14.10.21-வாழ்த்து- பொ.ஜோஸப் நிறுவனர்.தலைவர் - தென்குமரிக் கவிதைக்களம்

வியாழன், 14 அக்டோபர், 2021

14.10.21-வாழ்த்து- பொ.ஜோஸப் நிறுவனர்.தலைவர்

 வாழ்த்து

 

தென்குமரிக் கவிதைக்களத்தின் உறவுகள் அனைவருக்கும் உங்கள் ஜோ'வின் இனிய காலை வணக்கங்கள் மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!!


எவ்வித பிரதிபலன் இல்லை எனினும், தங்களின் குடும்ப சூழல், பணிச்சூழல் மத்தியிலும்,  குழுவில் தொடர்ந்து உற்சாகத்துடன், ஊக்கத்துடன், குழுவின் பணிகளுக்கு என தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி, விடுமுறை நாட்களிலும் குழுமப் பணிகளுக்காக செலவழித்து, தமிழுக்காக இம்மட்டும் நம் குழுவின் தொடர் பயணத்திற்கும், வெற்றிகளுக்கும் காரணமாக இருக்கும் நம் குழுவின் நிர்வாகிகளை இந்த நன்னாளில் உங்கள் அனைவரின் முன்பாக கவுரவிப்பதே சிறந்ததாக இருக்கும் என்று நம்புகின்றேன்.


 உறவுகளே, நம் நிர்வாகிகள் யாவரும் முழு நேரமாக நம் குழுவிற்கு உழைத்திட யாருக்கும் ஊதியமோ அல்லது ஊக்கத் தொகையோ கொடுப்பதில்லை. அவர்களுக்கும் குடும்பம், பிள்ளைகள், உறவுகள், பணிகள் , நெருக்கடிகள் எல்லாம் உண்டு. அதையும் மீறியே இங்கு நடுவர்களாக  வந்து நடுவர்களாக போட்டியில் எழுதப்படும் ஒவ்வொரு கவிதைகளையும் படித்து, பின்னூட்டம் இட்டும், அதை ஆராய்ந்து தேர்வு செய்தும், தங்களின் பணியை தொய்வில்லாது செய்து வருகின்றார்கள். இதனை நம் குழும உறவுகள் ஒவ்வொருவரும் புரிந்துக் கொள்ளுங்கள். அவர்களின் சொந்த விருப்பத்தில் இங்கு தங்களின் பொன்னான் நேரம் செலவழித்து, குழுமத்தோடு நடுவராகவும், இன்னும் சிலர் நடுவர் பணியோடு சான்றிதழ் வடிவமைப்பு பணியையும் செய்து வருகின்றார்கள். 


இப்படியான சூழலில், இவர்களோடு, ஏன் எங்கள் கவிதையை தேர்வு செய்யவில்லை என்று சிலர் அவர்களின் தனிச்செய்தியில் வாதிடுவதும், பின்னூட்டத்தில் கேட்பதும் முறையாகுமா என்பதை சிந்தியுங்கள். 


எம் குழுமத்திற்காக தங்களின் நேரம் செலவழித்து, 

  நிர்வாகியாகவும், நடுவராகவும், சான்றிதழ் வடிவமைப்பாளராகவும் பணியாற்றும் ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகளும் & வணக்கங்களும். கவி உறவுகளே, நம் நிர்வாகிகளை வாழ்த்தி பாராட்டுவோம் வாருங்கள்......


நிர்வாகிகள் :



























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages