என்று கட்டளைகள் பிறப்பித்து கூடவே அவனும் மெதுவாக இறக்குவதற்க்கு உதவி செய்தான்.


 ராகவனுக்கு  அவனை பார்த்தவுடன் பிடித்து விட்டது. அவர்கள் கூலி வாங்க நின்று கொண்டிருந்தபோது ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த மெஷின் நின்றது.   ராகவத்திற்கு செம டென்ஷன்.  பல மாதம் லாக்டௌனால் வேலை நடக்கவில்லை. ஓடிக்கொண்டிருந்த மெசின் மறுபடியும் நின்று விட்டது. புது மெஷின் இன்ஸ்டால் பண்ண எப்படியும் மூன்று நான்கு நாட்கள் ஆகி விடும்.


“என்ன ரிப்பேர் பண்ணிணான்டா அந்த மெக்கானிக் கூப்பிடுடா அவனை.....” டென்ஷனில் கத்தினார்.


அவர்களுக்கு பணத்தைக் கொடுத்து, பழைய மெஷின் பக்கம் சென்றார்.  அனைத்து தொழிலாளிகளும் அமைதியாக நிற்க, தலையில் கைவைத்து செல்போனை எடுக்க,

“ ஐயா”

குரல் அருகிலிருந்து கேட்க, அந்த இளைஞன் நின்றுகொண்டிருந்தான்.


இவன் எங்கே இங்கே வந்தான்? என்று கோபமாக பார்த்து,


“ என்ன?  கூலி பத்தலயா? அவ்வளவு தான் தர முடியும்.”


“அதுக்கு இல்லீங்க ஐயா.. நான் சரி பண்ணித்தரவா?”


அவனை ஏற இறங்கப்  பார்த்தார். முகத்தில் நம்பிக்கைஇன்மை அப்பட்டமாக தெரிந்தது.


“நீயா.. நீ எப்படி?”


“நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிச்சிருக்கேன் சார் “


பிரமிப்பு மாறாமல் தலை அசைத்தார். சரியாக ஒரு இருபது நிமிடத்தில் மீண்டும் மெஷினை ஒட வைத்தான்.


“ ஐயா இன்னும் ஆறுமாசம் கொஞ்சம் கூட உங்களுக்கு தொல்லை தராமல் ஓடும்.”


அவனைப் பற்றி கேட்டறிந்து அவனது நம்பர் வாங்கிக் கொண்டார். அவனுக்கு மேலும் ஒரு ஐநூறு ரூபாய் கொண்டு வந்து கொடுத்தார். அவன் வாங்க மறுத்து விட்டான்.


மெக்கானிக் ரிப்பேர் பண்ணிக் கொடுத்தாலும்,  மாதம் இரண்டு முறை நின்றுவிடும் மெஷின், அந்த பையன் சொன்னதுபடியே நன்கு ஓடிக் கொண்டிருந்தது. புது மெஷின் வேறு ஒரு இடத்தில் வைத்தால் இரண்டு மெஷின் இருக்குமே என்று நினைத்து அந்த விக்ரமை அழைத்தார் .


“தம்பி நான்  ராகவன்  பேசறேன். அன்னிக்கு எங்களுக்கு புது மெஷின் இறக்கி வச்சு பழைய மெஷின் ஓட வச்சியே”


“ஆமாம் சார்! ஞாபகம் இருக்கு”


“கொஞ்சம் வந்திட்டு போறியா?”


“சார் ரெண்டு மணி நேரத்தில் வரேன்”


சொன்னபடியே வந்து சேர்ந்தான்.


“ தம்பி இப்பவும் லோடுமேனா வேலை செய்யறயா?”


“ஆமா சார்! அடுத்தவங்களை ஏமாத்தாம  செய்யற எந்த தொழிலும் கேவலம் இல்லை சார்”


“தம்பி நான் அதுக்கு சொல்லலை... பேசாம நீ எங்க கம்பெனியில் சூப்பர்வைசரா சேர்ந்துங்கோ! என்ன சம்பளம் வேணும்?”


“ஐயா எனக்கு இப்போ மாசம் பதினைந்தாயிரம் கிடைக்குதுங்க “


“புத்திசாலிப்பா! உனக்கு இருபதாயிரம் தரேன் வந்து சேர்ந்துடு”


“ஐயா!...  அடுத்த மாசம் வரேன். என்னோட முதலாளி வெளியூருக்கு போயிருக்காரு!”


மேலும் ஆச்சரியப்படுத்தினான்.


“சரிப்பா!”


ரெண்டு வருஷத்தில் அவன் வந்த பிறகு ப்ரோடக்ஷன் உயர்ந்தது. கணிசமான லாபம் கிடைத்தது.  சிலசமயம் கம்பெனிக்கு வந்து போகும் மகள் தீப்திக்கு, அவனைப் பிடித்திருந்தது அவருக்கு தெரிந்தது.  ஆனால் தனக்கு தெரியாது போல காட்டிக் கொண்டார். ஆனால் விக்ரம் மிக மிக கண்ணியமாகவே அவளிடம் நடப்பது கண்டு அவனைப் மாப்பிள்ளை ஆக்கிக் கொண்டால் என்ன என்ற எண்ணம் எழுந்தது.


முதலில் மகளிடம் கேட்டுக் கொண்டார் அப்பாவிடம் எப்படி சொல்லுவது என்று தயங்கிக் கொண்டிருந்தவள் அப்பா கேட்டதும் துள்ளிக் குதித்தாள்.


“ அப்பா அவருக்கு அப்பா அம்மா என்று யாரும் இல்லை. அனாதை இல்லத்தில் வளர்த்தவராம் பாவம்... பா...”


எத்தனை நல்ல பையன் தனக்கு பிள்ளைக்கு பிள்ளையாகவும் வீட்டோடு மாப்பிள்ளை ஆக்கிக் கொள்ள நினைத்தார்.


அடுத்தநாள் வேலை முடிந்து அனைவரும் கிளம்பி விட கிளம்பிக் கொண்டிருந்த அவனை அழைத்தார்.


“விக்ரம் கொஞ்சம் வாப்பா! உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”


அவர் பேச பேச திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தான்.


“ஐயா! என்னை மன்னிச்சுடுங்க!”


“ஏம்பா?”


“எனக்கு விருப்பம் இல்லை”


“அதுதான் ஏன்னு கேக்கறேன்? என் பொண்ணை பிடிக்கலையா? இல்லை வேற லவ் பண்ணறயா”


ஒன்றும் சொல்லாமல் உட்கார்ந்து கொண்டு இருந்தான்.


“எதாவது ஒண்ணு சொல்லுப்பா!”


“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை சார்”


“அப்புறம்”


மறுபடியும் மவுனம்.


 ராகவன்  கோவம் அடைந்தார். இருப்பினும் பொறுமையாக சொன்னார்.


“ என்னோட பொண்ணுக்கும் விருப்பம் இருக்கறதால கேக்கறேன். சொல்லுப்பா”


“ஐயா நான் அனாதை .  ஆஸ்ரமத்தில் வளர்ந்தேன். அப்ப அப்ப ரெண்டு மூணு பேரு என்னை கட்டாயப் படுத்தி மிரட்டி அவங்க ஆசைக்கு என்னை இணங்க வச்சிட்டாங்க.  நாளாக நாளாக எனக்கும் அந்த பழக்கம் வந்திடுச்சு... ஆண்கள் மேல் தான் ஆசை இருக்கு . எனக்கு பொண்ணுகளைப் பார்த்தா பெரிசா எந்த ஆசையும் இல்லை. அதனால தான் சொல்றேன்”


கலங்கி அழுதான்.


ஐந்து நிமிட சுகத்திற்காக ஒருவன் வாழ்க்கையையே கலங்க அடித்த முகம் தெரியா நபர்கள் மேல் கோபம் ஏற்பட்டது.


அவன் முதுகில் மெதுவாக தடவி அவனை ஆறுதல் படுத்தினார்.


“விக்ரம் தெரியாம நீ இந்த பிரச்சனையில் சிக்கிக்கிட்டே கவலைப் படாதே”


“வேண்டாம் ஐயா! உங்க பொண்ணு வாழ்க்கை என்னால கெட வேண்டாம்”


“அது சரிப்பா! எப்படினாலும் நீ இதிலிருந்து மீண்டு வரணும். உன்னை கவுன்சிலிங் கூட்டிகிட்டு போறேன். அதுக்கு நீ சம்மதிச்சா போதும்”


“ஐயா! அதெல்லாம் சரி வராது  ஐயா “


“நான் சொன்னா கேப்பியா? மாட்டயா?”


“கேப்பேன் ஐயா”


ஆறுமாதகாலம் கவுன்சிலிங் கொடுத்தார்கள். முழுமையாக குணம் அடைந்தான் விக்ரம்.  ராகவன்  சந்தோசம் அடைந்தார்.


இதோ இன்று விக்ரம் காரில் சென்று கொண்டு இருக்கிறான்...


புது மனைவி தீப்தி அருகில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages